அம்னோவுக்குள் உள்ளடி வேலை செய்ய நினைப்போருக்கு துணைப் பிரதமர் எச்சரிக்கை

அம்னோவின் பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்குக் குழிபறிக்கும் தலைவர்களும் உறுப்பினர்களும் கட்சியிலி Read More

சிசிஎம் சுவாராம் மீது ஐந்து குற்றச்சாட்டுக்களை சுமத்தும்

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் Suara Inisiatif Sdn Bhd (Suara Inisiatif)க்கு எதிராக சுமத்தப்படுவதற்கு ஐந்து குற்றச்சாட்டுக்களை சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அந்தத் தகவலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று வெளியிட்டார்.…

‘நஜிப்பின் வேடிக்கையான வியாபாரத்துக்கு பின்னணியில் உள்ள வேடிக்கையான அதிகாரிகள்

எம்ஆர்டி திட்டம் தொடர்பில் பிரதமர் நஜிப் ரசாக் 'வேடிக்கையான வியாபாரத்தில்' (perkara pelik pelik) ஈடுபடுகிறார் என தாம் சொன்னது உண்மையில் பிரதமருடைய அதிகாரிகள் ஆற்றும் பங்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுவதாகும் என மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைவர் சையட் அலி அல்அத்தாஸ் இன்று விளக்கமளித்துள்ளார். "அவர்கள்…

சுஹாக்காம்: புதிய மசோதாக்களை வரையும் போது எங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை

அமைதியாக ஒன்று கூடும் மசோதா தொடர்பில் சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் முழுமையாக கலந்தாய்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அந்த மசோதாவை சுஹாக்காம் குறை கூறியதைத் தொடர்ந்து அரசாங்கம் புதிய மசோதாக்களை வரையும்  போது அதனுடன் ஆலோசனை நடத்துவதில்லை. இவ்வாறு சுஹாக்காம் ஆணையர்களில் ஒருவரான ஷானி…

அரசு சாரா அமைப்புக்கள் அந்நிய நிதி உதவியைப் பெறலாம் என்கிறார்…

அரசு சாரா அமைப்புக்கள் தங்கள் நிதிகளை எப்படிப் பெற வேண்டும் என்பதற்குக் கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கக் கூடாது. அந்த நிதிகள் உள்நாட்டு வளங்களிலிருந்து அல்லது வெளிநாட்டு வளங்களிலிருந்து வந்தாலும் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் மீதான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா கியாய்…

காலால் மிதிபட்டது நஜிப்பின் படம் மட்டுமல்ல!

காலால் மிதிபட்டது நஜிபின் படம் மட்டுமல்ல, இதற்கு முன்பு இதுபோன்ற அநாகரிகமான நடவடிக்கைகள் பல நடந்தும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது திடீரென காவல்துறை விழுந்தடித்துக்கொண்டு செயல் படுவது ஆச்சரியமாக உள்ளதாக 20 சமூக இயக்கங்களை பிரதிநிதிக்கும் வர்காஅமான் மற்றும் பவர் என்ற கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளான…

‘தேச நிந்தனை’ நடவடிக்கைகள்: இப்போது போலீஸ் என்ன செய்யப் போகிறது…

"இன்றைய கால கட்டத்தில் முதியவர்களுக்குத் தார்மீகப் பொறுப்பு என்பதே கிடையாது. இருந்தும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் விரிவுரை ஆற்றும் நிகழ்த்தும் துணிச்சல் மட்டும் உள்ளது." இவற்றையும் 'தேச நிந்தனை' நடவடிக்கைகள் என போலீசார் அழைப்பார்களா அய்யோ: வயதானவர்கள் குறிப்பாக அம்னோ-பெர்க்காசா கோமாளிகள் குரங்குகளைப்…

பிஎன்னுக்கு மட்டும் என்றென்றும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம்…

உங்கள் கருத்து “நாட்டின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் உண்மையான ஜனநாயக உரிமை மக்களிடம் இருக்கும்வரை எவரும் என்றென்றும் ஆட்சியில் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.” பக்காத்தான் என்றென்றும் ஆட்சியில் இருக்க விரும்பும்,எச்சரிக்கிறார் மகாதிர் ஃபாஸ்: இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் என்னால் ஒத்துப்போக முடியாது.ஆட்சியை விட்டுவிலக…

Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இருவரைப் போலீஸ் கைது…

மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இரு இளைஞர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. அவர்கள் இன்று பிற்பகல் மணி 2.35 வாக்கில் டாங் வாங்கி போலீ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சிஐடி துணைத் தலைவர் அஜிஸ் ஸாக்காரியா கூறினார். 24 வயதான…

போலீசார் இவற்றையும் ‘தேச நிந்தனை’ என அழைப்பார்களா ?

பிரமுகர்களுடைய படங்களை மிதித்தற்காக, ஒரு சம்பவத்தில் படத்தின் மீது ஒர் இளைஞன் தனது பிட்டத்தைக் காண்பித்ததற்காக போலீசார் முதன் முறையாக தனிநபர்களை வேட்டையாடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று டாத்தாரான் மெர்தேக்காவில் அத்தகைய அவமரியாதையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள்…

யார் என்றென்றும் ஆட்சியில் இருப்பது என்பதை முடிவு செய்வது மக்கள்,…

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் வென்றால் அதன் பின்னர் என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அதன் கைகளில் இல்லை. வாக்காளர்கள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று டிஏபி கூறுகிறது. பக்காத்தான் “என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்யும்” என முன்னாள் பிரதமர்…

இப்போது பினாங்கு பிஎன்-னின் ‘போர் வாகனத்துக்கு’ சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டுள்ளது

அரசியல் பிரச்சாரம் தொடர்பிலான சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இப்போது பிஎன் முகாமுக்கு பரவியுள்ளதாகத் Read More

புகைப்படத்தைக் காலால் மிதிப்பதைவிட பள்ளி வாசலில் காலணி எறிவது மோசமான…

பிரதமர், அவரின் துணைவியார் ஆகியோரின் படங்களைக் காலில் போட்டு மிதிப்பதைக் காட்டிலும் ஒரு பள்ளிவாசலுக்குள் காலணியை விட்டெறிவது மிகவும் மோசமான செயலாகும் என்று பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார் இன்று கூறினார். ஏனென்றால் பள்ளிவாசல் ஒரு புனிதமான இடம், அது “இறை இல்லமாக”ப் போற்றப்படுவது என்று மாபுஸ்…

பதின்மவயதினர் விலங்கிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துணை அமைச்சர் ஐஜிபிக்குக் கடிதம்

இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் கான் பிங் சியு, பிரதமரின் புகைப்படத்தைக் காலில் போட்டு மிதித்ததாகக் கூறப்படும் 19-வயது ஒங் சின் ஈ-க்குப் போலீஸ் விலங்கிட்டு வைத்திருந்ததற்கு ஆட்சேபணை தெரிவித்து போலீஸ் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்குக் கடிதம் எழுதுவார். போலீஸ், அவர்களின் நடைமுறைகளை (எஸ்ஓபி), குறிப்பாக பெண்கள்,பதின்ம வயதினர்,…

அது மரியாதைக்குறைவான செயல்; ஆனால் தேச நிந்தனை அல்ல

உங்கள் கருத்து: “அரசாங்கம் இளைஞர்களை மிரட்டிவைக்க எந்த அளவுக்குச் செல்லும் என்பதைத்தான் இது காட்டுகிறது.அவரது செயல் மரியாதைக்குறைவானதுதான் ஆனால் தேச நிந்தனைக்குரியதல்ல.” பிரதமர் படத்தைக் காலில் போட்டு மிதித்த பதின்ம வயது் பெண் மன்னிப்பு கேட்டார் கோபி ஓ: மரியாதை என்பது பெறப்படுவது.அது கொடுக்கப்படுவதல்ல.ஒருவரின் படத்தைக் காலில் போட்டு மிதிப்பது…

பக்காத்தான் என்றென்றும் ஆட்சி புரிய விரும்பக் கூடும் என எச்சரிக்கிறார்…

தேசிய தலைமைத்துவத்தை மாற்றி சோதனை செய்ய விரும்பும் மக்களை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சாடியுள்ளார். பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆட்சி புரிவதற்கு வாய்ப்பு கொடுத்தால் அது ஆட்சியை ஒரு போதும் கை விடாது என அவர் எச்சரித்தார். "அவற்றுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் என்றும் அவை நல்லபடியாக…

ஹிண்ட்ராப்-பை சந்திக்க பிகேஆர் முன்வருகின்றது

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் விவாதம் நடத்த ஹிண்ட்ராப் விடுத்த வேண்டுகோளை பிகேஆர் வரவேற்கிறது. அன்வாருக்குப் பதில் அந்த அரசு சாரா அமைப்பைச் சந்திப்பதற்கு தனது உதவித் தலைவர் தியான் சுவாவை அந்தக் கட்சி முன்மொழிந்துள்ளது. "பிஎன் அரசாங்கம் புறக்கணித்ததாலும் பாகுபாடு காட்டியதாலும் பின் தங்கி கடுமையான…

மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய பலர் இன்னும் இருக்கின்றனர்

"ஒர் இளம் மலேசியர் கூட சரியானதைச் செய்துள்ளார். அம்னோ குண்டர்களும் அதனை செய்திருக்க வேண்டும்." பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்புக் கேட்டார் கும்பல்1900: சாதாரண சம்பவம் ஒன்றின் மீது பாரபட்சமாக இயங்கும் அரச மலேசிய போலீஸ் படை முட்டாள்தனமாக இயங்கியுள்ள போதிலும் துணிச்சலுடன் மன்னிப்புக்…

இந்திய கலாச்சார அலங்காரத்துக்கு DBKL தடை: பிரதமர் விளக்கம் அளிக்க…

மலேசிய இந்து சங்கம் ஆகம முறையிலான ஆலய வழிபாட்டுக்குரிய வழிகாட்டுதலை அனைத்து ஆலயங்களுக்கும் வழங்கிட தேசிய இந்து ஆலய மாநாட்டை அண்மையில் தலைநகர், செராசில் உள்ள DBKL மண்டபத்தில் நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 800 ஆலயப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மண்டப வாடகைக்கு 4,660 ரிங்கிட்டும்,…

மாணவனின் தந்தையைச் சந்திக்கப் பிரதமர் தயார் ஆனால்…

ஆகஸ்ட் 30ம் தேதி மெர்தேக்காவுக்கு முந்திய தினத்தன்று ஜாஞ்சி டெமாக்கரசி கூட்டத்தின் போது ஆபாசமான முறையில் கல்லூரி மாணவர் ஒருவர் நடந்து கொண்டது தொடர்பில் அந்த மாணவருடைய தந்தையைச் சந்திக்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாராக இருக்கிறார். நஜிப், அவரது மனைவி, தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல்…