ராபிஸி: ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்கிறது

அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கான திறன் சோதனையில் லயன் பசிபிக்-உடனான அதன் கூட்டுத் தொழில் திட்டத்தில் தோல்வி காணவில்லை எனக் கட்டுமான நிறுவனமான ஜார்ஜ் கெண்ட் கூறிக் கொள்வதை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார். அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்ட உரிமையாளரான Syarikat Prasarana Bhd-ன்…

ஜயிஸ் 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது

சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), சிலாங்கூரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தளங்களாக மாறியுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது. “முன்பு 36 பள்ளிவாசல்கள்தாம் எங்கள் பட்டியலில் இருந்தன. இப்போது மேலும் இரண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன”, என்று ஜயிஸ் தலைவர் மர்சுகி உசேன் கூறியதாக இன்றைய சினார்…

முக்ரிஸ்: என் தந்தையை இரண்டாவது முறையாக சங்கடப்படுத்த வேண்டாம்

கெடாவில் பிஎன் மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்புவதற்கு வாக்களிப்பதின் மூலம் கெடா மக்கள் தமது தந்தையார் டாக்டர் மகாதீர் முகமட் மீது கொண்டுள்ள பாசத்தை மெய்பிக்க வேண்டும் என ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த தேர்தலில் கெடாவில் பிஎன் தோல்வி கண்டது மகாதீருக்கு பேரிடியாகும்.…

தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்கள் வேட்டையாடப்படுகின்றனர், குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்

"தகவல்களை அம்பலப் படுத்துகின்றவர்களுக்கு கைவிலங்குகள் மாட்டப்படுகின்றன. ஆனால் 250 Read More

பாலா விவகாரத்தைத் ‘தீர்க்க’ துணை அமைச்சர் முன் வந்தார்

தற்போது இந்தியாவில் நாடு கடந்து வாழும் தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம், குற்றம் சாட்டப்படுவதற்கு தயாராக இருந்து தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை ஜோடித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டால் அவர் தொடர்பான விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர தற்போது துணை அமைச்சராகப் பணியாற்றும் ஒருவர் முன் வந்தார். அந்தத்…

‘நச்சுத்தன்மை’ கொண்ட தங்கச் சுரங்கத்துக்கு எதிராக ரவூப் மக்கள் பேரணி

ரவூப் புக்கிட் கோமான் மக்கள், RAGM என்ற ரவூப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம், தங்கச் சுரங்க நடவடிக்கைகளுக்காக சைனாய்டை பயன்படுத்துவதை ஆட்சேபித்து பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு அந்த சுரங்க நிறுவனத்தைக் கூட்டரசு அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என 'சைனாய்டை…

முஹைடின் இரண்டாவது தண்ணீர் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்

சிலாங்கூர் தண்ணீர் விவகாரம் குறித்த அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்கு துணைப் பிரதமர் முஹைன் யாசின் இன்று தலைமை தாங்கினார். அந்தக் கூட்டம் எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சில் நடைபெற்றது. சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் நீர் விநியோகச் சேவை தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து…

ஏஜி, பிஎன்-னுக்கு பெரிய தடைக்கல் என்கிறார் பாங்

அப்துல் கனி பட்டெய்லை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஏஜி மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஆலோசனைக் குழு உறுப்பினர்…

பெர்சே 3.0 குழப்பத்துக்கு அன்வார், அஸ்மின் காரணம் என்கிறது கலகத்…

பெர்சே 3.0 பேரணி, அஸ்மின் அலி, அன்வார் இப்ராஹிம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றும் வரையில், அமைதியாக இருந்ததாக FRU என்ற கலகத் தடுப்புப் போலீஸ் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் கூறியுள்ளார். நண்பகல்…

இரண்டு மெர்டேகா கருப்பொருள்களைக் கொண்டிருப்பதில் பிளவுபடுத்தும் நோக்கமில்லை

பக்காத்தான் ரக்யாட் மாநிலங்களில் தேசிய நாள் கொண்டாட்டத்துக்கு வேறு கருப்பொருளைப் பயன்படுத்துவது மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி அல்ல என்று கூறிய பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், நடப்புக் கருப்பொருள்தான் “குறுகிய கட்சி மனப்பான்மை கொண்டது” என்றார். “ஒன்றே நாடு ஒன்றே மூச்சு என்பது எப்படிப் பிளவுபடுத்தும் முயற்சியாகும்?”,…

தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாக்கவும் தயார் செய்யவும் ஒரு மய்யம் அமைக்கப்படும்

NFC என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் வங்கிச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபிஸி இஸ்மாயில், தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பாதுகாப்பு வழங்கவும் மய்யம் ஒன்று அமைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது நிலையைப் போன்ற சூழலில் இருக்கின்றவர்களுக்கு உதவியாக அந்த…

அரசாங்கம் முறையீட்டை கை விடுகிறது, ராம்லி-க்கு 753,000 ரிங்கிட் ஒய்வுக்…

முன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ராம்லி யூசோப்-புக்கு எதிராக அழைப்பாணைக் குற்றச்சாட்டு மீது முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்பித்த முறையீட்டை அரசு தரப்பு  மீட்டுக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ராம்லி-க்கு ஒய்வூதியமும் ஒய்வுக் கொடையுமாக மொத்தம் 753,000 ரிங்கிட் கொடுப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. அவர் 2007ம் ஆண்டு…

சாபாவிலிருந்து மேலும் ‘நல்ல செய்திகள்’: கோடி காட்டினார் அன்வார்

செப்டம்பர் 16 நிகழ்வுகளை நினைவுபடுத்துவதுபோல் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சாபாவிலிருந்து மேலும் பல “நல்ல செய்திகள்” வரும் என்கிறார். வார இறுதியில், பிஎன்னிலிருந்து துவாரான் எம்பி வில்ப்ரட் பும்புரிங்கும் பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உக்கினும் வெளியேறியதை அடுத்து அன்வார் இவ்வாறு கூறியுள்ளார். “ஆகஸ்ட் 12-இல் சாபா…

துப்பறிவாளர் பாலா: “மீண்டும்… அவர்கள் எனக்கு கையூட்டு கொடுக்க முயன்றனர்”

மறைந்து வாழும் தனித் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மீண்டும் தலைகாட்டியுள்ளதுடன் இன்னொரு குண்டையும் போட்டிருக்கிறார்-அவர் இந்தியாவில் நாடுகடந்து வாழ்ந்தபோது அவருக்கு இரண்டாவது தடவையாக கையூட்டு கொடுக்க முயன்றார்களாம்-பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைக் களங்கப்படுத்துவதற்காக. கடந்த மாதம் கோலாலம்பூரில்  மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சரவாக் மாநிலத்…

ஏய்ம்ஸ்ட் குத்தகை மீது விவரமான அறிக்கை வழங்குமாறு மஇகா ஆணை

மஇகா-வுக்குச் சொந்தமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட தவறுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை நிராகரிப்பதற்கு 'விவரமான அறிக்கையை' தயாரிக்குமாறு அந்தக் கட்சி தனது கல்விக் கரமான எம்ஐஇடி-க்கும் பினாங்கு மாநில இளைஞர் தலைவருக்கும் ஆணையிட்டுள்ளது. ஏய்ம்ஸ்ட் உணவு விடுதி குத்தகையை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் ஏதும் முறைகேடுகளைக் காணவில்லை என…

அன்வார்:ரபிஸிக்கு எதிரான நஜிப்பின் ‘பழிவாங்கும்’ படலம்

பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிக்கு எதிரான வழக்கு, பிரதமர் நஜிப்பின் பழிவாங்கும் படலத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். “பல மாதங்களாக(ரபிஸி) ஊழல்களைத் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி வந்துள்ளதன்வழி அதிகாரத்தில் உள்ள பலரை எதிரிகளாக்கிக் கொண்டார்.இப்போது அவர்கள் தங்கள் கைவரிசையைக்…

மந்திரி புசார்: தலாம் மீது பொது விசாரணை தேவை இல்லை

தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டின் கடன்கள் மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனைகளை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். பொது விசாரணைக்கு அதிகக் காலம் பிடிக்கும். மிகவும் நுட்பமானது என அவர் சொன்னார். ஆகவே அந்த விஷயத்தை ஆழமாக ஆராய்வதற்கு ஐந்து…

சிலாங்கூர் நீர் விவகாரம்: பேச்சுக்கிடமில்லை: முகைதின்

சிலாங்கூர் நீர் விவகாரத்துக்குப் பேசித் தீர்வு காணலாம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் விடுத்த அழைப்பைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் நிராகரித்தார். “முகைதின் ‘முடியாது’ என்றார்,அதே வேளையில் அவ்விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் ஆலோசனையை நாடப்போவதாகவும் தெரிவித்தார்”, என்று ஊராட்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு…

பிரதமரின் ஊழல்-ஒழிப்பு தம்பட்டமெல்லாம் என்னவாயிற்று?, டிஎபி

வங்கி தகவல்களைக் கசிய விட்டார் என்பதற்காக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிமீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஊழலை எதிர்ப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்துக்கு ஒரு சறுக்கலாக விளங்கப்போகிறதென்று சாடியுள்ளார் டிஏபி பரப்புரை தலைவர் டோனி புவா. அரசாங்கம், ரபிஸி அம்பலப்படுத்திய நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழலில்…

கருத்துத் திருட்டு: சின் சியூ மன்னிப்பு கேட்டது, அனுதாபத்தை நாடுகின்றது

சீன மொழி நாளேடான சின் சியூ டெய்லி வெளியிட்ட மூன்று தலையங்கக் கட்டுரைகள் திருடப்பட்டவை என குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நாளைக்குப் பின்னர் அந்த நாளேடு அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது. அத்துடன் அந்த தலையங்க எழுத்தாளர் மீது அனுதாபம் கொள்ளுமாறும் அது வேண்டுகோள் விடுத்தது. "அமைதியாக வாழ அவரை…