மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் எரிந்தது, நோயாளி காயமடைந்தார்

தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவர் மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட அறையில், நேற்று இரவு ஆக்ஸிஜன் எரிவாயு சிலிண்டர் தீ விபத்தில், ஆண் நோயாளி ஒருவர் தீக் காயமடைந்தார். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செய்தித் தொடர்பாளர், இரவு 7.42 மணிக்கு அழைப்பைப் பெற்ற பின்னர், சிலிம் ரீவர் தீயணைப்பு…

முஹைதீனை நிராகரித்து 35 பிகேஆர் எம்.பி.க்கள் அகோங்கிற்குக் கடிதம்

பிரதமர் முஹைதீன் யாசினை நிராகரித்து, மாட்சிமை தங்கிய மாமன்னருக்குத் தனது கட்சி கடிதம் அனுப்பியதைப் பிகேஆர் உறுதிப்படுத்தியது. பிகேஆர் தொடர்புத்துறை இயக்குநர், ஃபாஹ்மி ஃபாட்சில் இந்தத் தகவலை உறுதி செய்தார். "உண்மை. அனைத்து பிகேஆர் எம்.பி.க்களும் மஹியட்டீன் எம்டி யாசினின் தலைமையை ஆதரிக்கவில்லை, நிராகரிக்கிறோம் என்று பிகேஆர் அகோங்கிற்கு…

‘பழிவாங்க மக்கள் பணத்தைப் பயன்படுத்தாதீர்’ – சனுசியிடம் பி.எஸ்.எம். வலியுறுத்து

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்கு பற்றி, சமீபத்தில் "மோசமாக கேலி" செய்த கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோரை அவமதித்ததாகக் கூறி, மூன்று நபர்களைத் தடுத்து வைத்ததற்காக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) காவல்துறையைக் கடுமையாக சாடியது. அதன் துணைத் தலைவர், எஸ் அருட்செல்வன்,…

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான நன்மைகள் : எஸ்.ஓ.பி. வழிகாட்டி

முழுமையாக தடுப்பூசி பெற்ற நபர்களுக்கான, விரிவான செந்தர இயங்குதல் நடைமுறைகளைத் (எஸ்.ஓ.பி.) தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.)  வெளியிட்டுள்ளது. தடுப்பூசியின் முழு அளவைப் பெற்றவர்களுக்குப் பிரதமர் முஹைதீன் யாசின் சில சலுகைகளை அறிவித்த பிறகு இந்த எஸ்.ஓ.பி.க்கள் வெளியிடப்பட்டன. வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்களை வீட்டிலேயேத் தனிமைப்படுத்துதலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு மாநில,…

இராமசாமி : கெடா எம்.பி.யை விமர்சித்த மூத்தக் குடியை உடனே…

கெடா மந்திரி பெசார் முஹமது சனுசி முகமது நோரை விமர்சித்து, வீடியோ பதிவு ஒன்றைப் பரப்பியதற்காக, 61 வயது மூத்த குடிமகன் ஒருவரை அதிரடியாகக் கைது செய்ததன் காரணம் குறித்து பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ பதிவில், பிணக் கொள்கலன் குறித்த…

எம்.எம்.ஏ. : முழு அளவு தடுப்பூசி பெற்றவர்களுக்கான நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம்…

இன்று முதல் நடைமுறைக்கு வரும், முழு அளவிலான தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்களுக்கான தளர்வை, அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) விரும்புகிறது. எம்எம்ஏ தலைவர் டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி, கோவிட் -19 நேர்வுகள் கணிசமாகக் குறைக்கப்படும்போது மட்டுமே, இத்தகையத் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று…

முஹைதீனை நிராகரித்து, இஸ்தானாவுக்கு எதிர்கட்சியினர் கடிதம் 

முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற கட்சியின் எம்.பி.க்கள் அடங்கிய 13 கடிதங்களை அம்னோ வெளிப்படுத்திய பிறகு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை நிராகரிக்கும் கடிதம் ஒன்றை மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு அனுப்பியுள்ளதாக நம்பத்தகுந்த எதிர்க்கட்சி வட்டாரம் தெரிவித்தது. அமானா மற்றும் பெஜுவாங்-ஐ சேர்ந்த இரண்டு ஆதாரங்கள், இந்தக் கடிதம்…

17,236 புதிய நேர்வுகள், 212 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,236 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 212 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 10,961- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 15,187 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

பேரணி தொடர்பான விசாரணைக்கு எம்.பி.க்களை அழைப்பதை நிறுத்துங்கள் – சிம்

கடந்த திங்கட்கிழமை, நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி எம்.பி.களிடம், விளக்க அறிக்கைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு, பிகேஆர், பாயான் பாரு எம்.பி. சி த்ஷி த்ஷின் காவல்துறையக் கேட்டுகொண்டார். ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல், டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்தில் சாட்சியம் அளிக்க 30-க்கும்…

முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற அம்னோ எம்.பி.க்களின் கடிதம் –…

சபா துணை முதல்வர் போங் மொக்தார் ராடின் மற்றும் கிமானிஸ் எம்.பி., மொஹமடின் அலமின் உள்ளிட்ட, முஹைதீன் யாசினைப் பிரதமராக ஆதரிக்காத 13 எம்.பி.க்களின் கடிதங்களை அம்னோ வெளிப்படுத்தியது அக்கடிதம் யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு அனுப்பப்பட்டது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரையில் தேதியிடப்பட்ட இந்தக் கடிதங்களை…

கோவிட் தொற்று நோயால் மரணமடைந்த பாடகி சித்தி சாரா

பாடகி சித்தி சாரா ரைசுதீன் கோவிட் தொற்று நோயால் இன்று அதிகாலை காலமானார்.கடந்த  ஆகஸ்டு 6ஆம் தேதி காலை 5.13க்கு அவர் சுவாசிப்பு பிரச்சனையால் சேன்சலர்துவாங்கு முஹ்ரிஸ் யு.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது 7 மாதகற்பமாகவும் இருந்தவர், அறுவை சிகிச்சை மூலம் தனது நான்காவது குழந்தையைப் பாதுகாப்பாகப் பெற்றெடுத்தார்.36 வயது கொண்ட அந்தப் பாடகியின் பிரிவால்…

டிஏபி எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி, ‘டுரியான் RM30’ – குற்றச்சாட்டை…

தேசியக் கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தால், அமைச்சர் பதவிகள் உட்பட, பல சலுகைகள் வழங்கப்படும் என்ற அணுகலை எதிர்கொண்டதாகக் கூறிய மூன்று டிஏபி எம்.பி.க்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சந்தித்ததாகக் கூறியது. எம்ஏசிசி இன்று ஓர் அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், இது குறித்து தொடர்ந்து…

திபிஎம் : எல்லைகள் கடக்க நெகிழ்வுத்தன்மை, குடும்ப உறவுகளுக்குப் பயனளிக்கும்

நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, இரண்டு மருந்தளவுகள் தடுப்பூசி முடித்த தனிநபர்கள், தொலைதூரத்தில் இருக்கும் தங்கள் இணையைச் சந்திக்கவும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சந்திக்க பெற்றோர்களுக்கும் மாவட்ட, மாநில எல்லைகளைக் கடப்பதற்கான நெகிழ்வுத்தன்மை, நாட்டில் குடும்ப உறவுகளுக்கு பெரிதும் பயனளிக்கும். துணைப் பிரதமர், இஸ்மாயில் சப்ரி யாகோப், வளரும் குழந்தைகளைப்…

இரு தடுப்பூசிகளைப் பெற்ற தனிநபர்களுக்கான நெகிழ்வுத்தன்மை

கோவிட் -19 தொற்றுக்கு எதிராக, முழுமையாகத் தடுப்பூசி பெற்ற தனிநபர்களுக்கான தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளைப் பிரதமர் முஹைதீன் யாசின் இன்று அறிவித்தார். முழு அளவிலான தடுப்பூசி பெற்றவர்களுக்கான சில வசதிகள் இதோ:- தேசிய மீட்புநிலை திட்டக் கட்டத்தைப் (பிபிஎன்) பொருட்படுத்தாமல், அனைத்து மாநிலங்களுக்கும் :- 1) மலேசியாவுக்குத் திரும்பும் வெளிநாட்டிலிருந்து…

பி.எஸ்.எம். : அவசியமற்றவற்றைத் தொடர்புகொள்வதில், தடமறிதலில் பிஎன் அரசாங்கம்

கருத்து | எந்தவொரு குழப்பமான ஆளும் கட்சியும், ஆட்சியில் தொடர்ந்து இருக்க, உயிர்வாழ்வதற்கான செய்முறை ஒன்றுதான் - வற்புறுத்தல் அல்லது அதிகாரத்தைக் காட்டுதல். வற்புறுத்தல் வேலை செய்யவில்லை என்றால், கருத்து வேறுபாட்டைச் சமாளிக்க ஒரே வழி அதிகாரம்தான். சீர்திருத்த காலத்தில் நாம் இதனைப் பார்த்தோம், அப்போதையப் பிரதமர் டாக்டர்…

ஐஜிபி: ஆகஸ்ட் 21 போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பேரணியை ஏற்பாடு செய்யவோ அல்லது பங்கேற்கவோ பிடிவாதமாக இருக்கும் எந்தத் தரப்பினருக்கும் எதிராக, தனது துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று காவற்படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார். தனது தரப்பினருக்கு, இந்தத் திட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்தச் செயல்…

அம்னோவுக்கு எதிரான ஆர்.ஓ.எஸ்.-இன் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது –…

அம்னோ தேர்தல்களை 18 மாதங்களுக்கு ஒத்திவைப்பது செல்லாது என்று தீர்ப்பளித்த சங்கங்கள் பதிவுத் துறையின் (ஆர்ஓஎஸ்.) நடவடிக்கையைத் தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெர்சே விமர்சித்தது. ஓர் அறிக்கையில், அத்தேர்தல் கண்காணிப்பு குழு, இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விவரித்தது. "ஆர்ஓஎஸ் முடிவு, அம்னோ பிரதமர் முஹிதீன்…

பிகேஆர் : ‘ஐந்து எம்.பி.க்களை வாங்கும் முயற்சி, வெட்கக்கேடான செயல்’

பிரதமர் முஹைதீனை ஆதரிப்பதற்காக, தனது கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.பி.க்களை 'வாங்க' முயற்சிப்பதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறினார். பல டிஏபி எம்.பி.க்கள், தங்களுக்கு அமைச்சர் பதவிகள் உட்பட, பல பரிசுகள் வழங்கப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து சைஃபுதீன் இதனை வெளிப்படுத்தினார். "எம்.பி.க்களை வாங்குவதற்கான முயற்சிகள்…

பிஎன் அரசாங்கம் வீழ்ந்தாலும், நாட்டின் நிர்வாகம் தொடர்ந்து செயல்படும் –…

தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் ஆட்சியில் இல்லை என்றால், நாட்டின் நிர்வாகம் முடங்கிபோகும் என்றக் குற்றச்சாட்டுகளை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்தார். "இது உண்மையில்லை. இது ஓர் உணர்வு, பிரச்சாரக் குழு மக்களை அச்சுறுத்தும் வகையில் இதனை வடிவமைக்க முயற்சிக்கிறது. "அதிகாரம், நிலை மற்றும் பதவியைத்…

19,257 புதிய நேர்வுகள்; கெடா, சபாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று பிற்பகல் வரையில், 19,257 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இது மொத்த தொற்றுநோய் எண்ணிக்கையை 1,243,852-ஆக உயர்த்தியுள்ளது. நான்கு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன. கிள்ளான் பள்ளத்தாக்கு 2,450 நேர்வுகளுடன், அதிக தினசரி எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள…

பினாங்கு அம்னோ உறுப்பினர் யு.பி.எம். வாரிய உறுப்பினர் பதவியை இராஜினாமா…

பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறும் கட்சியின் முடிவைத் தொடர்ந்து, மற்றொரு அம்னோ தலைவர் அரசாங்கப் பதவியை இராஜினாமா செய்தார். பாலிக் புலாவ் அம்னோ பிரிவுத் தலைவர், ஷா ஹீடான் அயூப் ஹுசைன் ஷா, நேற்று இரவு மலேசியப் புத்ரா…

இரண்டு பேரணிகள் தொடர்பாக வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்களைப் போலீசார் அழைத்தனர்

அண்மையில் நடந்த இரண்டு பெரிய பேரணிகளின் விசாரணைக்கு உதவ, குறைந்தபட்சம் ஒரு வழக்கறிஞரையும் 20-க்கும் மேற்பட்ட ஊடக ஊழியர்களையும் காவல்துறை அழைத்துள்ளது. பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்ய வேண்டுமென, கடந்த சனிக்கிழமை, கோலாலம்பூரில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட #லாவான் ஆர்ப்பாட்டத்தின் போது, வழக்கறிஞர் மன்றத்தின் கண்காணிப்புக் குழு…

பிரதமரின் ஆலோசகராக ஃபைசல் : ‘மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது’

அஹ்மத் ஃபைசல் அசுமுவைப் பிரதமரின் சிறப்பு ஆலோசகராக நியமிப்பது, பிரதமர் முஹைதீன் யாசினுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான பரிசாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நாசுதியோன், முஹைதீன் அமைச்சர் அந்தஸ்தில் ஓர் ஆலோசகரை நியமிக்க அவசரத் தேவை எதுவும் இல்லை என்று கூறினார். “பிரதமருக்கான ஆதரவைப்…