கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
அன்வார்: இன்னொரு ‘செப்டம்பர் 16க்கு’ முயற்சி செய்யப் போவதில்லை
பிஎன்-னை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்கு 'செப்டம்பர் 16' பாணியில் இன்னொரு கட்சித் தாவலுக்கு முயற்சி செய்யப் போவதில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். என்றாலும் ஆட்சி புரிவதற்கு பிஎன்-னுக்கு உள்ள சட்டப்பூர்வநிலை இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொள்ள…
‘பாதிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பிஎன்-னை நிராகரித்துள்ளனர்’
உங்கள் கருத்து : "நகர்ப்புற-கிராமப்புற பிளவு தெளிவாகத் தெரிகிறது. நகரங்களில் வசிக்கும் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை பக்காத்தான் பெற்றுள்ளது. அதே வேளையில் பிஎன் கிராமப்புறங்களில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை வென்றுள்ளது. பிஎன் புத்ராஜெயாவை தக்க வைத்துக் கொண்டது அடையாளம்…
சிலாங்கூரில் பக்காத்தான் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது
பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டணியான பக்காத்தான் ரக்யாட், சிலாங்கூரில் 56 சட்டமன்ற இடங்களில் 46-ஐக் கைப்பற்றி ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்த 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னால் 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அம்மாநிலத்துக்கான முழு முடிவும் வெகு நேரம் கழித்துத்தான் தெரிய வந்தது. ஆகக் கடைசியாக அறிவிக்கப்பட்டது சுங்கை பினாங்…
பேராக் பக்காத்தான்: ‘ஆவி வாக்காளர்களே’ தோல்விக்குக் காரணம்
பேராக்கில் குறுகிய தோல்விகண்டு பக்காத்தான் ரக்யாட், மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. மாநில பக்காத்தான் தலைவர் முகம்மட் நிஜார் ஜமாலுடின் ‘ஆவி வாக்காளர்களும்' வாக்காளர்கள் தொகுதி மாற்றம் செய்யப்பட்டதும்தான் தங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். பேராக் சட்டமன்றத்தின் 59 இடங்களில்…
நஜிப் இஸ்தானா நெகாராவில் பிரதமராகப் பதவி உறுதி மொழி எடுத்துக்…
நஜிப் அப்துல் ரசாக் இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய் ரோங் ஸ்ரீ-யில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா முன்னிலையில் இன்று மாலை மணி 4.07க்கு பிரதமராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அந்தச் சடங்கின் போது ராஜா பரமைசுரி அகோங்…
அன்வார்: என்னுடைய வேலை இன்னும் முடியவில்லை
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அரசியலிலிருந்து ஒய்வு பெறுவது குறித்து இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை. காரணம் நேற்றைய சர்ச்சைக்குரிய தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் தோல்வி கண்ட பின்னர் மலேசிய அரசியல் களத்தில் தமது வேலை 'இன்னும் முடியவில்லை' என அவர் கருதுகிறார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் ஆணைய…
சொய் லெக் கட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார்
விரைவில் நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலிலிருந்து தாம் ஒதுங்கியிருக்கப் போவதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளார். இன்று வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில் அதனைத் தெரிவித்த சுவா, தமது பதவியைத் தக்க வைத்துள்ள போட்டியிடாததற்கான காரணத்தைக் கூறவில்லை. அவர் தேர்தலில் மோசமான அடைவு நிலைக்கு மசீச…
நாடாளுமன்ற, சட்டமன்ற இருக்கைகள் விபரம்
மொத்த இருக்கைகள் 222, அரசாங்கம் அமைக்க 112, மூன்றில் இரண்டு பங்கு 148
13வது பொதுத் தேர்தல் : தற்போதைய அதிகாரப்பூர்வமற்ற நிலவரம்
இரவு மணி 2.30: நாடாளுமன்ற இருக்கைகள் பாரிசான் 129, பக்கத்தான் 80. பேராக் மற்றும் திரங்கானு மாநிலங்கள் இரவு மணி 2.03: மிகக் குறைவான பெரும்பான்மையில் பாரிசான் பேராக் மாநில ஆட்சியை தொடரும் (பிஎன் 31, பக்கத்தான் 28). திரங்கானு மாநிலத்தில் அதற்கு இரண்டு பக்கத்தானைவிட இரு கூடுதல் இருக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன (பிஎன் 17, பக்கத்தான் 15). மஇகா வேட்பாளர்கள்…
லெம்பா பந்தாய் வாக்காளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்ததாக புகார்
நாட்டின் போட்டிமிகுந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான லெம்பா பந்தாயில், பிஎன், வாக்குகளுக்கு ரொக்கப் பணம் கொடுத்ததாக நேரில் கண்டவர்கள் புகார் செய்துள்ளனர். ஸ்ரீபந்தாய் ஸ்கோலா ரெண்டா அகாமாவிலும் எஸ்கே பங்சாரிலும் அவ்வாறு நடந்ததாக அத்தொகுதிக்கான நடப்பு எம்பி நுருல் இஸ்ஸாவின் உதவியாளர் பாஃமி பாஃட்சில் (வலம்) தெரிவித்தார். 20திலிருந்து…
தேர்தலில் 80 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்
13வது பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 12,992,661 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர் அந்தத் தகவலை தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிட்டது. மலேசிய வரலாற்றில் இவ்வளவு அதிகமான விழுக்காட்டினர் வாக்களித்துள்ளது இதுவே முதன் முறையாகும். 1964ம் ஆண்டு 78.9 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதுடன் ஒப்பிடுகையில் 13வது தேர்தலில் வாக்களித்தவர்…
‘சந்தேகத்துக்குரிய வாக்காளர் வாக்களித்த பின்னர் பணம் கோரினார்’
வாக்களித்த பின்னர் தங்கள் சாவடியில் பணம் கேட்ட சபாவைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவரை சிலாங்கூர் பண்டானில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தேர்தல் ஊழியர்கள் விசாரித்துள்ளனர். Taski Abim Taman Mawar வாக்குச் சாவடிக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிகேஆர் சாவடியில் பிற்பகல் ஒரு மணி வாக்கில் மஸ்லான் சுல்கிப்லி…
தேர்தல் ஆணையம் : வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாருமில்லை
வாக்குச் சாவடிகளில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் காணப்பட்டதாக புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைக் கொண்ட அனைவரும் குடிமக்கள் என்றும் அதனால் அவர்கள் சட்டபூர்வ வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) வலியுறுத்துகிறார். "எங்கள் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாரும் இல்லை. நாங்கள் எங்கள் வாக்காளர்…
‘வாக்களிக்கும் என் உரிமையை யாரோ திருடி விட்டார்கள்’
கூலாயிலும் கிள்ளானிலும் பல வாக்காளர்கள் தங்கள் பெயரில் யாரோ ஒருவர் வாக்களித்து விட்டதால் தாங்கள் வாக்களிக்க முடியாமல் போய் விட்டதாக கூறிக் கொண்டுள்ளனர். அவர்கள் இசி என்ற தேர்தல் ஆணையத்தில் புகார் செய்கின்றனர். கூலாயில் வாக்களிப்பதற்காக காலை 10 மணிக்கு SJK(C) Batu வாக்குச் சாவடிக்கு 42 வயதான…
பண்டானில் சந்தேகத்துக்குரிய வாக்காளரை பிகேஆர் முறியடித்தது
சிலாங்கூர் பண்டானில் பிகேஆர் தேர்தல் ஏஜண்டுகள் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார். அந்தத் தகவலை பிகேஆர் பண்டான் வேட்பாளர் ராபிஸி இஸ்மாயில் வெளியிட்டார். சியோக் லியிங் இயூ என்ற பண்டான் வாக்காளர் ஒருவர், பதிவு செய்யப்பட்ட தமது முகவரியில் சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் இருப்பதாக…
சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 58.95 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்
சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 1.2 மில்லியன் அல்லது 58.95 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அந்த விவரத்தை இசி என்ற தேர்தல் ஆணையம் பெர்னாமாவிடம் தெரிவித்தது. நெகிரி செம்பிலானில் பிற்பகல் ஒரு மணி வரையில் மொத்தமுள்ள 555,982 வாக்காளர்களில் 58.35 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டனர்.…
புல்லைக் கொண்டு கூட அழியா மையை நீக்கி விட முடியும்!
13வது பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உண்மையில் அழிக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்த போதிலும் நாடு முழுவதும் வாக்காளர்கள் அதனை எளிதாக அகற்றியுள்ளனர். சிலர் புல்லைப் பயன்படுத்திக் கூட அந்த மையை அழித்துள்ளனர். சபா பெனாம்பாங்கில் வாக்குச் சாவடிகளிலிருந்து வெளியில் வந்த வாக்காளர்கள்…
13வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது
புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய 13வது பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. 15 நாள் பிரச்சாரக் காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தல் நாட்டு வரலாற்றில் மிக நெருக்கமான போட்டியாக இருக்கும்…
பொய்யான எஸ்எம்எஸ் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
இன்று நள்ளிரவு 12 மணிக்கு 13வது பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுக்கு வரும் வேளையில் வாக்காளர்களுக்குப் பிரபலமான செய்தி இணையத் தளங்களிலிருந்து அனுப்பப்படுவதாக கூறிக் கொண்டு பொய்யான செய்திகள் அனுப்பப்படுகின்றன. நேற்றிரவு மலேசியாகினியிலிருந்து அனுப்பப்படுவதாக கூறிக் கொண்டு பொய்யான எஸ்எம்எஸ் செய்திகள் பல கைத் தொலைபேசி பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.…
‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்களைக் பொதுமக்கள் கைது செய்வர்’
நாளைய வாக்களிப்பில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிப்பு மோசடியில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைப் பொதுமக்கள் கைது செய்வர். இது குடியாளர்-கைது (citizen’s arrest) எனப்படும். இதனைத் தெரிவித்த அத்தொகுதி நடப்பு எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, கிள்ளான் வாக்காளர் பட்டியலில் 2,000 சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தாமும் தம் குழுவினரும்…
‘பெரும் எண்ணிக்கையில் வாக்களிப்பதே சட்ட விரோத வாக்காளர்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக்…
உங்கள் கருத்து : "இசி அம்னோவுக்காக வேலை செய்கிறது என்பது நிச்சயம். இல்லை என்றால் இவ்வளவு தில்லுமுல்லுகள் எப்படி நடக்க முடியும் ? அடையாளக் கார்டு திட்டமும் எப்படி நிறைவேற்றப்பட முடியும் ?" பிகேஆர்: சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை விமானத்தில் கொண்டு வருவதில் பிரதமர் அலுவலகம் சம்பந்தப்பட்டுள்ளது பெர்ட்தான்: எல்லாம்…
‘பிஎன் சிலாங்கூரைக் கைப்பற்ற முதலில் சிறு வெற்றிபெற்ற இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள…
தேர்தல் கண்ணோட்டம் - சிலாங்கூர் : பாரிசான் நேசனல் அடிக்கடி நாட்டின் பணக்கார மாநிலமான சிலாங்கூரைக் கைப்பற்றப்போவதாக் கூறிக்கொள்வதைக் கேட்கிறோம். அதற்கு பிஎன் பக்காத்தான் ரக்யாட் வசமுள்ள சில இடங்களைப் பிடிக்க வேண்டும். ஆனால், அதற்குமுன் அது கடந்த பொதுத் தேர்தலில் சிறுவெற்றிபெற்ற குறைந்தது ஒன்பது இடங்களைத் தக்க…
சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் கொண்டு வரப்படுவதை பெர்சே சாடுகின்றது
சந்தேகத்துக்குரிய ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டு கடுமையான போட்டி நிகழும் மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் முயற்சிகளை பெர்சே கண்டித்துள்ளது. அந்த முயற்சிகள் மலேசியா முழுவதும் உள்ள உண்மையான வாக்காளர்களுடைய விருப்பங்களை அப்பட்டமாக மீறுவதாகும் என அது நேற்று பின்னேரம் விடுத்த அறிக்கையில் வருணித்தது. "வாக்களிப்பு தினத்துக்கு…


