ஐஜிபி: அதிகமான ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் தரையிறங்கியுள்ளனர்

மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களைத் தொடர்ந்து மேலும் அதிகமான அதிகமான ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் தரையிறங்கியுள்ளனர். செம்பொர்ணாவுக்கும் லஹாட் டத்து-வுக்கும் இடையில் உள்ள குனாக் நகரத்தில் இரண்டு கிராமங்களில் ஊடுருவல்காரர்கள் ஊடுருவியுள்ளதை தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார்.…

ஜெனரல்: ஊடுருவல்காரர்கள் நன்கு ‘பயிற்சி-பெற்றவர்கள்’

சாபாவில் ஊடுருவல் செய்துள்ள ஆயுதங்தாங்கிய கும்பல் போரிடும் அனுபவம் உள்ளது என்றும் ஊடுருவல் தந்திரங்கள் அறிந்தது என்றும் கூறுகிறார் இராணுவ ஜெனரல் சுல்கிப்ளி சைனல் அபிடின். “அவர்களின்  செயல்பாட்டைக் கண்காணித்ததிலும் எங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களிலிருந்தும் போரிடும் அனுபவம் அவர்களுண்டு  என்பது புலனாகிறது.  தலைமறைவுப் படையினரின் போர்முறைகளில் தேர்ச்சி…

ஐஜிபி: செம்பூர்னாவில் திடீர்தாக்குதலில் போலீசார் ஐவர் கொல்லப்பட்டனர்

சாபா, செம்பூர்னாவில் ஆயுதக்கும்பல் ஒன்று பதுங்கியிருந்து தாக்கியதில் ஐந்து போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதை தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார். “நேற்று மாலை செம்பூர்னாவின் கம்போங் ஸ்ரீஜெயா சிமுனுலில் ஆயுதக்கும்பல் ஒன்று நடமாடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. “அத்தகவலைக் கேட்டு செம்பூர்னா போலீஸ் தலைமையகத்திலிருந்து…

நாம் விதைத்ததை அறுவடை செய்கிறோம்

"மலேசியா பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரத்துவத்தை வலுப்படுதுவது என்ற பெயரில் மொரோ தேசிய விடுதலை முன்னணிக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும்  கொடுத்து வருகின்றது." லஹாட் டத்து தாக்குதல் 'உள்நாட்டுப் போராக' விரிவடையலாம் பெர்ட் தான்: லஹாட் டத்து சம்பவம் 'உள்நாட்டு' போராக மாறலாம் என மொரோ தேசிய விடுதலை முன்னணி…

அன்வார்: லஹாட் டத்து-வுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

சுலு துப்பக்கிக்காரர்களுடைய ஊடுருவலுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த ஊடுருவல்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள். அந்தக் குற்றச்சாட்டுக்களினால் அவர் பெரிதும் வருத்தமடைந்துள்ளது தெளிவாகத்…

‘லாஹாட் டத்து ஊடுருவலுக்கும் அன்வாருக்கும் தொடர்புண்டாம்’

மையநீரோட்ட ஊடகங்களின் செய்தியறிக்கைகள், மாற்றரசுக் கட்சியை அதுவும் குறிப்பாக அன்வார் இப்ராகிமை பிலிப்பினோ கும்பலின் ஊடுருவலுடன் தொடர்புப்படுத்துகின்றன. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு, பிலிப்பினோ ஊடகமான   Inquirer News-சை மேற்கோள்காட்டி எம்பிபி வலைத்தளத்தில் இடம்பெற்ற ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. “பிலிப்பின்ஸ் செய்தித்தளமான  Inquirer News அன்வாருடன் நெருங்கிய…

‘அமெரிக்காவில் அன்வார் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பிஎன் நிதி அளித்தது

முக்கிய அமெரிக்க வெளியீடுகளில் பிரச்சார கட்டுரைகளை எழுதுவதற்காக பல எழுத்தாளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய ஏஜண்டுகள் தங்களைக் கட்டாயம் பதிந்து கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கச் சட்டத்தின் கீழ்…

பக்காத்தான் கொள்கை அறிக்கையில் இந்தியர் விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்து

அரசுசார்பற்ற அமைப்புகள் பல, பக்காத்தான் அதன் தேர்தல் கொள்கைவிளக்க அறிக்கையை மறுஆய்வு செய்து மலேசிய இந்திய சமூகத்தின் தேவைகளையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. அது கவனக்குறைவாக விடுபட்டிருக்கலாம் என்று கூறிய மக்கள் நலன் மற்றும் உரிமை அமைப்பின் (பவர்) தலைவர் எஸ்.கோபிகிருஷ்ணா கூறினார். பொதுத் தேர்தலுக்குமுன்…

தைவானிய சுற்றுச்சூழல் போராளி மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை

தைவானிய சுற்றுச்சூழல் போராளி மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் இன்று பின்னேரத்தில் திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜுலை மாதம் ரபிட் எதிர்ப்பு இயக்கத்துக்காக ஜோகூர் பெங்கெராங் சென்றிருந்த கிரேஸ் கான் என்ற அந்தப் போராளியை தற்போது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள்…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய கோரிக்கை

தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றப்பேரவை கூட்டப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கை (இங்கே சொடுக்கவும்) நேற்று மலேசிய வெளியுறவு அமைச்சிடம் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் மலேசிய வெளியுறவு அமைச்சரை பிரதிநிதித்து இலங்கை தொடர்புடைய மனித உரிமை…

மின்னல் படை வீரர்கள் மரணமடைந்ததற்கு யார் காரணம் ?

"ஊடுருவல்காரர்களுடன் நடத்தப்பட்ட குளறுபடியான பேச்சுக்கள் மீது பொது விசாரணை நிகழ வேண்டும். அப்போது தான் பாடம் கற்க முடியும்" லாஹாட் டத்து துப்பாக்கிச் சண்டையில் இரு மலேசியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர் மலேசிய இனம்: இராணுவ வியூக அடிப்படையில் பார்த்தால் தொடக்கத்திலிருந்தே அது பெரும் பேரிடராகும்.  ஆயுதங்களை…

லஹாட் டத்து தாக்குதல் ‘உள்நாட்டுப் போராக’ விரிவடையலாம்

லஹாட் டத்துவில் நேற்று மலேசியா படைபலத்தைப் பயன்படுத்தியுள்ளது சபாவில் பகைமை நடவடிக்கைகளாக விரிவடைந்து உள்நாட்டுப் போராக மாறக் கூடும் என மோரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF) எச்சரித்துள்ளது. "சபாவில் உள்நாட்டுப் போர் மூளக் கூடும் என நான் அஞ்சுகிறேன். ஏனெனில் சபாவில் ஆயிரக்கணக்கான பாங்சாமொரோ இன மக்கள்…

ஹிண்ட்ராப் கேட்பது விளக்கங்கள் அல்ல, உரிமைக்கான உறுதிமொழி

-என். கணேசன், தேசிய ஆலோசகர், ஹிண்ட்ராப், மார்ச் 1, 2013. இந்தியர்களின் சமூக பொருளாதார பின்னடைவுகளுக்கு நிரந்தர தீர்வுகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட ஹிண்ட்ராப் அமைப்பின் ஐந்தாண்டு செயல் திட்டத்தை எழுத்து பூர்வமாக ஆதரித்தால் பக்கதானுடன் இணைந்து ஆட்சி  மாற்றத்திற்கான வேலைகளை முடுக்கி விடலாம் என்று ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து…

ஐந்து பாகிஸ்தானியர் சாபாவில் ‘விரைவு குடியுரிமை’ கிடைத்ததை ஒப்பினர்

ஐந்து பாகிஸ்தானியர்,  முதன்முதலாக மலேசியா வந்தபோது சாபாவில் முகவர்கள் மூலமாக தங்களுக்குக் குடியுரிமை கிடைத்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர். அவர்களில் சிலர் ஐந்து தடவை தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான் முதல்பக்கச் செய்தியாக இதை வெளியிட்டுள்ளது.  அதன் நிருபர்கள், பேராக் ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி சென்று…

லாஹாட் டத்துவில் துப்பாக்கிச் சண்டை, 12 பேர் பலி

லாஹாட் டத்துவில் இன்று காலை மலேசிய பாதுகாப்புப் படையினருக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தங்கள் தரப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாக சூலு சுல்தானின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் கூறினார். சூலு சுல்தான் என்று தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் ஜமாலுல் கிராமின் (இடம்) சகோதரர் அஸ்ஸிமுடி கிராமிடமிருந்து…

டிஏபி அறிக்கை முழுமையாக இல்லை என்கிறது சங்கப் பதிவதிகாரி அலுவலகம்

1966ம் ஆண்டுக்கான சங்கச் சட்டத்தின் பிரிவு 14(1)க்கு ஏற்ப முழுமையான  ஆண்டறிக்கையை சமர்பிக்க டிஏபி தவறி விட்டதாக ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி கூறிக் கொண்டுள்ளார். அதனால் அந்தக் கட்சியின் தேர்தல் குளறுபடி குறித்து தமது அலுவலகம் விரிவான ஆய்வை நடத்துவதற்கு இயலவில்லை என அதன் தலைமை இயக்குநர்…

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையை விவாதிக்க சிலாங்கூர் பிஎன் தயார்…

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பக்காத்தான் ராக்யாட் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையை விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் கூறியிருக்கிறார். ஆனால் ஒரு நிபந்தனை விதிப்பதாக அவர் சொன்னார். "நான் விவாதம் நடத்தத் தயார். ஆனால் மக்கள் நலனை பாதுகாக்கும் ஆற்றலைக்…

ரோஸ்மா யூகேஎம் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தவிர்த்தார்

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர், யூகேஎம் என்ற மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தவிர்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள Dewan Canselor Tun Abdul Razak…

அரிபின்: டிஏபி-க்கு மலாய் ஆதரவு கூடுவது குறித்து அம்னோ அஞ்சுகின்றது

டிஏபி-க்கு அளிக்கப்படும் வாக்கு இஸ்லாம் ஒடுக்கப்படுவதற்கு வழி வகுத்து விடும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்லியிருப்பது, அதிகமான மலாய்க்காரர்கள் டிஏபி-க்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதைக் கண்டு அம்னோ அஞ்சுவதைக் காட்டுவதாக டிஏபி உதவித் தலைவர் அரிபின் ஒமார் கூறியிருக்கிறார். டிஏபி-க்கு அளிக்கப்படும் வாக்கு இஸ்லாம் ஒடுக்கப்படுவதற்கு…

UIA பல்கலைக்கழகம் பொதுத் தேர்தல் மீதான மாணவர் ஆய்வரங்கைத் தடுத்துள்ளது

UIA என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மாணவர் பேராளர் மன்றம் பொதுத் தேர்தல் மீது ஏற்பாடு செய்திருந்த ஆய்வரங்கு ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் முடிவைத் தெரிவிக்கும் கடிதம் தமக்கு மாணவர் விவகாரத் துறைத் தலைவர் அக்மால் குஸைரி அப்துல் ரஹ்மானிடமிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கிடைத்துள்ளதை…

டாக்டர் மகாதீர்: இசா இல்லாததால் மக்கள் இப்போது பொய் சொல்ல…

இசா சட்டம் அகற்றப்பட்டது மக்கள் பொய்களை அள்ளி விடுவதற்கு வழி வகுத்து விட்டதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருதுகிறார். காரணம் சாத்தியமான தண்டனை இல்லாததால் மக்களுக்குத் துணிச்சல் வந்து விட்டது என அவர் சொன்னார். "இப்போது நாம் இசா சட்டத்தை ரத்துச் செய்து விட்டதால் மக்கள்…