கடந்த சனிக்கிழமை தெற்கு தாய்லாந்தின் மூன்று மாகாணங்களில் 50-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் மீதான தீவைப்புத் தாக்குதல்கள் மற்றும் டயர் எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, மலேசிய-தாய்லாந்து எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டிய காவல் துறை…
பிகேஆர்: Ops Cantas பழமையான சட்டத்தை பயன்படுத்தும் ‘பொது உறவு…
Ops Cantas போலீசாரின் 'பொது உறவு நடவடிக்கை' எனத் தோன்றுவதாக பிகேஆர் வருணித்துள்ளது. பழமையான ஒரு சட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையில் "விருப்பம் போல்' கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் நிருபர்களிடம் கூறினார். "நான் பொது மக்களுடைய பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுகிறேன்.…
பிரதமர்: மலேசியாவில் முஸ்லிம் பழமைவாதம் என ஏதுமில்லை, வெறும் உணர்வுகள்…
நாய் பயிற்றுநர் மஸ்னா முகமட் யூசோப், ஜோகூர் ஒய்வுத் தல உரிமையாளர் சையட் அகமட் அல்காப் ஆகியோர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் போன்ற சம்பவங்களினால் சில தரப்புக்கள் சொல்வதைப் போல மலேசியா முஸ்லிம் பழமைவாதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா ? புத்ராஜெயாவில் இன்று நிருபர்கள் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட அந்தக்…
பூஜியா: ஷாரிஸாட் வரி செலுத்துவோருக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட சுமை
மகளிர் விவகாரங்கள் மீது பிரதமருக்கான ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் நியமிக்கப்பட்டுள்ளது, வரி செலுத்துவோருடைய பணத்தைப் பயன்படுத்தி 'மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்' என பிகேஆர் குவாந்தான் எம்பி பூஜியா சாலே வருணித்துள்ளார். ஏனெனில் குறிப்பாக மகளிர் விவகாரங்கள் என வரும் போது ஷாரிஸாட் 'கூடுதல் மதிப்பு'…
குறைசொல்வோரை விளாசுகிறார் ஐஜிபி
திங்கள்கிழமை பினாங்கில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தூற்றுவோரை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கடுமையாகச் சாடினார். போலீஸ் சுட்டுக்கொல்லும் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். “லாஹாட் டத்துவில் நாட்டைக் காக்கும் பணியில் போலீசார் உயிரை நீத்தபோது அதை நாடகம் என்று எள்ளி நகையாடினர். “சுடும் சம்பவங்கள்…
கொலை மிரட்டல் குறித்து ராயர் போலீஸில் புகார்
ஸ்ரீ டெலிமா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், தமக்கு ஒரு “கொலை மிரட்டல்” விடுக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது என போலீசில் புகார் செய்துள்ளார். இன்று காலை கிரின் லேனில் உள்ள அவரின் வீட்டில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் இருந்த ஒரு பிளாஸ்டிக் பை கண்டெடுக்கப்பட்டதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.…
மனித உரிமைகளை மதிக்கும் பிரதமருக்கு சுஹாகாம் பாராட்டு
மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), அடிப்படை மனித உரிமைகளை மீறும் சட்டங்கள் கொண்டுவரப்பட மாட்டா எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவாதம் அளித்திருப்பதை வரவேற்கிறது. “அது குற்றச்செயல்களைத் தடுக்க விசாரணையின்றித் தடுத்துவைக்க வகை செய்யும் சட்டங்களைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற பரிந்துரைகள் குறித்து சுஹாகாம்…
ஐவர் சுடப்பட்டதன் பின்னே உள்ள மர்மம் விளக்கப்பட வேண்டும்
திங்கள்கிழமை பினாங்கு, சுங்கை நிபோங்கில் இரகசிய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீது தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. “போலீசார் ஏன் அவர்களைக் கைது செய்ய முற்படவில்லை?”, என பினாங்கு மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவர் ஜே.தினகரன் ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். போலீஸ்…
‘அல்லாஹ்’ அறிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தும் எனத் தேவாலயம் அஞ்சுகின்றது
'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான விவகாரம் நீதிமன்ற முடிவுக்காக காத்திருப்பதால் அது குறித்து கருத்துச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுமாறு எல்லாத் தரப்புக்களையும் கத்தோலிக்க தேவாலயம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய கருத்துக்கள் மலேசியாவில் 'இனவாத உணர்வுகளைத் தூண்டி சமய பதற்ற நிலையை உருவாக்குகின்றன' என கோலாலம்பூர் Archdiocese வேந்தர்…
ஸாஹிட், ராபிஸி மீது போட்ட 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு…
Awan Megah Sdn Bhd பிரச்னை மீது பாண்டான் எம்பி முகமட் ராபிஸி ராம்லி மீது தாம் தொடுத்த 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை முன்னாள் தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீட்டுக் கொண்டிருக்கிறார். உயர் நீதிமன்ற நீதி ஆணையாளர் லீ ஹெங் சொங் முன்னிலையில்…
இறந்த மனிதர்கள் கதை சொல்ல முடியாது
'சுட்டுக் கொல்லும்' கொள்கை கவலை அளிக்கின்றது. அந்த மனிதர்கள் அருகிலிருந்து சுடப்பட்டதை காயங்கள் காட்டினால் என்ன சொல்வது ?' சந்தேகத்துக்குரிய நபர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து வேதமூர்த்தி கேள்வி எழுப்புகிறார் அரோவானா: தங்கள் நடவடிக்கை நியாயமானது சரியானது எனப் போலீசார் எப்போதும் கூறிக் கொள்கின்றனர். அவர்கள் அந்த முழுச்…
போலீசார் இதர 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பற்றிய புலனாய்வை…
நீங்கள் ஒடலாம் ஆனால் நீங்கள் பதுங்க முடியாது- பினாங்கில் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்த 11 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் தொடர்புடைய குண்டர் கும்பல் ஒன்றுக்கு போலீசார் அனுப்பியுள்ள செய்தி இது தான் எனத் தோன்றுகிறது. சுங்கை நிபோங்கில் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றில் கூலிக்கு அமர்த்தப்படும் கொலைக்காரர்கள்…
‘மெட்ராஸ் கஃபே’ திரையிடும்முன் சமுக இயக்கங்களுக்கு காட்டுங்கள்!
ஜான் ஆப்ரஹாம் என்ற மலையாளி நடித்த இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய 'மெட்ராஸ் கஃபே' படத்தை மலேசியாவில் திரையிடும்முன் அது சார்பாக இங்குள்ள சமூக இயக்கங்களுடன் கலந்து பேசுமாறு உள்துறை அமைச்சு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது சார்பாக கருத்து தெரிவித்த சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர், கா. ஆறுமுகம்…
ஷரிசாட் நியமனம்: பிடிகொடுக்காமல் பேசுகிறார் நஜிப்
இன்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவின் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம், அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் அவரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவாரா என்று இரண்டாவது தடவையாக கேட்கப்பட்டது. அதற்குப் பிரதமர் நேரடியாக பதிலுரைக்காமல், அந்த முன்னாள்…
போலீஸ்: துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வழக்கமான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன
நேற்று ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒரு குண்டர் கும்பலின் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கமான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன என பினாங்கு போலீசார் உறுதியாகக் கூறுகின்றனர். இதனை வலியுறுத்திய பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி, “எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சந்தேக நபர்களை நோக்கி 30 தடவை சுட்டதாகக்…
பாஸ்: எகிப்திய நெருக்கடி மீது நாடாளுமன்றக் கூட்டம் நடத்துக
மலேசியா, அவசர நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தி எகிப்திய இராணுவம் பொதுமக்கள்மீது படைபலத்தைப் பயன்படுத்தியதைக் கண்டிப்பதுடன் அந்நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தின் அவசரக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது.. இதன் தொடர்பில் பாஸ், மகஜர் ஒன்றைப் பிரதமர் அலுவலகத்தில் இன்று சமர்ப்பித்தது. மகஜரைக்…
சிலாங்கூர் போலீசார் சிறப்பு நடவடிக்கையின் கீழ் 683 பேரைக் கைது…
சிலாங்கூரில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய Ops Cantas Khas நடவடிக்கையின் கீழ் இன்று காலை ஆறு மணி வரையில் மொத்தம் 683 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 211 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்தத் தகவலை சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஏ தெய்வீகன் இன்று வெளியிட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்…
தேசிய சேவைப் பயிற்சியாளர்களுக்கான கருத்தரிப்பு சோதனையைக் கைவிடுங்கள் என்கிறது SIS…
தேசிய சேவை பெண் பயிற்சியாளர்கள் அனைவரும் கருத்தரிப்பு சோதனைக்கு உட்பட வேண்டும் என்ற முடிவை மறு ஆய்வு செய்யுமாறு Sisters in Islam (SIS) என அழைக்கப்படும் இன்னொரு மகளிர் அமைப்பும் கேட்டுக் கொண்டுள்ளது. கருத்தரிப்பு சோதனை 'பொருத்தமற்ற நடவடிக்கை' என அது வருணித்தது. 2004ம் ஆண்டு தேசிய…
மஇகா தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என…
செப்டம்பர் 22ம் தேதி நிகழும் மஇகா தலைவர் தேர்தலில் அந்தப் பதவியைத் தாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என ஜி பழனிவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். துணைத் தலைவராக டாக்டர் எஸ் சுப்ரமணியமும் எதிர்ப்பின்றி தேர்வு பெறுவார் எனத் தாம் எண்ணுவதாகவும் அவர் சொன்னார். "காரணம் தலைவர், துணைத்…
‘சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடலில் ஏராளமான துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருப்பது ஏன்?’
பினாங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து சந்தேக நபர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டார்கள். உடல்களைப் பெற்றுக்கொள்ளுமுன்னர் அவர்கள் போலீசில் புகார் செய்ததாக அக்குடும்பத்தார் சார்பில் பேசிய ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கூறினார். அந்த ஐவரும் இரகசிய கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் போலீசார் அதை நிரூபிக்க…
சூராவ்-வை இடிக்கும் ஆணையை பாத்வா மன்றம் ஆதரிக்கிறது
கோத்தா திங்கி செடிலியில் Tanjung Sutera ஒய்வுத் தலத்தில் தியானம் செய்வதற்கு பௌத்த சுற்றுப்பயணிகள் குழு ஒன்று பயன்படுத்திய இடிப்பதற்கு ஜோகூர் அரசாங்கம் ஆணையிட்டதை தேசிய பாத்வா மன்றம் ஆதரித்துள்ளது. சூராவ் அல்லது பள்ளிவாசல் தவறாகப் பயன்படுத்தப்படும் போது அல்லது மாசுபடுத்தப்படும் போது அதனை இடிப்பது தான் விவேகமாகும்…
சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்புகிறார் வேதா
இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பினாங்கில் ஐந்து சந்தேக நபர்களை போலீசார் சுட்டுக் கொன்ற முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அச்சம்பவத்தைக் காண்பிக்கும் நிழல்படங்களைத் தாம் பார்க்க நேர்ந்ததாகவும் அவற்றைப் பார்க்கையில் போலீசுக்கும் சந்தேக நபர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படுவதை நம்ப முடியவில்லை என்றும் அவர் சொன்னார். “ஒவ்வொரு…
‘புதுக் கிராமம்’ திரைப்படம் ‘சரியான செய்தியைத் தர வேண்டும்’
கம்யூனிசக் கிளர்ச்சியின் வரலாற்று அம்சத்தை 'புதுக் கிராமம்' திரைப்படம் சித்தரிக்கிறது என்றால் அதனை வெளியிட திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதிக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி (ஒய்வு பெற்ற) முகமட் அஸுமி முகமட் சொல்கிறார். உண்மையில் நடந்ததை அந்தத் திரைப்படம் துல்லிதமாகக் காட்டா விட்டால் அது…
EMGS என்னும் சேவை நிறுவனத்தை கலையுங்கள்
EMGS எனப்படும் மலேசியக் கல்வி அனைத்துலகச் சேவை நிறுவனத்தை கலைக்க வேண்டும் என மலேசிய போட்டித் திறன் ஆணையம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த நிறுவனம் பின்பற்றும் வழிமுறைகள் போட்டி நடைமுறைகளுக்கு மாறாக இருப்பதாக அவர்…


