மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
பாகோவை பெர்சத்துவிடமிருந்து கைப்பற்றுவோம்: பிரதமர் சூளுரை
நாடு என்றும் முற்போக்காகத் திகழ மக்கள், குறிப்பாக பெல்டா குடியேற்றக்காரர்கள் பிஎன்/அம்னோவைத்தான் ஆதரிக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவுறுத்தினார். மக்கள் தன்னைத்தானே நம்பும் அம்னோமீதுதான் நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர மற்ற கட்சிகளை அண்டிப் பிழைக்கும் கட்சிகளை நம்பக் கூடாது என பிஎன் தலைவரும் …
அன்வார்: ரபிசி சிறையிடப்பட்டது மாற்றம் அவசரத் தேவை என்பதைக் காண்பிக்கிறது
ஒரு ஊழல் விவகாரம் தொடர்பான தகவல்களை வெளியிட்டதற்காக பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கு 30 மாதச் சிறை விதிக்கப்பட்டிருப்பது நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்ற வேண்டும் என்பதைக் காண்பிப்பதாக சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். “சிலாங்கூர், பினாங்கு அரசுத் தலைவர்கள் உள்பட எதிரணித் …
போலீஸ்: டச்சு மாடலின் காணொளி ‘சூழ்நிலைச் சான்று’, அவ்வளவுதான்
டச்சு மாடல் அழகி இவானா எஸ்தர் ரோபர்ட் ஸ்மித்தின் கடைசித் தருணங்களைக் காண்பிக்கும் சிசிடிவி காணொளி ஒரு “சூழ்நிலைச் சான்று” மட்டுமே என்று கூறிய போலீஸ், வெளித் தரப்புகள் அவரது இறப்புமீதான போலீஸ் விசாரணையில் குறுக்கிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அவ்வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் போலீஸ் நுணுகி ஆராய்ந்து …
நாளை முஹிடினின் கோட்டையைப் பிரதமர் ‘தாக்குவார்’
நாடாளுமன்ற களைப்பு எப்போது என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், அனைத்து கட்சிகளிடையேயும் பொதுத் தேர்தல் சூடு பறக்கத் தொடங்கிவிட்டது. அந்தச் சூழ்நிலையில், பிரதமர் நஜிப் ரசாக் மக்களைச் சந்திக்கச் செல்லவுள்ளார். நாளை, பிரதமர் ஓர் உயர்மட்டப் பகுதியான, பாகோவில் காலடி எடுத்து வைக்கப்போகிறார். ஜொகூரின் வட மாவட்டமான பாகோவின் எம்.பி.,…
ஷாரிசாத்: என்.ஃப்.சி. சர்ச்சையில் பாதிக்கப்பட்டது ரஃபிசி அல்ல
நேசனல் ஃபீட்லோட் கோப்பரேஷென் (என்.ஃப்.சி.) சர்ச்சையில் பாதிக்கப்பட்டது ரஃபிசி அல்ல என்று அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாத் ஜாலில் தெரிவித்தார். இன்றைய உத்துசான் மலேசியா செய்திகள் படி, ரஃபிசியின் அரசியல் நோக்கங்களுக்கான அவருடைய நடவடிக்கைகளால் விளைவுகளைச் சந்தித்தவர்களே பாதிக்கப்பட்டவர்கள் என்று ஷாரிசாத் கூறியுள்ளார். என்.ஃப்.சி. திட்டத்தின் தோல்விக்குக் காரணம்…
பாலியல் துன்புறுத்தல் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும், இளைஞர் நாடாளுமன்றம்…
பாலியல் துன்புறுத்தல் சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இளைஞர் நாடாளுமன்றம் அரசாங்கத்தை, இன்று வலியுறுத்தி உள்ளது. தற்போது, மலேசிய சமூகத்தில் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க எந்தக் குறிப்பிட்ட சட்டமும் இல்லை என்று பினாங்கு பிரதிநிதி அஹ்மாட் ஷாகி ஷா…
கிளந்தான் அரண்மனை, மகாதிரின் பதக்கங்களையும் திரும்பப் பெற்றது
அமானாவின் இரண்டு மூத்தத் தலைவர்களின் பதக்கங்களைத் திரும்பப் பெற்ற ஒருநாளுக்குப் பின்னர், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் கௌரவப் பதக்கங்களையும் கிளந்தான் அரண்மனை திரும்பப் பெற்றது. இன்று, கடிதம் வாயிலாக, கிளாந்தான் அரண்மனை அச்செய்தியை மகாதிர் தரப்பினருக்கு அறிவித்தது. பிப்ரவரி 6-ம் தேடியிட்ட அக்கடிதம், இன்று…
பெர்சத்து ஏஜிஎம் மீது ஆர்ஓஎஸ் விசாரணை: துணைப் பிரதமர் உறுதிப்படுத்தினார்
பெர்சத்துவின் ஆண்டுக் கூட்டம்(ஏஜிஎம்) நடத்தப்பட்ட முறை குறித்து கட்சி உறுப்பினர்கள் பலர் ஆட்சேபனை தெரிவித்திருப்பதால் சங்கப் பதிவகம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது எனத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். விசாரணையில் பல ஆவணங்களைப் பார்வையிட வேண்டியிருக்கும் என்பதால் அது முடிவடைய சிறிது காலம் பிடிக்கும் என்றாலும் விசாரணையை …
அன்வார்: முகாபே போல் அல்லாமல் மகாதிர் சீரமைப்புகளில் அக்கறை கொண்டுள்ளார்
டாக்டர் மகாதிர் முன்னாள் ஸிம்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபே போன்றவர் அல்ல என்கிறார் அவரின் முன்னாள் எதிரியும் இந்நாள் தோழருமான அன்வார் இப்ராகிம். முகாபேபோல் அல்லாமல் மகாதிர் சீர்திருத்தங்களில் அக்கறை காட்டுகிறார் என்றாரவர். இன்று நீதிமன்றத்துக்கு வெளியில் , அன்வாரைச் சந்தித்த செய்தியாளர்கள், பக்கத்தான் ஹரபான் தலைவர் என்ற …
ரபிசி சிறையிடப்பட்டதில் பிஎஸ்எம் தலைவருக்கு வருத்தம்
நேசனல் பீட்லோட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளைக் கசிய விட்டதற்காக பாண்டான் எம்பி ரபிசி ரம்லிக்கும் பப்ளிக் பேங்க் அலுவலர் ஜொஹாரி முகம்மட்டுக்கும் 30 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ஏமாற்றமளிப்பதாக பாரிடி சோசியலிஸ் மலேசியா மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ். அருள்செல்வன் கூறினார். நேற்றிரவு முகநூலில் பதிவிட்ட அவர், …
ஹனிபா: மலேசியாவில் போலிச் செய்திகளால் அல்ல உண்மைச் செய்திகளால்தான் ஆபத்து
போலிச் செய்திகளை ஒடுக்குவது ஒரு சரியான நடவடிக்கைதான் என்று கூறும் அமனா எம்பி ஹனிபா மைடின், இந்நாட்டில் “உண்மைச் செய்திகளைச் சொல்வதுதான்” ஆபத்தாக முடிந்து விடுகிறது என்கிறார். “போலிச் செய்திகளை ஒடுக்குவது நல்லதுதான். ஆனால், இந்நாட்டைப் பொருத்தவரை சரியான செய்திகளைச் சொல்வோர்தான் பாதிக்கப்படுகிறார்கள்”, என அவர் ஓர் அறிக்கையில் …
அரசாங்கம் ஒரு சிசிடிவி கேமராவுக்கு ரிம150 ஆயிரம் செலவிட்டதே, அது…
பினாங்கு மாநில அரசு பெருஞ்செலவில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருப்பதாக மசீச குற்றஞ்சாட்டியதற்கு எதிர்வினையாற்றிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ, கூட்டரசு அரசாங்கம் பொருத்திய கேமராக்கள் ஒவ்வொன்றுக்கும் ரிம157,800 செலவிடப்பட்டுள்ளதே, அது மாநில அரசு கொடுத்த விலையைவிட இரு மடங்காயிற்றே என்று பதிலடி கொடுத்துள்ளார். 2015-இல் வீடமைப்பு,…
‘ரஃபிசியின் குற்றச்சாட்டுக்குப் பிறகு, தாபோங் ஹஜி வைப்புத்தொகைகள் திரும்பப் பெறப்படுவது…
கடந்த 2016-ல், பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி, தாபோங் ஹஜிக்கு எதிராக செய்த குற்றஞ்சாட்டுகளின் விளைவாக, வைப்புத்தொகையாளர்கள் தங்கள் வைப்புத்தொகைகளைத் திடீரென திரும்பப் பெறுவது அதிகரித்து வருவதாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. தாபோங் ஹஜி தலைமை நிதி அதிகாரி, ரோசாய்டா ஓமர், தனது பிரிவு…
சீனப்புத்தாண்டு நெருங்கி வரும்வேளையில், ரோன்95 2 காசு உயர்கிறது
இன்று நள்ளிரவு தொடக்கம், ரோன்95 2 சென்னும், ரோன்97 3 சென்னும் உயர்கிறது. அடுத்த 1 வாரத்திற்கு ரோன்95 லிட்டருக்கு ரிம2.33 ஆகவும், ரோன்97 லிட்டருக்கு ரிம2.61 ஆகவும் விற்கப்படும். டீசலின் விலை, 3 சென் குறைந்து லிட்டருக்கு ரிம2.31 ஆக விற்கப்படும். சீனப் புத்தாண்டு காலகட்டத்தில், இந்தப்…
ஆசிரியர்கள் பள்ளிக்குத் தொலைபேசிகளை எடுத்து வரலாம் என்று இப்போது பி.கமலநாதன்…
ஆசிரியர்கள் பள்ளிக்குக் கைத்தொலைபேசிகளைக் கொண்டுவரலாம் என்று துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் இன்று விளக்கமளித்துள்ளார். இது, நேற்று உத்துசான் மலேசியா வெளியிட்ட, ஆசிரியர்கள் கைப்பேசிகளை வகுப்பறைகளுக்குக் கொண்டு வரவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது, ஆசிரியர் அறையிலோ அல்லது அலுவலகத்திலோ வைத்து செல்லலாம் என்ற அறிக்கைக்கு நேர்மாறாக உள்ளது. இன்று கமலநாதன்…
மகாதீர் காலத்தில் அவர் இந்தியர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை? சாமிவேலு பதில்…
அண்மையில் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் , டத்தோ ஸ்ரீ தேவமணியும்,மகாதீர் பிரதமராக இருந்த போது இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் அதனால்தான் இன்று இந்தியர்கள் முன்னேற்றமடையாமல் பின்தங்கியே இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்கள். மகாதீர் காலத்தில் டாக்டர் சுப்ராவும்தேவமணியும் அமைச்சரவையில் இல்லை . அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி மாகதீர் இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று திட்டவட்டமாகத் சொல்லமுடியும் ? மகாதீர் இந்தியர்களுக்கு செய்ததுவும் செய்யாததுவும் துல்லியமாக தெரிவைத்திருப்பவர் அப்பொழுது அமைச்சரவையில் இருந்த துன் சாமிவேலுதான் ! அவர்தான் இந்தியர்களுக்கு மாகாதீர் என்ன செய்தார் என்பதனை தெளிவு…
இந்திராவின் முன்னாள் கணவரின் உருவப்படத்தை போலீஸ் வெளியிட்டது: தேடல் தொடர்கிறது
தன் மகளை முன்னாள் மனைவி எம்.இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க மறுக்கும் முகம்மட் ரித்வான் அப்துல்லாவைத் தேடும் நடவடிக்கையை நிறுத்தவில்லை எனப் போலீஸ் கூறுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈப்போ உயர் நீதிமன்றம் மகளை முன்னாள் மனைவியிடமே ஒப்படைக்குமாறு ரித்வானுக்கு உத்தரவிட்டதிலிருந்து அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க போலீஸ் முயன்று வருகிறது …
ரிங்கிட் உயர்வில் நஜிப் பெருமை கொள்ள எதுவுமில்லை
அண்மைய மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு உயர்ந்து வருவது குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பெருமை கொள்ள எதுவுமில்லை என்கிறார் டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா. கடந்த பொதுத் தேர்தல் முடிந்த வேளையில் ரிங்கிட் பரிவர்த்தனை ஒரு டாலருக்கு ரிம2.98 என்றிருந்தது,…
ஹுசாம், முன்னாள் எம்பி ஆகியோரின் டத்தோ பட்டங்கள் பறிக்கப்பட்டன
சாலோர் சட்டமன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா, முன்னாள் கோத்தா பாரு எம்பி வான் அப்ட் ரகிம் ஆகியோர் நேற்றிலிருந்து டத்தோக்கள் அல்ல. அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. கிளந்தான் மாநிலச் செயலாளர் நேற்று மாலை ஒரு கடித வாயிலாக இதைத் தெரிவித்திருந்தார் என ஹுசாமும் வான் அப்ட் ரகிமும் …
காலிட் பாஸ் பக்கம்தான்: ஹாடி நம்பிக்கை
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார் என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் நம்புகிறார். காலிட்டைச் “கைச்சுத்தமானவர்” என்று வருணித்த ஹாடி, அவர் சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்தபோது அவருக்கும் பாஸுக்கும் நல்லுறவு நிலவியதாகக் கூறினார்.…
என்எப்சி வழக்கில் ரபிசிக்கும் வங்கி அலுவலருக்கும் 30மாதச் சிறை
நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தரவுகளை வெளியிட்ட குற்றத்துக்காக பாண்டான் எம்பி ரபிசி ரம்லிக்கும் பப்ளிக் பேங்க் முன்னாள் அலுவலர் ஜொஹாரி முகம்மட்டுக்கும் 30மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் வங்கி, நிதிக்கழகச் சட்ட(Bafia)த்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருப்பதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜம்ரி பக்கார் …
அல்தான்துயா கொலை வழக்கு : தீபக் விசாரிக்கப்படுவார்
அல்தான்துயா ஷாரிபு கொலை செய்யப்பட்ட வழக்கில், தனியார் புலன்விசாரணை அதிகாரி பி பாலசுப்ரமணியத்தின் குடும்பம் ஐந்து ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்டதன் தொடர்பில், அவரின் மனைவி, ஏ.செந்தமிழ்ச்செல்வி, சர்ச்சைக்குரிய கார்பெட் விற்பனையாளர், தீபக் ஜெய்கிஷியனை விசாரிக்க, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று அனுமதி கொடுத்தது. நீதிமன்றம் வந்த தீபக், எதிர்வரும் மார்ச்…
யாருடைய அறிக்கை அடிப்படையற்றது? வேள்பாரியிடம் ஜெயக்குமார் கேள்வி
கடந்த பிப்ரவரி 3-தேதி, ம.இ.கா. பொருளாளர் எஸ். வேள்பாரி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், ஏழை இந்தியர்களுக்கு அமானா சாஹாம் 1 மலேசியா (அ.ச.1ம.) திட்டத்தால் பலனில்லை என்று வெளியிட்ட அறிக்கை அடிப்படையற்றது என்று கூறியிருந்தார். அதன் தொடர்பில், டாக்டர் ஜெயக்குமார் ஒரு…












