பாஸுடன் பேச்சுகள்: ‘அன்வாரின் நிலைப்பாடு குறித்து அவரிடமே விளக்கம் கேட்பது…

தேர்தல்  தொகுதிப்  பங்கீடு   தொடர்பாக   பக்கத்தான்     ஹரபான்    பாஸ்   கட்சியுடன்  தொடர்ந்து  பேச்சு   நடத்த   வேண்டும்   என்று   சிறையில்   உள்ள   எதிரணித்   தலைவர்  அன்வார்  இப்ராகிம்   கூறியிருப்பது   குறித்து  அவரிடமே  விளக்கம்   கேட்பது  நல்லது   என்கிறார்   பிகேஆர்   எம்பி   வில்லியம்   லியோங். அது,  பாஸுடன்  பேச்சுகள்  இனி  இல்லை …

சமயப் பள்ளி தீ விபத்து: விசாரணைக் குழு அமைக்கப்படுவதற்கு ஜி25…

சமயப்பள்ளிகள்    அங்குள்ள   சிறார்களுக்குப்   போதுமான   பாதுகாப்பு    அளிக்கத்  தவறும்போது   அப்பள்ளிகளின்   நிறுவனர்களும்   முதல்வர்களுமே   அதற்குப்   பொறுப்பாக்கப்பட   வேண்டும்   என்று  ஜி-25  கூறியது. மலாய்ச்   சான்றோர்களைக்  கொண்ட    அந்த   அமைப்பு,       அப்பள்ளிகள்   நடத்தப்படும்   விதம்   குறித்து   விசாரணை    மேற்கொள்ளப்படுவதற்குச்   சமய     அதிகாரிகள்     எதிர்ப்புத்   தெரிவிக்கக்கூடாது  என்றும்  மாறாக,  அவர்கள்  நேற்றைய  …

மக்களின் பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் வைப்பீர்: ஹரபானுக்கு அன்வார் அறிவுறுத்து

பிகேஆர்   நடப்பில்  தலைவர்   அன்வார்   இப்ராகிம்,  எதிர்க்கட்சிக்  கூட்டணி  மக்களின்  பொருளாதாரப்  பிரச்னைகளைக்  களைவதில்   கவனம்    செலுத்த   வேண்டும்   என்று    வலியுறுத்தியுள்ளார். வாழ்க்கைச்  செலவு  அதிகரிப்பு,  எரிபொருள்   விலை  உயர்வு,  ஜிஎஸ்டி  போன்றவற்றால்   மலேசியர்கள்   அழுத்தத்தை   எதிர்நோக்குவது   குறித்து   அன்வார்  கவலை   தெரிவித்தார். “அதன்   விளைவாக,    கடுமையாக   உழைக்கும்  …

ஸாகிட்: சமயப்பள்ளிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்

  நாடுதழுவிய அளவில் அனைத்து மாணவர்கள் தங்கிப்படிக்கும் சமயப் பள்ளிகள் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இன்று, கோலாலம்பூர், டத்தோ கெராமாட்டிலுள்ள தாபிஸ் டாருல் கொரான் இட்டிஃபாஹ்யாவுக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸாகிட் இவ்வாறு கூறினார்.…

அதிகாலையில் சமயப் பள்ளியில் ஏற்பட்ட தீயில் 24 பேர் மாண்டனர்

  கோலாலம்பூர், டத்தோ கெராமாட்டிலுள்ள ஒரு சமயப் பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீயில் 24 பேர் மாண்டனர். இறந்தவர்களில் 22 பேர் மாணவர்கள். மற்ற இருவரும் பள்ளியின் வார்டன்கள் என்று மாநகர் தீ மற்றும் மீட்பு சேவைகள் இலாகாவின் தகவல் கூறுகிறது. மேலும், காயமடைந்த 11 பேர்…

பதவி உறுதிமொழியை மீறியதாக பிரதமர் மற்றும் துணைப்பிரதமர்மீது வழக்கு

நம்பிக்கை  மோசடி   செய்தார்கள்   என்று  கூறி   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  மீதும்  துணைப்  பிரதமர்   அஹமட்   ஜாஹிட்   ஹமிடிமீதும்   கைருடின்   அபு  ஹசான்  வழக்கு  தொடுத்துள்ளார். அவ்விருவரும்   நஜிப்பின்  சொந்த  வங்கிக்  கணக்கில்   இருந்த   யுஎஸ்$681 மில்லியன்  குறித்து   மக்களிடம்   தவறான   செய்திகளைக்  கூறி  வந்ததாக   அம்னோ …

14வது பொதுத் தேர்தல் எப்போது? நஜிப் மூச்சு விடவில்லை

14வது   பொதுத்    தேர்தல்   அந்த  நாளில்  நடக்கலாம்  இந்த   நாளில்   நடக்கலாம்  என்று  பல்வேறு  தேதிகள்  குறிப்பிடப்பட்டாலும்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்  அது   குறித்து   சிறு  அறிகுறிகூட    காட்டவில்லை. மூன்று- நாள்  அமெரிக்க   வருகையின்     முடிவில்   செய்தியாளர்   ஒருவர்   நஜிப்பை   அணுகி    பொதுத்   தேர்தல்   எப்போது    என்று  …

மகாதிர்: நஜிப்-டிரம்ப் சந்திப்பைப் பார்த்து பெல்டா மக்கள் ஏமாந்து விட…

பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்கும்   அமெரிக்க   அதிபர்   டோனல்ட்   டிரம்பும்  சந்தித்துப்   பேசியதை  ஒரு   பெரிய   சாதனை   என்று  சில  தரப்புகள்   வருணித்துள்ளன. ஆளும்  கட்சி    அரசியல்வாதிகள்,  அவர்களின்   சந்திப்பு    1எம்டிபி    தொடர்பில்  நஜிப்மீது  சுமத்தப்பட்ட   குற்றச்சாட்டுகள்   அனைத்தும்   பொய்யானவை   என்பதைக்    காண்பிப்பதாகக்    கூறிக்கொண்டனர். ஆனால்,   டாக்டர்   மகாதிர் …

ஹரபான்: அமெரிக்காவில் முதலீடு செய்யும்படி இபிஎப்-புக்கும் கஜானாவுக்கும் பிரதமர் உத்தரவிடக்…

பிரதமர்   நஜிப்    அப்துல்    ரசாக்,   அமெரிக்காவில் முதலீடு  செய்யும்படி  ஊழியர்  சேம  நிதி(இபிஎப்)க்கும்  கஜானாவுக்கும்    உத்தரவிட்டிருக்கக்  கூடாது   என்கிறார்  அமனா   வியூக   இயக்குனர்   சுல்கிப்ளி   அஹமட். “முதலீட்டாளர்கள்   பெரிதும்  தயக்கம்   காட்டுபவர்கள்.  ஆதாயம்  கிடைப்பது  உறுதி  என்று    தெரிந்தால்தான்   முதலீடு    செய்வார்கள். நஜிப்   தமக்குச்   சாதகமாக   எதையும்   செய்யக்கூடாது. …

11 வாரங்களாகியும் எரிபொருள் விலை குறைந்தபாடில்லை

  11 வாரங்கள் கடந்து விட்டன. ஆனாலும் எரிபொருள் விலை குறைவதற்கான அறிகுறி தென்படவில்லை. கடந்த வாரம் எரிபொருள் விலை ஏற்றம் கண்டது. அது இவ்வாரமும் தொடர்கிறது. ரோன்95 மற்றும் ரோன்97 விலை ஒரு சென் மற்றும் நான்கு சென் முறையே உயர்ந்து புதிய விலை ஒரு லீட்டருக்கு…

வேதா: 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுடன் ஒத்துழைத்தது தப்புத்தான்

மலேசிய     ஹிண்ட்ராப்    அமைப்பின்  தலைவர்   பி.வேதமூர்த்தி,  அந்த   அமைப்பு  13வது  பொதுத்  தேர்தலில்    பிஎன்னுக்கு   ஆதரவாக   செயல்பட்டது   தப்பு  என்பதை   ஒப்புக்கொண்டார். முன்பிருந்த  பக்கத்தான்  ரக்யாட்டில்   சேரத்தான்   ஹிண்ட்ராப்  விரும்பியது.  அதற்காக  பல  தடவை   பேச்சுகளையும்   நடத்தியது.  அவை  பலனளிக்கவில்லை   என்பதால்,  வேறுவழியின்றி   ஹிண்ட்ராப்   பிஎன்  பக்கம்   சென்றது  …

எம்ஏசிசி: கையூட்டுக் கொடுப்பவர்கள் எங்களைக் கண்டு பயப்படுகிறார்கள்

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய (எம்ஏசிசி)  தலைவர்   சுல்கிப்ளி   அஹ்மட்,  ஆணையத்தை  நினைத்து  கையூட்டுக்  கொடுப்பவர்கள்   பயப்படுகிறார்கள்  என்கிறார். எம்ஏசிசி  மேற்கொண்ட    நடவடிக்கைகள்  குறித்த   செய்திகளைச்  சுட்டிக்காட்டிய   சுல்கிப்ளி,  ஆணையம்  குறித்து   அச்சம்   நிலவுவது  உண்மைதான்   என்றார். “நான்  சந்தித்த   பலர்,   ஊழல்   குறைந்திருப்பது   கண்கூடு   என்று   தெரிவித்தனர்.  இது  …

1எம்டிபி விவகாரத்தைப் பயன்படுத்திப் பொருளாதாரத்தைக் கீழறுப்பு செய்ய முயல்கிறார்கள்: நஜிப்…

மலேசிய   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்,  மலேசியப்  பொருளாரத்துக்குக்  குழிபறிக்க   1எம்டிபி-க்கு   எதிராக    சதிவேலைகள்   முடுக்கி  விடப்பட்டிருப்பதாகக்  கூறினார். அதன்   முடிவான    நோக்கம்     அரசாங்கத்தைக்   கவிழ்ப்பதுதான்     என்றாரவர்.  நஜிப்,  நேற்றிரவு  யுஎஸ்- ஆசியான்  வணிக   மன்றமும்  அமெரிக்க  வர்த்தகச்  சங்கமும்   கலந்துகொண்ட   ஒரு   விருந்தில்   உரையாற்றினார். “மலேசிய   பொருளாதாரம் …

டையம்: மக்கள் மடையர்கள் அல்ல

முன்னாள் நிதி அமைச்சர்   டையம் ஸைனுடின் தாம் இப்போது அரசாங்கத்தில் இருந்தால், பதவியை விட்டு விலகுவேன் என்று கூறுகிறார். செப்டெம்பர் 7 ஆம் தேதி இடப்பட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், "நான் அரசாங்கத்தில் இருந்தால், நான் பதவியிலிருந்து விலகக்கூடும். அது எனக்கு சுலபமானது. பதவியைத் துறந்து விட்டு,…

ஷைட் : இன அரசியல் நடத்தும் பாரிசானால் இந்தியர்களின் இன்னல்களைத்…

பாரிசான் நேசனல் தலைமையிலான (பிஎன்) அரசாங்கத்தால், மலேசியாவின் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், குறிப்பாக இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது, ஏனென்றால், அது இன சார்புடையது என்று ஜனநாயச் செயற்கட்சியின் (ஜசெக) ஷைட் இப்ராஹிம் கூறுகிறார். இன்று, கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில், ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்திருந்த…

‘மலேசியாவைச் சீனா ஆளவில்லை’, மசீச தலைவர் கூறுகிறார்

இன்று, போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டு முதலீட்டையே மலேசியா அதிகம் நம்பியிருக்கிறது என்று குறைகூறும் சில தரப்பினரைச் சாடினார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம், சீனா மலேசியாவை ஆக்கிரமிக்கவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் காரணங்களுக்கானவை மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தினார். சமீப…

எலிசபெத் வோங் : ஹராப்பானுடன் ஒத்துழைக்க, பாஸ் இன்னும் எண்ணம்…

‘ஜனநாயக செயற்கட்சி (டிஏபி) மற்றும் அமானா- உடனான உறவை முறித்துகொண்டால், பாஸ் பிகேஆர்-உடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது’, எனும் பாஸின் நிபந்தனை, அந்த இஸ்லாமியக் கட்சி அரசியல் ஒத்துழைப்பை மீண்டும் நிலைநாட்ட விரும்புகிறது என்பதனை நிரூபிக்கிறது என பிகேஆர் மத்திய நிர்வாகக் குழுவின் உறுப்பினர், எலிசபெத் வோங் கூறியுள்ளார்.…

ராஜா மூடா கெடாவின் புதிய சுல்தான்

கெடாவின்  ராஜா  மூடா   துங்கு  சலேஹுடின்  அல்மர்கும்  சுல்தான்  பாட்லிஷா,  கெடாவின்   புதிய   சுல்தானாக  இன்று   பிரகடனப்படுத்தப்பட்டார்.  துங்கு   சலேஹுடின்   நேற்று   காலமான   சுல்தான்   அப்துல்   ஹாலிம்  முவாட்ஸாம்  ஷாவின்   இளவல்   ஆவார். அவர்  கெடாவின்  29வது  சுல்தானாக   ஆட்சியில்  அமர்கிறார்.    59  ஆண்டுகள்   கெடாவை   ஆண்ட   சுல்தான் …

மலேசியர்கள் காலஞ்சென்ற கெடா சுல்தானுக்கு இறுதி மரியாதை தெரிவித்தனர்

 காலஞ்சென்ற   கெடா  ஆட்சியாளர்,  சுல்தான்   அப்துல்   ஹாலிம்   முவாட்ஸாம்   ஷாவின்  நல்லுடல்    மக்கள்   இறுதி   மரியாதை   தெரிவிப்பதற்காக    கெடா    இஸ்தானா   அனாக்   புக்கிட்-டில்    வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள்  காலை  மணி   11-இலிருந்து   பிற்பகல்   12.30வரை    இறுதி  மரியாதை   தெரிவிக்க   அனுமதிக்கப்பட்டனர்.  அதன்  பின்னர்  பெருமக்கள்   12.30-இலிருந்து  பிற்பகல்   1.30வரை  அங்கு  …

டிரம்பும் நஜிப்பும் பாதுகாப்புப் பற்றிப் பேசுவார்கள், மோசடி விவகாரம் பற்றியல்ல

 இன்று   வெள்ளை  மாளிகை     செல்லும்   மலேசிய  பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்கை   அமெரிக்க   அதிபர்   டோனல்ட்  டிரம்ப்   வரவேற்பார்.   அவர்களின்  பேச்சு  பாதுகாப்பு   விவகாரங்களில்தான்   கவனம்   செலுத்தும்.  மலேசியாவில்   நிகழ்ந்ததாகக்  கூறப்படும்   ஊழல்  விவகாரம்மீது   அமெரிக்க    நீதித்துறை   மேற்கொண்டுள்ள  விசாரணை  அவர்களின்  பேச்சில்   அடிபடாது. இந்த    வருகை   நஜிப்புக்கு   …

யுஎன்எச்ஆர்சி-இல் இடம்பெற மலேசியாவுக்கு ‘முற்றிலும் தகுதியில்லை’- மனித உரிமை அமைப்புகள்

மனித  உரிமை  அமைப்புகள்,  ஐநாவின்  மனித  உரிமை   மன்றத்தில்   இடம்பெற   மலேசியாவுக்குத்   தகுதியில்லை   என்று   கூறியுள்ளன. 2018- 2020  தவணைக்கு   யுஎன்எச்ஆர்சி-இல்  இடம்பெற    மலேசியா   போட்டியிடும்   என   அறிவிக்கப்பட்டிருப்பதை   அடுத்து   யுகே-இலிருந்து   செயல்படும்  Article 19உம்  சுவாரா  ரக்யாட்  மலேசியா(சுவாராம்)வும்   அதில்   இடம்பெறுவதற்குமுன்  மலேசியா   பேச்சுரிமைக்கெதிரான   அடக்குமுறையைக்  கைவிட  …

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் – ஹலிமா யாக்கோப்

எதிர்வரும் புதன்கிழமை, சிங்கப்பூரின் புதிய அதிபராக ஹலிமா யாக்கோப் பதவி ஏற்கவுள்ளார். ஹலிமா யாக்கோப், சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற சபா நாயகராக இருந்தவர். அதிபர் தேர்தல் குழு (பி.ஈ.சி.), அதிபர் பதவிக்கு வந்த ஐந்து விண்ணப்பதாரர்களில், ஒருவருக்கு மட்டுமே தகுதி சான்றிதழ் வழங்கியதாக, சிங்கப்பூர் டெய்லி நியூஸ் செய்தி…

பாஸுக்கு வாக்களிப்பது பிஎன்னுக்கு வாக்களிப்பதற்கு ஒப்பாகும்- மகாதிர்

டாக்டர்    மகாதிர்    முகம்மட்,    பாஸுக்கு  அளிக்கப்படும்   வாக்கு  பிஎன்னுக்கு   அளிப்பதாகும்   என்பதுடன்   அது   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்  நிர்வாகத்தின்   அத்துமீறல்களுக்குத்   துணைபோவதாகவும்   ஆகும்   என்றார். “தீயவர்கள்   செய்யும்   பாவங்கள்  அவர்களை   ஆதரிப்போரையும்   வந்து   சேரும். “எனவே  பாஸ்   தலைவர்களும்  உறுப்பினர்களும்   திருந்த   வேண்டும்”,  என்று  பக்கத்தான்  ஹரபான்   …