கடந்த சனிக்கிழமை தெற்கு தாய்லாந்தின் மூன்று மாகாணங்களில் 50-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் மீதான தீவைப்புத் தாக்குதல்கள் மற்றும் டயர் எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, மலேசிய-தாய்லாந்து எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டிய காவல் துறை…
அல்தான்துயா கொலை வழக்கில் அஸிலாவும் சிருலும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசாங்கத்…
அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹாட்ரியையும் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமாரையும் மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான அறிவிப்பை அரசாங்கத் தரப்பு கடந்த வெள்ளிக் கிழமை சமர்பித்துள்ளது. வெள்ளிக் கிழமை முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாளாகும். அறிவிப்பு…
போலீஸ்: ஸ்ரீ பிரிஸ்டினா மாணவர்களை விசாரிக்கவில்லை
ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி மாணவர்களை தான் விசாரித்ததாகச் சொல்லப்படுவதை போலீஸ் மறுத்துள்ளது. மஇகா-விடம் சில பெற்றோர்கள் மாணவர்களை விசாரித்ததாக கூறியுள்ளது குறித்து கருத்துரைத்த சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனாய்டி பூஜாங் அவ்வாறு சொன்னார். "அப்படி ஏதுமில்லை. நான் அத்தகைய உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு…
அமைச்சர்களால் வேதாவை வெளியேற்ற முடியாது
அமைச்சர்களின் வற்புறுத்தலால் பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி (இடம்) பதவி விலக மாட்டார் என இண்ட்ராப் மலேசியாவின் ஆலோசகர் என்.கணேசன் கூறினார். “வேதா, பதவி விலகப்போவதில்லை. அவருக்கென்று ஒரு இலட்சியம் உண்டு (பொதுத் தேர்தலுக்குமுன் பிஎன்னுடன் செய்துகொள்ளப்பட்ட) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அவர் தொடர்ந்து முயல்வார். “அதற்காகத்தான் அவர்…
‘எஸ்கே பிரிஸ்தானா மாணவர்களை விசாரித்த போலீசார் மீது நடவடிக்கை எடுப்பீர்’
மஇகா வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி, எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா மாணவர்களை அவர்களின் பெற்றோர் அனுமதியின்றியும் மேற்பார்வையின்றியும் விசாரணை செய்த போலீசாரைச் சாடியுள்ளார். அப் பள்ளித் தலைமையாசிரியரை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு மாணவனின் தந்தையை போலீசார் கைது செய்திருப்பதையும் அவர் கண்டித்தார். “எந்த அதிகாரத்தின்கீழ் போலீசார் மாணவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்ய பள்ளிக்குச்…
கட்சியைக் கலைத்துவிட்டு புதுக் கட்சி அமைப்பதில் மஇகாவுக்கு உடன்பாடில்லை
மஇகா, எல்லா இந்தியர் கட்சிகளையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆயத்தமாக உள்ளது. ஆனால், கட்சியைக் கலைத்துவிட்டு இந்தியர்களுக்காக புதுக் கட்சி அமைப்பதில் அதற்கு உடன்பாடில்லை. இதனை வலியுறுத்திய அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சிகளில் மஇகா அதன் அடையாளத்தை இழப்பது முறையாகாது என்றார். பாரிசான்…
மூசா உதவித் தலைவராகும் ‘வாய்ப்பு பிரகாசம்’
சாபா முதலமைச்சர் மூசா அமான் (வலம்), அம்னோ தேர்தலில் உதவித் தலைவராக நல்ல வாய்ப்பு இருப்பதாக நகர்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறுகிறார். “போட்டியிடுவதாக அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் போட்டி இட்டால் அவர் வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருக்கிறது”, என்றாரவர்.…
வீட்டை வாடகைக்கு விடுவதில் இனவாரிக் கொள்கை நல்லதல்ல
பண்டார் சன்வே-இல், ரிட்சுவான் கொண்டோமினிய உரிமையாளர்கள், ‘ஆப்ரிக்கர்களு’க்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை என்றும் அங்கு ஏற்கனவே குடியிருப்போரை மூன்று மாதங்களில் வெளியேற்றுவது என்றும் முடிவு செய்திருப்பது “சரியல்ல” என்று நகர்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். “வாடகைக்குக் குடியிருப்போருடன் பிரச்னை என்றால் அதற்கு…
வழக்குரைஞர் மன்றம்: ஒராங் அஸ்லி அறிக்கையை ஏற்றுக் கொள்வதில் தாமதம்…
ஒராங் அஸ்லி மக்கள் தாங்கள் நில உரிமைகளை இழப்பது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் மலேசிய மனித உரிமை ஆணைய (சுஹாக்காம்) அறிக்கையை அரசாங்கம் தாமதம் செய்யாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மலேசிய வழக்குரைஞர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை…
Ops Cantas Narkotik-நடவடிக்கையின் கீழ் போலீசார் 1,911 பேரைக் கைது…
கடந்த வெள்ளிக் கிழமை நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு Ops Cantas Narkotik-நடவடிக்கையின் கீழ் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை 1,911 பேரைக் கைது செய்துள்ளது. மொத்தம் 1,772 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதன் இயக்குநர் நூர் ரஷீட் இப்ராஹிம் தெரிவித்தார். அவற்றில் 29 விசாரணைகள்…
அதிகாரத்துவச் சட்டத்தின் கீழ் டாக்டர் மகாதீர் மீது குற்றம் சாட்டப்பட…
"இன்னும் ரகசியமான அந்த பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்த (TPPA) விவரங்கள் அந்த முன்னாள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன ? இந்த நாட்டிலுள்ள மற்றவர்களைப் போன்று அவரும் பொது மக்களில் ஒருவர் தானே ?" டாக்டர் மகாதீர்: TPPA குறித்து ரகசியமாக இருப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் ஆயிஷா: பசிபிக் பங்காளித்துவ…
ரபீடா அம்னோ உச்சமன்றப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிட…
அக்டோபர் மாதம் நிகழும் அம்னோ தேர்தலில் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் என்ற தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபீடா அஜிஸ் போட்டியிட மாட்டார். 1975ம் ஆண்டு முதல் அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக அவர் இருந்து வருகிறார். இவ்வாண்டு அம்னோ…
குண்டர் கும்பல்கள் பட்டியலை உள்துறை அமைச்சு வெளியிடும்’
உள்துறை அமைச்சு விரைவில் குண்டர் கும்பல் பட்டியலையும் அவற்றின் உறுப்பினர்கள் செய்துள்ள குற்றங்களையும் விரைவில் அறிவிக்கும். அந்தப் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி சொன்னார். "சட்ட விரோத அமைப்புக்கள் என வகைப்படுத்தப்பட்ட குண்டர் கும்பல்கள் பட்டியலும் அவை…
பிரிஸ்டினா தலைமை ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட ‘கொலை மருட்டல்’ தொடர்பில் பெற்றோர்…
பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமட் நாசிர் முகமட் நோர்-க்கு 'கொலை மருட்டல்' விடுத்ததாக கூறப்படும், அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தையின் பெற்றோர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். அந்தத் தகவலை உறுதி செய்த சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனாய்டி பூஜாங்இன்று பிற்பகல்…
மந்திரி புசார் காலித்: சுதந்திரம் குறித்த உண்மைகள் விளக்கப்பட வேண்டும்
நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் எழுதப்பட வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். சில உண்மை நிலவரங்கள் பற்றி தெளிவாக இல்லாததே அதற்குக் காரணம் என்றார் அவர். நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து வரலாற்று ஆசிரியர்களிடமும்…
சீன உணவு மையம்: உத்துசானின் இனவாத கருத்துக்குக் கண்டனம்
ஜாலான் அலோரில் சுற்றுப் பயணிகளைக் கவரும் திட்டம் ஒன்றை மேற்கொள்ளும் திட்டத்தை உத்துசான் மலேசியா ஓர் இன விவகாரமாக மாற்றியுள்ளது வருத்தமளிப்பதாக மசீச கூறியுள்ளது. “சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகளுக்குமேல் ஆன பிறகும் தேசிய நலனைவிட இன விவகாரத்துக்கே மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதைக் காண ஏமாற்றமளிக்கிறது”, என மசீச…
அரசப் பேராளர்: சமய விவகாரங்களில் யோசித்துப் பேசுவீர்
சமய விவகாரங்கள் குறித்து கருத்துரைப்போர் எண்ணிப் பார்த்துப் பேச வேண்டும், பலஇனச் சமுதாயத்தில் சினமூட்டும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என பேராக் அரசப் பேராளர் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா கூறியுள்ளார். சமயம் என்பது ஒவ்வொரு சமயத்தாரும் உயர்வாகப் போற்றும் ஒன்றாகும். “எனவே, அதன் பேரில் தெரிவிக்கப்படும்…
சஞ்சீவனின் தந்தைக்கு மகன் சுடப்பட்ட விவகாரத்தை நெகிரி போலீசாரே விசாரிப்பதில்…
மைவாட்ச் தலைவர் ஆர். ஸ்ரீசஞ்சீவன் சுடப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதில் நெகிரி செம்பிலான் போலீசாரே தொடர்ந்து ஈடுபடுவது கண்டு அவரின் தந்தை பி.ராமகிருஷ்ணன் வருத்தம் அடைந்துள்ளார். சில நாள்களுக்கு முன் சஞ்சீவனின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்ள சில அதிகாரிகள் செர்டாங் மருத்துமனை வந்ததாக ராமகிருஷ்ணன் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “அவர்கள் மருத்துவர்களைச்…
கருத்தரித்துள்ள பயிற்சியாளர்களுக்கு தேசிய சேவையில் இடமில்லை
தேசிய சேவை பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் கருத்தரிப்புச் சோதனைக்கு அனுப்பப்படுவார்கள். இதற்குமுன் பயிற்சிக்குச் சென்ற சிலர் கருத்தரித்திருந்தும் அது பற்றி அறியாமல் இருந்ததும் சிலர் அதை இரகசியமாக வைத்துக்கொண்டதும்தான் இதற்குக் காரணமாகும். அப்பயிற்சிகள் “உடலை வருத்திச் செய்யப்படுபவை” என்பதால் கருத்தரித்துள்ள பெண்களுக்கு அவை “ஆபத்தானவை” என மகளிர், குடும்ப,…
சினிமா ரசிகர்கள்: நாட்டுப்பண் சட்டத்தைக் கட்டாயமாகச் செயல்படுத்தாதீர்
ஆகஸ்ட் 28-இலிருந்து செப்டம்பர் 3வரை படக் கொட்டகைகளில் நாட்டுப்பண் இசைக்கப்படுவது தொடர்பில் மாறுபட்ட எதிர்வினைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ரசிகர்களுக்கு அதில் மறுப்பு இல்லை. ஆனால், நாட்டுப்பண் சட்டம் 1968, கட்டாயமாக செயல்படுத்தப்படுவதைத்தான் அவர்களால் ஏற்க முடியவில்லை. அது தேவை இல்லை என்கிறார்கள். அச்சட்டம் நாட்டுப்பண்ணை அவமதிப்போருக்கு ரிம100 அபராதம்…
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பிரச்னை இல்லை:…
கடந்த திங்கள்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஐவரின் குடும்பத்தார் விரும்பினால் ஒரு மரண விசாரணை நடந்தும்படி கேட்டுக்கொள்ளலாம் என பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி கூறினார். குற்றவாளிகளே ஆனாலும் அவர்களின் உரிமையை அரசாங்கம் ஒதுக்கித் தள்ளாது என்றாரவர். “இப்போது அது பற்றி போலீசார் விசாரணை…
மகாதிர்: டிபிபிஏ விவகாரத்தில் இரகசியம் தேவையில்லை
அரசாங்கம் ட்ரேன்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். “அது மலேசிய மக்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அரசாங்கம் அதை இரகசியமாக வைத்திருக்கக் கூடாது”, என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அதைக் கமுக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த ஒப்பந்தத்தில் பொதுமக்கள் அறியக்கூடாத விசயங்கள் இருக்கின்றன…
‘வன்குற்றங்களின் பெருக்கம் வணிகத்தைக் கெடுக்கிறது’
வன்முறை சார்ந்த குற்றச்செயல்களின் பெருக்கம் வணிகத்தைக் கெடுக்கிறது என்று கூறும் சீன மலேசிய வணிகச் சமூகம் அதை ஒடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வெண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதைக் கண்டு முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்களும் மிரண்டு ஓடுகிறார்கள் என மலேசிய சீனர் வர்த்தக, தொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் லிம்…
வேதா: குற்றத்தை ஒழிக்க எல்லாக் குண்டர்களையும் சூட்டுத் தள்ளுவோமா?
இந்திய மலேசியர்களிடையே குண்டர்தனம் பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது என்று கூறிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி, வன்முறையைக் கையாண்டு அதற்குத் தீர்வுகாண முடியாது என்றார். பினாங்கில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்திருந்த அவரைக் குறைகூறுவோருக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் வேதமூர்த்தி, “நிலைகெட்டுப்போன இளைஞர்களைச் சுட்டுத்தள்ளுவதுதான் இதற்குத்…


