மொங்-கின் கடிதம் மீது போலீசார் உடற்குறையுடைய விவசாயியை விசாரித்தனர்

எதிர்க்கட்சிகளை ஆதரித்ததற்காக விவசாய, சமூக நல உதவித் தொகைகள் நிறுத்தப்பட்ட உடற்குறையுடைய குடியானவர் பூருஸிஸ் லெபி-யை இன்று போலீசார் விசாரித்துள்ளனர். அந்த உதவிகளை நிறுத்துமாறு மாநில விவசாய நவீன மய துணை அமைச்சர் எழுதிய கடிதம் மீது பூருஸிஸ் செய்த போலீஸ் புகார் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக அவர் இன்று…

ஜைட், கீத்தா சின்னத்தின் கீழ் கோத்தா பாருவில் போட்டியிடுவார்

கீத்தா கட்சி கலைக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் இன்று யாரும் எதிர்பாராத அறிவிப்பை விடுத்துள்ளார். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கீத்தா சின்னத்தின் கீழ் தாம் கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அவர் தகவல் வெளியிட்டார். "பக்காத்தான் பிஎன் வேட்பாளார்களுக்கு அதிக…

பிஆர்1எம் உதவி நிராகரிக்கப்பட்டதால் ஓராங் அஸ்லி குடும்பங்கள் தவிப்பு

பகாங்கில் ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த பலர், அரசாங்கம் நிர்ணயித்த தகுதிகள் தங்களுக்கு இருந்தும் பிஆர்1எம் உதவி கிடைக்காததை எண்ணிக் குழப்பமடைந்துள்ளனர். சின்னி, கம்போங் பத்து கொங்கைச் சேர்ந்தவர் இஸ்மாயில் லே,43. அவரும் அவரின் மனைவி பத்திமா பாசெமும் ரிம500 உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.ஆனால்,அவர்கள் அவ்வுதவிக்குத் தகுதிபெறவில்லை என்று…

பொதுதேர்தலில் தமது நிலையை ஹிண்ட்ராப் இன்னும் தீர்மானிக்கவில்லை: வேதமூர்த்தி

கடந்த மார்ச் 5  ஆம் தேதி தினக்குரல் தமிழ் நாளேட்டில், எதிர்வரும் பொது தேர்தலில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி சிலாங்கூரில் 3  நாடாளுமன்ற தொகுதிகளிலும்  3  சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என மனித உரிமை கட்சியின் பொதுச்செயலாளர் உதயகுமார் கூறியிருப்பதாக  வெளிவந்த செய்தி, அவருடைய தனிப்பட்டே கருத்தே …

கம்போங் மேடான் இனக்கலவரம் மீதான நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது!

11 ஆண்டுகளுக்கு முன்னர், கம்போங் மேடான் இனக்கலவரத்தில் படுகாயமடைந்த எழுவர், காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் மீது அலட்சியப் போக்கு மற்றும் சட்டப்பூர்வ கடமைகளை மீறியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்கக் கோரி செய்திருந்த மேல்முறையீட்டை கூட்டரசுப் பிரதேச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நாட்டின் தலைமை நீதிபதி தான் ஸ்ரீ…