தயிப்மீதான ஊழல் விசாரணை “நடந்துகொண்டுதான் இருக்கிறது”

சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட், சட்டவிரோத வழிகளில் சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு அளவுக்குமீறி அரசியலாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), அவ்விவகாரம் மீதான விசாரணையில் எந்தக் குறுக்கீடும் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. விசாரணை தொடர்வதை உறுதிப்படுத்திய எம்ஏசிசி தலைவர் அபு காசிம் முகம்மட்(வலம்) அவ்விவகாரம்…

இந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கு நிகழ்வில் வாழை மரம்,…

மலேசிய இந்து சங்கம் கோயில்கள் சம்பந்தப்பட்ட தேசிய அளவிலான ஒரு பயிலரங்கை செப்டெம்பர் 1 இல் கோலாலம்பூர் செராஸ் டிபிகேஎல் மண்டபத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு முன்னதாக மண்டபத்தை அலங்கரிக்கும் ஏற்பாடுகள் நடந்தன. இந்திய பண்பாட்டிற்கொப்ப வாழை மரம் மற்றும் தோரங்கள் ஆகியவற்றோடு பதாதைகளும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர்…

மகளிர் அமைப்புக்கள்: சுவாராமை மருட்டுவதை நிறுத்துங்கள்

ஆண் பெண் சம நிலைக்குப் போராடும் JAG என்ற கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராமை அரசாங்கம் 'தேர்வு செய்து அச்சுறுத்துவதை' சாடியுள்ளது. சுவாராமின் தகுதி மீதும் அதன் நிதி வளங்கள் மீதும் அண்மைய காலமாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.…

அன்வார்: ஜெட் விமானத்தைக் கொடுத்துதவிய நண்பர் கைம்மாறாக சலுகைகளை எதிர்பார்க்கவில்லை

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், தமக்குத் தெரிந்த ஒருவர் பக்காத்தான் ரக்யாட் குழு அவருடைய தனி விமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் என்றும் அதற்குக் கைம்மாறாக அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சாபா, சரவாக்கில் போக்குவரத்துச் சிரமத்தை எதிர்நோக்கியதால்…

எஸ்யூபிபி சரவாக் பிஎன் -னிலிருந்து விலக வேண்டும் என உறுப்பினர்கள்…

சரவாக் மாநில பிஎன் -னில் இருப்பதால் தொடர்ந்து 'குறை கூறப்படுவதை' நிறுத்துவதற்கு எஸ்யூபிபி என்ற சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி அந்தக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவ்வாறு…

முரசுகள் ஒலிக்கட்டும், எல்லா யூதர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம்

"மகாதீரும் நஜிப்பும் வேலைக்கு அமர்த்திய சாலோமான் ஸ்மித், சாட்ஷி சாட்ஷி, அப்கோ போன்ற பல யூத நிறுவனங்கள் பற்றி அனுவார் ஷாரி கேள்விப்பட்டுள்ளாரா ?" அன்வாரின் முன்னாள் உதவியாளர்: நமது நீர்மூழ்கிகள் குறித்து யூதர்களுக்குப் பொறாமை விஜய்47: அம்னோ ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிகளையும் தங்களது 55 ஆண்டு கால அதிகார…

55 ஆண்டுகள் போதவில்லை; பிஎன் இன்னும் கூடுதல் காலம் கேட்கிறது

"நஜிப் அவர்களே, இன்னொரு தவணைக் காலமா ? பிஎன் செய்ய வேண்டியதைச் செய்வதற்கு மலேசியர்கள் 12 தவணைகளைக் கொடுத்து விட்டனர்." நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணையைக் கொடுங்கள், நாங்கள் நிறையச் செய்ய முடியும் ஸ்டார்ர்: பிரதமர் நஜிப் ரசாக் அவர்களே, ஒருவர் திறமையைக் காட்டுவதற்கு 55 ஆண்டு கால…

முஸ்லிம்களை புண்படுத்தும் காணொளி: ஹிண்ட்ராப் வன்மையான கண்டனம்

உலக முஸ்லிம்களை அவமானத்திற்கு உள்ளாக்கிய "Innocence of  Muslims" என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி தயாரிப்பாளர்களின் நடத்தையை ஹிண்ட்ராப்  அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. ஒரு சமூகத்தின் அடையாளத்தை பிரதிபலிப்பதில் சமய நம்பிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக கருதும் சமூகத்தினரிடையே சமய நம்பிக்கைகள் ஆழ்ந்த உணர்ச்சிமயமான பற்றுதலை…

லிம் குவான் எங்: பக்காத்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற…

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பக்காத்தான் ராக்யாட் குறித்த மூன்று மாயைகளைப் போக்குவதற்கு தமது கட்சி உதவ வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என்பது முதலாவது மாயை ஆகும் என…

டாக்டர் மகாதீர்: சோரோஸ் பிரதமராக ஒரு கைப்பாவையை அமர்த்த விரும்புகிறார்

அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸ் தமக்கு ஏற்றால் போல இயங்கக் கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்கும் முயற்சியின் கீழ் உள்ளூர் அரசு சாரா அமைப்பு ஒன்றுக்கு நிதி உதவி செய்து வருவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். "அவர் நமது அரசியலைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்.…

‘மாற்றத்துக்குப் பதில் நஜிப் நமக்கு வெட்கத்தையே கொண்டு வந்துள்ளார்’

"கடினமான வாழ்க்கை என்ன என்பதையும்  தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க  சட்டியை சுரண்டவும் சேமிக்கவும் தெரிந்த தலைவர்களே நமக்குத் தேவை." நஜிப்: நான் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவையில்லை எம்எப்எம்: மாற்றம் ? என்ன மாற்றம் ? வாழ்க்கைச் செலவுகள் கூடுவதால் என் சேமிப்பு குறைந்து கொண்டே போகிறது.…

அருணின் ‘தமிழர் தடங்கள்’ இன்று வெளியீடு!

கருத்து: தமிழர்களின் வரலாற்று வாழ்வாதார தடங்களை நிறையவே அழித்து விட்டார்கள். எஞ்சி இருப்பவை சில. அவற்றையாவது நாம் தற்காத்துக் கொள்வோமா? என்கிற நியாயமான உணர்வால், ஆதங்கத்தால் நண்பர் சீ. அருண் அவர்களின் ‘தமிழர் தடங்கள்’ வரலாற்று ஆவணம் மலேசிய தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டிருந்த சில உண்மைகளை மிகத் துல்லியமாக…

‘நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது ‘பாவம்’ என்கிறார் நஜிப்

இந்த நாட்டின் எதிர்காலம் மிகவும் மதிப்புமிக்கது. அதனால் அதனைப் பணயம் வைக்கக் கூடாது. நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது 'பாவம்' (pantang) என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அம்னோ தலைவருமான அவர் நேற்று ஜோகூர் அம்னோ பேராளர் கூட்டத்தில் பேசினார். 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி…

தொல்லை தீர உதவுங்கள்: சுஹாகாமுக்கு சுவாராம் வேண்டுகோள்

அரசாங்கத் துறைகள் விசாரணை என்ற பெயரில் தனக்குத் தொல்லை தருவதாக மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அடிப்படை மனித உரிமை ஆணையத்திடம்(சுஹாகாம்) புகார் செய்துள்ளது. நேற்று சுஹாகாம் தலைமையகத்தில் 14-அம்ச மகஜரை வழங்கிய சுவாராம், தனக்குக் கொடுக்கப்படும் தொல்லைகள் மனித உரிமை மற்றும் சிவில் உரிமை மீறல்கள்…

அனைத்துலக பொது மன்னிப்புக் கழகம்: போராளிகளை ‘அச்சுறுத்துவதை’ நிறுத்திக் கொள்ளுங்கள்

அரசாங்கம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள மனித உரிமைப் போராட்ட அமைப்பு ஒன்றை 'அச்சுறுத்துவதை' நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்துலக பொது மன்னிப்புக் கழகம் மலேசியாவை கேட்டுக் கொண்டுள்ளது. போலீஸ் முரட்டுத்தனம் மற்றும் இதர அத்துமீறல்களுக்கு எதிராக போராடி வரும் சுவாராமுக்கு கிடைக்கும் நிதி உதவிகள் பற்றிய ஆய்வை அதிகாரிகள்…

பினாங்கு முதலமைச்சர் தாம் குடியிருக்கும் வீட்டின் வாடகை ஒப்பந்தத்தை வெளியிடுகிறார்

ஜார்ஜ் டவுனில் தாம் வசிக்கும் தனியார் வீடு குறித்து விளக்குமாறு மாநில பிஎன் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை முதலமைச்சர் லிம் குவான் எங் ஏற்றுக் கொண்டுள்ளார். ஜாலான் பின்ஹோர்னில் உள்ள அந்த வீட்டுக்கு நிதி அளிப்பதற்காக பொது நிதிகள் விரயம் செய்யப்படுவதாக பிஎன் தொடர்ந்து தாக்கிப் பேசி வந்ததைத்…

ஹிஷாம்: அரசாங்கம் வெளிநாட்டு நிதியுதவியைக் கண்காணிக்கும்

வெளிநாட்டு நிதியுதவி நாட்டின் சுதந்திரத்திலும் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் உள்துறை அமைச்சு அதை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று அதன் அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். 2005இலிருந்து மலேசியாவின் பல்வேறு என்ஜிஓ-கள் கிட்டதட்ட ரிம20மில்லியன் வெளிநாட்டு உதவியைப் பெற்றிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பற்றி ஹிஷாமுடின் கருத்துரைத்தார். “அவ்விவகாரம் சட்டத்துறைத்…

FGV பங்கு விலைகள் தொடர்ந்து விழுந்தால் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும்

FGV என்ற Felda Global Ventures பங்கு விலை நான்கு ரிங்கிட்டுக்கு கீழே விழுந்தால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அனாக் எனப்படும் Persatuan Anak Peneroka Felda அமைப்பு மருட்டியுள்ளது. "4 ரிங்கிட்டுக்கும் குறைவாக அதன் பங்கு விலை சரியுமானால் ஆரஞ்சுப் பேரணியைக் காட்டிலும் பெரிதாக…