கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
அன்வார்: ஒர் இந்தியர் கொடுத்த முத்தம் சுல் நூர்டினைக் காப்பாற்றாது
ஒரு முத்தம் வெறும் முத்தம் தான். பிஎன் ஆதரவாளரான ஒர் இந்தியர் கொடுத்த முத்தம் பிஎன் ஷா அலாம் நாடளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுல்கிப்லி நூர்டினைக் காப்பாற்றப் போதுமானது அல்ல என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "முழுக்க முழுக்க இன வெறி, மற்ற சமயங்களை இழிவுபடுத்துவது…
கிட் சியாங் குறித்து சொன்ன கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க மகாதிருக்குக்…
டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மூன்று நாள்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்குரைஞர் கர்பால் சிங் கோரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான…
வேட்பாளர் நியமன நாளன்று பிஎன் ரொக்கப் பற்றுச் சீட்டுக்களைக் கொடுத்தது
பிஎன் அலோர் ஸ்டார், நிபோங் திபால் ஆகியவற்றிலுள்ள வேட்பாளர் நியமனங்களுக்கு அருகில் பொது மக்களுக்கு ரொக்கப்பற்றுச் சீட்டுக்களை கொடுத்ததாக Pemantau எனப்படும் தேர்தல் கண்காணிப்புக் குழு கூறிக் கொண்டுள்ளது. அலோர் ஸ்டாரில் விநியோகிக்கப்பட்ட ரொக்கப்பற்றுச் சீட்டுக்களின் மதிப்பு 80 ரிங்கிட் என்றும் அந்தக் குழுவில் ஒர் உறுப்பினரான மரியா…
பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சரவாவுக்கு ஒரு புதிய சிஎம்?
வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சரவாவுக்கு ஒரு புதிய முதலமைச்சர் கிடைக்கலாம் என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசாங்கக் கட்டுப்பாடின்றி முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் பற்றி விசாரிக்க…
ஜோகூர் பாருவில் முன்னாள் இராணுவத் தளபதியின் ‘போஸ்னியா போர் திட்டம்’
முன்னாள் இராணுவத் தளபதி ஹஷிம் உசேன், 1990-இல் போஸ்னியா-ஹெசகோவினாவின் உள்நாட்டுப் போரில் செயல்படுத்தி வெற்றிகண்ட அதே போர் திட்டத்தை ஜோகூர் பாருவில் அம்னோவின் மூத்த தலைவரான ஷாரிர் அப்துல் சமட்டுக்கு எதிராகவும் கடைப்பிடிப்பார். “அதை இப்போது விவரிக்கப்போவதில்லை. ஆனால் (போஸ்னியாவில் கடைப்பிடித்த) அதே போன்ற திட்டம்தான். ஜோகூர் பாரு…
ஹலோ.. ஹாடி, பிஎஸ்எம் மார்க்சிஸ்ட் கட்சியா?
ஒரு யுடியூப் வீடியோவில் பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் ஓர் இஸ்லாமிய கட்சி ஒரு "மார்க்சிஸ்ட்" கட்சியுடன் ஒத்துழைக்க முடியாது என்று குற்றம் சாட்டியுள்ளது குறித்து பிஎஸ்எம் (மலேசிய சோசலிசக் கட்சி) அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடும் தோரணையில் கேட்டுக் கொண்டது. ஹாடிநேரடியாக பெயர் குறிப்பிட்டு கூறாவிட்டாலும்,…
பாரிசான் வேட்பாளர் : நாடற்ற இந்தியர்களே பொறுமையாக இருங்கள்!
ஜொகூர், பாசீர் கூடாங் நாடாளுமன்ற தொகுதி பின் வேட்பாளர் நாடற்ற இந்தியர்களின் பிரச்னை விவகாரத்தில் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அத்தொகுதி இந்திய வாக்காளர்களிடம் கூறினார். இந்த விசயத்தில் அரசாங்கம் இன்னொரு சாபாவை உருவாக்க அரசாங்கம் விரும்பவில்லை என்றாரவர். சபாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களுடன் நாடற்ற இந்தியர்களை இணைத்துப் பேசிய அந்த…
நஜிப்: சுல் நோர்டின் இந்தியர் நலனுக்காக பாடுபடுவார்
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் இந்துக்கள் குறித்துத் தெரிவித்த கருத்துகளால் ஏற்பட்டுள்ள ஆத்திரத்தைத் தணிக்கும் முயற்சியில் இன்று ஈடுபட்டார். இந்தியர்கள் இப்போது சுல்கிப்ளியுடன் நட்புடன் இருப்பதாக அவர் கூறினார். “இந்தியர்களில் சிலர் அவருக்கு முத்தம்கூட கொடுத்திருக்கிறார்கள்”, என்று குறிப்பிட்ட நஜிப்,…
சாபாவில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல பக்காத்தான் நம்பிக்கை
சாபாவில் பல இடங்களில் பல்முனை போட்டிகளை எதிர்நோக்கினாலும் குறைந்தது 11 நாடாளுமன்றத் தொகுதிகளையாவது கைப்பற்ற முடியும் என்று சாபா பக்காத்தான் திடமாக நம்புகிறது. செய்தியாளர்களிடம் பேசிய சாபா டிஏபி தலைவர் ஜிம்மி வோங், இப்போது கைவசமுள்ள கோட்டா கினாபாலு, துவாரான், பியுஃபோர்ட் ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொள்வதில் பிரச்னை இருக்காது என்று…
கோத்தா டமன்சாரா தவிர, பிகேஆர்-பாஸ் தொகுதி மோதல்கள் தீர்க்கப்பட்டுள்ளன
ஆறு தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்கள் நிற்பதால் உருவான தகராற்றை பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் தீர்த்துக் கொண்டுள்ளன. தலா ஒவ்வொன்றும் மூன்று தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. என்றாலும் கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதி மீதான தேக்க நிலை தொடருகின்றது. லாபுவான் (சபா) நாடாளுமன்றத் தொகுதி சுங்கை ஆச்சே (பினாங்கு)…
போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக டிஏபி-இன் சிம் அறிவிப்பு
மலாக்காவில் மாநிலச் சட்டமன்றதுக்காக கோட்டா லக்ஸ்மணா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த டிஏபி-இன் சிம் தொங் ஹிம், மனு செய்த 48-மணி நேரத்துக்குப் பின்னர் தாம் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். இன்று மலாக்கா கட்சித் தலைமையகத்தில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட்…
டிவி3 மூத்த நிர்வாகிகளை ஜெயிலில் போடுவேன்; அன்வார் மருட்டல்
மே 5ம் தேதி பக்காத்தான் ராக்யாட் அடுத்த அரசாங்கத்தை அமைக்குமானால் டிவி3 என அழைக்கப்படும் Sistem Televisyen (M) Bhd-ன் உயர் நிலை நிர்வாக அதிகாரிகளை அவதூறு சொன்னதற்காக சிறையில் அடைக்கப் போவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பக்காத்தான் அவதூறுகளை அனுமதிக்காது. காரணம் அதன் அரசாங்கம்…
‘என் குடும்பத்தை இழுக்க வேண்டாம்’; நுருல் இஸ்ஸாவுக்கு நொங் சிக்…
லெம்பா பந்தாயில் நுருல் இஸ்ஸாவை எதிர்க்கும் ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின், தனிப்பட்ட விவகாரங்களைப் பொதுவில் விவாதிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் “அவர் அண்மையில் என் தந்தை, என் மகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றிப் பேசியுள்ளார். அவற்றை நான் பல தடவை ஊடகங்களுக்கு விளக்கிச்…
இசி: மீட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட மாட்டாது- பெயர்கள் வாக்குச் சீட்டுக்களில்…
வேட்பாளர் நியமனங்கள் இறுதி முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள முடியாது. போட்டியிலிருந்து விலகிக் கொள்வதற்கு அனுமதித்த சட்ட விதி ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையத் (இசி) வான் அகமட் வான் ஒமார் இன்று கூறினார். "1980ம் ஆண்டுக்கான தேர்தல் விதிமுறைகளில்…
அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட கமிலியாவுக்கு பிகேஆர் அழைப்பு
கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட அதன் மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிமுக்கு தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு பிகேஆர் அழைப்பு விடுத்துள்ளது. கமிலியாவுக்கு அந்த அழைப்பை விடுத்த பிகேஆர் துணைத் தலைவர் ரோட்சியா இஸ்மாயில் அந்த முன்னாள் அம்னோ தலைவி…
சே ஜோஹானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இப்ராஹிம்…
கடந்த சனிக்கிழமையன்று தமது வேட்பாளர் மனுவைச் சமர்பிக்காத பாசிர் மாஸ் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் சே ஜோஹான் சே பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இப்ராஹிம் அலி அம்னோ ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார். சே ஜோஹான் செய்தது உண்மையில் பாரிசான் நேசனலுக்கு…
பாஸ் மட்டுமே மலேசியாவை இஸ்லாத்துக்குக் கொண்டு செல்லும் என்கிறார் மாட்…
பாஸ் கட்சி மட்டுமே மலேசியாவை இஸ்லாத்தை நோக்கி வழி நடத்திச் செல்ல முடியும் என இப்போது அந்தக் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் முகமட் தாயிப் கூறுகிறார். "பாஸ் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வர இயலும்," என அவர் இன்று காலை கோலாலம்பூரில் உள்ள…
‘ஒளிவுமறைவு வேண்டாம், இண்ட்ராப்-பிஎன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக வெளியிடுவீர்’
உங்கள் கருத்து : ‘கணேசன் அவர்களே, இந்தப் எம்ஓயு-வால் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) நன்மையா, இல்லையா என்ற விவாதத்துக்கு முடிவு கட்டுவோம். எம்ஓயுவை முழுமையாக வெளியிடுங்கள். நாங்களே படித்துத் தெரிந்துகொள்கிறோம்’ கேள்வி-பதில்: இண்ட்ராபின் அண்மைய நிலவரங்கள் குட்டிஜாம்பவான்: தனது செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்காக பக்காத்தானுடன் 24 சந்திப்புகளை நடத்தியதாக இண்ட்ர்பாப்…
பிஎன் அரசாங்கம் சபாவுக்கு எண்ணெய் உரிமப் பணத்தில் 20 விழுக்காட்டுக்கு…
பிஎன் கூட்டரசு அரசாங்கம் சபாவுக்குக் கொடுத்துள்ள சிறப்பு நிதிகள் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் அந்த மாநிலத்துக்கு கொடுப்பதாக பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ள 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணத்தை விட கூடுதலானவை. இவ்வாறு அந்த மாநில பிஎன் தலைவர் மூசா அமான் கூறுகிறார். சபாவில் பிஎன் வெற்றி பெற்றால்…
பெர்க்காசா தலைவர்களுடைய வேட்பாளர் நியமனத்தில் மகாதீருக்கும் பங்கு உண்டு
பிஎன், ஷா அலாமில் பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டினை நிறுத்தியிருப்பதும் பாசிர் மாஸில் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலிக்காக அது தேர்வு செய்த வேட்பாளர் விலகிக் கொண்டதும் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் "முழுமையான அதிகாரத்தை" வைத்துள்ளார் என்பதற்கான அறிகுறிகள் ஆகும். "அவர் ஒரு…
‘கனி- மலாய் கனவான் தீவிரவாதியானார்’
ஜோகூர் கேலாங் பாத்தாவில் தம்மை எதிர்த்துப் போட்டியிடும் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான் குறித்த தமது மதிப்பீட்டை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குறைத்துக் கொண்டுள்ளார். "மிதமான, நியாயமான கருத்துக்களைக் கொண்ட சிறந்த மலாய் கனவான்," எனத் தாம் தொடக்கத்தில் வருணித்த…
சிம் பின் வாங்க மாட்டார் டிஏபி-யிலிருந்து நீக்கப்படுவதற்கும் தயாராக இருக்கிறார்
மலாக்கா கோத்தா லக்ஸ்மணா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதால் நெருக்குதலுக்கு இலக்காகி இருக்கும் டிஏபி மூத்த உறுப்பினர் சிம் தொங் ஹிம், நேற்று கட்சி வெளியிட்ட காலக் கெடுவைத் தொடர்ந்து நீக்கப்படுவதை எதிர்நோக்கவும் ஆயத்தமாக இருக்கிறார். டிஏபி சின்னத்தில் கோத்தா மலாக்கா நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவும் போட்டியிடும்…
உதயா: வேதா புதிய சாமிவேலு-வாக விரும்புகிறார்
கோத்தா ராஜா தொகுதியில் பி உதயமுமார் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது அலுவலகத்துக்கு வெளியில் ஹிண்ட்ராப்பின் பாரம்பரிய கருஞ்சிவப்பு நிற கருபொருளுடன் அவரது முகமும் 'பி உதயகுமார் 1990 முதல் ஒரு நபர் காட்சி' என பொறிக்கப்பட்டுள்ளன. ஹிண்ட்ராப் பெருந்திட்டம் மீது பக்காத்தான் ராக்யாட், பிஎன் ஆகியவற்றுடன் தமது…


