மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
கிளந்தான், திரெங்கானுவை அமனா கைப்பற்றுவது ‘சாமானிய பணியல்ல’
வரும் தேர்தலில் கிளந்தானிலும் திரெங்கானுவிலும் பாஸ் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என பக்கத்தான் ஹராபான் கூட்டணி அமனாவுக்கு இட்டுள்ள பணி மிகக் கடுமையானது, சாத்தியமற்றது என்றுகூடக் கூறலாம். கிளந்தான் பாஸின் கோட்டை, 1990-இலிருந்து தனித்து நின்றே அது அம்மாநிலத்தை தன்வசம் வைத்துள்ளது. 2013 தேர்தலில் அம்னோவைவிட மூன்று இடங்களை …
பிலிப்பைன்ஸ் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி…
பிலிப்பைன்ஸ் நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (சிஎச்ஆர்) ஹோஸ் லூஸ் சி. ஹேஸ்கன் மலேசியாவிற்குள் நுழைவதற்கு மலேசிய அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். கேஸ்கன், நன்கு அறிமுகமான பிலிப்பினோ மனித உரிமைகள் ஆர்வலர், வரும் ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு ஆசியாவில் ஜனநாயகத்தின் நிலை மீதான மாநாட்டில்…
ரஃபிஸி கண்டிக்கப்பட்டார் என்று செய்தியில் உண்மை இல்லை
கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டதற்காக பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி கண்டிக்கப்பட்டார் என்ற செய்தி அறிக்கைகளில் உண்மை இல்லை என்று பிகேஆர் கூறுகிறது. தகவல்களைப் பெறுவதற்கு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமான வட்டாரங்களை நாட வேண்டும் என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசூதியன் கேட்டுக்கொண்டார். கடந்த…
டிஎபி சீனர்கள் கட்சியா?, “இல்லை”, லிம் கிட் சியாங் கூறுகிறார்
ஜோகூர் பாரு நகரின் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் - ஜொகூர் பாரு, பாசிர் கூடாங் மற்றும் தெர்பாவ் - ஒன்றைப் பெருவதற்கு டிஎபி இனத்தைப் பயன்படுத்துகிறது என்ற கூற்று தவறானது என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். தெர்பாவ் தொகுதி பிகேஆர் தலைவர்…
“ஆட்டோமேட்டிக்” வாக்காளர் பதிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, அஸலீனா கூறுகிறார்
ஒரு மலேசியக் குடிமகன் 21 ஆவது வயதை அடைந்தவுடன் அவர் தானாகவே வாக்காளர் ஆகிவிட முடியாது. அவ்வாறான வாக்காளர் பதிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பிரதமர்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட் கூறுகிறார். வாக்களிக்களிக்கும் வயதை எட்டியவரை தானாகவே வாக்காளராக்கும் பதிவுமுறை மற்றும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்குதல்…
டோனி புவா: ஐபிஐசி கடன்களை, 1எம்டிபி-ஆல் எப்படி செலுத்த முடியும்?
சர்வதேசப் பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்தின் (ஐபிஐசி) 1எம்டிபி நிலுவைக் கடனை அடைக்க வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படுமா என பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கேள்வி எழுப்பினார். பலமுறை கேட்டும், 1எம்டிபி மற்றும் நிதி அமைச்சும் வாய்மூடியே கிடக்கின்றன, பணம் எங்கிருந்து வருமென…
ஹராப்பானின் முடிவை அஸ்மின் ஏற்றுக்கொண்டார், இருப்பினும்…
கடந்த ஆகஸ்ட் 29-ல், பாஸ் உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சபை எடுத்த முடிவை தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அஸ்மின் அலி; இருப்பினும், யாருடனும் பேசுவதற்கு தனக்கு இன்னும் சுதந்திரம் உண்டு என்றும் கூறினார். “யாருடனும் பேச எனக்கு சுதந்திரம் உண்டு. செவ்வாய் இரவன்று, நான்…
பாஸுடன் ஒத்துழைப்பு, முடிவெடுக்க நஜிப்புக்கு முழு அதிகாரம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் உடன் ஒத்துழைக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை, அதன் தலைவர் நஜிப்பிடம் விட்டுவிட அம்னோ உச்சமன்றம் முடிவெடுத்துள்ளதாக அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா கூறியுள்ளார். "உச்சமன்றத்தின் கூற்றுப்படி, ஒத்துழைப்பு என்றால் ஒரு நோக்கம், புலம், முறை உள்ளது. தளர்வான முறையில்…
ஆர்சிஐ விசாரணைக்கு மகாதீர், அன்வார் அழைக்கப்படுவார்களா?
ஃபோரெக்ஸ் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) மகாதீர் மற்றும் அன்வார் இருவரையும் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதா? என்பதனைச் சம்பந்தப்பட்ட அவ்விரண்டு தலைவர்களின் வழக்குரைஞர்களும் உறுதிபடுத்திகொள்ள முனைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த இருவரையும், ஆர்சிஐ அழைக்க விரும்புகிறதா என்று, இன்னும் தங்களுக்குத் தெரியவில்லை என டாக்டர் மகாதீரின் வழக்குரைஞர் முகமட் ஹானிஃப்…
சுதந்திர தின நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் அதன் 60 ஆம் ஆண்டு மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது..
நான்கு மாநிலங்களில் தேர்தல் போராட்டத்திற்கு பெர்சத்து தலைமை ஏற்கும்
நான்கு மாநிலங்களில் எதிரணி ஹரப்பானின் தேர்தல் போராட்டத்திற்கு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைமை ஏற்கும். ஜோகூர், பேராக், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்ட மாநில தலைவர்கள் பட்டியலின்படி, பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் ஜோகூர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…
எரிபொருள் விலை கூடுகிறது
இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலை ஒரு லீட்டருக்கு ஒன்றிலிருந்து மூன்று சென் வரை கூடுகிறது. ரோன்95 மற்றும் ரோன்97 1 லீட்டருக்கு 1 சென் விலை ஏற்றப்பட்டு முறையே ரிம2.16 மற்றும் ரிம2.44 க்கு விற்கப்படும். டீசலின் விலை மூன்று சென் உயர்ந்து 1 லீட்டர் ரிம2.04…
குலா: போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்தவர் எப்படி தனக்குத் தானே தீயிட்டுக்…
ஜெலெப்பாங் போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்த நிலையில் தனக்குத் தானாகவே தீயிட்டுக் கொண்டதாக கூறப்பட்ட பாஸ்கர் ராவ், 47, நேற்று பின்னேரம் மணி 4.10 மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் கடந்த 9 நாள்களாக மருத்துவமனையில் தனது உயிருக்காகப் போராடினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட…
எம்ஏசிசி ஓப்ஸ் கோபி நடவடிக்கையைக் கைவிடவில்லை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணயம்(எம்ஏசிசி) இரண்டு போலீஸ் மாவட்டத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஓப்ஸ் கோபி வழக்கை மூடிவிட்டதாகக் கூறப்படுவதை புத்ரா ஜெயா மறுத்தது. “(எம்ஏசிசி) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுவது உண்மையல்ல, எம்ஏசிசி அவ்வழக்கைக் கைவிட்டுவிடவில்லை”, எனப் பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் கூறினார். அது, ஜாசின், மலாக்கா …
இர்வான்: 1எம்டிபி ஐபிஐசிக்குப் பணம் கொடுக்கிறா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து…
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), அபு டாபியின் இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி(ஐபிஐசி)க்கு கொடுக்க வேண்டிய முழுப் பணத்தையும் நாளை கொடுக்குமா என்பதை கருவூலத் தலைமைச் செயலாளரும் 1எம்டிபி வாரிய உறுப்பினருமான முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா உறுதிப்படுத்த மறுத்தார். புத்ரா ஜெயாவில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்த இர்வான் …
பேங்க் நெகரா முன்னாள் துணைத் தலைவர்: அன்னிய செலாவணி இழப்பு…
பேங்க் நெகரா முன்னாள் துணைத் தலைவர் லின் சீ யான், அன்னிய செலாவணி இழப்பு குறித்து அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் விவாதிக்குமாறு யாரும் தம்மைக் கேட்டுக்கொண்டதில்லை என்றார். லின், அன்னிய செலாவணி இழப்பைக் கண்டறிய விசாரணை நடத்திவரும் அரச ஆணைய(ஆர்சிஐ)த்திடம் இன்று வாக்குமூலம் அளித்தார். அந்த …
‘பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் போரெக்ஸ் இழப்பைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தார்’
பேங்க் நெகாராவின் அப்போதைய கவர்னர் ஜப்பார் உசேன் அன்னிய செலாவணியில் ஏற்பட்ட இழப்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தார் என அவரின் சிறப்பு உதவியாளர் கூறினார். அன்னிய செலாவணி இழப்பைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ)த்திடம் இன்று வாக்குமூலம் அளித்த லியு சியு குவான்,86, மத்திய வங்கியின் …
1எம்டிபி வழக்குகளை டிஓஜே நிறுத்தி வைப்பதற்கு ரெட் கிரேனைட் எதிர்ப்பு
ரெட் கிரேனைட் பிக்ட்சர்ஸ், 1எம்டிபி மீதான வழக்குகளை அமெரிக்க நீதித்துறை நிறுத்திவைக்க உத்தேசித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் வழக்குரைஞர் பதிவுசெய்த மனு “வழக்கில் வெளிப்படும் தகவல்கள் நடப்பு விசாரணைகளைப் பாதிக்கலாம் என்று கூறும் அரசாங்கம் எப்படி பாதிக்கும் என்பதை எடுத்துரைக்கவில்லை” எனக் …
தனபாலன் என் மகன் அல்ல, மலேசியாவின் மகன்: தாயார் பெருமிதம்
கோலாலும்பூர் சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கங்களில் தாய்ப் பதக்கம் எனக் கருதப்படும் கால்பந்தாட்டப் போட்டியின் தங்கத்தை வெல்லப்போவது யார் என்பது இன்று மலேசியாவுக்கும் தாய்லாந்துக்குமிடையே நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தெரிய வரும். சனிக்கிழமை மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையிலான அரை இறுதி ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என். தனபாலனின் தாயார், வி.திருசுந்தரி,…
திருப்தி அளிக்கும் அளவிற்கு இந்தியர் பிரதிநிதித்துவம் ஹரப்பானுக்குத் தேவைப்படுகிறது, இராமசாமி
ஹரப்பானில் திருப்தி அளிக்கும் அளவிற்கு இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதிசெய்வதற்கு கூட்டணிக்கு வெளியில் இருப்பவர்களிடம் பேசுவதற்கு முன்பு ஹரப்பானின் பங்காளித்துவக் கட்சிகளில் இருக்கும் இந்தியத் தலைவர்களுடன் ஹரப்பான் தேசியத் தலைவர்கள் விவாதிப்பது நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற அம்பிகா சீனிவாசனின் கருத்துடன் தாம் ஒத்துப்போவதாக பினாங்கு மாநில…
பணி ஓய்வு பெறும் ஐஜிபி காலிட், பிரதமரைச் சந்தித்தார்
பணிஓய்வு பெறும் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மரியாதை நிமித்தம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை இன்று புத்ரா ஜெயா சென்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார். காலிட், 40 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றிவிட்டு செப்டம்பர் 5-இல் பணி ஓய்வு பெறுகிறார். ஒப்பந்த ஊழியராக …
ஐஆர்பி: மகாதிர் மகன்களின் நிறுவனங்கள்மீதான அதிரடிச் சோதனைகளில் அரசியல் நோக்கமில்லை
உள்நாட்டு வருவாய் வாரியம் (ஐஆர்பி), புத்ரா ஜெயாவின் “அரசியல் தலையீட்டின்” காரணமாகத்தான் அது டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மகன்கள் மற்றும் நண்பர்களின் நிறுவனங்களின்மீது அதிரடிச் சோதனைகளை நடத்தியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. “இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை”, என அதன் தலைமை செயல் அதிகாரி சபின் சமிதா இன்று …
14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் – பாஸ் ஒத்துழைப்பு இல்லை
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் 4 உறுப்புக்கட்சிகளும் முடிவெடுத்துள்ளன. நேற்று சுமார் 4 மணி நேரம் நடந்த, பக்காத்தான் – பாஸ் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பானின் தலைமை இம்முடிவை வெளியிட்டுள்ளது. மேலும், தேர்தலில் பாஸ் மற்றும்…


