கடந்த சனிக்கிழமை தெற்கு தாய்லாந்தின் மூன்று மாகாணங்களில் 50-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் மீதான தீவைப்புத் தாக்குதல்கள் மற்றும் டயர் எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, மலேசிய-தாய்லாந்து எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டிய காவல் துறை…
விகிதாச்சார முறையில் இசி ஆர்வம் காட்டவில்லை
நடப்பு தேர்தல் முறை விகிதாச்சார முறையைக் காட்டிலும் மேலானது என தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் சொல்கிறார். "நான் அந்த விகிதாச்சார முறையை ஆய்வு செய்தேன். அதில் பல பலவீனங்கள் உள்ளன. மலேசியாவைப் போன்ற வளரும் நாட்டுக்கு முதலில் கம்பத்தைத் தாண்டும்…
1மலேசியா கோட்பாட்டை அரசாங்கம் நாறடித்து விட்டது
மலேசியரிடையே 1மலேசியா கோட்பாட்டைப் பதிய வைக்கும் அரசாங்கத்தின் முயற்சி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழக தலைமை செயல் அதிகாரி சைபுல் வான் ஜான். ஒற்றுமையை வலுப்படுத்தி இருக்க வேண்டிய 1மலேசியா கோட்பாடு அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வாக மாறியுள்ளது என்றாரவர். “அப்படித்தான் அது மாறிவிட்டது.…
டிபிகேஎல்-லின் ‘சீன உணவு மய்யத் திட்டத்தை’ உத்துசான் சாடுகின்றது
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் அலோர்-ரை அனைத்துலகத் தரத்திலான சீன உணவு மய்யமாக மாற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) யோசனையை உத்துசான் மலேசியா சாடியுள்ளது. 2 மில்லியன் ரிங்கிட் செலவிலான அந்த யோசனை ஒர் இனத்துக்கு மட்டுமே நன்மை அளிக்கும் என அந்த ஏடு தனது ஞாயிறு பதிப்பான…
அரசின் சிவப்பு நாடாவால் கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை
வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து மலேசிய ஆலயங்களில் பணிபுரிய வரும் அர்ச்சகர்களுக்கு விசா கொடுப்பதில் கடுமையான கெடிபிடி கடைப்பிடிக்கப்படுவதாக கோயில் நிர்வாகக் குழுக்கள் அதிருப்தி கொண்டுள்ளன.. அரசாங்கத்தின் சிவப்புநாடா நடைமுறையின் காரணமாக ஆலயங்களுக்கு அர்ச்சகர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதென மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண் மலேசியாகினியிடம்…
பிகேஆர்: போலீஸ் சொல்வது உண்மை என்றால் அது இந்திய சமூகம்…
மக்கள் தொகையில் ஏழு விழுக்காடாக இருக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் எனப் போலீசார் சொல்வது உண்மையானால் அது இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட தேசியப் பிரச்னை என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் சொல்கிறார். "அந்தத் தகவல் உண்மை என்றால் ஏன் பொது…
புதிய வாக்காளர் பதிவுச் சட்டம் குறித்து இசி ஆலோசனை
தேர்தல் ஆணையம் (இசி) வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பில் புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி ஆலோசித்து வருகிறது. ஆணையப் பணியாளர்கள் சுமார் 50 பேர் கடந்த ஒரு வாரமாக இப்போதுள்ள சட்டத்தை ஆராய்து வருவதாக இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் கூறினார். “அதில் நிறைய…
லிம்மைக் கவிழ்க்க சதியா? பினாங்கு டிஏபி தலைவர்கள் மறுப்பு
பினாங்கு டிஏபி தலைவர்கள், எதிர்வரும் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலில் கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கைத் தோற்கடிக்க ஓர் இயக்கம் உருவாகி வருவதாகக் கூறப்படுவதை மறுக்கின்றனர். பினாங்கிலோ அதற்கு வெளியிலோ அப்படிப்பட்ட இயக்கம் கிடையாது என்பதை வலியுறுத்திய மாநில டிஏபி தலைவர் செள கொன் இயோ,…
வேதமூர்த்தி இப்போது திரிசங்கு நிலையில்
"நீங்கள் அந்த முறையை மாற்ற இயலும் என எண்ணியிருந்ததால் நீங்கள் சரியான முட்டாள். நீங்கள் மாற வேண்டும் என அந்த முறை சொல்கிறது" அரசாங்கம் வகுத்த பாதையில் செல்லுமாறு ஸாஹிட் வேதமூர்த்திக்கு அறிவுரை ரஹ்மான் பூத்தே: பிஎன் நிர்வாகத்துக்குள் பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி வழக்கத்திற்கு…
ஸாஹிட்டின் திறந்த இல்ல உபசரிப்பும் குண்டர் கும்பல் நடவடிக்கையிலிருந்து விடுபடவில்லை
உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்று பாகான் டத்தோவில் நடத்திய திறந்த இல்ல உபசரிப்புக்குச் சென்ற குண்டர்கள் ஏற்பாட்டாளர்களிடமிருந்து பாதுகாப்புப் பணம் கோரியுள்ளனர். அந்தத் தகவலை அகமட் ஸாஹிட் இன்று வெளியிட்டார். "எனது அமைப்புக்குச் சொந்தமான நிலத்தில் ஏற்பாட்டாளர்களிடமிருந்து பாதுகாப்புப் பணம் கோரும் குண்டர்களும் இருக்கின்றனர். அதுவும் உள்துறை…
புக்கிட் அமான்: குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் இந்தியர்கள்
போலீஸ் பதிவுகளில் உள்ள குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் இந்தியர்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) இயக்குநர் ஹாடி ஹோ அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜுலை 30ம் தேதி வரையில் போலீஸ் பதிவுகளில் உள்ள குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் இந்தியர்கள், 23 விழுக்காட்டினர் சீனர்கள்,…
ஜைட்: கட்டாயமாக கொடிகளை பறக்க விட வேண்டும் என்பது ‘கிறுக்குத்தனமானது’
மெர்தேக்கா மாதத்தின் போது மலேசியக் கொடிகளை பறக்க விடுவதைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற யோசனையை 'கிறுக்குத்தனமானது' என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம் வருணித்துள்ளார். அந்த யோசனையை முன் வைத்துள்ள தமது முன்னாள் சகாவான தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக்,…
‘புதிய கார் தயாரிப்பாளர்களை அனுமதிப்பது விலைகளை குறைத்து விடும்’
மலேசியச் சந்தைக்குள் புதிய கார் தயாரிப்பாளர்களை அனுமதிக்க தேசிய வாகனக் கொள்கையை (NAP) அரசாங்கம் அமலாக்கினால் கார் விலைகள் குறைந்து விடும் என தேசிய வாகனக் கழகம் (MAI) சொல்கிறது. "இப்போது 1.8 சிசி-க்கு மேற்பட்ட கார்களைத் தயாரிக்கின்ற கார் தயாரிப்பளர்களுக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது. அத்துடன் அவற்றின்…
அமைச்சரவையிலிருந்து விலகி அரசு சாரா அமைப்புக்குச் செல்லுங்கள் என வேதமூர்த்திக்கு…
பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி அமைச்சரவையிலிருந்து விலகிக் கொண்டு தமது அரசு சாரா அமைப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி மேலோட்டமாக சாடியிருக்கிறார். "நீங்கள் போலீசாரைப் பற்றி குறை சொல்ல விரும்பினால்; போலீசார் பற்றி எதிர்மறையான கருத்துக்களைச்…
ஜாஹிட்: கடுமையான சட்டங்களின்றி போலீஸ் பல்லில்லா புலி
சில சட்டங்கள், இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ), அவசரக் காலச் சட்டம் (இஓ) போன்றவை கடுமையானவைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, ஆனாலும் அவை மலேசியாவுக்குத் தேவைதான் என்கிறார். மலேசியாவை நியூ யோர்குடன் ஒப்பிட்ட அவர், அங்கு 35 பேருக்கு ஒரு போலீஸ்…
‘எழுதப்பட்ட வசனத்திற்கு ஏற்ப அல்தான்துயா முடிவு அமைந்துள்ளது’
'ஆகவே அல்தான்துயா சுயமாகவே பூஞ்சாக் அலாமுக்கு சென்று நெற்றியில் சுட்டுக் கொண்ட பின்னர் தம்மை வெடி வைத்துத் தகர்த்துக் கொண்டார்' நீதிமன்றம் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அஸிலாவையும் சிருலையும் விடுவித்தது கிண்டல்: உயர் நீதிமன்றம் தவறாக வழி நடத்தியுள்ளதால் தொழில்நுட்பப் பிரச்னை அடிப்படையில் அந்த முழு விசாரணையும் நீதிக்குப் புறம்பானதாகி விட…
சப்ரி: தேசிய கொடி பறக்கவிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும்
மெர்தேகா மாதம் முழுவதும் ஜாலோர் கெமிலாங் பறக்க விடுவதைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரலாமா என்று தொடர்பு, பல்லூடக அமைச்சு ஆராயும். அதன் அமைச்சர், அஹ்மட் சப்ரி சிக், அப்படி ஒரு சட்டம் தேவை என்று நினைக்கிறார். “இப்போது, தன்னார்வத்தின்பேரில்தான் தேசிய கொடி பறக்க விடப்படுகிறது. “ஆனாலும் தனியார் கட்டிடங்கள்…
ஆர்ஒஎஸ் 20 புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரித்துள்ளது
2008ம் ஆண்டு தொடக்கம் புதிய அரசியல் கட்சிகளை அமைப்பதற்குச் சமர்பிக்கப்பட்ட 30 விண்ணப்பங்களில் 20ஐ ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் அங்கீகரித்துள்ளது. அந்த புதிய அரசியல் கட்சிகளின் பட்டியலை அடுத்த வியாழக் கிழமை அது வெளியிடும் என அதன் தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறினார்.…
1.4 மில்லியன் புதிய வங்காள தேசத் தொழிலாளர்கள் பற்றி பாஸ்…
அடுத்த ஆண்டு மலேசியாவுக்கு கூடுதலாக 1.4 மில்லியன் வங்காள தேசத் தொழிலாளர்கள் கொண்டு வரப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பாஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அந்த வங்காள தேசத் தொழிலாளர்கள் பின்னர் குடிமக்களாகி விடுவர் என்றும் அது அஞ்சுகின்றது. அந்தத் தொழிலாளர்கள் எங்கு வேலைக்கு அமர்த்தப்படுவர் என்றும் அவர்கள்…
‘ஒட்டுநர் தகவல் முறை’ உருவாக்கப்படும்
பொது தரைப் போக்குவரத்து ஆணையம் பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள் பற்றிய பின்னணித் தகவல்களை வழங்கும் முறை ஒன்றை உருவாக்கி வருகின்றது. அதில் கிடைக்குமானால் அவர்களுடைய கிரிமினல் பதிவுகளும் இருக்கும் என அந்த ஆணையத்தின் தலைவர் சையட் ஹமிட் அல்பார் கூறினார். ஆணையத்துக்குக் கொடுக்கப்படும் தகவல்கள் அடிப்படையில் அந்த…
சிறுநீர் கழிக்கும் காட்சி பற்றி விளக்க இயக்குநர் மறுப்பு
தண்டா புத்ரா திரைப்படத்தில் கொடிக்கம்பம் ஒன்றின் மீது சீன இளைஞர்கள் குழு ஒன்று சிறுநீர் கழிக்கும் காட்சியை தாம் சேர்த்ததற்கான காரணத்தை விளக்க அதன் இயக்குநர் ஷுஹாய்மி பாபா மறுத்துள்ளார். மலேசியாகினி அந்தத் திரைப்படத்தை இன்னும் பார்க்காததே விளக்கமளிக்க மறுப்பதற்குக் காரணம் எனப் பல பட விருதுகளைப் பெற்றுள்ள…
விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அஸிலா சிறையிலிருந்து மாயமானார்
மங்கோலிய பெண்மணி அல்டான்துயா ஷாரிபுவைக் கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போலீஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவின் முன்னாள் தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரி, தீர்ப்பளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே காஜாங் சிறையிலிருந்து வெளியேறி விட்டார். அவரைச் சந்திப்பதற்காக சிறை வாயிலில் செய்தியாளர்களும் படப்பிடிப்பாளர்களுமாக சுமார் 20 பேர்…
ஜைட்: முறையீட்டு நீதிமன்றம் மறு விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும்
மங்கோலிய மாது அல்தாந்துயா கொலை வழக்கில் முறையீட்டு நீதிமன்றம் மறு விசாரணைக்கு ஆணையிடாதது குறித்து முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். "நாம் உண்மையை அறிந்து கொள்வதற்கு அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என நிச்சயம் நீதி நடைமுறை வலியுறுத்தும். அல்தான்துயா ஏன் கொல்லப்பட்டார் என்பது…
‘நெடிம் நியமனத்துக்கும் பொதுச் சேவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’
சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கும் பொதுச் சேவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டாக்டர் அலி ஹம்சா சொல்கிறார். சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சின் நிர்வாக அமைப்பு வழியாக அந்த நியமனம் செய்யப்படவில்லை என அவர் சொன்னார். "உண்மையில் அது…


