முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை வாதாட அனுமதியுங்கள்!

முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை ஷரியா நீதிமன்றத்தில வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் கா. ஆறுமுகம். கூட்டரசுப் பிரதேசத்தில் ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வாதாட அனுமதிக்கும் முறையீட்டு நீதிமன்ற முடிவு இஸ்லாமிய  அமைப்புக்களில் உள்ள பதவிகள் தொடர்பாக பல பிரச்னைகளை ஏற்படுத்தும்…

505 கறுப்பு தினப் பேரணி சில தகவல்கள்

பாஸ் கட்சியின் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கைது செய்யப்பட்டு அம்பாங் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்தத் தகவலை அவரது  உதவியாளர்களில் ஒருவர் உறுதி செய்துள்ளார். அவர் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1)(பி) யின் கீழ்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவர் எங்கு…

காட்டுத் தீயை அணைக்க இந்தோனிசியா செயற்கை மழையை ஏற்படுத்தியது

இந்தோனிசியாவின் சுமத்ரா தீவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும்  பொருட்டு செயற்கை மழை பெய்யச் செய்வதற்கு விமானங்கள்  பயன்படுத்தப்பட்டன. அதே வேளையில் ஹெலிகாப்டர்கள் தண்ணீரை கொட்டின. அந்தக் காட்டுத் தீ கடந்த சில நாட்களாக எரிவதால் எழுந்த புகை மூட்டம் இந்தோனிசியாவின் ரியாவ் மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் காற்றுத்…

”முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர் பிரச்னைகளை அதிகரிக்கும்’

கூட்டரசுப் பிரதேசத்தில் ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வாதாட அனுமதிக்கும் முறையீட்டு நீதிமன்ற முடிவு இஸ்லாமிய  அமைப்புக்களில் உள்ள பதவிகள் தொடர்பாக பல பிரச்னைகளை ஏற்படுத்தும்  என மலேசிய முஸ்லிம் வழக்குரைஞர் மன்றம் கூறுகின்றது. விக்டோரியா ஜெயசிலி மார்ட்டின் தொடுத்த வழக்கில் அந்த நீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு…

பேரணிக் கூட்டம் நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனப் பெருகியது

பிற்பகல் மணி மூன்று: பாடாங் மெர்போக் நோக்கி சுமார் 20,000 பேரடங்கிய பேரணி சென்று கொண்டிருக்கிறது. பாடாங் மெர்போக்கில் 505 கறுப்புப் பேரணி இயக்குனரும் சுங்கை பட்டாணி எம்பியுமான ஜொஹாரி அப்துல் கூட்டத்தாரிடையே பேசினார்.  போலீசும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றமும் பேரணி ஏற்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்பதாக அவர் சொன்னார். அது…

அணி அணியாக பாடாங் மெர்போக்கை நோக்கி படையெடுப்பு

கோலாலும்பூர் 505 கறுப்புப் பேரணியில் 300,000 பேர் திரள்வார்கள் என பிகேஆர் எதிர்பார்த்தாலும் பிற்பகல் மணி 2 முடிய சுமார் 10,000 பேர்தான் பல்வேறு ஒன்றுகூடுமிடங்களில் சேர்ந்துள்ளனர். பேரணி இடத்தைச் சுற்றிலும் புகை மூட்டம் கவிந்திருந்தாலும் பேரணியில் கலந்துகொள்வோரின் உற்சாகத்துக்குக் குறைவில்லை. ஜாலான் ராஜா லாவிட்டில் கூடியுள்ளவர்களிடையே பேசிய…

‘கறுப்பு தினப் பேரணி’ கோலாலம்பூரில் கூட்டம் ஆயிரக்கணக்கில் பெருகுகிறது

பக்காத்தான் ராக்யாட் நாடு முழுவதும் 505 கறுப்பு தினப் பேரணிகளை நடத்திய  பின்னர் இன்று கோலாலம்பூரில் 15வது பேரணியை நடத்தின்றது. சர்ச்சைக்குரிய மே 5 தேர்தலுக்கு ஒன்றரை மாதம் கழித்து கோலாலம்பூர் பேரணி  நிகழ்கின்றது. தேர்தல் ஆணையத்தின் நடப்புத் தலைவர்களும் ஆணையர்களும் பதவி துறந்து  புதிய இசி தலைமைத்துவம்…

இந்து மனைவி: அதிகாரிகள் நானும் மதம் மாற வேண்டும் என…

தங்களது இரண்டு சிறு பிள்ளைகளை தமது கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய  சர்ச்சைக்குரிய நடவடிக்கை தொடர்பில் இந்து மனைவி  ஒருவர் சமய அதிகாரிகள் தம்மையும் மதம் மாற்ற முயன்றதாக கூறிக்  கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் செனட்டர் பி வேதமூர்த்தியுடன் நிகழ்ந்த சமயங்களுக்கு  இடையிலான விவாதத்தின் போது அந்தச் சம்பவத்தை…

‘தேர்தல் ஆணையம் அரசியல் சகதிக்குள் குதிக்கிறது’

உங்கள் கருத்து : 'அன்புள்ள வான் அகமட் அவர்களே, நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் ? உங்கள் வார்த்தைகள் இசி மீதான நம்பிக்கையை மேலும் தளரச் செய்து விடும். நீங்கள்  சகதியில் விழுந்து புரளப் போகின்றீர்கள்.' இசி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வது  பக்காத்தான் இரட்டை…

“இசி தலைவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வது பற்றி அரசாங்கம்…

இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்புக்கு  எதிராக பொது மக்கள் குறை கூறுவது அதிகரித்து வருவதால் அவரை பதவி  விலகுமாறு கேட்டுக் கொள்வது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பதாக டிஏபி குளுவாங்  எம்பி லியூ சின் தொங் கூறிக் கொண்டுள்ளார். அஜிஸ் ராஜினாமா செய்ய…

நாளை யாரும் கைது செய்யப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய சுவாராம்…

-நளினி ஏழுமலை, சுவாராம், ஜூன் 21, 2013. நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 505 கறுப்புப் பேரணி தொடர்பில் யாரும் கைது  செய்யப்படுவதைக் கண்டால் நீங்கள் உடனடியாக அது குறித்து தகவல் தெரிவிக்க  தொடர்பு கொள்ள வேண்டியவர்களும் அவர்களுடைய தொலைபேசி எண்களும்:- நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: உங்கள் பகுதியில்…

‘உள்துறை அமைச்சர் அவருக்கு எதிரான போலீஸ் புகாரை வெளியிட வேண்டும்’

உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி அவருக்கு எதிராக வணிகர் ஒருவர் செய்துள்ள போலீஸ் புகாரை 48 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையை விடுத்த பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ (இடம்)  அதன்பின் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கவில்லை.…

வான் அஹ்மட்டின் குறைகூறல் அவர் பிஎன்-ஆதரவாளர் என்பதைக் காண்பிக்கிறது

தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர்  மாற்றரசுக் கட்சி எம்பிகள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வதை வைத்து அவர்களைக் கபடதாரிகள் என்று வருணித்திருப்பதே  அவர் பிஎன் ஆதரவாளர் என்பதைக் காண்பிக்கிறது என பிகேஆர் இளைஞர் பகுதி கூறியுள்ளது. இசி நடுநிலையாக செயல்பட வேண்டும். வான் அஹ்மட்டின் பேச்சு அவர் இசி-இல் இருக்கத்…

SUARAM URGENT ARREST TEAM

-Nalini Elumalai, Suaram. June 21, 2013. Given below is the Suaram’s urgent arrest team for 22 June 2013. We have given our name and contact numbers. This what we want you to do: If you see…

‘குழந்தைகள் மதம் மாற்ற விவகாரத்தில் அமைப்புக்கள் ‘தில்லுமுல்லு’ செய்கின்றன’

குழந்தைகள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படும் விவகாரத்தை  வழக்குரைஞர்கள் மன்றம், அமைச்சரவை, MCCBCHSTஎனப்படும் மலேசிய  பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கியம் தாவோ ஆலோசனை மன்றம் ஆகியவை  உட்பட பல தரப்புக்கள் மனித உரிமைகள் என்ற பெயரில் 'தில்லுமுல்லு'  செய்வதாக முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கம் கூறியுள்ளது. முஸ்லிம் பெற்றோர் ஒருவர்…

மலாயாப் பல்கலைக்கழகம்: ‘505 கறுப்பு தின’ பேரணியில் மாணவர்கள் கலந்து…

நாளை கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள '505  கறுப்பு தின' பேரணி 'சட்ட விரோதமானது' என்பதால் அதில் கலந்து கொள்ள  வேண்டாம் எனத் தனது மாணவர்களை மலாயாப் பல்கலைக்கழகம்  எச்சரித்துள்ளது. அத்துடன் 'கோலாலம்பூரைச் சுற்றிலும்' நடத்தப்படும் அந்தப் பேரணி 'அதிகாரிகளிடமிருந்து அனுமதியைப் பெறத் தவறி விட்டதாகவும்' அந்தப்…

KLIA2 இன்னொரு PKFZ-ஆக மாறுகிறதா?

உங்கள் கருத்து  ‘சுத்த மோசம்  என்கிறீர்களா. இறுதியில் திட்டத்துக்கான மொத்த செலவினமும் தெரியவரும். அப்போது என்ன சொல்வீர்களோ. வழக்கம்போல், பிஎன்னின் கோமாளித்தனங்களுக்கு நாம் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது’ டிஏபி: கேஎல்ஐஏ2 தாமதமாவதற்கு உண்மை காரணம் என்ன? எப்ஏஎஸ்: அத்திட்டத்துக்கு நிதி வழங்கும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மலேசிய விமான நிலைய…

அழியா மை குளறுபடியில் ‘சதி’ ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை இசி…

கடந்த மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்பட்ட  விஷயத்தில் சதிநாச அம்சங்கள் ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு  செய்ய தேர்தல் ஆணையம் (இசி) சிறப்பு உள்- குழுவை அமைத்துள்ளது. அந்த மை ஏன் நீண்ட காலத்திற்கு இருக்கவில்லை என்பதையும் எளிதாக அதனை  விரலிலிருந்து ஏன் அழிக்க…

தீ கியாட்: யென் யென்-னுக்காக சுவா கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளார்

பொதுத் தேர்தலுக்குப் பின்னர அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற மசீச  முடிவை மீறி கட்சியின் உதவித் தலைவர் இங் யென் யென் மலேசிய சுற்றுலா  மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியை தொடருவதற்கு அனுமதித்துள்ள கட்சித்  தலைவர் சுவா சொய் லெக்-கை முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட்…

பிகேஆர்: 505 கறுப்பு தின பேரணிக்கு இராணுவத்தை ஏன் அழைக்க…

கோலாலம்பூரில் நாளை 505 கறுப்பு தினப் பேரணியைச் சமாளிப்பதற்கு போலீசாருக்கு உதவ இராணுவம் தயாராக இருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்பு,  பொது ஒழுங்குத் துறை விடுத்துள்ள அறிக்கையை பிகேஆர் சாடியுள்ளது. " அண்மைய பேரணிகள் அனைத்தும் அமைதியாகவும்  ஒழுங்காகவும் நடைபெற்றுள்ளன. விரும்பத்தகாத நடத்தைகள் எதுவும் அந்தப் பேரணிகளில் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படவில்லை."…

அந்தப் பட்டியலுடன் தொடர்பில்லை என்கிறார் கீதாஞ்சலி

த ஸ்டார் நாளேட்டில் வெளியிடப்பட்டு சர்ச்சையை உண்டாக்கி இருக்கும் ‘மலேசியாவின் சக்திவாய்ந்த 10 மகளிர்’ பட்டியலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று மறுக்கிறார்   ' ராகா'  அறிவிப்பாளர் கீதாஞ்சலி  ஜி. அப்பட்டியலைத் தயாரித்தவர் யார் என்பது தமக்குத் தெரியாது என மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார். அதனால் “நிம்மதி கெட்டதுதான்” மிச்சம் என்றார்.…

கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் அபாயகரமான நிலையில் புகைமூட்டம்

கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் புகைமூட்டம் அபாயகரமான  நிலையை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அந்தத் தகவலை இன்று வெளியிட்டது. இன்று காலை 7.00 மணி அளவில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 313  ஆகவும் பாசிர் கூடாங்கில் 310 ஆகவும் இருந்தது. நேற்று காலை அந்தக் குறியீடு…

‘கோலாலம்பூர் உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று’ எனச்…

உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று- கோலாலம்பூர் என ஒர்  இணையத்தளம் ஒன்று 'பட்டியலிட்டுள்ளதை' அரச மலேசியப் போலீஸ் படை  மறுத்துள்ளது. அந்த இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை  என்றும் அந்தத் தகவலை நம்பவும் வேண்டாம் பரப்பவும் வேண்டாம் என  போலீஸ் படையின் முகநூல்…