‘அவசரகாலப் பிரகடனத்தால் மட்டுமே தேர்தலை ஒத்திவைக்க முடியும்’

பத்து சாபி இடைத்தேர்தலும் (பி.ஆர்.கே) சரவாக் மாநிலத் தேர்தலும் நாட்டின் கோவிட் -19 நெருக்கடியை அதிகப்படுத்தும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் கவலை தெரிவித்தார். இருப்பினும், இடங்கள் காலியாக இருந்தால் அல்லது சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டால், தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசியலமைப்பு மற்றும் சரவாக் மாநில அரசியலமைப்பு…

கட்சி தாவலுக்கு எதிராக சட்டம், வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்திக்கு வலியுறுத்து

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகள் மாறுவதைத் தடுக்க, அடுத்த மக்களவை அமர்வின் போது, அதற்கு எதிராக சட்டங்களை இயற்றுவதன் அவசியத்தைப் பரிசீலிக்குமாறு வழக்குரைஞர் மன்றம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியது. வழக்குரைஞர் மன்றத் தலைவர், சலீம் பஷீர், மலேசியா கடுமையான அரசியல் அமைதியின்மையை எதிர்கொண்டுள்ளது, இது சமீபத்தில் மக்களிடையேக் கவலையை ஏற்படுத்தியுள்ளது…

கோவிட் – 19 : ஜேபி, சமரஹானில் பள்ளிகள் மூடப்படும்

அதிகரித்து வரும் கோவிட் -19 பதிவுகளின் காரணத்தால், ஜொகூர் பாருவில் உள்ள பள்ளிகளை மூடுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. 29 அக்டோபர் முதல் கோவிட் -19 சிவப்பு மண்டலமாக, ஜொகூர் பாரு மாவட்டம் வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 1 முதல் நவம்பர் 14 வரை இந்த உத்தரவு அமலுக்கு…

கோவிட் 19 : இன்று 799 புதியத் தொற்றுகள், 3…

நாட்டில், இன்று 799 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ், பஹாங் மற்றும் மலாக்காவில் புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை. 466 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம்…

சுயதொழில் செய்பவர்கள், மாவட்ட, மாநில எல்லைகளைக் கடக்க காவல்துறைக்கு விண்ணப்பிக்கலாம்

சுயதொழில் செய்பவர்கள் நிபந்தனைக்குட்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) போது, மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு வெளியே செல்ல விரும்பினால், காவல் நிலையத்தில் அனுமதி கடிதத்திற்கு விண்ணப்பிக்கலாம். மூத்த அமைச்சர் (தற்காப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப், போலிசாரின் அனுமதி கடிதம், சாலை தடைகளில் தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றார்.…

பட்ஜெட் விவாதம் : முடிவு இப்போது முஹைதீன் கையில் –…

2021 வரவிசெலவு திட்டம் தொடர்பாக, அரசாங்கத்துடன் விவாதங்களை நடத்த அவர்கள் தயாராக இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணி (பி.எச்.) கூறியுள்ளது. டிஏபி அந்தோனி லோக் கருத்துப்படி, இந்த விவகாரம் குறித்த முடிவு இப்போது பிரதமர் முஹைதீன் யாசின் கையில் உள்ளது. "நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம், அரசாங்கத்துடன் விவாதிக்க நாங்கள்…

மாமன்னர் அவசரநிலை அறிவிக்கவில்லை என்பதால் வழக்கறிஞர் வழக்கு தாக்கல்

அவசரகாலப் பிரகடனத்திற்கான பிரதமர் முஹைதீன் யாசின் முன்மொழிவை, மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா ஏற்காததால், அவருக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இன்று காலை, வாதியான சையத் இஸ்கந்தர் சையத் ஜாபர், கெங்காதரன் & கோ சட்ட நிறுவனத்தின் மூலம்,…

பிரதமர்: பட்ஜெட் 2021, கோவிட் -19 கட்டுப்பாட்டு முயற்சிகளில் கவனம்…

நவம்பர் 6-ம் தேதி, தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் கவனம் செலுத்தும் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார். அக்கறை கொண்ட ஓர் அரசாங்கமாக, மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் தனது தரப்பு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று…

பட்ஜெட் 2021: அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் கலந்துபேச வேண்டும் – கிட்…

2021 வரவுசெலவுத் திட்டத்தில் மக்களின் கருத்துகளையும் தேவைகளையும் புறக்கணிப்பதன் மூலம் அதற்கு முழுமையான அதிகாரம் இல்லை என்பதை தேசியக் கூட்டணி அரசு (பிஎன்) அறிந்துகொள்ள வேண்டும் என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். 2021 வரவுசெலவுத் திட்டத்தை, நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கும் வகையில், "நம்பிக்கை மற்றும்…

கோவிட் 19 : இன்று 649 புதியத் தொற்றுகள், இறப்புகள்…

நாட்டில் 649 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், அக்டோபர் 7 தொடக்கம், முதல் முறையாக இறப்புகள் ஏதும் இன்று பதிவாகவில்லை. 352 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில்…

டாக்டர் எம் – கு லீ சந்திப்பு : ஒற்றுமை…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது பல அரசியல் தலைவர்களுடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த திங்களன்று குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலீ ஹம்சா (கு லீ), செவ்வாய் அன்று பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) சுல்கிஃப்லி…

கோவிட் -19 பரவலைத் தடுக்க, ‘புலாவ் பெசார்’ தற்காலிகமாக மூடப்பட்டது

கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கவும், புதியத் திரளைகள் உருவாவதைத் தவிர்க்கவும், மலாக்கா மாநில அரசு, புலாவ் பெசார் தீவைத் தற்காலிகமாக மூடியது. நேற்று தொடங்கி, பின்னர் அறிவிக்கப்படும் தேதி வரையில், அத்தீவில் எந்தவொரு நடவடிக்கை மற்றும் பொது மக்களின் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில்,…

திபிஎம் வேட்பாளர் யார்? விவாதிக்க அம்னோ கூட்டம் இன்றிரவு நடைபெறலாம்

துணைப் பிரதமர் (திபிஎம்) வேட்பாளர் மற்றும் பிரதமர் முஹைதீன் யாசினுக்குக் கட்சி சமர்ப்பிக்கவுள்ள நிபந்தனைகள் குறித்து விவாதிக்க, அம்னோ இன்று இரவு சந்திப்புக் கூட்டம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி வட்டாரத் தகவலின்படி, அம்னோ துணைத் தலைவர் முகமது ஹசான், மூத்த அமைச்சர் (தற்காப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப்…

கூச்சிங்கில் சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவம்பர் 13…

கோவிட் -19 பரவலைத் தொடர்ந்து சரவாக் கூச்சிங்கில், சிவப்பு மண்டலப் பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை முதல் நவம்பர் 13 வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது இதன் மூலம், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள், ஆசிரியர்…

பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் : 25 எம்.பி.க்கள் ஆதரவு,…

பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவாக, இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில், நவம்பர் 2 நாடாளுமன்ற கூட்டத்தொடரின், கூட்ட வரைவு விதிகளின் அடிப்படையில் 25 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர். இது மாற்றத்திற்கு உட்பட்டது என்று லெம்பா பந்தாய் எம்.பி.…

அன்வார் பிரதமராவதால், மலேசியாவுக்கு என்ன இலாபம்?

கருத்து l அன்வர் இப்ராஹிம் இன்னும் பிரதமராக முயற்சிக்கிறார், அவரின் நீண்ட கால கனவு அது. நான்கு மாதங்களுக்கு முன்பு, அன்வர் நஜிப் ரசாக்கின் உதவியுடன் பிரதமராக முடியும் என்று கூறியிருந்தேன். சமீபத்தில் இது யதார்த்தமாக நடந்திருக்கும், நாட்டில் அரசியல் சிக்கல் மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால். உண்மையில், அன்வர்…

கோவிட் 19 : இன்று 801 புதியத் தொற்றுகள், 8…

இன்று நாட்டில் 801 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், 7 மரணங்கள் சம்பவித்துள்ளன. 546 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவசரப் பிரிவில்…

முகநூலில் `தூண்டுதல்` இடுகை : போலிஸ் ஜாமினில் ரோனி லியு…

மாமன்னருக்கு எதிராகத் தேசத்துரோக கூறுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு முகநூல் இடுகை தொடர்பாக, விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இத்தகவலை, டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் தியோ இன்று பிற்பகல் அறிவித்தார். முன்னதாக, தாய்லாந்து மன்னர் மகா…

2021 பட்ஜெட்டை ஆதரிக்குமாறு மாமன்னர் எம்.பி.க்களைக் கேட்டுக்கொண்டார்

மாட்சிமைத் தங்கியப் பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நவம்பர் 6-தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொண்டார். கோவிட் -19 ஐ கையாள்வதிலும், நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதிலும் வரவு செலவு திட்டத்தின் முக்கியத்துவத்தை மன்னர் வலியுறுத்தியுள்ளதாக,…

அம்னோவிலிருந்து திபிஎம் வேட்பாளர், ஆனால் ஜாஹித்தை ஏற்க முடியாது

அம்னோவைச் சார்ந்த ஒருவரைத் துணைப் பிரதமராக (திபிஎம்) நியமிக்க, அக்கட்சியின் வேட்பாளர் பரிந்துரைக்காக முஹைதீன் காத்திருப்பதாகவும், ஆனால் கட்சியின் தலைவர் ஜாஹித் ஹமிடியை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. அந்தப் பதவிக்கு ஓர் அம்னோ பிரதிநிதியை நியமிக்க பெர்சத்து தலைவர் தயாராக இருப்பதாகவும், ஒரு வேட்பாளரைப்…

ஐ.ஜி.பி.க்கு எதிராக RM100 மில்லியன் வழக்கு, இந்திராகாந்தி தாக்கல் செய்யவுள்ளார்

தனது மகள் பிரசன்னா திக்ஸா மீதான பாதுகாப்பு உரிமையை மீண்டும் பெறப் போராடி வரும் எம் இந்திரா காந்தி, காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீத் படோருக்கு எதிராக RM100 மில்லியன் சிவில் வழக்கை இவ்வாரம் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில், ராஜ் &…

கோவிட் 19 : 835 புதியத் தொற்றுகள், 2 மரணங்கள்…

இன்று 835 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது அன்றாட நேரலைச் சந்திப்பில் தெரிவித்தார். அவசரப் பிரிவில் 89 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. இதற்கிடையே, இன்று 674…

அன்வர் : ஊழலை நிராகரிக்கும் அரசியல்வாதிகளை ஏற்றுக்கொள்ள பி.கே.ஆர் தயார்

ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திலிருந்து விடுபட்ட அரசாங்கத்தை விரும்பும் எந்தவொரு அரசியல்வாதியுடனும் பணியாற்ற கட்சி தயாராக உள்ளது என்று பி.கே.ஆர் கூறியுள்ளது. அண்மையில் மலாய் ஆட்சியாளர்கள் விடுத்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்; அவற்றைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர், அன்வர் இப்ராஹிம் கூறினார். ஊழலை நிராகரிக்க…