நவின் கொலை வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது

கடந்த ஜூன் மாதம், நாட்டை உலுக்கிய நவீனின் கொலை வழக்கு, நாளை ஜோர்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நவீன் குடும்பத்தின் சார்பில், சட்ட விவகாரங்களை மேற்பார்வையிடும் வழக்குரைஞர், பல்ஜித் சிங், பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனக் கூறினார். “இவ்வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கு…

எரி பொருள்: பெட்ரோல் விலை குறைகிறது

  இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை மூன்று சென் குறைகிறது. ஒரு லீட்டர் ரோன்95 ரிம2.16 க்கும், ரோன்97 ரிம2.46 க்கும் முறையே விற்கப்படும். டீசல் விலை இரண்டு சென் உயர்வு காண்கிறது. ஒரு லீட்டர் டீசல் ரிம2.12க்கு விற்கப்படும்.

ரிம40 மில்லியன் கையூட்டு பெற்றதாக அமைச்சரின் அரசியல் உதவியாளர் கைது

மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம்  (எம்ஏசிசி)   இன்று   பிற்பகல்  புத்ரா  ஜெயாவில்,     சரவாக்கைச்  சேர்ந்த   கூட்டரசு   அமைச்சர்   ஒருவரின்   அரசியல்    செயலாளரைக்  கைது   செய்தது. அந்த  61-வயது   ஆடவர்  “டத்தோ”  பட்டம்  பெற்றவர்,  2013   ஜூன்   முதல்   நாளிலிருந்து   அமைச்சரின்   உதவியாளராகப்    பணிபுரிந்து     வருகிறார். அவர்  கைது   செய்யப்பட்டதை   பினாங்கில்  …

‘முஸ்லிம்கள்- மட்டும்’ சலவை நிலைய உரிமையாளர் மன்னிப்பு கேட்டார்

ஜோகூர்  ஆட்சியாளர்   சுல்தான்   இப்ராகிம்   சுல்தான்   இஸ்கண்டர்   கடுமையாக   எச்சரித்ததை    அடுத்து,     மூவாரில்  முஸ்லிம்களுக்கு   மட்டுமே    என்று   இயங்கிவந்த  தானியங்கி    சலவை நிலையத்தை   அதன்   உரிமையாளர்   எல்லாருக்கும்   திறந்துவிட    முடிவு   செய்துள்ளார். தன்   செயலுக்கு   சுல்தானிடம்   நேரடியாக  மன்னிப்பு   தெரிவிக்கவும்   அவர்   விரும்புகிறார். அதற்கு  அனுமதி   கிடைக்கும்   என்றும்  …

வான் அசிசா: பேங்க் நெகரா 1எம்டிபிக்கு ரிம116 மில்லியன் அபராதம்…

பேங்க்  நெகரா  மலேசியா, நிதிச்சேவைச்    சட்டங்களைப்  பின்பற்றாத   1எம்டிபி   நிறுவனத்துக்கு   ரிம116மில்லியன்  அபராதம்   விதித்துள்ளது. இத்   தகவலை    வெளியிட்ட   பக்கத்தான்   ஹரபான்   தலைவர்    டாக்டர்    வான்   அசிசா   வான்   இஸ்மாயில்,   அபராதம்   விதிக்கப்பட்டதாகக்  கூறும்  மத்திய  வங்கியின்  கடிதத்தையும்   காட்டினார். 1எம்டிபி  ஊழல்  குறித்து  மறுபடியும்   விசாரணை    தொடங்க …

ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: மகாதிருக்கு அம்னோ அடிநிலை…

வாரக்  கடைசியில்   சரவாக்கில்   ஒரு  கூட்டத்தில்   பேசியபோது   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  குறித்தும்   அவரின்  தந்தையார்    அப்துல்   ரசாக்   பற்றியும்  கூறிய   கருத்துகளுக்காக   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    ஒரு  வாரத்துக்குள்  மன்னிப்பு   கேட்க   வேண்டும்   என்று   அம்னோ   அடிநிலை  உறுப்பினர்களின்   இயக்கம்   கோரிக்கை   விடுத்துள்ளது. அவ்வாறு   செய்யவில்லை …

ஜோகூர் தாலிபான் மாநிலம் அல்ல: சுல்தான் காட்டம்

ஜோகூரில்  முஸ்லிம்களுக்கு- மட்டும்  என்ற  கொள்கையுடன்  செயல்படும்   சலவை  நிலையம்    அதன்  கொள்கையை  மாற்றிக்கொள்ள  வேண்டும்  என   ஜோகூர்  ஆட்சியாளர்   சுல்தான்   இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டர்  பணித்துள்ளார். “இந்த  அபத்தத்தை   என்னால்   ஏற்றுக்கொள்ள  முடியாது.  இது   ஜோகூர். பங்சா  ஜோகூருக்கு  உரியது,  எல்லா  இனத்தவருக்கும்   சமயத்தவருக்கும்  சொந்தமானது,      முற்போக்கான, …

14-வது பொதுத் தேர்தல் – பஹாங் மாநிலத்தில் போட்டியிட, பி.எஸ்.எம்.…

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சார்பில், பஹாங் மாநிலத்தில் இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கத் தயாராகவுள்ளனர். கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சுரேஸ் குமார் பாலசுப்ரமணியம் மற்றும் ஜெலாய் சட்டமன்றத்தில் மாட் நோர் அயாட் எனும் பூர்வக்குடியைச் சார்ந்த ஒருவரும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுதளுவிய…

தீர்வு கொடுக்கப்படாமல், மசூதி அதிகாரிகளின் வீடுகள் இடிக்கப்படவுள்ளன – சிலாங்கூர்…

இன்று காலை, சிலாங்கூர் பெட்டாலிங் நில அலுவலகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் உதவியுடன், சுபாங் விமான நிலைய பள்ளிவாசலின் முன்னாள் பணியாளர்கள் இருவரின் குவாட்ரஸ் வீடுகளை இடித்துத் தள்ள முற்பட்டனர். தனியார் நிறுவனமான, மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.எ.எச்.பி.) அந்நிலத்தை மேம்பாட்டுப் பணிகளுக்காக…

கட்கோ நில விவகாரம் – லோட்டஸ் குழும உரிமையாளர்களுக்கு 3…

நேற்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.), கட்கோ நில வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவருக்கும், இன்று தொடக்கம் 3 நாள்கள் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்ரா ஜெயா உயர் நீதிமன்றத்தில், மஜிஸ்திரேட் முகமட் நோர் ஹஃபிட்ஷுடின் யூசோப், அந்த இரு சகோதரர்களுக்கும் 3…

முன்னாள் ஐஜிபியை அவமதித்த குற்றத்திலிருந்து சஞ்சீவன் விடுதலை

பெட்டாலிங்  ஜெயா   செஷன்ஸ்   நீதிமன்றம்,  முன்னாள்  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்   போலீஸ்   காலிட்  அபு  பக்காரை   அவமதித்த   குற்றச்சாட்டிலிருந்து   மலேசிய  குற்றச்செயல்  கண்காணிப்பு  அமைப்பு (மைவாட்ச்)த்  தலைவர்   ஆர்.சஞ்சீவனை   விடுவித்தது. செஷன்ஸ்  நீதிமன்ற  நீதிபதி   முகம்மட்  மொக்சானி   மொக்தார்   அவரை  விடுவித்தார்   என  சஞ்சீவனின்     வழக்குரைஞர்    எஸ்.பிரகாஷ்  கூறினார். “சஞ்சீவன் …

இணையத்தளம்: மகாதிரை ஆதரித்ததுதான் நஜிப் சரவாக்குக்கு செய்த தீங்கு

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  சரவாக்கியர்களுக்கு     இழைத்த   ஒரே    தீங்கு  டாக்டர்   மகாதிர்  முகம்மட்டை   22  ஆண்டுக்காலத்துக்குப்  பிரதமராக    ஆதரித்து   வந்ததுதான்   என  அம்னோ- ஆதரவு  இணையத்தளமொன்று   கூறியது. அதேபோல்  அவரின்  தந்தை   இரண்டாவது  பிரதமர்   அப்துல்   ரசாக்   கிழக்கு   மலேசியர்களுக்கு   இழைத்த   தீங்கு  ,    அவருக்குப்  பின் …

100வது இலவச பேருந்து: சிலாங்கூர் சாதனை

சிலாங்கூர்  100வது  இலவச  பேருந்தை  ஓடவிட்டு   மலேசிய   சாதனைப்  புத்தகத்தில்   இடம்பெற்றது. அதிகமான  இலவச   பேருந்துகளை   ஓடவிட்ட   மாநிலம்  என்ற   முறையில்   அதன்  பெயர்   மலேசிய   சாதனைப்   புத்தகத்தில்   பொறிக்கப்பட்டுள்ளது. இலவச  பேருந்து   சேவைக்கு    சுபாங்  ஜெயா   குடியிறுப்பாளர்களிடம்   பெரும்  வரவேற்பு  கிடைத்திருப்பதால்   இந்த  100வது  பேருந்து   சுபாங் …

அனுவார்: இன அரசியலுக்கு டிஏபியே காரணம் என்பதை வரலாறு காண்பிக்கிறது

இன  அரசியல்   தோன்றியதைத்   தெரிந்துகொள்ள   வரலாற்றைத்    திரும்பிப்  பார்க்க    வேண்டும்   என்கிறார்   அம்னோ  தகவல்   தலைவர்   அனுவார்  மூசா. இன  அரசியல்  உருவானதற்குக்   காரணமே   டிஏபிதான்   என்கிறார்   அவர்.  அக்கட்சி  தோற்றுவிக்கப்பட்டதைத்   தொடர்ந்து    இன  அரசியலும்  தோன்றியது. “டிஏபி   தோன்றுவதற்கு   20  ஆண்டுகளுக்கு  முன்பே   அம்னோ   உருவாகிவிட்டது.....அப்போதெல்லாம்   இனங்களுக்கிடையில்   …

கெட்கோ நில விவகாரம், லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவர் கைது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) , கம்போங் செராம்பாங் இண்டா அல்லது லாடாங் கட்கோ நில உரிமையாளர் மற்றும் விற்பனை விவகார வழக்குத் தொடர்பாக விசாரணை செய்ய, லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவரைக் கைது செய்துள்ளது. இன்று காலை சுமார் 11 மணியளவில், ரெனா.துரைசிங்கம்  மற்றும் ரெனா.இராமலிங்கம்…

கேவியஸ் : கேமரன் மலை வேட்பாளர் விஷயத்தில் பி.என்.-னின் முடிவை…

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஷயத்தில், பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் தாம் மதித்து, ஏற்கவுள்ளதாக மக்கள் முற்போக்குக் கட்சியின் தேசியத் தலைவர், எம்.கேவியஸ் கூறியுள்ளார். பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், பொதுத் தேர்தல் வெற்றியை…

டிஎபி வேட்பாளர்கள் கிளந்தானில் போட்டியிடுவர்

  அடுத்த பொதுத் தேர்தலில் டிஎபி கிளந்தான் மாநிலத்தில் அதன் வேட்பாளர்களை களமிறக்கக்கூடும். கடந்த 31 ஆண்டுகளில் இது முதல்தடவையாக இருக்கும். டிஎபி அதன் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கிளந்தான் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா தெரிவித்தார். காலாஸ் மற்றும்…

முன்னாள் ஐஜிபி காலிட் பொதுப் போகுவரத்து பாதுகாப்பை உயர்த்துவார் என்று…

கடந்த செப்டெம்பர் 5 இல் பதவி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜிபி காலிட் அபு பாகார் இன்று பிரசாரனாவின் தலைவாராக வேலையைத் தொடங்கினார். இன்று வேலையில் சேர்ந்த காலிட், அங்கு நடைபெற்ற ஒரு கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், அவர் சமூக ஊடகங்களிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பிரசாரனாவின்…

பினாங்கு வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ரிம2.6பில்லியன் செலவிடப்பட்டது என்று வலியுறுத்துகிறார்…

பினாங்கு மாநில வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு புத்ரா ஜெயா போதுமானவற்றை செய்யவில்லை என்று கூறப்படுவதை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜுனய்டி துவாங்கு ஜாபார் மறுத்துள்ளார். மத்திய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து பினாங்கில் வெள்ளப் பிரச்சனையைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ரிம2.58பில்லியன் செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.…

ஜிஇ14: கெராக்கானின் தொகுதிகள் பரிமாற்றம்

கெராக்கான்   14வது  பொதுத்  தேர்தலில்   ஐந்து  தொகுதிகளை  பிஎன்  பங்காளிக்கட்சிகளுடன்  மாற்றிக்கொள்ளத்  திட்டமிடுவதாக   அதன்  தலைவர்  மா  சியு  கியோங்  கூறினார். “அதற்கான    பேச்சுகள்  பிஎன்  உயர்நிலையில்    நடக்கின்றன.  இறுதி  முடிவைப்  பிரதமரும்   பிஎன்  தலைவருமான   நஜிப்  ரசாக்  அறிவிப்பார்”,  என   நெகிரி  செம்பிலான்  கெராக்கான்   பேராளர்   கூட்டத்தைத்  …

வான் ஜுனாய்டி: சரவாக்கில் மகாதிர் பேச்சுக்கு மதிப்பில்லை

டாக்டர்    மகாதிர்    முகம்மட்டின்   வாரக்கடைசி   கூச்சிங்  பயணத்தால்   சரவாக்   அரசியலில்    எந்த   மாற்றமும்   ஏற்படாது   என்கிறார்   பார்டி  பெசாகா   பூமிபுத்ரா   பெர்சத்து  (பிபிபி)  உச்சமன்றத்  தலைவர்   வான்  ஜுனாய்டி   துவாங்கு   ஜப்பார். “அதனால்   எந்தத்  தாக்கமுமில்லை”,  என      இயற்கைவள,  சுற்றுசூழல்   அமைச்சரான   வான்  ஜுனாய்டி இன்று   கோலாலும்பூரில்  கூறினார்.…

மஇகா: பிரதமர் விருப்பப்படியே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  எப்படிப்பட்ட  தகுதிகளை   எதிர்பார்க்கிறோரோ  அத்தகுதிகளைக்  கொண்ட  வேட்பாளர்களையே  மஇகா  14வது  பொதுத்   தேர்தலில்   அதன்   வேட்பாளர்களாக   நிறுத்தும். இதனைத்   தெரிவித்த   கட்சித்   தலைவர்   டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்   வேட்பாளர்  பட்டியல்   ஒன்றை   நஜிப்பிடம்  கொடுத்திருப்பதாகக்   கூறினார்.  ஆனால்,  அது   இறுதியானது   அல்ல  தேவைப்பட்டால்   அதில் …

நியுஜென் கட்சி தன்னுடன் இணைவது குறித்து ஹரபான் விவாதிக்கும்

பக்கத்தான்  ஹரபான்  தலைவர்  மன்றம்  அக்டோபர்  2-இல்  கூடும்போது,   அது   எதிரணிக்  கூட்டணியில்   சேரும்  நியுஜென்  கட்சியின்  விருப்பம்   குறித்து  விவாதிக்கும்   என  ஹரபான்  தலைமைச்  செயலாளர்   சைபுடின்   அப்துல்லா  கூறினார். எதிரணிக்  கூட்டணியில்   சேர  விருப்பம்  கொண்டுள்ள  “உண்மையான”   எதிர்க்கட்சிகளை    ஹரபான்   வரவேற்பதாக   சைபுடின்  கூறினார். அதேவேளையில் …