முன்னாள் போலீஸ் அதிகாரி மாட் ஜைன்னுக்கு அரசியல்வாதி ஆக விருப்பமில்லை

பணி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் மாற்றரசுக் கட்சிகளில் சேரும் போக்கு அதிகரித்துகொண்டு வேளையில் கோலாலம்பூர் குற்றப்புலன் ஆய்வுத் துறை(சிஐடி)த் தலைவராக இருந்து பணி ஓய்வுபெற்றவரான மாட் ஜைன் இப்ராகிமுக்கு அரசியல்வாதி ஆவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. 2001-இல், பணி ஓய்வுபெற்ற மாட் ஜைன், முன்னாள் போலீஸ்படைத்…

WWW1 எண் தகடு மீது நிஜார் ஜோகூர் சுல்தானுக்கு விளக்கமளிப்பார்

WWW1 எண் தகட்டை ஜோகூர் ஆட்சியாளர் 520,000 ரிங்கிட்டுக்கு வாங்கியது மீது அண்மையில் தாம் தெரிவித்த கருத்துக்களை சுல்தானிடம் விளக்குவதற்கு அவருடைய பேட்டியை நாடியுள்ளதாக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தெரிவித்திருக்கிறார். "நான் அரண்மனையின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்," என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட…

எம்பிபிபி ‘வாய்ப்பூட்டு உத்தரவு’:பினாங்கில் பேச்சுரிமை இல்லையா?

பினாங்கு முனிசிபல் மன்றம்(எம்பிபிபி), அத்தீவின் மலைச்சரிவுத் திட்டங்கள் பற்றிப் பேசுவதற்கு முயன்ற அதன் கவுன்சிலர் ஒருவருக்கு “வாய்ப்பூட்டு” போட்டதை பினாங்கு மசீச,  கண்டித்தது. பேச்சுரிமையைத் “தடுக்கும்” டிஏபியின் பழக்கம் எம்பிபிபி-யையும் தொற்றிக்கொண்டிருக்கிறது என்று கூறிய மாநில மசீச தலைவர் டான் செங் லியாங், அதனால்தான் அது கவுன்சிலர் லிம்…

பாண்டா கரடி இரவல் திட்டம்: வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கண்டனம்

சீனாவிடமிருந்து இரவல் பெறும் இரண்டு பாண்டா கரடிகளைப் பராமரிப்பதற்கு ஆகும் ரிம20மில்லியனை உள்நாட்டில் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்கச் செலவிடலாம் என விலங்குப் பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன. பாண்டா கரடிகளை இரவல் பெற்று வைத்துக்கொள்வது அந்த இனத்தைப் பாதுகாக்க உதவப்போவதில்லை என்று கூறிய உலக காட்டுயிர் காப்புநிதி-மலேசியாவின்(WWF…

அந்தக் குற்றச்சாட்டுக்கள் ‘அபத்தமானவை’ என டேனியரின் தாயார் நிராகரிக்கிறார்

பிரதமர் நஜிப் ரசாக்கின் எதிர்கால மருமகனான டேனியர் நஸர்பயேவ்-வின் தாயார், தமது புதல்வருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டுக்கள் 'அபத்தமானவை' என்றும் அரசியல் தில்லுமுல்லு என்றும் அவர் வருணித்தார். "அந்த அபத்தமான கூற்றுக்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது எனக்கும் என் கணவருக்கும் தெரியாது."…

‘நாங்கள் பென்சிலைக் கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தத் தயாராக இருக்கிறோம்’

"பிஎன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. அதனை வீழ்த்துவதற்கு தண்ணீர் போத்தல்கள் தேவையில்லை. வாக்குச் சீட்டில் பென்சிலைக் கொண்டு கோடு போட்டால் போதும்." தண்ணீர் போத்தல்கள் கூட அரசாங்கத்தை வீழ்த்த முடியும் என்கிறார் நஸ்ரி குவிக்னோபாண்ட்: பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் புத்திசாலியாக நடந்து கொள்ள…

மிகைப்படுத்தப்பட்டதா ? அப்படி என்றால் சிறுவன் டேனியர் ‘சின்ன மோசடிக்காரரா…

"டேனியர் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டதா ? அதன் அர்த்தம் என்ன ? அவர் 20 மில்லியன் அமெரிக்க டாலரை மோசடி செய்து பையில் போட்டுக் கொள்ளவில்லை . 2 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே எடுத்துக் கொண்டாரா ?" டேனியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை உங்கள் அடிச்சுவட்டில்: நீங்கள் உங்கள்…

PKFZ நீதிமன்ற சாட்சியங்கள் நெருப்பிலும் திருட்டிலும் சேதமடைந்துள்ளன

PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ள திருட்டு, தீ சம்பவங்களில் PKFZ ஊழல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைக்கு அவசியமானவை எனக் கருதப்படும் சில நீதிமன்ற சாட்சியங்கள் சேதமடைந்துள்ளன. அந்தச் சம்பவங்கள் ஜுன் 7ம் தேதிக்கும் ஜுன் 10ம்…

இசி: ஒரே அடையாளக் கார்டு எண்களை சில வாக்காளர் பகிர்ந்து…

சில வாக்காளர்கள் ஒரே ஏழு இலக்க அடையாளக் கார்டு எண்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. என்றாலும் வாக்காளர் பட்டியலின் நேர்மையை அவை பாதிக்காது. இவ்வாறு இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறினார். சில வாக்காளர்கள் 'மறு சுழற்சி'…

முஹைடின் : நான் என் கணக்குகளை அன்வாருக்குக் காட்ட மாட்டேன்

பொது மக்கள் பார்வைக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின், தமது அனைத்து வங்கிக் கணக்குகளையும் காட்ட வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த  சவாலை  முஹைடின் நிராகரித்துள்ளார். காரணம் அந்த விவகாரத்தில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவர் சொன்னார். முதலில் முஹைடின் தனது…

குறைந்தபட்ச சம்பள அமலாக்கம் சரியில்லை எனச் சாடல்

மலேசியத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின்(எப்எம்எம்) தலைவர் யோங் போ கோன்,  குறைந்தபட்ச  சம்பளத்திட்டம் சரியான முறையில் அமலாக்கம் செய்யப்படவில்லை என்று குறைகூறுகிறார்.அது பற்றித் தயாரிப்பாளர்களுக்குத் தெளிவாக விளக்கப்படவில்லை.  “அதை அமல்படுத்தும் கொள்கை சீராக இல்லை.வழக்கமாக, போதுமான அவகாசம் வழங்கப்படும்.அதற்குள் எங்களைச் சரிப்படுத்திக்கொள்வோம். “இப்போது, குறைந்தபட்ச சம்பளத்தில் என்னென்ன அலவன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது…

இசி:வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் ஆதரவு திருப்தி அளிக்கவில்லை

வெளிநாடுகளில் வசிக்கும் மில்லியனுக்கு மேற்பட்ட மலேசியர்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ளும்படி எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும்கூட அதற்குப் போதுமான வரவேற்பு இல்லை என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப். “வெளிநாடுகளில் வசிப்பவர்களை அவரவர் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். “ஆனால், அதற்கு வரவேற்பு நன்றாக…

பிரதமர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் விருப்பம்

பொதுத் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகம் விரும்புகிறது. நீண்ட காலமாக நிச்சயமற்ற சூழ்நிலையை அந்தத் தொழில் துறை எதிர்நோக்குவதே அதற்குக் காரணம் என மலேசியத் தயாரிப்பாளர்கள் சம்மேளனத் தலைவர் யோங் போ கோன் கூறினார். தேர்தல்கள் விரைவாக நடத்தி முடிக்கப்பட…

‘டேனியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை’

பிரதமருடைய எதிர்கால மருமகன் டேனியர் நஸர்பயேவ் மீது அண்மையில் சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் 'மிகைப்படுத்தப்பட்டவை'. அதற்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்று கூறியது. "அது குடும்பத்தின் அடுத்த தரப்பை மட்டுமே சம்பந்தப்படுத்துகிறது,"…

MPPP: பினாங்கில் “மலைகள் தேய்வதற்கு” முன்னைய பிஎன் அரசே காரணம்

முன்னைய பிஎன் பினாங்கு அரசாங்கம் 2008ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக 250 அடி (76.2 மீட்டர்) உயரத்துக்கு மேல் 37 திட்டங்களை அங்கீகரித்துள்ளதாக MPPP எனப்படும் பினாங்குத் தீவு நகராட்சி மன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கு தேவையான அனுமதிகள் 1985ம் ஆண்டு தொடக்கம் மார்ச் 2008…

மலேசியாகினி ஏற்பாடு செய்யும் முதலாவது விவாதத்தில் ( Debatkini )…

மலேசியாகினி முதன் முறையாக ஆங்கிலத்தில் விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறது. அதில் நான்கு பிஎன்,  பக்காத்தான் ராக்யாட் அரசியல்வாதிகள், நாடு எதிர்நோக்கும் அவசர அவசியமான பிரச்னைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை எடுத்துரைப்பர். அடுத்த செவ்வாய்க்கிழமை நிகழும் அந்த விவாதத்தின் தலைப்பு 'மலேசிய ஜனநாயகம் முன்னோக்கிச் செல்கிறதா ?" (…

டேனியர், நீங்கள் உங்கள் எதிர்கால உறவினர்களுக்கு உதவப் போவதில்லை

"பிரதமர் நஜிப்-பின் புதல்வி பெரிய சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணத்தை அவர் தீவிரமாக ஆராய வேண்டியிருக்கும்." பிரதமருடைய எதிர்கால மருமகன் மீது 20 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடிக் குற்றச்சாட்டு பார்ட்டிமுஸ்: 2020: மோசடிக்காரர் எனக் கூறப்பட்டுள்ள அந்த மனிதருடனான தமது புதல்வியின் திருமண…

மகாதீர்: புத்ராஜெயாவை பக்காத்தான் எடுத்துக் கொள்வது குறித்து நான் அஞ்சவில்லை

இந்த நாட்டில் அதிகாரத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வது பற்றித் தாம் அஞ்சவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். போலியான குற்றச்சாட்டுக்களின் பேரில் தாம் ஜெயிலில் அடைக்கப்படலாம் என்பதைத் தவிர வேறு எதற்கும் தாம் பயப்படவில்லை என்றார் அவர். தமது தவறான செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டு…

ரபிஸி பாண்டான் தொகுதி பிகேஆர் வேட்பாளராக அறிமுகம்

நேற்றிரவு சிலாங்கூர் பாண்டானில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், அத்தொகுதியின் நீண்ட கால எம்பியான ஒங் தி கியாட்டை எதிர்த்து நிற்பதற்குப் பொருத்தமான வேட்பாளர் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை அவரது சகாக்கள் அறிமுகப்படுத்தினர். சுமார் 2,000பேர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பேசிய டிஏபி தெராதாய் சட்டமன்ற உறுப்பினர்…

45க்கு மேற்பட்ட ஆவி வாக்காளர்கள் குறித்து குடியிருப்பாளர்கள் புகார்

கம்போங் பாண்டான் குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரத்தில் அடையாளம் தெரியாத 45-க்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளனர். அம்பாங் போலீஸ் மாவட்டத் தலைமையகத்துக்கு வெளியில்  கம்போங் பாண்டான் முன்னாள் கிராமத் தலைவரான அர்ஷாட் அஹமட்(வலம்)டைச் சந்தித்தபோது அவர், தம் வீட்டு முகவரியில் 19 வாக்காளர்கள் பதிவு…

லிம் கிட் சியாங்: புரட்சி முயற்சி எனக் கூறுவதை நிரூபிக்க…

பெர்சே 3.0 பேரணி புரட்சி முயற்சி எனத் தான் கூறிக் கொள்வதற்கு ஆதாரத்தைக் காட்ட கூட்டரசு அரசாங்கம் தவறி விட்டதாக டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். 'உப்பையும் தண்ணீர் போத்தல்களையும் கொண்டு' பெர்சே ஆதரவாளர்கள் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்க முடியும் என சட்டத் துறைக்கு…

3 பில்லியன் ரிங்கிட் செய்தியை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்…

அன்வார் இப்ராஹிம் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) அதனை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் அந்த ஆங்கில மொழி நாளேட்டுக்கு சட்ட…

சிலாங்கூர் இலவசக் கல்வித் திட்டத்துக்கு உதவியாக நிறுவனங்களுக்கு இடையில் நிதிகள்…

இலவச உயர்நிலைக் கல்வியை வழங்கும் சிலாங்கூரின் முன்னோடித் திட்டத்துக்குத் தேவையான 30 மில்லியன் ரிங்கிட்,  MBI என்ற மந்திரி புசார் இணைக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து யூனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூருக்கு மாற்றி விடப்படும். அதனால் நிதிகளைத் திரட்டுவதற்கு யூனிசெல்-லுக்குச் சொந்தமான நிலத்தை 'விற்க' வேண்டிய அவசியமில்லை  என மாநில பொருளாதார…