என்ஜிஒ ஏற்பாடு இனி ‘Janji Demokrasi’ என அழைக்கப்படும்

டாத்தாரான் மெர்தேக்கா சிவில் சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுக்கு இப்போது “Janji Demokrasi (ஜனநாயகத்துக்கான வாக்குறுதி) பெயரிடப்பட்டுள்ளது. மெர்தேக்கா தினத்தை “Janji Demokrasi"  உணர்வுடன் கொண்டாடுவதே அந்த நிகழ்வின் நோக்கம் என 49 அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட Gabungan Janji என அழைக்கப்படும் புதிய…

‘Janji Bersih’ கூட்டத்துக்கு கூட்டம் வராது என உள்துறை அமைச்சர்…

ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணி காரணமாக இப்போது ‘Janji Demokrasi’ ( ஜனநாயகத்துக்கான வாக்குறுதி) என இப்போது அழைக்கப்படும் 'Janji Bersih' கூட்டத்துக்கு பலர் வர மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார். ஏப்ரல் 28ல் நிகழ்ந்த வன்முறைகள் பலருக்குப் 'பாடமாக' இருக்கும் என…

அமைச்சர்: பிரிக்பீல்ட்ஸில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்படும்

முன்பு பிரிக்பீல்ட்ஸில்  போலீஸ் மாவட்டத் தலைமையகம் அமைந்திருந்த பகுதியில் பல வகையான  மேம்பாட்டுடன் புதிய போலீஸ் நிலையமும் கட்டப்படும் என கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் வாக்குறுதி அளித்துள்ளார். பிரிக்பீல்ட்ஸில் பகுதியில் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம்…

மொனோரயில் மீண்டும் நின்றுபோனது, 200பேர் சிக்கிக்கொண்டனர்

இம்பி நிலையத்திலிருந்து புக்கிட் பிந்தாங் சென்றுகொண்டிருந்த ஒரு ரயில்வண்டி நின்றுபோனதால் கோலாலம்பூர் மொனோரயில் சேவை ஒரு மணி நேரம் தடைப்பட்டது. நின்றுபோன ரயில்வண்டியில் 200பேர் சிக்கிக்கொண்டனர்.   அச்சம்பவம் காலை மணி 8.35க்கு நிகழ்ந்தது. 8.55-க்குப் பயணிகள் மற்ற ரயில்வண்டிகளுக்கு மாற்றப்பட்டனர் என்று கேஎல் ஸ்டார் ரெயில் பேச்சாளர்…

மேலும் 12 ஐஎஸ்ஏ கைதிகள் விடுதலை

கமுந்திங் தடுப்பு முகாமிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) கைதிகள் 12பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் இதை உறுதிப்படுத்தினார்.. இவர்கள் இம்மாதம் விடுவிக்கப்பட்ட இரண்டாவது தொகுதியினராவர். முதல் தொகுதியினர் ஆகஸ்ட் 3-இல் விடுவிக்கப்பட்டனர்.அதில் மூவர் இருந்தனர். அந்த முகாமில் இன்னும் 30 கைதிகள் எஞ்சியுள்ளனர்.…

ஈசா: என் பிஎச்டி பட்டம் உண்மையானதே

பெர்லிஸ் மந்திரி புசார் முகம்மட் ஈசா சாபு, 2002-இல் தாம் முனைவர் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் மலேசிய தகுதி நிர்ணய அமைப்பின் (MQA) பட்டியலில் இடம்பெறாதது என்றாலும் அனைத்துலக அங்கீகாரம் பெற்றதுதான் என்கிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் நியுபோர்ட் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கிய “டாக்டர்” பட்டம், MQAஇன் அங்கீகாரம்…

என்எப்சி கடன் பற்றிக் கருத்துரைக்க மறுத்தார் ஷரிசாட்

அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில், நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) அரசாங்கத்திடம் பெற்ற ரிம250மில்லியன் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்குக் கருத்துரைக்க மறுத்துவிட்டார். “அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்”, என்றாரவர். பிகேஆர் ஃவியூக இயக்குனர் ரபிஸி…

கொள்ளையரைத் தடுத்து நிறுத்திய ‘தய் சீ’’ஃபோங்குக்கு பாராட்டுகள்

உங்கள் கருத்து: “போலீஸ், சமூக ஆர்வலர்களையும் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளையும் துரத்திக்கொண்டிராமல் திருடர்களையும் கொள்ளையரையும் பிடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்களேயானால் இந்நாடு அனைவருக்கும் பாதுகாப்பான நாடாக விளங்கும்.” தப்பிக்க முயன்ற வழிப்பறிக் கொள்ளையன் முகத்தில் குத்தினார் புக்கிட் பிந்தாங் எம்பி பெயரிலி  #19098644:புக்கிட் பிந்தாங் எம்பிக்குப் பாராட்டுகள்.குற்ற அலையைத் தடுத்து…

‘தாசெக் சினியைக் காப்பாற்றுங்கள் இல்லை என்றால் எங்கள் வாக்குகள் இல்லை’…

நாட்டின் இரண்டாவது பெரிய இயற்கை ஏரியான தாசெக் சினியைக் காப்பாற்றுவதற்கு பாகாங் மாநில அரசாங்கம் முயற்சி செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் பிஎன்-னுக்கு எங்கள் வாக்குகள் கிடைக்காது என அந்த ஏரியைச் சுற்றிலும் வாழும் பூர்வகுடி மக்கள் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்பை எச்சரித்துள்ளனர். "நான் அட்னானை எதிர்கொண்டாலும் நான்…

‘பூஞ்சாக் நியாகா இயக்குநர்களுக்கான கட்டணம் 17.2 மில்லியன் ரிங்கிட் பெரிய…

பூஞ்சாக் நியாகா ஹோல்டிங்ஸ் சென் பெர்ஹாட் இயக்குநர்களுக்குக் கட்டணமாக 17.2 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளது-அதுவும் அது வழங்கும் சேவை திருப்திகரமாக இல்லாமலும் இழப்பையும் எதிர்நோக்கு சூழலில் 'கிறுக்குத்தனமானது' என தண்ணீர் தனியார் மயத்துக்கு எதிராக கூட்டமைப்பு வருணித்துள்ளது. சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-ன் ( சிலாங்கூர்…

ஊடகங்களுடன் அம்பிகா விவாதம் அரசியல் சார்புடையதா?

மேனகா: நான்கு முதன்மை தமிழ் நளேடுகளோடு அம்பிகாவையும் வைத்து செம்பருத்தி.கொம் நடத்திய விவாத மேடை அரசியல் சார்புடையதா? கோமாளி: கண்டிப்பாக மேனகா, அரசியல் என்பதற்கும் கட்சி அரசியல் எனபதற்கும் வேறுபாடு உள்ளது. நமக்கு இது பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் அரசியல் என்பதை பலர் சரியாக மதிப்பீடு செய்வதில்லை.…

114 ஏ மீது முஹைடின் -நஜிப் பிளவு ?

 "நிரபராதி என நிரூபிக்கப்படாவிட்டால் குற்றவாளி எனக் கருதுவது, எப்படி பயங்கரவாதத்தையும் இணையக் குற்றங்களையும் முறியடிக்கும்? நாங்கள் முட்டாள்கள் அல்ல. ஆகவே எங்கள் அறிவாற்றலை  அவமானப்படுத்த வேண்டாம்." 114 ஏ-யை அமைச்சரவை மறு செய்யப் போவதில்லை தோலு: சட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சட்டத்திற்கு தவறாக விளக்கம்…

பெர்சே: பேரணியின் போது முரண்பாடான உத்தரவுகள் பற்றி விளக்குங்கள்

சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம்  தான் நடத்தும் விசாரணைக்கு உதவுமாறு துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்காரையும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் போன்ற அதிகாரிகளை அழைக்க வேண்டும் என பெர்சே கேட்டுக் கொண்டுள்ளது. ஏப்ரல் 28ம் தேதி மகத்தான அளவில்…

நுருல் இஸ்ஸா: பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலைய நிலப் பேரம் பற்றிய…

30 ஆண்டு கால பிரிக்பீல்ட்ஸ் மாவட்டப் போலீஸ் நிலையம் கைவிடப்படுவதற்கு வழி வகுத்த நிலப் பேரத்தை கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் விளக்க வேண்டும் என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார். போலீஸ்…

‘மெர்தேக்காவுக்குப் பின்னர் முதன் முறையாக குற்றச் செயல்களை முறியடிப்பது முன்னுரிமை…

அண்மைய காலம் வரையில் குற்றச் செயல்களை முறியடிப்பது அரசாங்கத்துக்கு 'ஒரு தேவையாக பார்க்கப்படவில்லை' என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். 1957ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து குற்றச் செயல்களைக் குறைக்கும் விஷயம் முன்னுரிமை பெறவில்லை என நிருபர்களிடம் அவர் சொன்னார். "இப்போது குற்றச் செயல்களை முறியடிப்பதற்கு…

பாட்மிண்டன் ரசிகர்கள் பஞ்ச்-க்கு பிரியாவிடை கூறுகின்றனர்

"மலேசியா இன்று பாட்மிண்டன் வீரரையும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரையும் மலேசியர்கள் இழந்துள்ளனர்." புகழ்பெற்ற பாட்மிண்டன் வீரர் பஞ்ச் குணாளன் காலமானார் அபாஸிர்: பஞ்ச் குணாளான் மாறுபட்ட கால கட்டத்தையும் மாறுபட்ட வகுப்பையும் சார்ந்தவர்.  நெகாரா அரங்கத்தில் அவரது ஆட்டத் திறனை கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கண்ட பின்னர்…

நிக் அஜிஸ்: நசாருடினை விலகுமாறு நான் கேட்டுக் கொள்ளவில்லை

ஹுடுட் மீதான பாஸ் நிலை குறித்து முன்னாள் துணைத் தலைவர் நசாருடின் மாட் ஈசா கேள்வி எழுப்பிய பின்னர் தாம் அவரை கட்சியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக பெர்னாமா வெளியிட்ட தகவலை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மறுத்துள்ளார். "சில இணையத்…

ஹசான் நீதிபதியாகவும் ஜுரியாகவும் செயல்படுவதாக ஆயர் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் தாம் அம்பலப்படுத்திய விஷயங்கள் அந்த விவகாரத்தில் பலரை மௌனமாக்கி விட்டதாக ஹசான் அலில் கூறிக் கொண்டுள்ளது "மலிவான தம்பட்டம்" என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "அவர் அந்த விஷயத்தில் நீதிபதியாகவும் ஜுரியாகவும் செயல்பட்டுள்ளார்.…

பிகேஆர் இயக்கம் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களைச் சார்ந்துள்ளது

மக்களுக்கு வாகனங்கள் மலிவாகக் கிடைப்பதற்கு உதவியாக கலால் வரி அகற்றப்பட வேண்டும் என்ற தனது செய்தியைப் பரப்புவதற்கு பிகேஆர், நோன்புப் பெருநாளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களை நாடியுள்ளது. பிகேஆர் அதிகாரிகள் நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட கார்-வில்லைகளை விநியோகம் செய்வர். கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து அதிகமான மக்கள்…

ராயிஸ்: 114 ஏ பிரிவு மீது அமைச்சரவை உறுதியாக உள்ளது.…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவுக்கு இணங்க, இணைய உலகில் அதிகமாக விவாதிக்கப்படும் 1950ம் ஆண்டின் ஆதாரச் சட்டத்தின் 114 ஏ பிரிவை அமைச்சரவை 'கவனமாக ஆய்வு' செய்கிறது. அரசாங்கம் அந்த விவகாரத்தில் உறுதியான நிலையைக் கடைப்பிடிக்கிறது எனக் கூறிய தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம்,…

பட இயக்குனர்: ‘தாண்டா புத்ரா’-வில் கிட் சியாங் இல்லை;எனவே விவகாரம்…

‘தாண்டா புத்ரா(Tanda Putera) படத்தயாரிப்பாளர்கள் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, ஏனென்றால் அப்படத்தில் லிம்மின் பாத்திரமே கிடையாது என்கிறார் அதன் இயக்குனர் சுஹாய்மி பாபா. “அவர் அதில் சித்திரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.அதில் வரும் ஒரு பாத்திரம் அவர்தான் என்றும்…