கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் 15 வயது சிறுமி 23 வயது கட்டிடத் தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தின்போது வீடுகளை உடைத்தல், வாகனத் திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட ஆறு குற்றங்களும் பதிவாகியுள்ளன. டிசம்பர் 2 அன்று வெள்ளத்தின்போது கிளந்தானின் கோத்தா…
விவாதமிட வருவீர்களா, மாட்டீர்களா?நஜிப்பைக் கேட்கிறார் அன்வார்
பொதுமேடையில் விவாதம் செய்ய வருமாறு மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். இதற்குமுன் விவாதத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டபோது, விவாதம் நடத்துவது மலேசியர்களின் அரசியல் கலாச்சாரம் அல்ல என்று நஜிப் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட அன்வார், அது விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்காக…
கோரப்படாத மைகார்டுகளை ஒரு வாரத்தில் எரித்து விட வேண்டும்
கோரப்படாமல் கிடக்கும் மைகார்டுகளை அதிகாரிகள் எரித்துவிட வேண்டும். அந்த ஆவணங்கள் தயாராக இருப்பது தெரிவிக்கப்பட்டதும் ஒரு வாரத்துக்குள் அவற்றைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்களுக்கு வலியுறுத்த அவ்வாறு செய்ய வேண்டும். “அவர்கள் ஒரு வாரத்துக்குள் பெற்றுச் செல்லவில்லை என்றால் பேசாமல் எரித்து விடுங்கள்”, என்று இப்ராகிம் அலி(சுயேச்சை-பாசிர்…
ஜாஹிட்:என் மனைவி முன்னாள் இராணுவத்தினருக்கு அறிவுரைதான் சொன்னார்
தற்காப்பு அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, தம் துணைவியார் ஹமிடா காமிஸ், தற்காப்பு அமைச்சுக்கு(மிண்டெப்) வெளியில் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டிருந்த முன்னாள் இராணுவத்தினரைக் குறுஞ் செய்திவழி மிரட்டினார் என்று கூறப்படுவதை மறுத்தார். ஆர்ப்பாட்டம் செய்ய எண்ணியிருந்தவர்களுக்கு அவர் அறிவுரைதான் கூறினார் என்றாரவர். முன்னாள் மலாய் ஆயுதப்படை வீரர்கள் சங்க(பிவிடிஎம்)த் தலைவர்…
இறந்துபோன தேசிய சேவைப் பயிற்சியாளருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்
டிஏபி எம்பிகள், தேசிய சேவைக்குச் சென்று பயிற்சியின்போது நோயுற்று ஓராண்டு கழித்து இறந்துபோன ஏ.தமிழரசி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சைக் கேட்டுக்கொண்டனர். இறந்துபோனவரின் குடும்பத்துக்குத் தேசிய சேவை காப்புறுதித் திட்டத்திலிருந்து இழப்பீடு கொடுக்கப்படவில்லை. தமிழரசி பயிற்சியின்போது நோயுற்றாலும் பயிற்சிமுடிந்து ஓராண்டுக்குப் பிறகுதான் இறந்தார் என்பதால் அவரது குடும்பம்…
நஜிப் ‘போலியான ஜனநாயகவாதி’ எனக் கூறப்படுவதை மலேசியா நிராகரிக்கிறது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 'போலியான ஜனநாயகவாதி' என வகைப்படுத்தி உலகின் சர்வாதிகாரிகளுடன் அவரையும் சேர்த்து முக்கிய கனடிய நாளேடு ஒன்றில் வெளி வந்துள்ள கட்டுரை குறித்து வெளியுறவு அமைச்சு மிகுந்த வருத்தமடைந்துள்ளது. "21வது நூற்றாண்டு சர்வாதிகாரிகளுக்கான பட்டியல்" என்னும் தலைப்பில் ஜுன் மாதம் 8ம் தேதி The…
மேலும் ஏழு இசா கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தனர்
தாங்கள் முன் கூட்டியே விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி இரண்டு இசா (உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்) கைதிகள் தொடங்கியுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலும் ஏழு இசா கைதிகளும் இணைந்து கொண்டுள்ளதாக இசா எதிர்ப்பு இயக்கம் (ஜிஎம்ஐ) இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது. அந்தப் போராட்டத்தில் புதிதாக சேர்ந்து கொண்டுள்ள எழுவரில்…
‘தேசியச் சேவைப் பயிற்சியாளருடைய மரணத்துக்கு இழப்பீடு கொடுங்கள்’
தேசிய சேவை முகாமில் நோய்வாய்ப்பட்டு அதற்கு ஒராண்டுக்கு பின்னர் மரணமடைந்த தேசிய சேவைப் பயிற்சியாளர் ஒருவருடைய குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குமாறு எனத் தற்காப்பு அமைச்சை டிஏபி பேராளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தேசிய சேவைக் குழுமக் காப்புறுதித் திட்டத்திலிருந்து பணம் கிடைக்காது என அந்தக் குடும்பத்தாருக்கு கூறப்பட்டுள்ளது. ஏ தமிழரசி…
நஜிப்: மலேசியாவில் LGBT என்னும் திருநங்கை நடவடிக்கைகளுக்கு இடமில்லை
அரசாங்கம் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதி அளித்துள்ளார். திருநங்கை நடவடிக்கைகள்( LGBT )போன்ற முரண்பாடான பண்பாடுகளுக்கு மலேசியாவில் இடமில்லை என்றும் அவர் சொன்னார். சில தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்ற பல்வகைத்தன்மை, தாராளத் தன்மை ஆகிய எதிர்மறையான சிந்தனைகளையும் தாம் எதிர்த்துப் போராடப்…
டிஏபி: கதிரியக்கக் கழிவுகளை ஏற்றுமதி செய்ய முடியாது
குவாந்தானில் அமைந்துள்ள லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற மசீச நிலை, அபாயகரமான பொருட்களை எல்லைகளைக் கடந்து கொண்டு செல்லப்படுவதற்கான பேசல் மாநாட்டு ஒப்பந்தத்திற்கு முரணானது என டிஏபி எச்சத்துள்ளது. மசீச யோசனை "மூன்றாம் தர பயங்கர திரைப்படத்தின்" சதித் திட்டம்…
தமது உறவினருடைய சட்ட நிறுவனத்துக்கு ‘ஆதரவுக் கடிதத்தை’ வழங்கியதாகக் கூறப்படுவதை…
தமது உறவினருடைய சட்ட நிறுவனத்தை தனது சட்ட ஆலோசனைக் குழுவில் சேர்த்துக் கொள்வது பற்றிப் பரிசீலிக்குமாறு மாநில அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்குத் தாம் எழுதிய கடிதம் ஆதரவுக் கடிதம் எனக் கூறப்படுவதை சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கா ஹுசின் மறுத்துள்ளார். "நான் எழுதிய அந்தக்…
பெர்க்காசா ஏன் சிங்கப்பூரை மட்டும் குறி வைக்கிறது ?
'பெர்க்காசா தனது சுய லாபத்துக்காக அந்தப் பிரச்னையை மோசமாக்க விரும்புகிறது. அதனை நிறுத்துவதற்கு நமது அரசாங்கத்துக்கு துணிச்சல் இல்லை' மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் வெளியேற வேண்டும் என பெர்க்காசா விரும்புகிறது இது வெளியே போகும் வழி: தங்கள் உபசரணை நாடுகளின் அரசியல் விவகாரங்கள் மீது தகவல் கொடுப்பதற்கு எல்லா…
அனுபவம் வாய்ந்த தேர்தல் பார்வையாளர் அமைப்பு இசி அழைப்பை நிராகரித்தது
13வது பொதுத் தேர்தல்களுக்கான பார்வையாளர்கள் என ஐந்து அரசு சாரா அமைப்புக்களை இசி என்ற தேர்தல் ஆணையம் பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. ஆனால் NIEI என அழைக்கப்படும் National Institute for Democracy and Electoral Integrity தேசிய ஜனநாயக, தேர்தல் நேர்மைக் கழகம் இசி விடுத்த அழைப்பை ஏற்றுக்…
மகளிர் அமைச்சை எடுத்துக்கொண்டது ஏன்?-நஜிப் விளக்கம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சுக்கு ஒரு பெண்மணியை அமைச்சராக நியமிக்காமல் தாமே அப்பொறுப்பை ஏற்றதைத் தற்காத்துப் பேசியுள்ளார். “இது தற்காலிகமானதுதான். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றதும் மகளிர் ஒருவரை அமைச்சராக நியமிப்போம்”, என்று மக்கள் அவையில் கேள்விநேரத்தின்போது பிரதமர் கூறினார். அமைச்சர் யார்…
அம்பிகா: தேர்தல் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம்
வரும் பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐந்து அரசு சாரா அமைப்புக்களை இசி என்ற தேர்தல் ஆணையம் பெயர் குறிப்பிட்டுள்ளதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வரவேற்றுள்ளார். என்றாலும் அந்த அமைப்புக்கள் மீது 'தேவையில்லாத கட்டுப்பாடுகள்' விதிக்கப்படுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த அரசு சாரா அமைப்புக்கள் தேர்தல்…
கிட் சியாங்: ‘பெண்டாத்தாங்’ என்ற அவதூறு, ஒரே மலேசியா தோல்வி…
பெண்டாத்தாங் (குடியேறி) என்னும் அவதூறுச் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதற்கு மூல காரணம் எனக் கருதப்படும் அரசாங்க ஆதரவு பெற்ற இனவாத போதனைகளை நிறுத்துவதற்கு நஜிப் நிர்வாகம் தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று குறிப்பிட்டுள்ளது போல அந்தச் சொல் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே…
அந்த மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகளும் வெளியேற வேண்டும் என பெர்க்காசா…
கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்திற்கு வெளியில் இன்று கூடிய மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா, அதன் மூன்று அரசதந்திரிகள் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியது. அந்த மூவரும் ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியில் அவர்கள் பங்கு கொண்டதை பெர்க்காசா ஆட்சேபிப்பதாக…
என்எப்சி பாணியிலான அம்பலத்துக்கு தயாராகுங்கள் என பிகேஆர் நஜிப்-பிடம் சொல்கிறது
960 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது தூய்மையாக இருக்க வேண்டும் அல்லது என்எப்சி எனப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவன பாணியிலான அம்பலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிகேஆர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எச்சரித்துள்ளது. அந்தத் திட்டம் டெண்டரில் தோல்வி கண்ட…
உரிமைகளை மீட்க கிள்ளானில் அமைதி ஊர்வலம்
இந்நாட்டில் தொடர்ந்து மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு வரும் மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக அமல்படுத்தவேண்டும் எனக் கோரி நேற்று மாலை கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (படங்கள்) சிலாங்கூர் மாநில நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம்…
13-வது பொதுத் தேர்தலை கண்காணிக்க 5என்ஜிஓ-கள்
தேர்தல் ஆணையம்(இசி) அடுத்த பொதுத் தேர்தலைக் கண்காணிக்க உள்நாட்டில் ஐந்து என்ஜிஓ-களைப் பார்வை Read More
கிளந்தான் எரிவாயு திரெங்கானு செல்வது ஏன்?
கிளந்தானின் எண்ணெய் உரிமையைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைப்பு ஒன்று, தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் கிளந்தானுக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவைத் திரெங்கானுவுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் பாஸ் ஆட்சியில் உள்ள அம்மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போகும் என்றும் குறைகூறியுள்ளது. Gabungan Profesional Tuntut Royalti, Pendaratan…
300 பிஎன் உறுப்பினர்கள் பிகேஆரில் சேர்கிறார்கள்
கெராக்கான், இந்தியர் முற்போக்கு முன்னணி, மஇகா ஆகிய கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 300பேர் பிகேஆரில் சேர விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிரவு பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பல இனங்களையும் சேர்ந்த 5,000பேர் திரண்டிருந்த கூட்டத்தில் சொலிடேரிட்டி அனாக் மூடா மலேசியா தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரினிடமிருந்து(ச்சேகு பார்ட்…
டெக்சி ஓட்டுனர்களை விடுவிப்பாரா நஜிப்?
“அம்னோ பணம் பண்ணுவதற்கு உருவாக்கிய ஒரு வழிமுறைதானே அது. அப்படி Read More
‘ராபிஸி, பாக்கா பிரச்னைகள் சாதாரணமானவை என்கிறார் அன்வார்
பிகேஆர் கட்சியின் காலித் இப்ராஹிம் வழி நடத்தும் சிலாங்கூர் நிர்வாகத்துடன் தொடர்புடைய இரண்டு அண்மையப் பிரச்னைகள் சாதாரணமானவை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். சிலாங்கூர் அரசாங்கப் பதவி ஒன்றிலிருந்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் திடீரென விலகிக் கொண்டதும் காலித்-தின் அரசியல் செயலாளர் பரிந்துரைக்…