‘எல்லா அமைச்சர்களுக்கும் இலவச எண் தகடுக்கு உரிமை உண்டு’

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் வாழ்க்கையில் வீசிய வாகன எண் தகடுப் பிரச்னை சாதாரண விக்கலாக முடிந்து விடும் எனத் தோன்றுகிறது. 2004ம் ஆண்டு அமைச்சரவை செய்த ஒரு முடிவின் படி எல்லா அமைச்சர்களுக்கும் இலவசமாக கார் எண் தகடு ஒன்றைப் பெறுவதற்கு உரிமை உண்டு என…

அரசு சாரா அமைப்பு: வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்படும் வரையில் புதிய…

தேர்தல் ஆணையம் தனது பதிவு முறையில் காணப்படுகின்ற பிரச்னைகளைத் தீர்க்கும் வரையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது நிறுத்தி வைக்க வேண்டும் என கோமாஸ் எனப்படும் Pusat Komunikasi Masyarakat வேண்டுகோள் விடுத்துள்ளது. "வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இல்லை என்பதால் புதிய வாக்காளர் பதிவை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்க…

கடற்படை ரகசியங்கள் விற்கப்பட்டதாகக் கூறப்படுவதை தற்காப்பு அமைச்சர் மறுக்கிறார்

இரண்டு ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் சம்பந்தப்பட்ட ரகசியமான அரச மலேசியக் கடற்படை ஆவணங்கள் பிரஞ்சுத் தற்காப்பு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவதை தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹின் ஹமிடி மறுத்துள்ளார். "அது நிகழ்ந்துள்ளதற்கான ஆதாரம் ஏதுமில்லை. என்றாலும் அந்த நடவடிக்கை நிரூபிக்கப்பட்டால் தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளதால் நாங்கள் அதனை முழுமையாக…

ஒரே பழைய அடையாளக் கார்டு எண்களுடன் 84 வாக்காளர்கள் ?

கோமாஸ் என்ற மனித உரிமைப் போராட்ட அமைப்பு (Pusat Komunikasi Masyarakat) 194 வகையான வாக்காளர் குளறுபடிகளை கண்டு பிடித்துள்ளது. அவற்றுள் ஒரே பழைய அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட 84 வாக்காளர்களும் அடங்குவர். ஒரே பழைய அடையாளக் கார்டு எண்களைப் பகிர்ந்து கொண்டுள்ள வாக்காளர்கள் வெவ்வேறு பெயர்களையும்…

இக்கட்டான சூழ்நிலையில் ஹிண்ட்ராப்- பிஎன்-னா அல்லது பக்காத்தானா ?

"அதிகாரத்தில் இருக்கும் பக்காத்தான் அம்னோவைப் போன்று மோசமானதாக இருக்கும் என்றால் ஹிண்ட்ராப் தனது வியூகத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் எதுவும் மாறாது" பிஎன்-னுக்கும் பக்காத்தானுக்கு ஹிண்ட்ராப்  சவால் விடுகிறது சம்பா: ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் சொல்வதைப் போல பக்காத்தான்…

இன்னொரு சிலாங்கூர் கல்லூரி மீதும் பிடிபிடிஎன் கடன் முடக்கம்

யூனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூர் மாணவர்களுக்கு பிடிபிடிஎன் கடன் கொடுக்கப்படுவதை நிறுத்தி வைத்துள்ள தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம் இன்னொரு சிலாங்கூர் உயர் கல்விக் கூடம் மீதும் அந்த முடக்கத்தை அமலாக்கியுள்ளது. குயிஸ் என்ற சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமியைப் பல்கலைக்கழக கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு நேற்று…

ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் மீது ‘அவசரத் தீர்மானத்தை’ நுருல் சமர்பித்தார்

அரச மலேசியக் கடற்படையின் ரகசிய ஆவணம் ஒன்று பிரஞ்சுத் தற்காப்பு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அவசரத் தீர்மானம் ஒன்றை லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வார் நேற்று சமர்பித்தார். நிரந்தர விதிகள் 18(11)ன்…

காடிரின் கட்சி தேர்தலுக்கு ‘தயாராக இல்லை’

முன்னாள் அம்னோ உறுப்பினர் அப்துல் காடிர் ஷேக் பாதிர் Parti Ikatan Bangsa Malaysia கட்சியைத் தொடங்கியுள்ளார்.ஒற்றுமையை வலுப்படுத்துவதும் பல்லின அரசியலுக்குப் புத்துயிர் கொடுப்பதும் அதன் குறிக்கோளாகும். அது ஓர் அரசியல் கட்சிதான் ஆனாலும் அடுத்த பொதுத் தேர்தலில் அது போட்டியிடாது.அதற்கு “அவகாசம் போதாது” என்று அந்த முன்னாள்…

கட்சிகளுக்கான ஒலிபரப்பு நேரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும்

கட்சிகளின் கொள்கை அறிக்கைகளை ஒலிபரப்ப தேசிய ஒலிபரப்பு நிலையமான ஆர்டிஎம்-மிலும் மற்ற ஒலிபரப்பு நிலையங்களிலும் இடமளிப்பதென அமைச்சரவை செய்துள்ள முடிவு பற்றிய விவரங்கள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம் இன்று இதனைத் தெரிவித்தார். “அது நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதைப் பொறுத்துள்ளது.அது கலைக்கப்பட்டதும்…

துணைப் பிரதமர்: ‘பிகேஆர் கொள்கையை பிடிபிடிஎன் சோதனை செய்வது நியாயமானதே’

யுனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூர் மாணவர்களுக்கு கடன்களை வழங்குவதில்லை என பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதி முடிவு செய்துள்ளது 'நியாயமானது" என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார். "பிடிபிடிஎன் எல்லாக் கடன்களையும் ரத்துச் செய்யவில்லை. மறு ஆய்வு செய்யும் பொருட்டு தற்காலிகமாகவே அதனை…

பிடிபிடிஎன் கடன் முடக்க அபாயத்தை இன்னொரு சிலாங்கூர் கல்லூரியும் எதிர்நோக்குகிறது

பிடிபிடிஎன் கடன் முடக்க அபாயத்தை இன்னொரு சிலாங்கூர் கல்லூரியும் எதிர்நோக்குகிறது யூனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேசிய உயர் கல்வி  நிதி நிறுவனக் (பிடிபிடிஎன்) கடன்கள் முடக்கப்பட்டுள்ளது சிலாங்கூர் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இன்னொரு உயர் கல்விக் கூடத்துக்கும் விரிவு செய்யப்படலாம். யுனிசெல்-லுக்கான கடன்களை நிறுத்தும்…

ஸ்கார்ப்பியோன் விவகாரம் மீது கருத்துரைக்க துணைப் பிரதமர் மறுப்பு

மலேசியா ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளைக் கொள்முதல் செய்தது மீது நடத்தப்படும் பிரஞ்சு விசாரணை பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மீண்டும் மறுத்துள்ளார். மலேசியக் கடற்படை ஆவணங்கள் விற்கப்பட்டதாக பிரஞ்சு வழக்குரைஞர்கள் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என…

ராயிஸ்: பெர்சே, ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டியிலிருந்து கற்றுக் கொள்க

தகவல் அமைச்சு புதிதாக வெளியிட்டுள்ள ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டியில் குறிக்கப்பட்டுள்ள பண்புகளை பெர்சே 3.0 பங்கேற்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என தகவல் அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். "ஏப்ரல் 28ம் தேதி டாத்தாரான் மெர்தேக்காவிலும் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் அலுவகத்திற்கு முன்பும் கலவரம் செய்த, முரட்டுத்தனமாகவும்…

சுவாராம் இரண்டாவது நிதி திரட்டும் விருந்தை நடத்துகிறது

'ஸ்கார்ப்பியோன் நடவடிக்கை 2.0' எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாவது நிதி திரட்டும் விருந்துக்கு சுவாராம் ஏற்பாடு செய்கிறது. சர்ச்சைக்குரிய ஸ்கார்ப்பியோன் கொள்முதல் தொடர்பில் பிரஞ்சுக் கப்பல் கட்டும் நிறுவனமான டிசிஎன்எஸ்-க்கு எதிராக பிரஞ்சு நீதிமன்றங்களில் சுவாராம் தொடுத்துள்ள வழக்கிற்கு செலவு செய்ய மேலும் நிதிகளைச் சேர்ப்பது அந்த விருந்தின் நோக்கமாகும்.…

யூனிசெல் மாணவர்களுக்கு பிடிபிடிஎன் கடன் இல்லை என்பதை அமைச்சர் உறுதிப்படுத்துகிறார்

யூனிசெல் என அழைக்கப்படும் யூனிவர்சிட்டி சிலாங்கூர் மாணவர்களுக்கு கடன்கள் கொடுப்பதை பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம் முடக்கி வைத்துள்ளதை உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இலவச உயர் கல்வியை வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கத்துக்கு உள்ள ஆற்றல் மீது சவால் விடுக்கும்…

ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கி ஊழல் விவகாரம் மால்டாவுக்கு பரவுகிறது

மலேசியா கொள்முதல் செய்த ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் சம்பந்தப்பட்ட  ஊழல் விவகாரம் மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா-வுக்கும் விரிவடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்தக் கொள்முதலில் பெரிமெக்கார் சென் பெர்ஹாட்-டுக்கு தரகுப் பணமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 114 மில்லியன் யூரோவில் (457 மில்லியன் ரிங்கிட்) ஒரு பகுதி மால்டா வழியாக சட்டப்பூர்வப்…

பொதுத் தேர்தலுக்குப் பிந்திய குழப்பம் என்பது “தீய அரசியல்” என…

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ராக்யாட்டும் பெர்சே-யும் கலவரத்தை மூட்டும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுவது "தீய அரசியலுக்கு" நல்ல உதாரணம் எனப் பெர்சே வருணித்துள்ளது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் நடப்புத் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் தெரிவித்துள்ள அந்த ஆரூடங்கள் "கெட்ட எண்ணங்கள்- தவறாக வழி நடத்துகின்றவை"…

73 மணி நேர பெர்சே 3.0 பேரணி வீடியோவை வெளியிடுமாறு…

பெர்சே 3.0 பேரணி பற்றிய வீடியோ பதிவை வெளியிடப்போவதாகவும் பொதுமக்கள் அதனைப் பார்த்து அவர்களே அப்பேரணியில் என்ன நடந்தது என்பதை முடிவு செய்யட்டும் என்று உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் கூறியிருந்தார். அமைச்சரின் அந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், போலீசார் வசம் இருக்கும்…

கணபதி ராவ்: மஇகா இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு “முட்டாள்தனமானது”

சிலாங்கூர் மாநில டிஎபி செயலவை உறுப்பினர் வி. கணபதி ராவ், தம்மையும் தமது சகோதரரையும் கடந்த வாரம் தாக்கிய நபர்கள் பிகேஆர் உறுப்பினர்கள் என்று மஇகா இளைஞர் பிரிவு கூறியிருப்பதை நிராகரித்ததோடு அது முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள் என்றார். "இதெல்லாம் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள்" என்று அவர் மலேசியாகினியிடம் இன்று கூறினார்.…

லியாவ்: என் எண் தகடு இலவசமானது

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், தாம் WWW 15 வாகன எண் தகட்டை ஏலத்தில் எடுத்ததாகக் கூறப்படுவது பற்றிய கேள்விகளுக்கு நேற்று பதில் அளிக்கத் தடுமாறினார். ஆனால் இன்று அந்த எண்ணுக்கு தாம் ஒரு சென் கூடக் கொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். தாம் கொடுக்க முன்…

பெர்சே 3.0 வீடியோ வெளியிடப்படுவதை ஹிஷாமுடின் நிறுத்தி விட்டதாகச் சொல்லப்படுகின்றது

இன்று வெளியிடப்படுவதாக இருந்த பெர்சே 3.0 பேரணி மீதான வீடியோவை உள்துறை அமைச்சின் இணையத் தளத்தில் சேர்க்கப்படுவதை அதன் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நிறுத்துமாறு தமது அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தத் தகவலை வெளியிட்ட சீன மொழி நாளேடான நன்யாங் சியாங் பாவ், அந்த…

இரண்டு ஜோகூர் போலீஸ் அதிகாரிகள் நிஜாரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்

ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் WWW 1 வாகனத் தகடு எண்ணை ஏலத்தில் எடுத்தது மீது முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தமது டிவிட்டரில் விடுத்த அறிக்கை மீது அவரிடமிருந்து வாக்குமூலத்தை வடக்கு ஜோகூர் பாரு போலீஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று பதிவு…

பிகேஆர்: கடற்படை இரகசியம் ‘விற்கப்பட்டதை’ நஜிப் விளக்க வேண்டும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்று கடற்படை இரகசிய ஆவணம் ஒன்றை மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு ‘விற்பனை’ செய்திருப்பதை பிரான்சின் அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கண்டுபிடித்திருப்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாக பிகேஆரும் குரல் கொடுத்துள்ளது. அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி (படத்தில்…