குவான் எங்: 18-ஆண்டுகள் சிஎம்-மாகவா? முடியாதய்யா, முடியாது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கெராக்கானின் கோ சூ கூன்னைப்போல் 18 ஆண்டுகள் தாம் பதவியில் இருக்கப்போவதில்லை என்கிறார். அப்படி என்றால் இரண்டு தவணைகளுக்குப்பின் பதவி விலகுவாரா? “அப்படி நான் சொல்லவில்லையே”, என்றார். வெள்ளிக்கிழமை லிம். கொம்தாரில் அவரது அலுவலகத்தில் ஆங்கில நாளேடுகளுக்கு நேர்காணல் வழங்கியபோது இவ்வாறு…

கைரி அம்னோ இளைஞர் தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவார்

அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி ஜமாலுடின்,  எதிர்வரும் கட்சித் தேர்தலில் தம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள  போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். “அம்னோ இளைஞர் சகாக்களுடன் கலந்து பேசிய பின்னர், மேலும் ஒரு தவணைக்கு இருக்க விரும்புகிறேன்.  இன்னும் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.  என் போராட்டம் இன்னும் முழுமை அடையவில்லை”,…

பிகேஆர்: நஜிப் இலக்கைத் தொலைத்துவிட்டார், தன்போக்கில் சென்று கொண்டிருக்கிறது மலேசியா

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டை வழிநடத்துவதில் “இலக்கைத் தொலைத்துவிட்டார்”, மலேசியா இப்போது “எந்திர விமானவோட்டி”யால் செலுத்தப்படுவதுபோன்று சென்று கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் பிகேஆரின் பாயான் பாரு எம்பி சிம் ட்சே ஸின். “பிரதமரின் பலவீனத்தால் நாடு கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரியது”என்றாரவர். 2009-இல், பிரமதரானபோது…

தமிழ்ப்பள்ளிகளின் முதல் எதிரி அம்னோதான்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 17, 2013. 2008ல் மக்கள், குறிப்பாக இந்தியர்கள், பாரிசான்  மீது கொண்ட அதிருப்தியால் பேரா அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் பதவி ஏற்ற மக்கள் கூட்டணி அரசு சீனப் பள்ளிகளுக்காக 2,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியத்து . அந்த நிலத்தை ம.சீ.…

‘அல்லாஹ்’ என்ற சொல் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என வெள்ளிக் கிழமை…

'அல்லாஹ்' என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்த அனுமதிப்பது  முஸ்லிம்களுடைய இறையாண்மையையும் உரிமைகளையும் விட்டுக் கொடுப்பதற்கு  ஒப்பாகும் என சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நேற்று வெளியிட்ட  வெள்ளிக் கிழமை தொழுகை உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் சில சமயச் சொற்கள்  முஸ்லிம்களுக்கு 'சொந்தமானவை'…

‘இன்னொரு அரசியல் சூறாவளியை கிளப்பும் முயற்சி தோல்வி கண்டது’

ஒற்றுமை அரசாங்கம் குறித்த பேச்சுக்களை முன்மொழிந்தது பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிமே தவிர பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அல்ல என்று  இன்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ரமதான் போது மூன்று நிபந்தனைகளுடன் அன்வார் அந்த யோசனைத்  தெரிவித்தார் என RBF Online என்ற…

பெக்கானில் பிரதமரது திறந்த இல்ல உபசரிப்பில் 80,000 பேர் கலந்து…

பெக்கான் தாமான் தாசெக் சுல்தான் அபு பாக்காரில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  இன்று நடத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 80,000க்கும்  மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். பாகாங் சுல்தானா ஹஜ்ஜா கால்சோம், பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்,  பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர்…

பினாங்கில் ஜனவரிக்கும் ஆகஸ்ட்-டுக்கும் இடையில் குற்றச் செயல்கள் 4.7 விழுக்காடு…

பினாங்கில் இவ்வாண்டு பினாங்கில் ஜனவரிக்கும் ஆகஸ்ட்-டுக்கும் இடையில்  குற்றச் செயல்கள் கடந்த ஆண்டு அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 4.7  விழுக்காடு கூடியுள்ளன. அந்தத் தகவலை மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ஹனாபி வெளியிட்டார். ஆயுதம் இல்லாத கொள்ளைகளும் திருட்டுச் சம்பவங்களும் குறிப்பிடத்தக்க  எண்ணிக்கையில் கூடியுள்ள போதிலும் எல்லா வகையான…

டிஏபி: எங்களை அழிக்க நஜிப் பொய்களைச் சொல்கிறார்

'டிஏபி-யை அழிப்பதற்காக' பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'பொய் சொல்லவும்  அவதூறு பரப்பவும்' தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைமைக் கொறடா  அந்தோனி லோக் சியூ பூக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்கள் பற்றி பேராளர்களில் 753  பேருக்குத் தெரிவிக்கப்படவில்லை என…

சூராவ் உரிமையாளரின் ‘பிஆர்’ பறிக்கப்பட்டது

சூராவில் பெளத்தர்கள் தியானம் செய்வதற்கு இடமளித்த கோத்தா திங்கி செடிலி புசார் ஓய்வுத்தல உரிமையாளரின் நிரந்தர வசிப்பிடத் தகுதி(பிஆர்) பறிக்கப்பட்டது. தேசிய பதிவுத்துறையுடன் அலோசனை கலந்த பின்னர் அம்முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “பிஆர் தகுதி நன்மை கருதி வழங்கப்படுவது.  அது ஓர்…

ரிம14.2 மில்லியன் நடைபாலத்தில் பல கோளாறுகள்

மேடான் துவாங்கு மொனோ மொனோரயில் நிலயத்தையும் சுல்தான் இஸ்மாயில் எல்ஆர்டி நிலையத்தையும்  இணைப்பதற்காக ரிம14.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு ஜூலை 8-இல்  திறக்கப்பட்ட நடைபாலம் முறையாக செயல்படாமல் பழுதுபட்டிருக்கிறது. திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே பாலத்திலிருந்த பாதி விளக்குகள் எரிவதில்லை என செகாம்புட் எம்பி லிம் லிப் எங்கும் புக்கிட்…

மகாதீர் முகமட் வில்லனாகிறார்

"மகாதீர் அவர்களே பிஎன் அரசாங்கமும் போலீஸும் நன்றாக வேலை  செய்யாததால் எங்களுடைய புனிதமான சிவில் சுதந்திரங்களை நீங்கள் பறித்துக்  கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." "சுதந்திரங்களின் விலை அதிகமான துப்பாக்கிச் சூடுகள் என எச்சரிக்கிறார்  மகாதீர்" பார்வையாளன்: மலேசியாவில் குற்றச் செயல்கள் பெருகி விட்டதற்கு முன்னாள்  பிரதமர் டாக்டர்…

புதிய தேர்தல்கள் வலியைக் கொடுத்த சிரமமான முடிவு என்கிறார் லிம்

சங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) தொடுத்த நெருக்குதலினால் புதிய தேர்தல்களை  நடத்துவது என டிஏபி செய்த முடிவு 'மிகவும் வலியைக் கொடுத்தது, சிரமமானது'  என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என டிஏபி கருதியதே அதற்குக் காரணமாகும்  என்றார் அவர். 'குற்ற…

டிஏபி மறு தேர்தல் ‘பழைய’ வேட்பாளர் பட்டியல் அடிப்படையில் இருக்கக்…

சங்கப் பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) நெருக்குதல் கொடுத்த டிஏபி கட்சியின் மறு தேர்தல் நடவடிக்கை பெரும்பாலும் 'பழைய வேட்பாளர் பட்டியல்' அடிப்படையில்  இருக்கக் கூடும் என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  கூறியிருக்கிறார். மறு தேர்தலை நடத்தும் முறை குறித்த விவரங்களை முடிவு செய்வதற்காக வரும்  வியாழக்…

ஒற்றுமை அரசாங்கம் பற்றிய ஊடகத் தகவல்களை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன்  ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாகக் கூறப்படுவதை பிரதமர்  அலுவலகம் மறுத்துள்ளது. ஒற்றுமை அரசாங்கப் பேச்சுக்கள் பற்றிய ஊடகச் செய்திகள் " எழுத்தாளருடைய  கற்பனையில் உதித்தவை" என அது கூறியது. "அன்வாரும் பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவமும் 13வது பொதுத்…

சபா ஆர்சிஐ-யில் சாட்சியமளிக்க முன்னாள் முதலமைச்சர் ஹாரிஸ் மறுப்பு

சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ)  முன்பு சாட்சியமளிக்க முன்னாள் சபா முதலமைச்சர் ஹாரிஸ் சாலே எதிர்பாராத  வகையில் மறுத்துள்ளார் ஏற்கனவே சாட்சியமளித்துள்ள ஹாரிஸ் முன்னாள் சண்டக்கான் மாவட்ட அதிகாரி  ஹசானார் இப்ராஹிம் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிப்பதற்காக  மீண்டும் அழைக்கப்பட்டிந்தார். இன்று காலை சாட்சியமளித்த…

சுவாராம்: போலீஸ் குற்றச் செயல்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்

சுவாராமைத் 'தேர்வு செய்து ஒடுக்குவதை' நிறுத்திக் கொண்டு குற்றச் செயல்களை  முறியடிப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி இன்று ஒர் அறிக்கையில்  கூறியுள்ளார். ஜுலை 19ம் தேதி சுவாரம் நடத்திய நிதி திரட்டும் விருந்து பற்றிய போலீஸ்  விசாரணை…

அரசாங்கச் சம்பளம் இல்லாமல் அமைச்சர்கள் உறவினர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கு ஒகே…

அமைச்சர் அல்லது அரசாங்க நிர்வாக உறுப்பினர் ஒருவர் அரசாங்க சம்பளம்  அலவன்ஸ் சம்பந்தப்படாமல் குடும்ப உறுப்பினர் ஒருவரை உதவியாளராக  வேலைக்கு சேர்ப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல்  ரசாக் கூறியிருக்கிறார். "அந்த உதவியாளரை அமைச்சர் சேர்த்து அரசாங்கத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது," என்றார்…

டிஏபி: நிலப் பேரங்கள் தொடர்பான கேள்விகளை பேராக் சட்டமன்றம் நிராகரிக்கிறது

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் தாம் எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும்  சமர்பிக்கும் கேள்விகளுக்கு பிஎன் வழி நடத்தும் பேராக் மாநில அரசாங்கம்  தொடர்ந்து நிராகரித்து வருவதாக அந்த மாநில டிஏபி தலைவர் இங்கா கூ காம்  குறை கூறியுள்ளார். எழுத்துப்பூர்வமான பதிலுக்கு ஆறு கேள்விகளையும் வாய்மொழியான பதிலுக்கு  மூன்று கேள்விகளையும் தாம்…

ஆர்ஓஎஸ்-ஸை நீதிமன்றத்துக்கு இழுப்பது பயனற்ற வேலை-டிஏபி

மத்திய நிர்வாகக் குழுவு (சிஇசி)க்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்வது வீணான வேலை என்கிறது டிஏபி. அதன் தொடர்பில் நீதிமன்றம் செல்லும் எண்ணம் கட்சிக்கு கிடையாது எனத் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். “சட்டவிரோத…

உதவி தேவையா, ஓரிட நெருக்கடிகால சேவை மையத்துக்கு வாருங்கள்

குடும்ப வன்செயல்களுக்கு ஆளானவர்கள் ஓரிட நெருக்கடிகால சேவை மையத்தில் தேவையான உதவிகளைப் பெறலாம். இச்சேவை மையங்கள் நாடு முழுக்க உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் அமைந்துள்ளன. 1997-இலிருந்து செயல்பட்டுவரும் அச்சேவை மையங்கள் பற்றி பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை என பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் அவிவ் பஹார்டின் கூறினார். “குடும்ப…

கைரி: டிஏபி புதிய தேர்தல்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகும்

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு புதிய தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது  'குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும்' என அம்னோ இளைஞர் தலைவர்  கைரி ஜமாலுதின் சொல்கிறார். அவர் இன்று சன்வே பல்கலைக்கழகத்தில் சன்வே பொதுக் கொள்கை விரிவுரை  நிகழ்வின் தொடக்க விழாவில் நிருபர்களிடம் பேசினார். ஆர்ஒஎஸ் என்ற…

‘புதுக் கிராமம்’ திரையிடப்படுவதை மலாய் மன்றம் எதிர்க்கிறது

பொது மக்களுக்கு 'புதுக் கிராமம்' திரையிடப்படுவதற்கு மலாய் ஆலோசனை  மன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்தத் திரைப்படம் வரலாற்று உண்மைகளை மாற்றிக் காட்டுவதால் அதனை  கற்பனை எனக் கருத முடியாது என அதன் தலைமைச் செயலாளர் ஹசான் மாட்  சொன்னார். "நிறைய தியாகங்களைச் செய்துள்ள மலாய்க்காரர்களுக்கு 'புதுக் கிராமம்'  ஆத்திரத்தை…