தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
தோனி புவா : நஜிப் ஆதரவுடன் அரசாங்கம் அமைப்பது ‘பைத்தியக்காரத்தனம்’
கொள்கையற்ற சிலர், அதிகாரப் பசியெடுத்து, புதிய அரசாங்கத்தை உருவாக்க நஜிப் ரசாக்கின் ஆதரவைப் பெறவும் தயாராக இருக்கிறார்கள் என டிஏபி பிரச்சாரப் பிரிவு செயலாளர் தோனி புவா கூறியுள்ளார். இருப்பினும், அந்த முன்னாள் பிரதமரின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கும் திட்டமானது, ‘உண்மையில் பைத்தியக்காரத்தனம்’ என்று அவர் கூறினார். “முற்றிலும்…
நஜிப் : அன்வாருடன் ஒத்துழைப்பு, டிஏபி சம்பந்தப்படவில்லை
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுடன் ஒத்துழைக்கும் திட்டத்தைப் பரிசீலிக்க அம்னோவிடம் முன்மொழிந்ததை ஒப்புக்கொண்டார். இருப்பினும், டிஏபி அதில் சம்பந்தப்படவில்லை என்பதை நஜிப் வலியுறுத்தினார். இன்று தேசியக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்தத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது முகநூல் பதிவில், கோவிட் -19…
கோவிட் 19 : 1,240 புதியத் தொற்றுகள், 7 மரணங்கள்…
இன்று 1,240 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் 4 இலக்க எண்ணிக்கையை நாடு கண்டுள்ளது. அவசரப் பிரிவில் 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 31 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. இதற்கிடையே, இன்று 691 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.…
பிஎன் சார்பு தலைவர்களை முஹைதீன் சந்தித்தார், ஜாஹித் வரவில்லை
இன்று காலை, தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களுடன், புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமர் முஹைதீன் யாசின் ஒரு சந்திப்பை நடத்தினார். இருப்பினும், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக,…
ஹிஷாமுதீன் : பிரதமர் பதவிவிலக வேண்டுமா? நாங்கள் விவாதிக்கவிருக்கிறோம்
பிரதமர் முஹைதீன் யாசின் முன்வைத்த அவசரகாலப் பிரகடனத் திட்டத்தை, பேரரசர் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டுமா என்பது பற்றி தேசிய முன்னணி (பி.என்.) எம்.பி.க்கள் விவாதிப்பார்கள் என்று ஹிஷாமுதீன் ஹுசைன் கூறினார். கோலாலம்பூரில் உள்ள அம்னோ தலைமையகத்தில் சந்தித்தபோது, வெளியுறவு அமைச்சருமான ஹிஷாமுதீன் இவ்வாறு கூறினார்.…
‘அவசரகாலத் திட்டத்தைப் பேரரசர் நிராகரித்தது முஹைதீனுக்கு விழுந்த அடி’
அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்ற பிரதமர் முஹைதீன் யாசின் கோரிக்கையை, மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா நிராகரித்ததைப் பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரித்தனர். பேரரசரின் இந்த முடிவு, முஹைதீன் அரசாங்கக் கட்சியின் சில உறுப்பினர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘பிரதமரின்…
அவசரநிலை இல்லை : அனைத்து மாநில முதல்வர்களையும் முஹைதீன் நாளை…
பிரதமர் முஹைதீன் யாசின், சிலாங்கூர் மந்திரி பெசார் (எம்.பி.) அமிருதீன் ஷாரியை நாளையக் கூட்டத்திற்கு அழைத்திருப்பதை எம்.பி.யின் உதவியாளர் உறுதிப்படுத்தினார். அவசரகாலத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முடிவு செய்துள்ளதாக, அரண்மனை இன்று பிற்பகல் தெரிவித்ததை அடுத்து, இந்தக் கூட்டம்…
கோவிட் 19 : 823 புதிய தொற்றுகள், 8 மரணங்கள்…
நாட்டில் இன்று 823 கோவிட் -19 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது நேற்றைய 4 இலக்க எண்ணிக்கையை விட சற்று குறைவு. அவசரப் பிரிவில் 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 30 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. இதற்கிடையே, இன்று 579 நோயாளிகள் குணமடைந்து…
மாமன்னர் : அவசரநிலை அறிவிப்பு தேவையில்லை
இந்த நேரத்தில் மலேசியாவில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் ஹாஜி அகமது ஷா கூறினார். தற்போதைய அரசாங்கம், கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த, அமலாக்கக் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து செயல்படுத்தும் என மாமன்னர் நம்பிக்கை தெரிவித்ததாக, அரண்மனை…
ஐடிஇ கண்ணோட்டம்: பெரும்பான்மையினர் அவசரகாலப் பிரகடனத்தை எதிர்கின்றனர்
பெரும்பான்மையினர் அவசரகால அறிவிப்பை நிராகரிப்பதாக, சிலாங்கூர் மாநில அரசின் ஆராய்ச்சி அமைப்பான இன்ஸ்டிட்யூட் டாருல் ஏசான் (ஐடிஇ) மேற்கொண்ட ஆய்வு காட்டியது. ‘ரக்யாட் மலேசியா பெர்சுவாரா’ (மலேசியர்கள் பேசுங்கள்) என்று பெயரிட்டு, புலனம், டுவிட்டர், முகநூல், மின்னஞ்சல், வலைத்தளம் மற்றும் தெலிகிராம் போன்ற மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, அந்த…
அவசரகாலப் பிரகடனம் : அரண்மனையில் மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம்
பிரதமர் முஹைதீன் யாசினின் அவசரகால முன்மொழிவு குறித்து விவாதிக்க, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, மலாய் ஆட்சியாளர்களை இன்று அரண்மனையில் சந்தித்தார். அச்சந்திப்பு இன்று மதியம் 2.30 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தில் கலந்துகொள்ள ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் மதியம் 1.30…
அரசியல் உறுதியற்ற தன்மை, அவசரகாலப் பிரகடனம் – மக்கள் இரண்டையும்…
கருத்து | அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைப் பெரும்பாலான மலேசியர்கள் விரும்பவில்லை. சபா மாநிலத் தேர்தலினால், கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டது, அதனால் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) பிரப்பிக்கப்பட்டு, சில பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் உருவாகி, மில்லியன் கணக்கான…
அவசரகாலம் அறிவிக்கப்பட்டாலும், மக்களவைக் கூட்டம் நடைபெறலாம் – முன்னாள் ஏ.ஜி.
அவசரகாலம் அறிவிக்கப்பட்டாலும், மக்களவை எப்போதும்போல கூடவும், செயல்படவும் முடியும் என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் தோமி தோமஸ் கூறினார். நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி, 2021 வரவு செலவுத் திட்டத்தை, நிர்வாக முடிவோடு அரசாங்கம் செயல்படுத்தினால், அந்நடவடிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தோமி தோமஸ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசியலமைப்பின்…
மலேசியாவில் 1,228 புதியத் தொற்றுகள், முதல்முறையாக 4 இலக்கத்தில்
கோவிட் -19 | நாட்டில் கோவிட் -19 பெருந்தொற்றின் எண்ணிக்கை நான்கு இலக்கமாக உயர்ந்துள்ளது. இன்று 1,228 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதில் சபாவில் 889 பதிவுகளும், கிள்ளான் பள்ளத்தாக்கில் 95 பதிவுகளும் அடங்கும். 502 புதியப் பதிவுகள் சிறைத் திரளைகளைச் சேர்ந்தவை. தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 671, இவர்களுள்…
டாக்டர் எம் : அவசரநிலை அறிவிப்பு, முஹைதீனுக்கு மட்டுமே கூடுதல்…
அவசரகால அறிவிப்பால் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க முடியாது, மாறாக, அதனால் பிரதமருக்குக் கூடுதல் அதிகாரம் மட்டுமே வழங்க முடியுமென டாக்டர் மகாதீர் முகமது கூறினார். அமைச்சரவையில் பல எம்.பி.க்களை வைத்திருந்த போதிலும், நாட்டில் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளைக் கையாள்வதில் அந்தப் பெர்சத்து தலைவர் தோல்வியே கண்டுள்ளார்…
அவசரகாலப் பிரகடனம் : மற்ற மலாய் ஆட்சியாளர்களுடன் மாமன்னர் கலந்துரையாடுவார்
நேற்று, பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்த அவசரகாலத் திட்டம் குறித்து, மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, மற்ற மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடுவார் என அரண்மனை பேச்சாளர், அஹ்மத் ஃபாடில் சம்சுதீன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்வதில் அரசு…
‘அவசரகாலப் பிரகடனம்’ – தற்போது தகுந்த நேரமல்ல, சமூக அமைப்புகள்…
நேற்று, அவசரகாலத்தைப் பிரகடனம் செய்யவுள்ளதாக பிரதமர் முஹைதீன் யாசின் செய்த அறிவிப்பு தங்களுக்குக் கவலையளித்துள்ளதாக ‘சிஎஸ்ஓ சீர்திருத்தத்திற்கான தளம்’ (CSO Platform for Reform) எனும் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பைச் செய்வதற்கு, உகந்த நேரம் இதுவல்ல, அதுமட்டுமின்றி, அரசியல் சூழலும் அதற்கு…
இயங்கலை நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிராகரித்தார், அஸார் மீது விமர்சனம்
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இயங்கலையில் (online) நடத்த முடியாது என்று வலியுறுத்தியதால், சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருண் இன்று சமூக ஊடகங்களில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானார். மலேசியாவிற்கு ஆஸ்திரேலியாவைப் பின்பற்றுவதற்கான ஒரு திட்டம் இருந்தபோதிலும் - அவர்களின் எம்.பி.க்கள் சிலர் இயங்கலை வீடியோ வழி கூட்டம் நடத்த அனுமதித்தல் -…
இன்று 10 இறப்புகள், மிக உயர்ந்த மரண எண்ணிக்கை பதிவு
கோவிட் -19 : இன்று நாட்டில் மொத்தம் 710 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, இத்தொற்றுநோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 10. இந்நோய் நாட்டைத் தாக்கியதில் இருந்து, மிக அதிகமான மரண எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது. சபா ஆக அதிகமாக, 528 பாதிப்புகளைப் பதிவு செய்து,…
கோவிட் -19: ‘அவசரகாலப் பிரகடனம்’ – அமைச்சரவை ஒப்புதல்
கோவிட் -19 பெருந்தொற்றைச் சமாளிக்க, "அவசரக்கால அறிவிப்பை" அமல்படுத்த அமைச்சரவை ஒப்புக்கொண்டது. புத்ராஜெயாவில், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டது. "அறிவிப்புக்காக காத்திருங்கள்," என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது பெயர் குறிப்பிட மறுத்த ஓர் அமைச்சர் கூறினார். நாட்டில்…
‘அவசரகாலப் பிரகடனம்’ – ஊகங்கள் அதிகரித்து வருகின்றன
அவசரகாலத்தைப் பிரகடனம் செய்ய, மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு அரசாங்கம் பரிந்துரைக்கும் எனும் ஊகங்கள் அதிகரித்துவரும் வேளையில், முக்கியச் செய்தி ஊடகங்களின் அறிக்கைகளும் அவற்றைப் பலப்படுத்தி வருகின்றன. இருப்பினும், இதுவரை, பிரதமர் முஹைதீன் யாசின் அத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் புத்ராஜெயாவில் இல்லை. தற்போதைய கோவிட் -19…
பி.என்.னுக்கே ஆதரவு : அம்னோவின் முடிவை பி.கே.ஆர். மதிக்கிறது –…
தேசியக் கூட்டணிக்குத் (பி.என்) தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான அம்னோவின் முடிவைக் கட்சி "மதிக்கிறது" என்ற பி.கே.ஆர் பொதுச்செயலாளர் சைஃபுதீன் நாசுதியோன் இஸ்மாயிலின் அறிக்கை டிஏபி-க்கு அதிருப்தியைத் தூண்டியுள்ளதாகத் தெரிகிறது. அம்னோவுடன் ஒத்துழைப்பு இருப்பதை அது சுட்டிக்காட்டுவதாகக் கூறிய டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அவருடைய கட்சி அதை ஏற்றுக்கொள்ளாது…
சார்ல்ஸ் சந்தியாகோ : கோவிட் சோதனை செலவை RM50 ஆக…
கோவிட் -19 | கோவிட் -19 பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை விலையை RM150-லிருந்து RM50-ஆக குறைக்க வேண்டும் என்று டிஏபி கிள்ளான் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நேற்று, சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், கிள்ளானில் அதிகமான…
























