கோவில் குழப்பத்திற்கு ‘முஸ்லிம் கும்பல்’ மீது பழி சுமத்தியதிற்கு கணபதிராவ்…

  திங்கள்கிழமை அதிகாலையில் சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒரு 'முஸ்லிம் கும்பல்' மீது பழி சுமத்தியதற்காக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். "இந்த வன்முறை ஒரு கும்பலிருந்து தோன்றியது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.…

ரோஸ்மா மூன்றாவது முறையாக நாணயச் சலவைத் தடுப்புப் பிரிவுக்குச் சென்றார்

  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட விலைமதிப்பற்ற பொருள்கள் பற்றி மேலும் விசாரிக்கப்படுவதற்காக ரோஸ்மா மன்சோர் மூன்றாவது முறையாக நேற்று மினாரா கேபிஜே, போலீஸ் நாணயச் சலவைத் தடுப்புப் பிரிவுக்குச் சென்றார். ரோஸ்மா அங்கு மூன்று மணி நேரம் இருந்தார். அங்கு அவரது வாக்குமூலம் பதிவு…

முகைதின்: சீபீல்ட் ஆலயத்தை வசப்படுத்திக்கொள்ள மேம்பாட்டாளரின் வழக்குரைஞர்கள் கூலிக்கு ஆள்களை…

சுபாங் ஜெயா சீபீல்ட் ஆலயத்துக்குள் புகுந்து பக்தர்களைத் தாக்கியவர்கள் நில மேம்பாட்டு நிறுவன வழக்குரைஞர்களின் கைக்கூலிகள் என்று போலீஸ் முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார். “நில மேம்பாட்டு நிறுவனத்துடன் தொடர்புள்ளவர்கள் ஆலயம் அமைந்துள்ள நிலத்தை எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் சட்டப்படி நடந்துகொள்வதில்லை. “நவம்பர் 26-இல் நிலமிருக்கும்…

ஆலய வன்முறைக்குக் காரணம் வெளியிலிருந்து வந்தவர்கள்- பிரதமர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்களே காரணம் என்றார். தொடக்கநிலையில் கிடைத்த தகவல்களைப் பார்க்கையில் வன்முறையைத் தொடங்கியவர்கள் அப்பகுதிவாழ் மக்கள் அல்லவென்பது தெரிய வருவதாக அவர் சொன்னார். “இது மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையிலான மோதல் அல்ல. வெளியிலிருது வந்தவர்களால் உருவான பிரச்னை…

கோவில் விவகாரத்தில் கலவரம் செய்தவர்கள், சூத்ரதாரிகள் ஆகியோருக்கு எதிராகக் கடும்…

  சுபாங் ஜெயா ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் விவகாரத்தில் கலவரம் செய்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சூத்ரதாரிகளாக இருப்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகாதிர் சூளுரைத்தார். "கலவரம் செய்த மற்றும் நமது பாதுகாப்பு படையினர், ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பணியாளர்களுக்கு காயம் விளைவித்ததில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும்…

இறுதித் தீர்வு காணும் வரையில் கோவில் அங்கேயே இருக்கும், பிரதமரைச்…

சுபாங் ஜெயாவிலிருக்கும் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் இறுதித் தீர்வு காணப்படும் வரையில் உடைக்கப்படமாட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி உறுதி அளித்துள்ளார். இந்த விவகாரம் பிரதமர் டாக்டர் மகாதிரின் கவனத்திற்கும்கூட கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். "இன்று காலை கோவில் பிரச்சனை குறித்து பிரதமரைச்…

நாட்டு நிலைமைக்கு ஏற்ப மக்கள் செயல் பட்டாலே நமக்கு வெற்றி…

  நாட்டில் இப்பொழுது ஒரு பதற்றமான சூழ்நிலை உருவெடுத்துள்ளது, அதனைத் தனிக்கும் பொறுப்பு குடிமக்களாகிய நம் அனைவருக்கும்  உண்டு என்பதால் நாம்  அமைதியாக மிகப் பொறுப்புடன் சீபீல்ட் தோட்ட ஆலய இடம்மாற்று விவகாரத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் சில இளைஞர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் சென்றுள்ளது…

ஆலயக் கலவரம் தொடர்பில் சிலாங்கூர் எம்பி பாதுகாப்பு மன்றக் கூட்டத்தைக்…

சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி, சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரம் பற்றி விவாதிக்க மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)க் கூட்டத்தைக் கூட்டுவார். “பாதுகாப்பையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துவது முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை. அதற்காகத்தான் என்எஸ்சி கூட்டம்”, என சுபாங் ஜெயாவில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு வெளியில் செய்தியாளர்களிடம்…

சீபீல்ட் ஆலய விவகாரத்தில் ‘தூண்டிவிடும் வேலை’யைச் செய்தவர் வேதமூர்த்தி என்று…

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, சுபாங் ஜெயா யுஎஸ்ஜே 25, ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய அருகில் வன்முறை தலையெடுக்க காரணம் ஒற்றுமை அமைச்சர் பி.வேதமூர்த்தியே என்று சாடினார். “இந்த விவகாரத்தில் யாரும் தன்னைக் குறிப்பிட்ட ஒரு சமயத்தைக் கட்டிக்காக்கும் ஹீரோவாக நினைத்துக் கொண்டு செயல்படக்கூடாது. மேலும், ஒற்றுமையை வளர்க்க…

மலாக்காவில் வழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

சிலாங்கூரில் இந்து ஆலயமொன்றில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து மலாக்காவில் எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு மலாக்கா போலீஸ் தலைமையகம் எல்லா போலீஸ் மாவட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று மலாக்கா போலீஸ் தலைவர் ராஜா ஷாரோம் ராஜா அப்துல்லா கூறினார். சுபாங் ஜெயா யுஎஸ்ஜே…

சீபீல்ட் ஆலய கலவரம்: இதுவரை 21 பேர் கைது

சுபாங் ஜெயா யுஎஸ்ஜே 25, ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. இதைத் தெரிவித்த சிலாங்கூர் போலீஸ் தலைவர் மஸ்லான் மன்சூர், ஆகக் கடைசியாக நேற்று மாலை இருவரும் இன்று இருவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். இன்று காலை கைதான இருவரும் ஒரு…

முன்னாள் அமைச்சர் மாட்ஸிர் குற்றம் சாட்டப்படவிருக்கிறார்

  முன்னாள் கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் மீது எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் ஊழல் குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இன்னொருவரும் குற்றம் சாட்டப்படுவார். அம்னோ உதவித் தலைவரான அவர் வியாழக்கிழமையன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார் என்று ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம்…

சீபீல்ட் கலவரம்: தூண்டிவிட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அசிஸ்…

  நேற்று, யுஎஸ்ஜெ 25, சுபாங் ஜெயா ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் வன்முறையைத் தூண்டி விட்டவர்களுக்கு எதிராக போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று துணை உள்துறை அமைச்சர் முகமட் அசிஸ் ஜாமான் கூறினார். "கோவிலில் நுழைந்து குழப்பம் விளைவித்த கூட்டத்தினரை போலீஸ் விசாரித்து அவர்களுக்கு எதிராகக்…

சீ  பீல்ட் தோட்ட ஆலய இடம்மாற்று விவகாரத்தில் அணைவரும் பொறுப்புடன்…

  சுபாங் ஜெயா சீ பீல்ட் தோட்ட ஆலய  இடம்மாற்று விவகாரத்தில்  அணைவரும் மிகப் பொறுப்புடன் செயல்படவேண்டும். போலீசார்  இவ்விகாரத்தில் எந்தப் பாகுபாடுமின்றி நியாயமாகச் செயல்பட வேண்டும் என மலேசிய போலீஸ் படைத்தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். போலீஸ் படைத்தலைவரும் அதற்கு தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார் என்று கெஅடிலான் கட்சியின்…

கூட்டரசு நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதி

முதன்முறையாக இந்திய பெண் நீதிபதி ஒருவர் மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் நீதிபதி பி. நளினி. கூட்டரசு நீதிமன்றத்துக்கும் முறையீட்டு நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ள ஒன்பது பேரில் நளினியும் ஒருவர். நீதிபதி நளினி தவிர்த்து கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளாகவும் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாகவும் பதவி…

சீபீல்ட் ஆலய வன்முறையை புக்கிட் அமான் விசாரிக்க வேண்டும் – …

இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சுமார் 50 நபர்கள் சீ பீல்ட்  ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன்  ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களை இரும்புத்தடியாலும் பாராங் கத்தியாலும் தாக்கியுள்ளனர். இந்தியச் சமூகத்தின் அமைச்சர்களும், துணையமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் இந்த அசம்பாவிதத்தைக் கடுமையாகக் கண்டனம்…

‘ஊடுருவல்காரர்கள் ஆலயத் தலைவரையும் மேலும் நால்வரையும் கத்தியைக் காண்பித்து மிரட்டினர்’

சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தைத் தாக்கிய கும்பல் ஆலயத் தலைவரையும் நிர்வாகக் குழு உறுப்பினர் சிலரையும் பிணை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டினார்களாம். இதைத் தெரிவித்த ஆலயப் பேச்சாளர் இளங்கோவன் அண்ணாமலை, தாக்குதலில் ஈடுபட்டவர்கள்   சுமார் 200 பேர் இருக்கலாம் என்று மலேசியாகினியிடம் கூறினார். போலீஸ் சுமார் 50…

1எம்டிபி பற்றிய பேச்சை எதிரணி கண்டுக்கொள்வதில்லை: லிம் சாடல்

1எம்டிபி ஊழல் பற்றிய பேச்சு வரும்போது எதிரணி நெறுப்புக் கோழியாக மாறி தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்கிறது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் சாடினார். “இதுதான் உண்மை நிலவரத்தை எதிர்கொள்ள மறுப்பவர்களின் பிரச்னை. நீங்கள் (மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும்) நெறுப்புக் கோழி போன்றவர்கள்.......தீயதைப் பார்ப்பதில்லை, கேட்பதில்லை,…

நஜிப்பின் முன்னாள் உதவியாளர் பேங்க் ரக்யாட் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்

நஜிப் அப்துல் ரசாக்கின் முன்னாள் உதவியாளர் ஷுக்ரி முகம்மட் சாலே பேங்க் ரக்யாட் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தேசிய கணக்காய்வுத் துறையின் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை 13வது நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யபப்டுவதற்குமுன் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டதில் அவருக்கும் தொடர்புண்டு என்று கூறப்படுவதை அடுத்து இந்நடவடிக்கை…

‘போலீஸ்’ அழைப்பா? துருவித் துருவி விசாரியுங்கள்- சிசிஐடி இயக்குனர்

உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைத்து வருகிறது. அழைத்தவர் போலீஸ் நிலையத்திலிருந்து அழைப்பதாக கூறுகிறார். கலவரம் அடையாதீர்கள், பயம் கொள்ளாதீர்கள். இதுதான் கூட்டரசு போலீஸ் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குனர்(சைபர் குற்றம், பல்லூடகப் புலன் விசாரணை) எஸ்ஏசி அஹ்மட் நூர்டின் இஸ்மாயில் பொதுமக்களுக்குக் கூறும் அறிவுரை. அப்படிப்பட்ட…

1எம்டிபி கணக்காய்வு அறிக்கையில் மாற்றங்கள் செய்தது சம்பந்தமாக நஜிப் மீது…

1எம்டிபி மீதான தேசிய கணக்கு ஆய்வு இலாகாவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சட்டவிரோதமான மாற்றங்கள் செய்ததற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது நாடாளுமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார். 2016 ஆம்…

சீ பீல்ட் கோவிலில் பெரும் குழப்பம்: இருவர் கைது

சீ பீல்ட் மகா மாரியம்மன் கோவிலில் பெரும் குழப்பம் விளைவித்தவர்களில் 30 வயதான இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கோவிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் செரடாங் மருத்தவமனையில் சிகிட்சை பெற்று வரும் வேளையில் கைது செய்யப்பட்டனர்.…