கனி: ஹாடி பிரதமரானால் ஜோகூருக்கு பேரழிவு ஏற்படும்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை அடுத்த பிரதமராக்குவதற்கு டிஏபி ஒப்புக் கொண்டால்  ஜோகூருக்குப் பேரழிவு ஏற்படும் என பிஎன் கேலாங் பாத்தா வேட்பாளரும் நடப்பு ஜோகூர் மந்திரி  புசாருமான அப்துல் கனி ஒஸ்மான் எச்சரித்துள்ளார். அதன் தாக்கங்கள் குறித்து தாம் கவலைப்படுவதாக அப்துல் கனி ஸ்கூடாய் தாமான்…

கர்பால்: டிஏபி சுயேச்சைகள் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க…

வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படாதைத் தொடர்ந்து சுயேச்சைகளாக நிற்கும் டிஏபி  உறுப்பினர்களுடைய கட்டொழுங்கற்ற எந்த நடவடிக்கையையும் டிஏபி சகித்துக் கொள்ளாது. நடப்பு தெரத்தாய் சட்ட மன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ-க்கும் கோத்தா மலாக்கா எம்பி சிம் தொங் ஹிம்-முக்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்களது சுயேச்சை…

இத்தனை சுயேச்சைகள் நாட்டுக்குச் சேவை செய்யத்தான் போட்டியிடுகிறார்களா?

உங்கள் கருத்து ‘தங்களால் வெற்றிபெற முடியும் என்பதைத் தத்தம் கட்சிகளுக்குத் காண்பிக்க விரும்புகிறார்கள். அதுதான் போட்டியிடுகிறார்கள். ஆனால், சுயேச்சைகள் வெற்றிபெறுவது அரிதினும் அரிது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது’ தேர்தலில் நூற்றுக்கணக்கில் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள் ஜேஎம்சி: 13வது பொதுத் தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடந்தேற பிரார்த்தனை செய்வோம். ஏதாவது குழப்படிகள்…

இசா, ஆயிஷாவை அரசியல் எதிரியாகத்தான் பார்க்கிறார், பாடகராக அல்ல

ஜெம்போலில் தம்மை எதிர்க்கும் வேட்பாளர் பெரும் புகழ்பெற்றவராக இருக்கலாம் ஆனால் அதைக்கண்டு  அம்னோவின் முகம்மட் இசா சமட் அஞ்சப்போவதில்லை. அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் புகழ்பெற்ற பழைய பாடகி ஆயிஷா. அவரது இயற்பெயர் வான் அயிஷா வான் அரிபின். “அவர் (ஆயிஷா) ஒரு பாடகரோ, உஸ்தாஸோ, ஆசிரியரோ, வழக்குரைஞரோ…

தூய்மையாக வைத்துக் கொள்ள கிட் சியாங் விரும்புகிறார்

"கனி தாம் மந்திரி புசாராக இருந்த 18 ஆண்டு காலத்தில் ஜோகூருக்கு பல சாதனைகளைக் கொண்டு  வந்துள்ளார்." வேட்பாளர் நியமன நாளன்று தமது அரசியல் எதிரியிடமிருந்து ஒருவர் இது போன்ற அங்கீகாரத்தைக்  கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதனை லிம் கிட் சியாங் வழங்கினார். கேலாங்…

டிஏபி வேட்பாளருக்கு முதலில் அதிர்ச்சி ஒரு நாள் காத்திருந்த பின்னர்…

இசி என்ற தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் தமது பெயர் இடம் பெறாதது  குறித்து டிஏபி ஸ்ரீ தஞ்சோங் வேட்பாளர் சான் பூங் ஹின் அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று காலையில் சான் -உடைய வேட்பாளர் நியமனத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்ட போதும் பெயர் விடுபட்டுள்ளது.…

‘அம்னோ, பெர்க்காசா ஆளுமையின் கீழ் இருப்பது உறுதியாகியுள்ளது’

உங்கள் கருத்து : "என் நினைவுக்கு எட்டிய வரை தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர் ஒருவர் நியமன நாளன்று வேட்பு  மனுவைத் தாக்கல் செய்யாதது இதுவே முதன் முறை" பாசிர் மாஸில் பிஎன் விலகிக் கொண்டது, இப்ராஹிம் அலி நேரடிப் போட்டியில் பெர்ட் தான்: இப்ராஹிம் அலியை முன்னாள்…

வேட்பாளர் நியமன மையத்தில் அன்வார் கேலி செய்யப்பட்டார்

1982ம் ஆண்டு தொடக்கம் தமது சொந்த மாநிலத்தில் போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் வேட்பாளர் அன்வார்  இப்ராஹிமை வேட்பாளர் நியமன மையத்துக்கு வெளியில் பிஎன் ஆதரவாளர்கள் இன்று அவமானப்படுத்தியுள்ளனர். பெராபிட்டில் உள்ள Institut Kemahiran Belia Negara-வில் தேர்தல் அதிகாரி யூஸ்னி இஸ்மாயில் அன்வார்  பெயரையும் அவரது கட்சி பெயரையும்…

தீ கியாட்: என் முன்னாள் உதவியாளருக்கு நான் பிரச்சாரம் செய்ய…

பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்கும் தமது முன்னாள் உதவியாளட் அலன்  தான் -க்குத் தாம் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என நடப்பு பண்டான் எம்பி ஒங் தீ கியாட் கூறுகிறார். "அவர் சுயேச்சை வேட்பாளர். நான் பிஎன்-னில் இருக்கிறேன்," என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.…

13வது பொதுத் தேர்தலில் பல இடங்களில் பல்முனைப் போட்டி

வரப்போகும் 13வது பொதுத் தேர்தலில் பல்முனை போட்டிக்குப் பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது. பல இடங்களில்  நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டிபோட பல வேட்பாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள். பல்முனைப் போட்டி நிகழும் சில இடங்களைப் பார்ப்போம்: ஜோகூர் கேலாங் பாத்தா(நாடாளுமன்ற) இருபெரும் அரசியல் ஜாம்பவான்களான ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி…

‘இன ரீதியாக ஒன்று கூடும்’ பக்காத்தான் போக்கை கனி சாடுகிறார்

பிஎன் கேலாங் பாத்தா வேட்பாளர் அப்துல் கனி ஒஸ்மான் அந்தத் தொகுதி மக்களுக்கு விடுத்துள்ள முதல்  செய்தியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படும் 'இன ரீதியாக ஒன்று கூடும்' பக்காத்தான்  போக்கை எதிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். "ஜோகூர் பாணியை முறியடிப்பதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூகத்தை இன ரீதியாக…

பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் இரண்டு தொகுதிகளில் மோதிக் கொள்கின்றன

பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் பினாங்கு சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியிலும் மோதுகின்றன. லாபுவானில் பிகேஆர் இப்ராஹிம் மெனுடினையும் பாஸ் ஹாட்னான் முகமட்டையும் நிறுத்தியுள்ளன. அவர்களுடன் அம்னோவைச் சேர்ந்த புதுமுகமான ரோஸ்மான் இஸ்லியும் லாபுவானில் களமிறங்கியுள்ளார். 2008ல் அம்னோவின் யூசோப் மஹால் அந்தத் தொகுதியில்…

பாசிர் மாஸ் தொகுதியில் பிஎன் பின் வாங்கியது, நேரடிப் போட்டியில்…

பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான பிஎன் வேட்பாளர் தமது வேட்பு மனுவைச் சமர்பிக்கவில்லை.  அதனால் அந்தத் தொகுதிக்கான நடப்பு உறுப்பினர் இப்ராஹிம் அலிக்கும் நிக் அப்டு நிக் அப்துல்  அஜிஸுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிகழும். பிஎன் சார்பில் நிறுத்தப்படுவதற்கு இப்ராஹிம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால்…

முதுநிலை வழக்குரைஞர் சிசில் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்

முதுநிலை வழக்குரைஞர் சிசில் அப்ராஹமை வழக்குரைஞர் மன்றம் வழக்குரைஞர்-சொலிஸிட்டர் ஒழுங்கு  நடவடிக்கை வாரியத்துக்கு இந்த மாதம் கொண்டு சென்றுள்ளது. 2008ம் ஆண்டு பாலசுப்ரமணியம் செய்த  இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் அவருக்குப் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாறு  செய்யப்பட்டுள்ளது. அந்தத் தகவலை வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டபர் லியோங்…

டிஏபியைச் சேர்ந்த இருவர் நீக்கப்படலாம்

டிஏபி உறுப்பினர்கள் பொதுத் தேர்தலில் சுயேச்சைகளாக போட்டியிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்று கட்சி கட்டொழுங்குக் குழுத் தலைவர் டான் கொக் வாய் கூறினார். இது கட்சித் தலைமையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என்றாரவர். கட்சிநீக்கம் செய்யப்பட்டவர்கள், கட்சி சட்டவிதிகளின்படி 14 நாள்களுக்குள் அம்முடிவுக்கு எதிராக முறையிடலாம். ஜெனிஸ்…

அம்னோ மகளிர் துணைத் தலைவர் சுயேச்சை வேட்பாளரானார்

அம்னோ மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிம், கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் அத்தொகுதியில்  மும்முனை போட்டி உருவாகியுள்ளது. அவருடன் கலில் இதாம் லிம்(பாஸ்), வான் முகம்மட் கைரில் அனுவார் வான் அஹ்மட் (பிஎன்) ஆகியோரும் அங்கு களமிறங்குகின்றனர். பிஎன்,  அவருக்கு அவர் விரும்பிய…

ஆர்ஓஎஸ்: டிஏபி சின்னத்தைப் பயன்படுத்தலாம், ஆட்சேபணை இல்லை

சங்கப் பதிவதிகாரி அலுவலகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி தலைமைத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், டிஏபி வேட்பாளர்கள் வரும் பொதுத் தேர்தலில் கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதில் அதற்கு ஆட்சேபணை இல்லை. நேற்று பின்னேரம்தான் டிஏபி-க்கு இத்தகவல் தெரிய வந்தது. ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான்  ஒரு கடிதம் வாயிலாக அதனைத்…

ஏவுகணை (ராக்கெட்) சந்திரனை எட்டி விட்டது

"அந்த ஆர்ஒஎஸ் நடவடிக்கைகள் பக்காத்தான் பிணைப்புக்களையே மேலும் வலுப்படுத்தும். இன்னும் முடிவு  செய்யாதவர்கள் அம்னோ/பிஎன் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்ளும் என்பதை உணருவர்" ஆர்ஒஎஸ் கடிதம் லிம் கிட் சியாங்-கை கண்ணீர் சிந்த வைத்தது. வேட்டைக்காரன்: பாஸ் குடையின் கீழ் டிஏபி போட்டியிடுவது உண்மையில் மோசமான விஷயமல்ல.…

13வது பொதுத் தேர்தலுக்கு இன்று வேட்பாளர் நியமன நாள்

13வது நாடாளுமன்றத்திற்கான போராட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 505 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டி நிகழும். சரவாக் சட்டமன்றத்தில் உள்ள 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறாது. நாடு முழுவதும் பினாங்கு, ஜோகூர், மலாக்காவில் சில பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் இன்று காலை வானிலை…

எல்லை தாண்டல்- பிஎன் வியூகத்தில் தொடக்கநிலை தவறுகள்

தேர்தல் கண்ணோட்டம்   கண்ணோட்டம் விடுபவர் Bridget Welsh தேர்தல் பரப்புரைகளை மதிப்பிடும்போது அதில் வியூகங்கள் நகர்த்தப்படுவதன் நோக்கங்களையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொள்வது முக்கியமாகும். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களில் பிஎன் செய்த முடிவுகள் வாக்காளரிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மாற்றரசுக் கட்சியின் நிலையை…

பாஸ், பிகேஆர் சின்னங்களை டிஏபி பயன்படுத்தும் என்பதை கர்பால் உறுதிப்படுத்துகிறார்

டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழு அணியை நிறுத்தி வைக்கும் கடிதத்தை சங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்)  மீட்டுக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் டிஏபி தீவகற்ப மலேசியாவில் பாஸ்  சின்னத்திலும் சபா, சரவாக்கில் பிகேஆர் சின்னத்திலும் போட்டியிடும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்  அறிவித்துள்ளார். புதன்…

நஜிப் ஒப்பந்தம் கற்பனை செய்ய முடியாதது; வரலாற்றுப்பூர்வமானது என்கிறார் வேதமூர்த்தி

இந்திய சமூகத்தை அம்னோ 'இன ஒழிப்பு' செய்வதாகப் பல ஆண்டுகள் குற்றம் சாட்டி வந்த ஹிண்ட்ராப்  தலைவர் பி வேதமூர்த்தி, ஆளும் கட்சியுடன் தாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள் 'வரலாற்றுப்பூர்வமானவை' எனத் தற்காத்துப் பேசியதுடன் பக்காத்தான் ராக்யாட் மீது பழியும் போட்டுள்ளார். ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பிஎன் தலைவர் நஜிப்…

வேட்பாளர்களுக்கு இரண்டு அங்கீகாரக் கடிதங்களை சரவாக் டிஏபி கொடுத்துள்ளது

சரவாக் டிஏபி தனது ஏழு வேட்பாளகளுக்கு இன்று பிற்பகல் டிஏபி, பாஸ் கட்சிகளின் அங்கீகாரக் கடிதங்களை  வழங்கியுள்ளது. அதே வேளையில் பிகேஆர் அங்கீகாரக் கடிதங்களுக்காக அது காத்திருக்கிறது. டிஏபி கட்சியின் மத்திய செயற்குழுவை அங்கீகரிக்கவில்லை எனக் கூறும் தனது கடிதத்தை சங்கப் பதிவதிகாரி  ரத்துச் செய்ய மறுத்தால் சபா,…