நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் அல்லது தீபாவளிக்குமுன் விடுதலை செய்யுங்கள்- சந்தியாகு

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் நீதிமனறத்தில் நிறுத்த வேண்டும் அல்லது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர்கள் தீபாவளிக்கு முன்னதாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்களின் மனைவிமார் புக்கிட் அமானுக்கு…

யார் என்ன சொன்னாலும் பிரதமர் பதவி மாற்றத்தில் மாற்றமிராது- அன்வார்

டாக்டர் மகாதிர் முகம்மட் உரிய காலத்தில் பிரதமர் பதவியைத் தம்மிடம் ஒப்படைப்பார் என்று அன்வார் இப்ராகிம் உறுதியாக நம்புகிறார். சிலர் தன்னை முந்திக்கொண்டு பிரதமர் ஆக ஆசைப்பட்டாலும் அது நடவாது என்றாரவர். துருக்கி நாட்டு தொலைக்காட்சி டிஆர்டி வொர்ல்ட் -டுக்கு அளித்த நேர்காணலில் அன்வார் அவ்வாறு கூறினார். பிகேஆர்…

தீபாவளி-இல் புதிய நரகாசூரன் –  இராகவன் கருப்பையா

தீபாவளி என்றாலே புத்தாடை, முறுக்கு, பட்டாசு, மத்தாப்பு - இவற்றை அடிப்படையாகக்கொண்டுதான் அமைந்திருக்கும், முன்பொரு காலக்கட்டத்தில். இவைகளோடு, 'மதுபானம்' என்றொரு அரக்கனும் ஒட்டிக்கொள்வான் - பல இல்லங்களில். ஆனால் காலத்தின் பரினாம வளர்ச்சிக்கு ஏற்ப இந்தத் தீபத் திருநாள் கொண்டாட்டங்கள் பலவகையிலும் பெரிய அளவிலான மாற்றங்களைக் கண்டுள்ள போதிலும்,…

டிஏபி தலைவர்கள் அனுபவசாலிகள், சாதிக்போல் ‘சிறுபிள்ளை’கள் அல்ல- இராமசாமி

பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, சிலாங்கூர் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானைக் கடுமையாக சாடினார். டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் குறைகூறிய லியுமீது பிபிபிஎம் தலைவர்களுக்கு ஆத்திரம் இருக்கலாம் அதற்காக…

செம்பனை எண்ணெய் விவகாரம் ஆர்சிஇபி பேச்சுகளைப் பாதிக்காது: லெகிங் நம்பிக்கை

இந்தியாவுடனான செம்பனை எண்ணெய் விவகாரம் ஆண்டு இறுதியில் முடிவுக்கு வரவுள்ள வட்டார பொருளாதாரப் பங்காளித்துவ(ஆர்சிஇபி) பேச்சுகளைப் பாதிக்காது என்று மலேசியா நம்புகிறது. அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் டேரல் லெய்கிங், அக்டோபர் 10திலிருந்து 12வரை பெங்கோக்கில் நடைபெற்ற ஆர்சிஇபி அமைச்சர்நிலை மாநாட்டின்போது இந்தியாவின் வர்த்தக, தொழில் அமைச்சர் பியுஷ்…

லண்டனில் ஜோ லோவின் பல மில்லியன் பெறுமதியுள்ள அலுவலகக் கட்டிடம்…

மலேசிய சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஜோ லோவுக்குச் சொந்தமாக லண்டனில் உள்ள பெண்களின் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகக் கட்டிடம் ஏலத்துக்கு விடப்படும். 1எம்டிபிஇலிருந்து முறைகேடாக பெறப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்துகளைத் தேடும் அமெரிக்க (சட்டத்துறை) அதிகாரிகள் கட்டிடத்தை விற்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து…

நான் தவறு செய்யவில்லை, அதனால் அஞ்சத் தேவையில்லை- ரோனி லியு

டிஏபி-இன் சுங்கை பிலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைச் சந்திக்கத் தயார் என்று அறிவித்துள்ளார். மனசாட்சியின்படி எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார் அவர். பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைக் குறைகூறியதற்காகவும் பெர்சத்துக் கட்சியைத் தள்ளிவைத்து பக்கத்தான் ஹரப்பானின் மற்ற கட்சிகள் அரசாங்கம் அமைக்க…

பதின்ம வயதினரிடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரிப்பு

2012க்கும் 2017க்குமிடையே மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு பதின்ம வயதினரிடையே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் பெருகி வருவதைக் காட்டுகிறது என்கிறார் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை. “13க்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவரிடையே மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 2017-இல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.…

சைனல் கிளிங் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்

வெள்ளிக்கிழமை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு விசாரணைக்கு வருமாறு மலாய் தன்மான காங்கிரசின் தலைமை நிர்வாகச் செயலாளர் சைனல் கிளிங்-கை போலீஸ் அழைத்துள்ளது. பினாங்கைச் சேர்ந்த யோகனாதன் லோகனாதன் தன்மானக் காங்கிரசுக்கு எதிராக செய்த போலீஸ் புகாரின் தொடர்பில் சைனல் கிளிங் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவரிடம் வாக்குமூலம் பதிவு…

பெர்சத்து பிரதிநிதி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து லியு-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க…

ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் ஷாயிட் ரோஸ்லி பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் குறைகூறிய டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ரோன்னி லியுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புகிறார். எதிர்ப்பை வெளிப்படுத்த ஒரு வினோதமான முறையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தன் எதிர்பபைக்…

குடிப்பதற்குத் தண்ணீர் தேவை- கெடா எம்பி-இடம் குடியிருப்பாளர்கள் கோரிக்கை

மற்றவர்களுக்கு இன்பம் பொங்கும் தீபாவளியாக இருக்கலாம் ஆனால், கெடா, பாடாங் செராய் அருகில் பாடாங் மெஹாவில் 70க்கு மேற்பட்ட குடும்பங்கள் தீபாவளியைத் குதூகலமாகக் கொண்டாடுவார்களா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. அவர்கள் செப்டம்பர் 25 தொடங்கிக் குழாய் நீர் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். வரவேண்டிய குடிநீர் சட்டவிரோதமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று அக்குடியிருப்பாளர்கள்…

இராமசாமி புக்கிட் அமானுக்கு விளக்கமளித்தார்

பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பி.இராமசாமி இன்று புக்கிட் அமான் சென்று கடந்த மாதம் அவர் இணைய செய்தித் தளமொன்றில் எழுதிய கட்டுரைமீது செய்யப்பட்ட போலீஸ் புகார் தொடர்பில் விளக்கம் அளித்தார். இராமசாமி காலை மணி 9.50க்கு புக்கிட் அமான் சென்றார். “இணையச் செய்தித்தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை…

‘மகாதிரைப் பதவி இறங்கக் கட்டாயப்படுத்தினால் பிரச்னை உண்டாகலாம்’

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கட்டாயப்படுத்திப் பதவி விலகச் செய்தால் அது பிரச்னைகளை உண்டு பண்ணலாம் என்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா. அரசியல் நிலைத்தன்மைக்காக மகாதிரால் எவ்வளவு காலத்துக்கு இயலுமோ அவ்வளவு காலத்துக்குப் பிரதமராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பிகேஆர் தலைவர் அன்வார்…

பேரரசர் ஜப்பானுக்குச் சிறப்பு வருகை

பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்-முஸ்டபா பில்லா ஷா-வும் பேரரசியார் துங்கு ஹஜ்ஜா அசிசா மைமுனா இஸ்கண்டரியா-வும் நாளை தொடங்கி அக்டோபர் 24வரை ஜப்பானுக்குச் சிறப்பு வருகை மேற்கொள்வதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது. மலேசியாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் நிலவும் அணுக்கமான உறவுகளை வலுப்படுத்த நோக்கில் அவ்வருகை மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு அமைச்சு…

சோஸ்மா கைதிகளை உடனடியாக விடுதலை செய்க: ஹசான் கரிம்

பாசிர் கூடாங் எம்பி ஹசான் அப்துல் கரிம், பாதுகாப்புச் சட்டம் (சிறப்பு நடவடிக்கைகள்) அல்லது சோஸ்மாவின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும், அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்டிடிஇ) தொடர்புள்ளவர்களோ ஐசிஐஎஸ் தொடர்புள்ளவர்களோ உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐஜிபி-யைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “காரணம், அது ஜிஇ14-இல் மக்களால் நிராகரிக்கப்பட்ட பிஎன் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட…

மலேசியாமீது வர்த்தக தடை விதிக்கப்படலாம்: மகாதிர் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் அதிகரித்துவரும் காப்புவரி போராட்டத்தின் விளைவாக ஏற்றுமதியை நம்பியுள்ள மலேசியாவும் வர்த்தகத் தடைகளை எதிர்நோக்கக் கூடும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். வர்த்தகத் தடைகளை விதிக்கப்போவது யார் என்பதை மகாதிர் குறிப்பிடவில்லை, ஆனால், கட்டுப்பாடற்ற வணிகத்தை ஆதரிக்கும் நாடுகள் இப்போது வர்த்தகத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தத்…

பள்ளியில் தொல்லைக்கு உள்ளான ஓராங் அஸ்லி மாணவர் மருத்துவமனையில்

நெகிரி செம்பிலானில் தங்கும் வசதிகொண்ட ஒரு பள்ளியில் மூத்த மாணவர்களின் அடாவடித்தனத்துக்கு ஆளான ஓராங் அஸ்லி மாணவர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டதாக போலீசார் கூறினர். தொடக்க விசாரணையில், அந்த 13-வயது மாணவர் இவ்வாண்டு தொடக்கத்தில் ஸ்கோலா மெனெங்கா சயின்ஸ் ரெம்பாவில் முதல் படிவத்தில் சேர்ந்த நாளிலிருந்தே மூத்த மாணவர்களின்…

உங்கள் கருத்து: விசி அந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகத்துக்குத் தலைவராக இருக்க…

பட்டமளிப்பு விழா எதிர்ப்பைக் காட்ட சரியான இடமல்ல, பட்டத்தைப் பறிக்க வேண்டிய அவசியமில்லை - சைட் சிட்டிக் பெயரிலி770241447347646: எதிர்ப்பைக் காட்ட பட்டமளிப்பு விழா சரியான இடமில்லைதான். இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சிட்டிக் கூறுவதை ஒப்புக்கொள்கிறோம். மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (விசி) அப்துல் ரஹ்மான் செய்ததும்…

இரண்டாவது பறக்கும் கார் அடுத்த ஆண்டில்

மலேசியாவின் இரண்டாவது பறக்கும் கார் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வானில் பறக்கலாம் என்கிறார் தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ரெட்சுவான் முகம்மட் யூசுப். அது முதல் காரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தொழில்நுணுக்கத்தைக் கொண்டிருக்கும். இப்போது அது ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் அதன் வெள்ளோட்டதை வைத்துக்கொள்வது…

சோஸ்மா அகற்றப்பட வேண்டும்: உரிமைக்காக போராடும் வழக்குரைஞர்கள் கோரிக்கை

சர்ச்சைக்குரிய பாதுகாப்புக் குற்றச் சட்டம்(சிறப்பு நடவடிக்கைகள்) 2012 (சோஸ்மா) அகற்றப்படாது அதற்குப் பதிலாக திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பது உரிமைக்காகப் போராடும் வழக்குரைஞர் அமைப்புக்குக் கவலை அளிக்கிறது. அதன் இயக்குனர் மெலிஸ்ஸா சசிதரன், கடந்த காலத்தில் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்கட்சியினரையும் ஒடுக்க சோஸ்மா எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை அரசாங்கம்…

மாணவர்மீது கடும் நடவடிக்கையைத் தவிர்ப்பீர்- கிட் சியாங்

மலாயாப் பல்கலைக்கழக துணை வேந்தர் அப்துல் ரகிம் ஹஷிம் பட்டமளிப்பு விழாவின்போது எதிர்ப்புத் தெரிவித்த மாணவர் வொங் யான் கெ-மீதான போலீஸ் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டிஏபி எம்பி லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவரைப் பழி வாங்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட…

கொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல வேண்டாம்- டிஏபி எச்சரிக்கை

கடந்த பொதுத் தேர்தலில் தோற்றவர்கள் கொல்லைப்புற வழியாக அரசாங்கத்தில் இடம்பெற முயற்சி செய்யக்கூடாது. அம்னோ எம்பி ஹிஷாமுடின் ஹஷிம் ஒரு புதிய அரசாங்கம் அமைக்க முயல்வதாகக் கூறப்படுவதை அடுத்து டிஏபி அந்த எச்சரிக்கையை விடுத்தது. கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு நாட்டை ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தார்கள்.…

எதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா அதற்கான இடமல்ல- பிரதமர்

எதிர்ப்புத் தெரிவிக்க நினைத்தால் அதற்கு வேறு இடங்கள் உள்ளன என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். சடங்குப் பூர்வமான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது அதில் எதிர்ப்பைக் காட்டுவது முறையல்ல என்றாரவர். மலாயாப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக துணை வேந்தர்(விசி) பதவி…