நவம்பர் 4-இல், சுங்கை லிமாவ் இடைத் தேர்தல்

கெடா, சுங்கை லிமாவ் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாள் நவம்பர் 4  என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23,  வேட்பாளர் நியமன நாளாகும்.  அதன்பின்னர் பரப்புரைக்கு 12  நாள்கள் ஒதுக்கப்பட்டு நவம்பர் 4-இல் வாக்களிப்பு நடைபெறும். அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசிசான் அப்துல் ரசாக், செப்டம்பர் 26-இல் காலமானதைத்…

பிசிஎ சட்டத் திருத்தம் இன்றிரவு நிறைவேற்றப்படலாம்

குற்றவியல் தடுப்புச் சட்டம் 1959 (பிசிஎ) க்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் இன்றிரவு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படலாம். இன்று மாலை இச்சட்டத் திருத்த மசோதா குழு நிலையில் விவாதிக்கப்படுவதற்கு 115 க்கு 66 என்ற வாக்குகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழு நிலையிலான விவாதம் இன்றிரவு நடைபெற விருக்கிறது. ஆறு எதிரணி…

ஹரி பெலியா 2012 ஆபாச நிகழ்ச்சிக்கு ரிம1.6 மில்லியன் மக்கள்…

ஹரி பெலியா 2012 கொண்டாட்டத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கே-போப் கலை நிகழ்ச்சிக்கு அரசாங்கம் பணம் கொடுத்ததை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டார். அந்நிகழ்ச்சி தனியார் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.   ஆனால், தேசிய கணக்காய்வாளர் அறிக்கை 2012 மூன்று கே-போப் குழுவினர்களுக்கு அந்த…

சொய் லெக்-எதிர்ப்புக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர் கலந்து கொண்டனர்

கோலாலும்பூரில் மசீச கட்சித் தலைமையகத்துக்கு எதிரேயுள்ள ஒரு தங்குவிடுதியில், சுமார் 500 மசீச மத்திய பேராளர்களும் அடிநிலைத் தலைவர்களும் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கின் தவறான நடவடிக்கைகள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அக்கூட்டத்துக்கு  வங்சா மாஜு தொகுதித் தலைவர் இயு தியோங் லுக்…

கணக்கறிக்கை: ஆர்ஓஎஸ் கடமையைச் சரிவரச் செய்யவில்லை

டிஏபி விவகாரத்தில் சங்கப் பதிவதிகம்(ஆர்ஓஎஸ்) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதை அறிவோம். ஆனால், ஆர்ஓஎஸ் அதன் கடமையைச் சரிவரச் செய்வதில்லை என்று கூறுகிறது தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை. புத்ரா ஜெயா, பினாங்கு, ஜோகூர், பகாங் ஆகிய இடங்களில் உள்ள கோப்புகளை ஆராய்ந்ததில், 90 சங்கங்கள் அவற்றின் ஆண்டு அறிக்கைகளை ஆர்ஓஎஸ்ஸுக்கு…

ஜிஎல்சி உயர் அதிகாரிகள் இருவர் போலிப் பட்டங்களை வைத்துள்ளனராம்

அரசுசார்ந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இருவர் வைத்துள்ள பல்கலைக்கழகப் பட்டங்கள் போலியானவை என எதிரணி எம்பி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர்கள் சிலர் போலிப் பட்டங்களை வைத்திருப்பதாக முன்பு கூறிய டிஏபி செர்டாங் எம்பி ஒங் கியான் மிங்தான் இப்போது இந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளார். அந்நிறுவனங்களின் வலைத்தளங்கள் அவ்விருவரில்…

மலேசிய வருகையைத் தள்ளி வைத்தார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,  இம்மாதம் மலேசியா வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், அமெரிக்க அரசுத்துறைகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில்  அதிபர் தம் வருகையைத் தள்ளி வைத்துள்ளார்.  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இத்தகவலைத் தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்துள்ளது.

பக்காத்தான்: பொதுக் கணக்குக்குழுவுக்குப் பல் இல்லை

பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வுக்குக் ‘கடிக்க’ பல் இல்லை, அதனால் அக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை என பக்காத்தான் ரக்யாட் கூறியுள்ளது. கணக்கறிக்கையில் காணப்படும் முறைகேடுகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட உயர்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்…

ஐஜிபி: துப்பாக்கிகள் கடலில் விழுந்திருக்கலாம்

காணாமல் போனதாகக் கூறப்படும் போலீஸ்  துப்பாக்கிகள் ஒரு வேளை படகுகளிலிருந்து தவறிக் கடலில் விழுந்திருக்கலாம் எனப் புதிதாக ஒரு அனுமானத்தை வெளியிட்டிருக்கிறார்  இன்ஸ்பெக்டர் அப் போலீஸ் காலிட் அபு பக்கார். “காணாமல் போன 37 துப்பாக்கிகளில் எதுவும் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. “காணாமல் போன துப்பாக்கிகள்…

அம்பிகா: அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்

பெர்சே 3.0 பேரணியின்போது  செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் “தாக்கப்பட்டதாக” ஓர் அமைச்சர் கூறிருப்பது, அப்பேரணிமீது மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள உண்மைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என்கிறது பெர்சே. உண்மையில், 2012, ஏப்ரல் 28 பேரணியின்போது செய்தியாளர்களைத் தாக்கியவர்கள் போலீசார்தான்  எனக் கண்டறிந்து கூறப்பட்டுள்ளது என்றும்   அவ்வாறு…

பெட்ரோனாஸ் இதுவரை ரிம732 பில்லியனை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது

தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், 1974-இல் அது தொடக்கப்பட்டதிலிருந்து இதுவரை ரிம 732 பில்லியனை அரசாங்கக் கருவூலத்துக்கு வழங்கியுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று மக்களவையில், இங்கா கொர் மிங்(டிஏபி- தைப்பிங்)கின் கேள்விக்கு எழுத்து வடிவில் வழங்கிய பதிலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

ஷகிடான்: போலிப் பட்டங்கள் பெறுவதைத் தடுப்பதற்கில்லை

போலிப் பல்கலைக்கழகப் பட்டங்கள் பெறுவதை அரசாங்கத்தால் தடுக்க இயலாது. ஆனால், அப்படிப் பெற்ற பட்டங்களைப் பயன்படுத்தி அரசு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். “அதை அவர்கள் கண்ணாடி போட்டு ஒரு  நினைவுப்பொருளாக தாராளமாக வைத்துக்கொள்ளலாம். இது சீனாவில் தயாரான லூயிஸ் விட்டன் கைப்பை போன்றதுதான்”, எனப்…

துப்பாக்கி வைத்திருப்பதாக சொன்னார் பங் மொக்தார்

மற்றவர்களை நாவால் சுட்டுக் காயப்படுத்துவதில் பேர் போனவர் பங் மொக்தார் ரடின்.  அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அந்த எம்பி,  உண்மையிலேயே சுடும் ஆயுதத்தை, ஒரு துப்பாக்கியை வைத்திருக்கிறாராம். நாட்டில் குற்றச்செயல்கள் பெருகி வருவதால் கலக்கமடைந்துள்ள அந்த கினாபாதாங்கான் எம்பி,  இப்போது துப்பாக்கி இல்லாமல் வெளியில் போவதில்லையாம். இன்று…

சீன, தமிழ்ப்பள்ளிகளால் இன ஒற்றுமைக்கு சீர்குலைவா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 1, 2013.   சீனப்பள்ளிகளும் தமிழ்ப் பள்ளிகளும் இருக்கும் வரையில் இனங்களுக்கான ஒற்றுமை இருக்கப் போவதில்லை என்ற கருத்துடன் “யாடிம்”(YADIM) எனப்படும் யாயசான் டக்வா இஸ்லாமிய மலேசியா  இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் அஸ்ராப் வாஜ்டி டுசுக்கி  கூறி உள்ளார்.   இது…

தேசிய சேவை இயக்குனரின் பணி நீட்டிப்பை மறுஆய்வு செய்க

சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் ஹனிபா மைடின், தேசிய சேவை (என்எஸ்) இயக்குனர் அப்துல் ஹாடி ஆவாங்கின் வேலை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய ஹனிபா, தேசிய சேவை பயிற்சியாளர்கள் பலர் பயிற்சிக்காலத்தில் இறந்து போயிருப்பதைச் சுட்டிக்காட்டி அவரது…

ஜாஹிட்: என்ஜிஓ-கள் ‘குற்றவாளிகளுக்கு’ ஆதரவாக பேசக்கூடாது

குற்றத் தடுப்பு  சட்ட எதிர்ப்பு என்பது  ‘குற்றவாளிகளுக்கு’ ஆதரவாக மாறிவிடக்கூடாது என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார். “வழக்குரைஞர்களோ, தனிப்பட்டவர்களோ, என்ஜிஓ-களோ குற்றவாளிகளின் செயல்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது”. குற்றத் தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தம், விசாரணையின்றி காவல் என்ற நிலையை மீண்டும் கொண்டு வந்துவிடும்…

கணக்கறிக்கை: போலீசாரின் ஆயுதங்கள், விலங்குகள் காணமல் போயின

2012 ஆம் ஆண்டு அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை, அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான  ஆயுதங்கள், கைவிலங்குகள்,  வாகனங்கள் என மொத்தம் 309 பொருள்கள் காணமல் போனதாக தகவல் வெளியிட்டிருக்கிறது. 2010-க்கும் 2012-க்குமிடையில்  காணாமல் போனதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும்  அப்பொருள்களின் மதிப்பு ரிம 1.33 மில்லியன். காணாமல் போன…

கர்பால்: அரசியல்வாதிகளுக்கு எதிராக ஐஎஸ்எ பயன்படுத்தப்படாது, அப்போதும் சொன்னார்கள்

அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமுதாயத்தினர்ஆகியோருக்கு எதிராகத் தடுப்புக் காவல் பயன்படுத்தப்படாது என்று 1960 ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) இயற்றப்பட்ட போது வாக்குறுதி அளித்திருந்தனர் என்று டிஎபியின் தலைவர் கர்பால் சிங் நினைவு கூர்ந்தார். அந்த வாக்குறுதியை அளித்தவர் அப்துல் ரசாக் ஹுசேன், அப்போதைய துணைப்…

டிஎபி மத்திய செயற்குழுவில் ஒரிஜினல் மலாய்க்காரர் இல்லையாம்!

நேற்று நடைபெற்ற டிஎபி மத்திய செயற்குவிற்கான தேர்தவில் வெற்றி பெற்ற 20 பேரில் ஒருவர் கூட அசல் மலாய்க்காரர் இல்லை என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர் ரஹ்மாட் இஸாஹாக் அங்கலாய்க்கிறார். நேற்றைய தேர்தலில் போட்டியிட்ட ஏழு "மலாய் அஸ்லி" கதி என்னவாயிற்று என்று அவர் கேட்டார். வெற்றி…

திரெங்கானுவில் கூரை இடிந்து விழுவதற்கு யார் பொறுப்பு?

திரெங்கானுவில் பொதுமக்கள் வசதிக்காக உள்ள கட்டிடங்களின் கூரைகள் எத்தனை தடவை இடிந்து விழுந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்? கோலா திரெங்கானு பாஸ் எம்பி, ராஜா கமருல் பஹ்ரேன் ஷா ராஜா அஹமட் இக்கேள்வியை முன்வைத்துள்ளார். இவ்வாண்டில் மட்டும் மூன்று தடவை இப்படிக் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன என்றாரவர். நேற்றுக்…

செர்டாங் மருத்துவமனையில் மூன்றாவது முறையாக கூரை இடிந்து விழுந்தது

செர்டாங் மருத்துவமனையில் கடந்த இரண்டு  நாள்களில் இரண்டாவது தடவையாகக் கூரை இடிந்து விழுந்திருக்கிறது. அம்மருத்துவமனையில், கூரை இடிந்து விழுவது ஒரு வழக்கமாகி விட்டது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மூன்று தடவை கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இன்றைய விபத்தில் மகப்பேறு மருத்துவப் பிரிவுக் கூரை அதிகாலை மணி 2.55-க்கு…

ஒதுக்கீடுகள் பற்றிய வாக்குறுதிகளைப் பிரதமருக்கு நினைவுறுத்துகிறது இண்ட்ராப்

பிஎன்னுடன் இண்ட்ராப் செய்துகொண்ட புரிந்துணர்வுக் குறிப்பில்(எம்ஓயு) ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டிய  தருணம் வந்துவிட்டதை  பெர்சத்துவான் இண்ட்ராப் மலேசியா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு  நினைவூட்டியுள்ளது. ஏப்ரலில்  அந்த எம்ஓயு கையெழுத்தானதிலிருந்து பிரதமர்துறையில் இந்தியர்களுக்கென ஒரு பிரிவு அமைக்கப்பட்டதைத் தவிர  வேறு எதுவும் செய்யப்படவில்லை என  இண்ட்ராப் பினாங்கின்…

‘ஜனநாயகமில்லாத டிஏபி’-கைரி சாடல்

டிஏபி-இல் அம்னோவைப் போல் ஜனநாயகம் இல்லை  அதனால்தான் அது  மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது  என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்  கூறுகிறார். பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர், ரஹ்மாட் இஷாக்,  டிஏபி-இலிருந்து விலகியது மலாய்க்காரர்கள் அக்கட்சியின்மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதைக் காண்பிக்கிறது  என்றாரவர். “அம்னோவை…