13வது பொதுத் தேர்தலுக்கு ஆயிரம் பிஎன் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆளும் பிஎன் கூட்டணி அடையாளம் கண்டுள்ளது. அந்தப் பட்டியல் விரைவில் அம்னோ தலைவரும் பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்பிக்கப்படும் என அம்னோ/பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார்.…

டிஏபி-யும் ஹனீப் தலைமையிலான குழுவைப் புறக்கணிக்கும்

 ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த வன்முறைகளை விசசரிக்க  முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அறுவர் கொண்ட சுயேச்சைக் குழுவை டிஏபி புறக்கணிக்கும். "அந்த சுயேச்சைக் குழுவை- பெர்சே 3.0 கம்யூனிஸ்ட்களுடன் தொடர்புடையது, அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி என…

‘பாஸ் பக்காத்தான் அல்லாத கட்சிகளுடன் ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியும்’

ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசமைப்பைத் திருத்துவதற்கு பாஸ் கட்சி முன்னுரிமை அளிக்கும். அதற்கு தனது பக்காத்தான் பங்காளிக் கட்சிகளை மாற்றுவது தான் வழி என்றால் அது அவ்வாறு செய்யும். இவ்வாறு பாஸ் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் கூறுவதாக இன்று நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்…

பாஸ்: டிஏபி மலாய் சமூகத்துக்கு மருட்டல் அல்ல

மலாய் அரசியல் நிலைக்கு டிஏபி மருட்டலாக இல்லை. ஏனெனில் அது பெரும்பான்மையான நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லவே முடியாது. இவ்வாறு பாஸ் கட்சி கூறுகிறது. "நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 222 இடங்களில் 48ல் மட்டுமே போட்டியிடும் டிஏபி எப்படி மலாய் பிரதிநிதித்துவத்துக்கு மருட்டலாக விளங்க முடியும் ?" என ஷா அலாம்…

”போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களும் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக சென்று தேட…

அதிகாரிகள் தங்கள் விசாரணையில் நியாயமாக நடந்து கொள்வர் எனக் கூறப்படும் போது  பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக சென்று தங்களைத் தாக்கியவர்களைத் தேடுவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைவர் ஒருவர் போலீசாருக்குச் சவால் விடுத்துள்ளார். பெரிய அளவில் நிகழ்ந்த பெர்சே பேரணியின்…

பிரதமர்: பெர்சே ஊடக விளம்பரத்துக்காக அரங்கத்தை நிராகரித்தது

அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பெயர் குறிப்பிடாமல் தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 3.0ஐ சாடியிருக்கிறார். பெர்சே 3.0 பங்கேற்பாளர்கள் டாத்தாரான் மெர்தேகாவில் போடப்பட்டிருந்த தடைகளை தாக்கி அதன் விளைவாக அனைத்துலக ஊடகங்களில் விளம்பரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பெர்சே 3.0 ஏற்பாட்டாளர்கள் மாற்று இடங்கள்…

மலேசிய அரசியலை அம்னோ படு பாதாளத்துக்குள் தள்ளி விட்டது: கிட்…

அம்னோ பாரு 1988ம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டதால் அதற்கு இப்போது வயது 24 தான். ஆனால் அது தனது 66வது ஆண்டு நிறைவை இப்போது கொண்டாடுகிறது. மூல அம்னோ கட்சியின் பதிவு அதிகாரப்பூர்வமாக திட்டமிடப்பட்டு ரத்துச் செய்யப்பட்டது. அந்தக் காரணத்தின் அடிப்படையில் அம்னோ பாருவில் உறுப்பினர்களாக இருப்பதற்கு…

‘நல்ல கம்யூனிஸ்ட்கள் மட்டுமே பெர்சே-யை ஆதரிக்கின்றனர்’

பெர்சே 2.0 பேரணியில் கம்யூனிஸ்ட் அனுதாபிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் கூறியுள்ளதை பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான ஹிஷாமுடின் ராயிஸ் நிராகரித்துள்ளார். ஹனீப் சொல்வது போல ஏப்ரல் 28 பேரணியில் கம்யூனிஸ்ட்கள் சம்பந்தப்பட்டிருந்தால்  அவர்கள் 'நல்ல கம்யூனிஸ்ட்களாக' இருக்க வேண்டும். ஏனெனில்…

ஐரின் பெர்னாண்டெஸ் எம்ஏசிசி-யிடம் வாக்குமூலம் கொடுத்தார்

தெனாகானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டெஸ், கடந்த திங்கட்கிழமையன்று இந்தோனிசிய நாளேடு ஒன்றுக்கு தாம் அளித்த பேட்டியில் மலேசியாவுக்குப் பாதகமான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுவது மீது புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்புஆணையத் தலைமையகத்தில் இன்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஐரின் பெர்னாண்டெஸ் தமது வாக்குமூலத்தை பதிவு…

பெர்சே ‘அதிகாரம் இல்லாத’ ஹனீப் குழுவை நிராகரிக்கிறது

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள "சுயேச்சையானது எனக் கூறப்படும்" குழுவை "அதிகாரம் இல்லாதது" எனக் கூறி பெர்சே நடவடிக்கைக் குழு நிராகரித்துள்ளது. அந்தக் குழு அமைக்கப்படுவதற்கும் அதன் பணிகளை நிர்ணயிப்பதற்கும் எந்தச் சட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதற்கு எந்த…

உங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா ? யார்…

"பிஎன், எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புக்கள் ஆகியவை உட்பட நாங்களும் அதில் சம்பந்தப்பட்டுள்ளோம். ஏன் அது குறித்து அனைவருடனும் அல்லது யாருடனும் முன் கூட்டியே ஆலோசனை நடத்தப்படவில்லை?" இசி: எங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு பெர்சே-யும் எதிர்க்கட்சிகளுமே காரணம் பீரங்கி: தேர்தல் ஆணையம் தனது சொந்த நன்மைக்காக மிகவும் கெட்டிக்காரத்தனமாகப்…