இந்தியாவும் சீனாவும் எல்லைத் தகராறை முடிவுக்கு கொண்டுவந்துள்ளன

  இந்தியா-சீனா எல்லையில் தகராறுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து தங்களுடைய படைகளை விரைந்து மீட்டுக்கொள்வதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்று இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்தது. இவ்விரு நாடுகளின் போர்வீரர்கள் இந்தியா, பூட்டான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகிலுள்ள டோக்லாம் பீடபூமியில் போரை எதிர்நோக்கி இருந்தனர். இந்த…

பெர்சே 3 ஆர்ப்பாட்டக்காரரின் இடது கண் பாதிப்பிற்கு ரிம40,000 வழங்க…

  பெர்சே 3 ஆர்பாட்டத்தின் போது போலீஸ் படையினர் வெடித்த கண்ணீர் புகைக் குண்டால் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற 32 வயதான அஸ்ருல் வாடி அஹமட் அவருடைய இடது கண் பார்வையை இழந்தார். அதற்கு இழப்பீடாக ரிம40,000 வழங்கும்படி அரசாங்கத்திற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஆனால், ஆர்பாட்டம் நடந்த…

மகாதீர் : பாரிசானைத் தோற்கடிக்க, நம் சொந்த நலன்களைத் தியாகம்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியை வெல்ல விரும்பினால், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலன்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு, பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் டாக்டர் மகாதீர், அக்கூட்டணியின் உறுப்புக்கட்சிகளுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். "தியாகம் செய்வதோடு, நாம் நமது நண்பர்களையும் சகித்துக்கொள்ள வேண்டும். நமது கட்சி…

பாஸ் பேச்சுகள்மீது சிறப்பு மாநாடு கூட்டுக: பிகேஆரில் கோரிக்கை

பாஸுடன்   தொடர்புகள்   வைத்துக்கொண்டிருப்பது      கட்சிக்குள்  பதற்றத்தை   உண்டாக்கி  இருப்பதால்  அது   குறித்து     விவாதிக்க   சிறப்பு   மாநாடொன்று   கூட்டப்பட   வேண்டுமென்று    பிகேஆர்   தொகுதித்  தலைவர்கள்  சிலர்   கோரிக்கை   விடுத்துள்ளனர். தங்களை   ஹராபான்  பக்கத்தான்   பணிக்குழு   என்று   அழைத்துக்கொள்ளும்   அவர்கள்,  பாஸுடன்  பேச்சுகள்   நடத்துவது    பக்கத்தான்  ஹராபான்   கூட்டணியில்   உள்ள   பிகேஆர் …

பி.கே.ஆரிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும், ஷைட் ஆலோசணை

பக்காத்தான் ஹாராப்பன் கட்டமைப்பிற்கு வெளியே, பாஸ் உடன் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகளைப் பிகேஆர்,  விளக்க வேண்டும் என்று ஷைட் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார். மேலும், இன்றிரவு நடைபெறவுள்ள பக்காத்தான் கூட்டணி சந்திப்பில், அத்திட்டத்தை நிராகரிக்கும் அமானா, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். "அமானா இன்று தங்கள்…

சீ போட்டிகள்: மலேசியாவிடம் தங்கம் குவிகிறது, இதுவரை 100 தங்கப்…

சீ  விளையாட்டுப்   போட்டிகளில்  மலேசியா   சற்று  முன்னர்தான்  அதன்   100வது  தங்கப்  பதக்கத்தைப்  பெற்றது.  அது  rhythmic gymnastics  நிகழ்வில்   கிடைத்தது. அந்தத்  தங்கத்தைப்   பெற்றுத்தந்த  ஜிம்னாஸ்ட்  வீராங்கனைகளுக்கு    இளைஞர்,  விளையாட்டு   அமைச்சர்    கைரி    ஜமாலுடின்   பாராட்டும்   நன்றியும்    தெரிவித்தார். கோலாலும்பூரில்    நடைபெறும்   சீ  விளையாட்டுப்   போட்டிகளில்   111  …

கிளந்தான் பிகேஆர் இளைஞர் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்

கிளந்தான்  மாநில  பிகேஆர்    தலைமைத்துவத்தில்   நெருக்கடி   முற்றி  அதன்   இளைஞர்   தலைவர்   டாக்டர்   ஹாவிட்ஸ்   ரிசால்  அம்ரான்  பணிநீக்கம்   செய்யப்பட்டார். பிகேஆர்   தேசிய   இளைஞர்   தலைவர்   நிக்   நஸ்மி   நிக்   மாட்   மலேசியாகினியிடம்   இதை  உறுதிப்படுத்தினார். “அது  உண்மைதான்.  புதிய   தலைவர்   விரைவில்    அறிவிக்கப்படுவார்.  பிகேஆர்   தேசிய   நிலைத்  …

மகாதிர்: பெக்கானில் ‘திடீர் மக்கள்தொகை பெருக்கம்’ எப்படி வந்தது?

 பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து) அவைத்   தலைவர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  தொகுதியான   பெக்கானில்   திடீரென்று   வாக்காளர்   எண்ணிக்கை   பெருக்கம்   கண்டது    எப்படி   என  மீண்டும்   கேள்வி  எழுப்பியுள்ளார். 1999-இல்   மற்ற  இடங்களிலிருந்து   வாக்காளர்கள்   கொண்டுவரப்படாதிருந்தால்   நஜிப்  பெக்கானில்   தோற்றிருப்பார்   என்று …

பி.எஸ்.எம்: நஜிப் ஹிண்ட்ராப்பைக் கையாண்ட விதத்தை டாக்டர் மகாதீர் பின்பற்றுகிறார்

13-வது பொதுத் தேர்தலில், மலேசிய இந்தியர்களின் ஓட்டுகளைக் கவர, நஜிப் கையாண்ட வழியை, இன்று, டாக்டர் மகாதீர் பின்பற்றுகிறார் என்று மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார். ஹிண்ராப்ட் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தியை டாக்டர் மகாதீர் சந்தித்தது, பக்காத்தான் ஹராப்பானுக்கு இந்தியர்களின் ஆதரவைத்…

ஹரப்பான் உச்சநிலை தலைமையத்துவத்தில் இந்தியப் பிரதிநிதித்துவம் எங்கே?”, கேட்கிறார் அம்பிகா

  பக்கத்தான் ஹரப்பானின் முன்னணித் தலைவர்களில் இந்தியப் பிரதிநிதிகள் இல்லாதது குறித்து வழக்குரைஞரும் மனித உரிமைகள் போராளியுமான அம்பிகா சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். பெர்சத்துவான் ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தியையும் மற்றும் மஇகாவின் முன்னாள் தலைவர் ஜி. பழனி வேலுவின் ஆதரவாளர்களையும் தமது பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் ஹரப்பான்…

புத்ரா ஜெயாவைப் பிடிப்போம்; இந்தியர்களின் இரத்தக் கண்ணீரைத் துடைப்போம்

மலேசியா சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஆனால், மலேசியக் குடிமக்களாகிய இந்தியர்கள், குறிப்பாக வறுமைப்பிடியில் சிக்கியிருக்கும் 40 விழுக்காட்டு இந்தியர்கள் (B40) அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். அம்னோவின் தலைமையிலான பாரிசான் நேசனல் அரசாங்கம்…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் டுபாய்க்குத் தப்பி ஓடிவிட்டாராம்

ஒரு  வழக்கில்   பத்தாண்டுச்   சிறைத்தண்டனையை     எதிர்நோக்கிய    தாய்லாந்து   முன்னாள்   பிரதமர்   இங்லக்  ஷினவட்ரா   டுபாய்க்குத்   தப்பி   ஓடிவிட்டதாக   அவரது   கட்சியின்  மூத்த   உறுப்பினர்கள்    கூறினர். முன்னாள்  பிரதமர்  கடந்த   வாரமே   தாய்லாந்தை  விட்டு  வெளியேறி    சிங்கப்பூர்   வழியாக  டுபாய்க்குப்  பறந்தார்   என  பியு   தாய்   கட்சி   வட்டாரங்கள்    தெரிவித்தன.…

மற்ற மாநிலங்களில் பிஎன் எம்பிகள், சிஎம்முகள் அரசு அமைப்புகளுக்குத் தலைமை…

பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்   எங்  பிஎன்  “இரட்டை  நியாயங்களைப்  பின்பற்றுவதாக”    சாடியுள்ளார்.  அதன்   அமைச்சர்களில்   ஒருவர்   முதலமைச்சர்   அரசு    நிறுவனங்களுக்குத்   தலைவராக   இருக்கக்கூடாது   என்று  கூறியதை   அடுத்து   லிம்   அவ்வாறு   சாடினார். முந்தைய   பிஎன்   மாநில    அரசுதான்   குறிப்பிட்ட   அரசு  நிறுவனங்களுக்கு   முதலமைச்சர்தான்   தலைவராக   இருக்க   வேண்டும்  …

பாஸுக்கு எதிராக அனைத்துலக அளவில் சதித் திட்டமாம்

பாஸ்   கட்சி   ஏற்கனவே   1எம்டிபிக்கு    எதிராக    அமெரிக்க  நீதிமன்றத்தில்    வழக்கு    தொடுக்கப்பட்டிருப்பதை  “வெளியார்   தலையீடு”   என்று    வருணித்துள்ளதை    அறிவோம்.  இப்போது     பாஸ்   தலைவர்களில்   ஒருவர்   அந்த இஸ்லாமியக்   கட்சியின்  பெயரைக்  கெடுப்பதற்கு      அனைத்துலக     அளவில்    சதி    செய்யப்படுவதாகக்  கூறுகிறார். இச்சதித்   திட்டமே    தம்  கட்சி    அம்னோவுடன்   ஒத்துழைத்து   சிலாங்கூரைக் …

குவான் எங் மன்னிப்பு கோர எம்எசிசி 48 மணி நேர…

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்துள்ளது. மன்னிப்பு கோரத் தவறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது மேலும் கூறியது. நேற்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பினாங்கு…

காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம்…

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி அவதூறாகப் பேசியதற்காக காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் அக்கட்சியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணிக்கவாசகத்திடம் கொடுக்கப்பட்ட இடைநீக்கம் கடிதத்தில் அவரை காப்பார் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நியமிக்கக்கூடாது என்பதற்காக ஓம்ஸ் தியாகராஜனிடமிருந்து ரிம300,000-400,000 ரொக்கமாக பெற்றுக்கொண்டதாக…

தாய்லாந்து முன்னாள் பிரதமரை கைது செய்ய ஆணை

  பதவியிலிருந்து அகற்றப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவாட்ரா நாட்டை விட்டு தப்பியோடி விட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. அவருக்கு எதிராக தாய்லாந்து இராணுவ ஆட்சியாளர்கள் தொடர்ந்திருந்த வழக்கில் அவர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருந்த நாளில் நீதிமன்றத்திற்கு வரத் தவறியதால் தாய்லாந்து உச்சநீதிமன்றம் அவரைக்…

மகாதிர்: பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அம்னோ/பிஎன்னுக்கு வாக்களிக்காதீர்கள்

அம்னோ- பிஎன்  பணம்   அல்லது  இலவசங்களைக்  கொடுத்தால்  வாங்கிக்கொள்ளுங்கள்,  ஆனால்   பொதுத்   தேர்தலின்போது  பக்கத்தான்  ஹராபானுக்கு   வாக்களியுங்கள். இது,  முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்  இன்று  கிளந்தான்  பக்கத்தான்    ஹராபானைத்   தொடக்கி  வைத்தபோது    வாக்காளர்களுக்கு  வழங்கிய    ஆலோசனை. “பலர்  பயப்படுகிறார்கள்.  பயப்படுவது   சரி.  அம்னோ  கொடுக்கும்  அன்பளிப்புகளை   …

நஜிப்பும் ஹாடியும் சிலாங்கூரைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்களாம்

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கும்  பாஸ்   தலைவர்  அப்துல்   ஹாடி  ஆவாங்கும்    எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்  சிலாங்கூரைக்  கைப்பற்றுவதற்காக    தேர்தல்   உடன்பாடு  ஒன்றைச்  செய்துகொள்ளும்   ஏற்பாட்டில்   மும்முரமாக  ஈடுபட்டிருக்கிறார்களாம். இதனைத்     தெரிவித்த     சிங்கப்பூர்    நியு    ஸ்ரேய்ட்ஸ்     டைம்ஸ்,   கடந்த  சில   மாதங்களில்   நஜிப்பும்  ஹாடியும்   அன்றாடம்  ஒருவர்  மற்றவருடன்  …

சக மாணவனுக்கு மரணம் விளைவித்தான், 6-ஆம் ஆண்டு மாணவன் கைது

சரவாக், காபிட்டில் ஏழு வயது மாணவனுக்கு மரணம் விளைவித்ததற்காக ஆறாம் ஆண்டு மாணவன் ஒருவன், நேற்று போலிசாரால் கைது செய்யப்பட்டான். கடந்த செவ்வாய்க்கிழமை, இங்குள்ள ஒரு விடுதிப்பள்ளியில், சக மாணவனால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்த முதலாம் ஆண்டு மாணவன், பள்ளி நிர்வாகத்தினரால், சிபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இருப்பினும், சிகிச்சை…

நஜிப்: பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம்

எப்போது பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்விக்கு வழக்கம் போல் அடக்கமாகவே நஜிப் இருந்தார். தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம். தேவைப்பட்டால் இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் அம்னோ பேராளர் மாநாட்டையும் நாங்கள் தள்ளிவைப்போம் என்று நஜிப் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அம்னோ பேராளர் மாநாடு இந்த…

மகாதிர்: 14 ஆவது பொதுத்தேர்தலில் டிரம்ப் பங்கேற்க விரும்பினால், அவர்…

  அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை அடுத்த மாதம் பிரதமர் நஜிப் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் டில்லெர்சன் இம்மாத தொடக்கத்தில் கோலாலம்பூருக்கு வருகையளித்திருந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நஜிப் எதிர்வரும் செப்டெம்பர் 12 இல் அமெரிக்க அதிபரை சந்திக்க விருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை…

ஏஎம்கே கிளந்தானில் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி

கிளந்தான்   பிகேஆர்   இளைஞர்   பிரிவு   அங்காத்தான்   மூடா    கெஅடிலான் (ஏஎம்கே),  அதன்   தலைவர்   ஹாவிட்ஸ்   ரிஸால்   அம்ரான்,   பதவி   விலகக்  கோரிக்கை   விடுத்துள்ளது. கிளந்தான்   ஏஎம்கே   உதவித்   தலைவர்  முகம்மட்  கைருல்   அமின்  அப்துல்   ரஹ்மான்,  இன்று   ஓர்     அறிக்கையில்,   ஹாவிட்ஸ்   “கிளந்தான்   ஏஎம்கே  தலைவர்களில்   பெரும்பான்மையினரின்   ஆதரவை  …