புதிய என்ஜிஓ பக்காத்தான் விவகாரங்களையும் அலசி ஆராயும்

தவறுகளைக் கண்காணிக்கவும் அவை பற்றித் தகவல் அளிக்கவும் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அரசுசாரா அமைப்பான  National Oversight and Whistleblowers (NOW) பிகேஆர் தொடர்புள்ளது என்றாலும் பக்காத்தான் ரக்யாட் ஊழல்களையும் அது விட்டு வைக்காது, அலசி ஆராயும். “மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதுபோலவே பக்காத்தானிடமும் நடந்துகொள்வோம். “ஆனால் புகார் சொல்பவர்கள் ஆதாரங்களைக்…

IPCMC போலீஸ் மீது பொது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும்

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் அமைக்கப்படுவதின் மூலம் போலீஸ் மீது பொது மக்கள் நம்பிக்கை குறைந்து வருவதைத் தடுக்க முடியும் என Proham என்ற மனித உரிமைகள் மேம்பாட்டுச் சங்கம் கூறியுள்ளது. போலீசாரின் தவறான நடத்தைகளை ஆய்வு செய்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள…

‘மெர்தேக்கா வரவேற்பு நிகழ்வுகளுக்கு அனுமதி தேவையா ?’

டாத்தாரான் மெர்தேக்காவில் இன்றிரவு கூடுவதின் மூலம் தாங்கள் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறப் போவதாக கூறப்படுவதை ஜாஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர். வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதாக தான் அளித்துள்ள வாக்குறுதியை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்தக் கூட்டத்திற்குப் பின்னணியில் உள்ள 47 அரசு சாரா அமைப்புக்களைச்…

விட்டுக் கொடுக்க வேண்டாம், உத்துசான் போண்டியாகும் வரை வழக்குப் போடுங்கள்

"அவர்கள் விதி விலக்குப் பெற்றவர்களைப் போல, யாரும் தொட முடியாதவர்கள்  என்பதைப் போல பொய்ச் செய்திகளையும் பாதி உண்மைகளையும்  போடுகின்றனர். வெறுப்புணர்வைத் தூண்டி விடும் தேசத் துரோக கட்டுரைகளை வெளியிடுகின்றனர்." உத்துசான் ஆசிரியர் கர்பாலிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டார் லின் வென் குவன்: சமய, இனப் பகை…

அம்பாங் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சாட்சியமளிக்க நிபந்தனை

கடந்த வாரம் அம்பாங் போலீசால் தங்கள் நண்பர் டி.தினேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை நேரில் கண்ட இருவர், அந்த வட்டாரப் போலீசிடம் வாக்குமூலம் அளிக்க மறுக்கின்றனர். கே.மோசஸ்,ஒய்.இளவரசன்(இடம்)ஆகிய அவ்விருவரும் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த “சுயேச்சை விசாரணைக் குழுவிடம் மட்டுமே” சாட்சியமளிப்பார்கள் என வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார். “துப்பாக்கியால் சுட்டவர்கள் அம்பாங் போலீஸ்…

பக்காத்தான் விரும்பினால் சிலாங்கூர் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவரும்

பக்காத்தான் ரக்யாட் உயர்தலைவர்கள் அனுமதித்தால் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவருவது பற்றி சிலாங்கூர் பரிசீலிக்கும். அது ஒரு “அரசியல் விவகாரம்” என்றுரைத்த மந்திரி  புசார் காலிட் இப்ராகிம், இப்போதைக்கு அதனினும் முக்கியமான விவகாரங்கள் இருப்பதாக ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். முக்கியமாக 13வது பொதுத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலில்…

தண்ணீர் விவகாரம்: மறுசீரமைப்புக்கான விவரங்களை சிலாங்கூர் சமர்பிக்கும்

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தண்ணீர் மறுசீரமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை அடுத்த மாதம் நீர் வள சலுகைகளைப் பெற்றுள்ள நான்கு நிறுவனங்களிடமும் சமர்பிக்கும் என மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "நாங்கள் செப்டம்பர் இரண்டாவது வாரம் யோசனைகளையும் அவற்றை அமல்படுத்துவதற்கான முறைகளையும் தெரிவிப்போம்." "சிலாங்கூரில் உள்ள அந்த…

114ஏ பிரிவு மீதான கருத்துக்காக பிஎன் மூவர் கண்டிக்கப்படலாம்

1950ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை வெளிப்படையாக எதிர்த்ததற்காக மூன்று முக்கிய பிஎன் தலைவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா, இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் கான் பிங் சியூ, அம்னோ இளைஞர் தலைவர்…

டாத்தாரான் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றவர்கள் மஞ்சள் உடையிலும் வரலாம்

கோலாலம்பூர் டாத்தாரான் மெர்தேக்காவில் நிகழும் 55வது மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் பொது மக்கள் மஞ்சள் உடையை அணிந்திருப்பதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். "மஞ்சள் அல்லது சிவப்பு அன்றைய தினம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு…

மெர்தேக்கா நிகழ்வுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என ஜாஞ்சி டெமாக்கரசி…

அதிகாரத்துவ மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், ஜாஞ்சி டெமாக்கரசி ( Janji Demokrasi ) ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் எற்பாட்டாளர்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.…

மெர்டேகா கொண்டாட்டத்தில் நஜிப்புக்குப் பக்கத்தில் கிட் சியாங்குக்கு இடமளிக்கத் தயார்

தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம், புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடமில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார். வெள்ளிக்கிழமை இரவுக் கொண்டாட்டத்தில் அவர்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம் என்கிறார் அவர். “அது உண்மையல்ல. எவரும் வரலாம். அது பிஎன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே…

நஜிப்பையும் அன்வாரையும் சந்திக்க விரும்புகிறார் வேதமூர்த்தி

இம்மாதத் தொடக்கத்தில் நாடு திரும்பிய  இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் தனித்தனியே சந்தித்து இந்தியர்களின் சமூக-பொருளாதாரப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பது பற்றி விவாதிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி கேட்டு இருவருக்கும் எழுதியிருக்கிறார். “அப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண அன்றும்…

குற்றப் புள்ளிவிவரங்களைத் தில்லுமுல்லு செய்வது பெரிய பாவம் என்கிறார் ஐஜிபி

குற்றச் செயல்கள் மீதான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கான புள்ளி விவரங்களை  ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தற்காத்துப் பேசியிருக்கிறார். அந்தப் புள்ளி விவரங்களில் தில்லுமுல்லு எதுவும் செய்யப்படவில்லை என அவர் வலியுறுத்தினார். "என் பதவிக் காலத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக்…

உங்கள் கருத்து: குண்டர்கள் போலீஸ்காரர்கள் நிழல் உலகம்

"முன்னாள் ஐஜிபி ஒருவர் ரகசியக் கும்பல் தலைவன் ஒருவனுடன் அணுக்கமான உறவுகளை வைத்திருந்தார் என அவரது சகாக்கள் குற்றம் சாட்டுவது உண்மையில் வினோதமானதாகும்."  "தமக்கு ரகசியக் கும்பல் தலைவன் பற்றித் தெரியாது என முன்னாள் ஐஜிபி பொய் சொல்கிறார்" அடையாளம் இல்லாதவன்_4020: வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இப்போது…

கட்டாயப்பாட பரிந்துரை- தமிழ்ப்பள்ளிகளை மூட சதித்திட்டமா?

தேசியப் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக வந்தால் அதுவே தமிழ்ப்பள்ளிகளை மூடும் சதித்திட்டமாக உருவாகும். "தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்பது "நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்" என்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கையில், இக் குழுவினர் முன்னெடுத்துள்ள கட்டாயப்…

பெல்டா தலைமை இயக்குநர் அகற்றப்பட்டு ரோம்-க்கு அனுப்பி வைக்கப்படுகிறார்

பெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தின் தலைமை இயக்குநர் பதவியிலிருந்து சுல்கிப்லி அப்துல் வஹாப் அகற்றப்பட்டுள்ளார். அவர் விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சுக்கு மாற்றப்படுவார். அவ்வாறு பாஸ் கட்சியுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்பான அனாக்கின் தலைவர் மஸ்லான் அலிமான் கூறிக் கொண்டுள்ளார். சுல்கிப்லி இத்தாலியத்…

தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யத்தை மெர்தேக்காவுக்கு முதல் நாள் ராபிஸி தொடக்கி…

அரசாங்கத்துக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்திய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் சம்பந்தப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள ராபிஸி ராம்லி நாளை தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யத்தை தொடக்கி வைக்கிறார். அதற்கு தேசிய மேற்பார்வை, தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தத் தொடக்க…

பெருகிவரும் ஹிண்ட்ராப் ஆதரவை குலைத்து, மக்களைக் குழப்பும் அம்னோ கைக்கூலிகள்

-ஜெ.விஜயலிங்கம், பேராக் மாநில செயலாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி. 28 ஆகஸ்ட் 2012.   மலேசிய ஏழை இந்தியர்களின் உரிமைக் குரலான  ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின் முழக்கத்திற்கு, நாடு முழுவதிலுமிருந்து மக்களிடையே மீண்டும் பலத்த ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. ஹிண்ட்ராப் மக்கள் சக்தி  இயக்கத்தின் தலைவர்…

கர்பாலிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரிய உத்துசான் ஆசிரியர்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாம் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக உத்துசான் மலேசியாவின் மூத்த எழுத்தாளர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் கர்பால் சிங்கிடம் பலமுறை மன்னிப்புக் கோரினார். ஜுல்கிப்ளி ஜாலில் என்ற அந்த உத்துசான் செய்தி ஆசிரியர் தாம் எழுதிய "DAP diingat jangan bakar perasaan Melayu" என்ற…

உங்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? உத்துசானிடம் சுவாராம் கேள்வி

சுவாராமுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று கேட்கும் உத்துசான் மலேசியா அதன் நிதி மூலங்களைத் தெரிவிக்கத் தயாரா என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அந்த மனித உரிமை என்ஜிஓ-வின் ஆலோசகர் குவா கியா சூங். “உத்துசானுக்குப் பணம் கொடுப்பது யாரென்று சொல்லுங்களேன்.தெரியவில்லையென்றால் அங்குதானே வேலை செய்கிறீர்கள்.கேட்டுப் பாருங்கள்”.இன்று சுவாராம், மனித…

பினாங்கு கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவருவது அன்வாருக்கு சம்மதமே

பினாங்கு அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித்தாவுவதைத் தடுக்கச் சட்டம் கொண்டுவர எண்ணியிருப்பதில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சேபணை இல்லை. சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் அச்சட்டம் கொண்டுவர முடிவு செய்திருப்பதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார் என அன்வார் கூறினார்.…

ஏஜி அலுவலகம்: பெர்சே 2.0 தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு…

அரசு சார்பற்ற அமைப்புக்களைக் கொண்ட பெர்சே 2.0 கூட்டணி சட்ட விரோதமான அமைப்பு எனப் பிரகடனம் செய்வதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் விடுத்த ஆணையை ரத்துச் செய்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு செய்யாது. அந்தத் தகவலை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர்…

பக்காத்தான்: முன்னாள் பிஎன் எம்பிகளை ஏற்றுக்கொண்டதில் நியாயம் உண்டு

பக்காத்தான் ரக்யாட், தான் ஆட்சி  செய்யும் பினாங்கு மாநிலத்தில் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டு வர திட்டமிடும் வேளையில் சாபாவில் பிஎன் எம்பிகள் கட்சிமாறியதை ஏற்றுக்கொண்டது அதன் போலித்தனத்தைக் காண்பிப்பதாகக் குறைகூறப்பட்டதை எதிர்த்து தான் செய்ததே நியாயமே என்று வாதிடுகிறது. அந்த எம்பிகள் பக்காத்தானுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மக்களின் உரிமைக்கட்டளையை…