கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
போலீஸ் கார்ப்பரல் வீட்டில் ரிம800,000 கண்டெடுப்பு
மலாக்காவில் ஒரு போலீஸ் கார்ப்பரலின் வீட்டிலிருந்து மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ரிம800,000 கண்டெடுத்தது. சம்பந்தப்பட்ட அந்த கார்ப்பரல் மலாக்காவில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட மையங்களிடலிருந்தும் உடம்புப்பிடி மையங்களிலிருந்தும் பாதுகாப்புப் பணம் வசூலிப்பது தொடர்பில் கைதான 10வது நபராவார். மலாக்கா போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் அந்த 52-வயது ஆடவர் …
டேவிட் தியோவைத் தாக்கியதற்காக நகைச்சுவைக் கலைஞர் மாட் ஓவர் வருத்தப்படவில்லை
நேற்றிரவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முன்னிலையில் இயக்குனர் டேவிட் தியோவைத் தாக்கியதற்காக நகைச்சுவைக் கலைஞர் சுலைமான் யாசின் வருத்தப்படவில்லை. தியோவுக்கு “மரியாதை” கற்றுத்தரத்தான் அப்படிச் செய்ததாக மாட் ஓவர் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அந்த நகைச்சுவைக் கலைஞர் சொன்னதாக மலாய் நாளேடான ஹரியான் மெட்ரோ கூறியது.…
ரபிசி: எஸ்ஆர்சி பணத்தில் ரிம2.6 மில்லியன் ஊடகப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்தின் பணம் எங்கெங்கெல்லாம் சென்றது என்பதை அம்பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி, அதில் ரிம2.6 மில்லியன் சில ஊடக நிறுவனங்களுக்குச் சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது என்றார். அப்படிப் பணம் பெற்ற நிறுவனங்களில் ஒன்று 2014, ஜூலை 22-இல் …
அம்னோ-சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தம் பற்றி பெர்காசாவுக்கு எதுவும் தெரியாதாம்
அம்னோவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) ஒருபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது பற்றி பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலிக்கு எதுவும் தெரியாதாம். "ஒரு வேளை, நான் கவனிக்காமல் இருந்து விட்டேன். ஒருவரும் என்னிடம் சொல்லவில்லை...ஆனால், அதில் பயிற்சி திட்டம் எதுவும் இருக்கிறதா? எனக்குத் தெரிந்த வரையில்…
இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை உயர்கிறது
ரோன்95 மற்றும் ரோன்97 ஆகியவற்றின் விலை 1 லீட்டருக்கு தலா 7 சென் இன்று நள்ளிரவிலிருந்து கூடுகிறது. சில்லறை விலை ரோன்95 1 லீட்டருக்கு ரிம2.08; ரோன்97 1 லீட்டருக்கு ரிம2.36. டீசல் விலை 4 சென் கூடி, 1 லீட்டர் ரிம1.99 க்கு விற்கப்படும்.
பிஎன்னின் கையாளாக இருக்காதீர்: முன்னாள் இசி தலைவர் இன்னாள் இசி…
தேர்தலை ஆணையத்தை பாரிசான் நேசனலின் அடிமையாக ஆக்கிவிடாதீர் என்று தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்டுல் ரஹ்மான் தற்போதைய தேர்தல் ஆணையத்தின் தலவர் முகமட் ஹசிம் அப்துல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்போது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் உதவித் தலைவரான அப்துல்லா ரஷிட் இன்று இதனை…
14ஆவது பொதுத் தேர்தலில் பிஎஸ்எம் 20 தொகுதிகளில் போட்டியிடும்
மலேசிய சோசியலிசக் கட்சி (பிஎஸ்எம்) எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எ. சிவராஜன் இன்று கூறினார். அக்கட்சி போட்டியிடவிருக்கும் தொகுதிகளில் சுங்கை சிப்புட் நாடாலுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதிகளான செமிஞ்சி, கோத்தா…
புதிய வாக்காளர் பதிவில் எட்டு மடங்கு அதிகரிப்பு: நம்ப முடியவில்லை
2016 மூன்றாம் காலாண்டில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்திருந்ததைக் கண்டு ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமட் வியப்படைகிறார். 2013- இலிருந்து புதிதாக வாக்காளர்களாக பதிந்து கொள்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டிலும் 70,000 என்ற அளவில்தான் சீராக இருந்து வந்துள்ளது என்றாரவர். “(இப்போது …
முகைதின்: அம்னோவும் பாஸும் இணைவது ஹராபானுக்கு நல்லதுதான்
அம்னோவும் பாஸும் ஒன்றிணையட்டும் அதுதான் பக்கத்தான் ஹராபானுக்கு நல்லது என்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின். அப்போதுதான் பக்கத்தானால் கூடுதல் இடங்களை வெல்ல முடியுமாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹராபான் மும்முனைப் போட்டியை எதிர்நோக்க வேண்டியிருக்காது. “அவர்கள் …
கோலாலும்பூர் கட்டிடங்களில் இனி கார் நிறுத்த இடம் இருக்காதா?
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக கட்டிடங்களில் கார் நிறுத்தும் இடங்களுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்தி விடலாமா என்று ஆலோசிப்பதாக த சன் நாளேடு நேற்று கூறியது. இப்போதெல்லாம் வளர்ந்த நாடுகளில் நகரங்களில் உள்ள கட்டிடங்களில் கார் நிறுத்த இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என்று தெரிவித்த கூட்டரசுப் …
ஹாடி விரைவாக குணமடைய கிட் சியாங் வாழ்த்து
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதைப் பாராட்டிய டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், அவர் விரைவாக உடல் நலம் பெற வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டார். நேற்று தேசிய இருதய சிகிச்சைக் கழக(ஐஜேஎன்)த்தில் ஹாடியின் பழுதடைந்த வால்வைச் சீர்படுத்தும் …
டிஐ-எம்: பிரதமரும் அமைச்சர்களும் எம்ஏசிசி-இடம் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்
உயர்நிலையில் எல்லாம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடப்பதை உறுதிப்படுத்த பிரதமரும் அமைச்சர்களும் துறைத் தலைவர்களும் தங்கள் சொத்து விவரங்களை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்திடம் அறிவிக்க வேண்டும் என்கிறது ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல்- மலேசியா(டிஐ-எம்). எம்ஏசிசி தலைவர் அவருடைய சொத்து விவரங்களை நாடாளுமன்றத்திடம் அறிவிக்க வேண்டும் என டிஐ-எம் தலைவர் அக்பார் சத்தார் …
எம்சிஎ ஒப்பந்தத்தின் வழி கம்யூனிச ஊடுருவல், அலறுகிறது பெர்காசா
மசீசவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) கையொப்பமிட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தின் வழி நாட்டிற்குள் கம்யூனிச ஊடுருவல் ஏற்படும் என்று பெர்காசா ஆபத்து சங்கை ஊதுகிறது. அந்த ஒப்பந்தமும் ஒத்துழைப்பும் நிச்சயமாக கம்யூனிச தத்துவத்தையும் அதன் விரிவாக்கத்தையும் கொண்டுவரும். அது நாட்டிற்கு ஆபத்தானது. இதுவரையிலான இந்த இரு அமைப்புகளுக்கிடையிலான…
மகாதிர்: பாஸ் கட்சியின் நோக்கம் மலாய்க்காரர்களின் வாக்குகளை உடைப்பதாகும்
மலேசிய அரசியலில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான பாஸின் முடிவு இறுதியில் மலாய்க்காரர்களின் வாக்குகளைச் சிதைத்து அம்னோவுக்கு வெற்றியைத் தருவதாகும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார். பாஸ் அம்னோவுடன் சேர்ந்துகொள்கிறதோ இல்லையோ, ஹரப்பானுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை குறைக்கும் என்பதோடு அதனுடைய வாக்குகளையும் இழக்கும் என்றாரவர். "ஹரப்பான்…
“எஸ்ஆர்சி பணம் ரிம்10.02 மில்லியன்” அம்னோவும் பிஎன்னும் நஜிப்பிடமிருந்து பெற்றன,…
அம்னோவும் பிஎன்னும் மொத்தம் ரிம10.02 மில்லியனை பிரதமர் நஜிப்பிடமிருந்து பெற்றன என்று பிகேஆர் உதவி தலைவர் ரஃபிஸி ரமலி கூறுகின்றார். இப்பணம் 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பெர்ஹாட்டிடமிருந்து வந்ததாக அவர் மேலும் கூறினார். எஸ்ஆர்சியை நஜிப்பின் தலைமையிலான நிதி அமைச்சு 2012 ஆம்…
அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்களாம்: கார்டியன் செய்தி
மலேசிய குடிநுழைவுத்துறை மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளும் அரசியல் புகலிடம் நாடி வந்தோரும் தாகம் தீர்க்கக் கழிவறை நீரை அருந்த வேண்டியிருப்பதாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. “எங்களுக்கு உணவுடன் ஒரு சிறு கோப்பையில் தண்ணீரும் கொடுக்கிறார்கள், அது இல்லை என்னும்போது கழிவரை நீரைத்தான் குடிக்கிறோம்”, என 18-வயது …
கிட் சியாங்: அம்னோ உதவியின்றி பாஸ் 40 இடங்களை வெல்ல…
பாஸ் 40 நாடாளுமன்ற இடங்களையும் 5 மாநிலங்களையும் கைப்பற்றுவது முடியாத செயல் என்று கூறும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், ஒருவேளை அம்னோ ஒத்துழைத்தால் அது சாத்தியமாகலாம் என்றார். “பல்முனைப் போட்டி நிலவும் 14வது பொதுத் தேர்தலில் அரை டஜன் இடங்களுக்குமேல் பாஸினால் வெல்ல முடியும் …
ஸக்கீர் விவகாரத்தில் மஇகாவுக்கு எதிராக பெர்காசா போர் முரசு கொட்டுகிறது
மலாய்க்காரர் உரிமைக்காகப் போராடும் பெர்காசா இன்று மஇகாவுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளது. மஇகா முஸ்லிம்களின் உணர்ச்சிகளை மதிக்கவில்லை என்று அது கூறிக்கொண்டது. மஇகாவை நிராகரிக்கக் கோரும் பரப்புரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் தொகுதியான சிகாமட்டில் தொடங்கும் என்று பெர்காசாவின் தலைமைச்…
சிலாங்கூரில் பாஸின் பங்கு குறித்து பிகேஆர் நாளை விவாதிக்கும்
பிகேஆரின் உயர் தலைவர்கள் நாளை ஒன்று கூடுகிறார்கள். அக்கூட்டத்தில் சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இனி பாஸின் பங்கு என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை பாஸ் எக்ஸ்கோ-கள் மூவரைச் சந்தித்தபோது நடந்தது என்னவென்பதை சிலாங்கூர் மந்திரி புசார் …
பாஸ் எக்ஸ்கோகள் சிலாங்கூர் சுல்தான் பின்னே ஓடி ஒளியக்கூடாது: மாபுஸ்
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று பாஸ் கட்சியினர் அதிலிருந்து விலக சிலாங்கூர் சுல்தான் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மானுக்கு கட்சியின் இன்னொரு தலைவர் அறிவுறுத்தியுள்ளார். ஏனென்றால், சிலாங்கூர் அரசுக்குத் தலைமை ஏற்றுள்ள பிகேஆருடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ள முடிவு …
ஏஜி குறித்த காணொளிக்காக மலேசியாகினி சிஇஓமீது வழக்கு
கினிடிவி இணையத்தளத்தில் மனதைப் புண்படுத்தும் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்தார் என்று மலேசியாகினி தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன்மீது கோலாலும்பூர் சைபர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மலேசியாகினியின் தலைமைச் செய்தியாசிரியர் ஸ்டீபன் கான்மீதும் கடந்த ஆண்டு நவம்பரில் இதேபோன்று குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது முன்னாள் பத்து கவான் …
ஜோகூர் கிராம மக்களின் துயர் தீர்க்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?…
பார்டி அமனா நெகாரா துணைத் தலைவர் சாலாஹுடின் ஆயுப், ஜோகூர் பாரு கம்போங் பக்கார் பத்து கிராமத்துவாசிகளின் துயர் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்கும் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டினைச் சாடினார். அந்தக் கிராமத்து மக்கள் அவர்கள் குடியிருப்பதாகக் கூறப்படும் அரசு நிலத்தைக் காலி செய்ய வேண்டுமென்று …
சீனப் பயணத்தில் நஜிப்பின் மகன்களுக்கு என்ன வேலை?
சீனாவுக்கு வருகை அளித்துள்ள பிரதமர் நஜிப்புடன் அவரது மகன் நோராஸ்மானும் வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ்சும் சென்றுள்ளது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. சீனா, ஹாங்ஸாவ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நஜிப்புடன் அவரது மகன்களும் பங்கேற்றது குறித்து மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா விளக்கம் அளிக்க…


