கடந்த சனிக்கிழமை தெற்கு தாய்லாந்தின் மூன்று மாகாணங்களில் 50-க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் மீதான தீவைப்புத் தாக்குதல்கள் மற்றும் டயர் எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, மலேசிய-தாய்லாந்து எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டிய காவல் துறை…
‘தேசிய சேவை கருத்தரிப்பு சோதனை பெண்கள் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்க…
தேசிய சேவையில் பங்கு கொள்ளும் இளம் பெண்கள் கட்டாயமாக கருத்தரிப்பு சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது 'அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை மீறுவதுடன்' பெண்களுக்கு நன்மையைக் காட்டிலும் தீமையையே கொண்டு வரும் என மகளிர் உரிமைப் போராட்ட அமைப்புக்கள் கருதுகின்றன. "காரணம் தாய்மை அடைந்துள்ளதை கண்டு பிடிக்காமல் தடுக்க…
நஜிப் மகாதீருடன் கருத்து வேறுபாடு சுற்று 1
"எம்ஏஎஸ்-ஸுக்குத் தேவைப்படுவது அரசியல் தலையீட்டிலிருந்து விடுபட்ட சிறந்த நிர்வாகக் குழுவாகும்- ஆனால் அது கிடைக்காது" நஜிப்: எம்ஏஎஸ் தனியார் மயமாக்கப்பட மாட்டாது உங்கள் அடிச்சுவட்டில்: எம்ஏஎஸ் (மலேசியன் ஏர்லைன்ஸ்) பற்றிய விவாதங்களில் நாம் முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். அது தனியார் மயமாக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது பிரச்னையே…
சந்தேக நபர்களை நீதிமன்ற ஆணையுடன் 72 நாள்கள் தடுத்து வைக்கலாம்
1959 ஆம் ஆண்டு குற்றத்தடுப்புச் சட்டம் (1983-இல் திருத்தப்பட்டது) சந்தேக நபர்களை 72 நாள்கள் விசாரணைக்காக தடுத்து வைக்க வகை செய்வதாகக் கூறுகிறார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார். ஆனால், அவ்வாறு தடுத்துவைக்க நீதிமன்ற உத்தரவைப் பெறுவது அவசியமாகும். அச்சட்டத்தின்கீழ் இப்போது நாடு முழுக்க…
ஆலயப் பணம் ‘அபேஸ்’ என்று கூறிய சிஎம்-மீது தெங் சீற்றம்
பினாங்கு பிஎன்னின் முன்னாள் தலைவர், தெங் சாங் இயோ, பத்து கவானில் உள்ள 134-ஆண்டுகள் பழமையான ஆலயத்துக்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த 500,000 ரிங்கிட்டைத் தாம் “விழுங்கி ஏப்பமிட்டு விட்டதாக” பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கும் இரண்டு சீனமொழி நாளேடுகளும் குற்றம் சாட்டியிருப்பது குறித்து சீற்றமடைந்துள்ளார். அதன்…
சாபாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கை
சாபாவில், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்று விரைவில் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மூசா அமான் இன்று தெரிவித்தார். அதில், இராணுவம், போலீஸ், குடிநுழைவுத் துறை மலேசிய கடலோரச் சட்ட செயலாக்கத் துறை, ரேலா, தேசியப் பதிவுத் துறை, சிவில் தற்காப்புத் துறை ஆகியவை பங்கேற்கும். சாபா…
கைரி நஸ்ரியைக் குறை கூறுகின்றவர்களைச் சாடுகிறார்
தமது புதல்வரை தமது சிறப்பு அதிகாரியை நியமித்த சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸை குறை கூறுகின்றவர்கள் முதலில் தங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் நஸ்ரியின் வாக்கு வன்மைக்கு குறிப்பாக நாடாளுமன்றத்தில் அவருடைய சொல் வன்மைக்கு…
நஜிப் டாக்டர் மகாதீருக்கு பதில் அளிக்கிறார் சமநிலை பேணப்படும் என…
தனிநபர் மனித உரிமைகளுக்கும் குற்றச் செயல்களைக் குறைக்கும் பொது நலனுக்கும் இடையில் சமநிலையை நிலை நிறுத்தப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார். தடுப்புக் காவல் சட்டங்கள் அகற்றப்பட்டது தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது "சிவில் சுதந்திரத்தின் விலை அதிகமான துப்பாக்கிச்…
‘பாதிரியார் பொய்கள்’ தொடர்பில் டிஏபி உத்துசான் மீது வழக்குப் போடும்
'கற்பனையான' தந்தை அகஸ்டஸ் சென் எழுதிய கையேடு ஒன்றில் காணப்படும் 'அவதூறான பொய்களுக்காக' டிஏபி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது வழக்குரைஞர்களுக்கு ஆணையிட்டுள்ளது. டிஏபி தொடர்ந்து மறுத்த போதிலும் 'பொய்களை மறுசுழற்சி செய்வது' என அந்த நாளேடு முடிவு செய்துள்ளதால் வழக்குப்…
ஷரிசாட் திரும்ப வருகிறாரா? பிரதமர் மெளனம்
அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் மகளிர் விவகார சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவது பற்றி வினவியதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரியாகப் பதிலளிக்கவில்லை. “அதன் தொடர்பில் எதுவும் அறிவிப்பதற்கில்லை. அதை அப்படியே விட்டு விடுங்கள்”, என்றார். ஷரிசாட், மகளிர் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் நஜிப்பின்…
பாஸ்: நஜிப்பிடம் தெளிவான கடப்பாடு இல்லை
13வது பொதுத் தேர்தல் முடிந்து 100 நாட்களாகியும் தேசிய சமரசத்தை ஏற்படுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவான கடப்பாடு எதனையும் தெரிவிக்கவில்லை என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் சொல்கிறார். "தேசிய சமரசத்திற்கு அவர் ஏதும் சொல்வதாகத் தெரியவில்லை. மாறாக அரசியலில் நெருப்புக்கு வீசிக் கொண்டிருக்கிறார்,"…
டிஏபி: கட்சிப் பேரவையில் கலந்து கொள்ளாதவர்கள் பற்றி நஜிப் பொய்…
கடந்த ஆண்டு இறுதியில் நிகழ்ந்த டிஏபி பேரவை குறித்து 753 பேராளர்களுக்கு கட்சி தகவல் கொடுக்கவில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்லிக் கொள்வது ஒரு பொய் என அந்தக் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் அவரைச் சாடியுள்ளார். அந்த எண்ணிக்கையில் சொந்தக் காரணங்களுக்காக…
எம்ஏஎஸ் விற்கப்படாது: நஜிப் திட்டவட்டம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசிய விமான நிறுவனமான மலேசியன் ஏர்லைன்சைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். “எம்ஏஎஸ் தனியார்மயமாகாது. பங்குச் சந்தையில் பதிவுபெற்றதும் பொதுநலனைக் கொண்டதுமான அந்நிறுவனம் கருவூலத்துக்குச் சொந்தமானது”, என புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது நஜிப் தெரிவித்தார். நேற்று, முன்னாள் பிரதமர்…
ரவூப் ஹிம்புனான் ஹிஜாவ் பேரணி : நால்வர் குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்
கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ரவூப்பில் நிகழ்ந்த ‘Himpunan Hijau’ பசுமைப் பேரணி தொடர்பில் 2012 அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நால்வர் மறுத்து விசாரணை கோரினர். போலீசார் விதித்த முன் நிபந்தனையை மீறியதாக பேரணி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 65 வயது…
சமயங்களுக்கு இடையிலான பிரச்னைகள் மீது அமைச்சர் சொன்னதை அவரது உதவியாளர்…
சமயங்களுக்கு இடையிலான மன்றம் ஒன்றுடன் பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் குருப் நடத்திய சந்திப்பு தொடர்பில் மலேசியாகினி வாசகர்கள் எழுப்பிய பல விஷயங்கள் அமைச்சருடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவை என அவரது பத்திரிக்கைச் செயலாளர் சாலேகி அமாட் ஜனுரி கூறுகிறார். 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் இப்போது…
‘கூட்டரசுத் தடைக்கற்கள்’ குவான் எங்-கிற்கு முட்டுக்கட்டையாக இருந்தன
பினாங்கு மாநிலத்தை 2008ம் ஆண்டு பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்ட பின்னர் அரசாங்கச் சேவையுடன் வேலை செய்வது தான் மாநில அரசாங்கம் எதிர்நோக்கிய பெரிய சவால் என முதலமைச்சர் லிம் குவான் எங் சொல்கிறார். மாநில சட்ட அதிகாரி போன்ற முக்கிய நியமனங்களை கூட்டரசு அரசாங்கம் செய்வதை அவர்…
முன்னாள் இஓ கைதிகளுக்கு போலீஸ் தீவிர வேட்டை
போலீசார், “Ops Cantas Khas”என்னும் நடவடிக்கையைத் தொடங்கி, குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் முன்னாள் அவசரக்காலச் சட்டத் தடுப்புக் கைதிகளைத் தேடிப் பிடிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர். அந்நடவடிக்கை கடந்த சனிக்கிழமை தொடங்கியது என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது. சந்தேகத்துக்கு உரியவர்கள்…
நஸ்ரி, நாட்டைவிட்டு வெளியேறு: பிஎன் ஆதரவு என்ஜிஓ
அரசாங்க-ஆதரவு மலாய் என்ஜிஓ ஒன்று, சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் “ஆணவத்துடனும், வீராப்புடனும்” நடந்துகொள்கிறார் எனச் சாடியுள்ளது. தம் மகனைச் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்திருப்பதைத் தற்காத்துப் பேசிய நஸ்ரி, “என் மகனுக்குச் சம்பளம் தேவையில்லை. அவனிடம் பணம் இருக்கிறது........அவன் தந்தை ஒரு பணக்காரர்”,…
பிகேஆர்: சரவாக் மாநில அரசு பிகேஆர் ஆதரவாளர்களைத் தண்டிக்கின்றது
பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களித்ததற்காக பாராம் பகுதியில் உள்ள சரவாக் பிகேஆர் ஆதரவாளர்கள் தண்டிக்கப்படுவதாக அந்த மாநில பிகேஆர் தலைவர் பாரு பியான் கூறிக் கொண்டுள்ளார். ரப்பர் சிறுதோட்டக்காரர் மேம்பாட்டு வாரியத்தின் (ரிஸ்டா) வழி அதிகப் பலன் தரும் ரப்பர் கன்றுகளை நடுவதற்கான அவர்களுடைய விண்ணப்பங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக…
மலேசியா தன் போக்கில் செல்லவில்லை. முற்றாக வழிகாட்டுதலே இல்லை
தன் போக்கிற்காவது பாதை வகுக்கப்பட்டிருக்கும். ஆனால் நஜிப் தலைமைத்துவத்தில் நாடு வழிகாட்டல் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிகேஆர்: நஜிப் இலக்கைத் தொலைத்துவிட்டார், தன்போக்கில் சென்று கொண்டிருக்கிறது மலேசியா ஒங் குவான் சின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இரண்டாவது தவணைக் காலத்துக்கு பொறுப்பேற்ற 100 நாள் குறித்து பாயான் பாரு எம்பி…
29 லட்சம் ரிங்கிட்டை தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க முடியுமா?
மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 18, 2013. பேராக் மாநில தமிழ்ப்பள்ளிக்கான இந்த 2000 ஏக்கர் நிலம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தினால் மேம்படுத்தப்பட்டு, நிருவாகமும் செய்யப்படும் என்று தொடக்கத்தில் சோமசுந்தரம் கூறினார். மேலும், இதனால் வரும் செலவுகள் போக மீதமுள்ள பணம் புதிதாக…
சூராவை இடிப்பது பற்றி டாக்டர் மகாதீரிடம் “வேறு யோசனைகள்” உள்ளன
சூராவ் ஒன்றை பௌத்தர்கள் பயன்படுத்த அனுமதித்த ஒய்வுத் தல உரிமையாளரான சிங்கப்பூரரின் நிரந்தர வசிப்பிடத் தகுதியை (பிஆர்) ரத்துச் செய்தது கடுமையான நடவடிக்கை அல்ல என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருதுகிறார். ஆனால் அந்த சூராவை இடிப்பது பற்றி அவர் மாறுபட்ட எண்ணத்தை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.…
முஸ்லிம்களை மதம் மாற்ற புதிய தந்திரம் பயன்படுத்தப்படுவதாக ஒர் அமைப்பு…
'தொடர்பு முறை' (contextualisation) என அழைக்கப்படும் 'ஈவிரக்கமற்ற' வியூகத்தின் வழி மலாய்க்காரர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படுவதாக ஒர் அரசு சாரா இஸ்லாமிய அமைப்பு ஒன்று கூறிக் கொண்டுள்ளது. அந்த வியூகத்தின் கீழ் மதம் மாறிய மலாய்க்காரர்கள் முன் தோற்றத்துக்குத் தொடர்ந்து முஸ்லிம்களாக வாழ்ந்து வருவர் என…
நஸ்ரியின் புதல்வர் இப்போது பாடாங் ரெங்காஸுக்கான அவரது உதவியாளர்
சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர் முகமட் நெடிம் நஸ்ரி இப்போது தமது தந்தையின் தொகுதிக்கான சிறப்பு அதிகாரி-அமைச்சுக்கான சிறப்பு அதிகாரி அல்ல என அமைச்சின் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சு ஊழியர் பட்டியலில் 'சிறப்பு அதிகாரி' என நெடிம் குறிப்பிடப்பட்டிருந்தார். இப்போது அவர்…


