நோயாளிகளின் கட்டணத்தை 10 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்ற The National Heart Institute's (IJN) கோரிக்கை நிதி அமைச்சகத்துடன் விவாதிக்கப்படும் என்று துணை சுகாதார அமைச்சர் லுகானிஸ்மன் அவாங் சௌனி தெரிவித்தார். ஏனென்றால், IJN நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ளது என்று…
வழக்குரைஞர் மன்றம்: பெர்சே மீது இரண்டு விசாரணைகள் ஏன்?
பெர்சே 3.0 பேரணியில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்)த்துக்குத்தான் உண்டு என்கிறது வழக்குரைஞர் மன்றம். எனவே, அப்பேரணிமீது விசாரணை நடத்த அரசு-ஆதரவுபெற்ற சுயேச்சை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது பொருளற்றது என்றது கூறியது. “சட்டப்பூர்வமாகவும் சுயேச்சையாகவும் செயல்படும் சுஹாகாம், தான் விசாரணை…
எப்பிங்காம் நில உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டது
பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமாவில் உள்ள எப்பிங்காம் தோட்ட தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான நிலம் பறிக்கப்பட்டதாக கூறப்படுவது மீது ஆட்சேபம் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் மருத்துவர்களுடைய அறிவுரைக்கு இணங்க இன்று பிறபகல் நிறுத்தப்பட்டது. (காணொளி 01) (காணொளி 02) கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய…
மஇகா-பிகேஆர் தகராறு குறித்த புலனாய்வை போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது
மே 2ம் தேதி புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்துக்கு முன்னாள் நிகழ்ந்த மஇகா-பிகேஆர் தகராறு குறித்த புலனாய்வை போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது அந்த புலனாய்வு முடிவுகளை அது சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு(ஏஜி) அனுப்பியுள்ளது என பிகேஆர் வழக்குரைஞர் எம் மனோகரன் தெரிவித்தார். அந்த விசாரணை முடிந்து விட்டது என்றும் ஏஜி…
மக்கள் மன்றத்தில் நீதி கோரும் உண்ணாவிரதம்!
கோவலன்: கோமாளி, உண்ணா விரதமிருந்து எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்தை பெற வேண்டிய அவசியம் என்ன? கோமாளி: உண்ணாவிரதம் என்பது சுயமாக உணவை புறக்கணித்து பட்டினியுடன் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகும். மக்களின் பண்பாட்டில் உணவு மையமாகிறது. அதைப் புறக்கணித்து அதனால் உருவாகும் பசியை கொண்டு இந்த ஏதார்த்த நிலையில் உண்மையான பசி…
ஜோகூர் பட்டத்திளவரசர்: நாங்கள் அரசாங்கத்திடம் பணம் பெறுவதில்லை
ஜோகூர் சுல்தான் 'WWW1' வாகனப் பதிவு எண்ணை 1/2மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலத்தில் எடுத்தார் என்பதை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் பரவலாகக் குறைகூறியதை அடுத்து தம் தந்தையைத் தற்காக்க முனைந்த ஜோகூர் பட்டத்திளவரசர், தம் குடும்பம் அரசாங்கத்திடமிருந்து பணம் எதையும் பெறுவதில்லை என்று கூறினார். அரசாங்கம், ஜோகூர் அரசக் குடும்பத்துக்குக் கொடுக்கும்…
“காட்பாதரை” நினைந்து நினைந்து பயந்த முன்னாள்-ஐஜிபி
மூசா ஹசான் போலீஸ் படைத் தலைவராக(ஐஜிபி) இருந்தபோது ஒரு பயம் அவரை விரட்டிக்கொண்டே இருந்தது-பணம் படைத்த குண்டர் கும்பல்கள் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு செயல்படுவார்களோ என்ற பயம்தான் அது. “காட்பாதர்” படங்களைச் சுட்டிக்காட்டிய அவர் அவற்றில் மாஃபியா கும்பல் அரசியல்வாதிகளையும் சட்ட அமலாக்கத் துறையினரையும் கைக்குள்…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலம்: ஜூன் மாதத்தில் முடிவு தெரியலாம்
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மஇகா எடுத்துக்கொண்ட மூன்று ஏக்கர் நிலத்தை திருப்பிக் கொடுக்கக் கோரி ரிபிளேக்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய எழுவரின் உண்ணாவிரதம் இன்று முடிவிற்கு வந்தது. (காணொளி 01) (காணொளி 02) இந்த உண்ணாவிரதம் முடிவிற்கு வருவதற்கான முதன்மையான காரணம்…