சீனப்புத்தாண்டு 2017 நல்வாழ்த்துகள்

செம்பருத்தி . கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் அதன் சீனப்புத்தாண்டு 2017 நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

வீட்டுச்சேவல் புதிய விடியலின் அடையாளம், சீனப்புத்தாண்டு செய்தில் வான் அஸிசா…

  "புதிய மலேசியா' உருவாக்கப்படுவதற்கான முயற்சியில் மலேசியர்கள் தளர்ச்சியடைந்து விடக்கூடாது என்று எதிரணித் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் மலேசிய மக்களை கேட்டுக்கொண்டார். வீட்டுச்சேவல் உறுதியுடைமை மற்றும் புதிய விடியலின் வருகையைத் தெரிவிக்கும் அடையாளம் என்று பிகேஆர் தலைவர் அவரது சீனப்புத்தாண்டுச் செய்தில் கூறினார். 2017…

“தைப்பூசம் சாயம் தெளிக்கும்” கூட்டத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்

  பொருத்தமற்ற உடை அணியும் பெண்கள் மீது சாயம் தெளிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்த "தைப்பூசம் சாயம் தெளிக்கும்" கூட்டத்தை உருவாக்கியவர் என்று கூறப்படுபவரை போலீசார் கைது செய்துள்ளனர். செபெராங் பிறையைச் சேர்ந்த 29 வயது ஆடவர் ஒருவர் இன்று காலை மணி 9.20 க்கு கைது செய்யப்பட்டார்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்த ஜமால் யூனுஸ்

சுங்கை   புசார்   அம்னோ    தொகுதித்   தலைவர்   ஜமால்   யூனுஸ்,  வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டு   தேவான்   ஸ்ரீ   பெர்னாம்   துயர்த்துடைப்பு    மையத்தில்    தஞ்சம்   புகுந்துள்ள     மக்கள்   தம்முடைய   ஓய்வுத்தலத்தில்   இலவசமாக    வந்து   தங்கிக்  கொள்ள  இடம்   ஒதுக்கிக்  கொடுத்துள்ளார். வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டவர்களுக்கு   சிகிஞ்சான்   மீனவர்  கிராம  தங்குவிடுதி     மற்றும்   ஓய்வுத்தலத்தில்    தங்குவதற்கு   …

ஹாடி: பாஸ் கதவு டிஏபி-க்குத் திறக்காது ஆனால், பெர்சத்துவுக்கு திறந்தே…

பாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி   ஆவாங்,     டிஏபியுடன்   ஒத்துழைக்கும்    சாத்தியம்    அறவே  இல்லை   என்று   திட்டவட்டமாகக்  கூறுகிறார். டிஏபி   இஸ்லாத்துக்காக    பாஸ்    நடத்தும்   போராட்டத்துக்கு    ஆதரவு    தெரிவிப்பதில்லை     என்பதால்     அதனுடன்    ஒத்துழைப்பதற்கில்லை   என்று   மாராங்  எம்பி     தெரிவித்ததாக    நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்    அறிவித்துள்ளது. “உலகளாவிய   திருட்டுத்தனத்திலிருந்து    மலேசியாவைக்   காப்பதற்காக”    …

தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கோத்தா திங்கியில் சுட்டுக்கொலை

இன்று   அதிகாலை   கோத்தா   திங்கியில்    ஒரு   செம்பனை   தோட்டத்துக்கு  அருகில்   பல்வேறு   கொள்ளைச்   சம்பவங்களுக்காக   தேடப்பட்டு   வந்த   ஆயுதம்  தாங்கிய   கொள்ளையர்   இருவரை     போலீசார்     சுட்டுக்  கொன்றனர். ஜோகூர்  போலீஸ்   துணைத்    தலைவர்   சக்கரியா  அஹ்மட்    இதனைத்   தெரிவித்தார். போலீஸ்   குழுவொன்று    குற்றச்செயல்களுக்கு    எதிரான    நடவடிக்கையில்    ஈடுபட்டிருந்தபோது  தலைக்கவசம்   …

கிட் சியாங்: எம்ஏசிசி-இன் எச்சரிக்கை‘எம்ஓ1’க்கும் சேர்த்து விடுக்கப்பட்டிருந்தால் சரி, இல்லை…

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய(எம்ஏசிசி)த்  தலைவர்   சுல்கிப்ளி   அஹமட்  அரசியல்வாதிகளை    எச்சரித்தபோது   “மலேசியாவின்  முதன்மை   அதிகாரி”க்கும்   சேர்த்தே   அந்த   எச்சரிக்கையை   விடுத்திருக்க    வேண்டும்,   இல்லையென்றால்   அந்த   எச்சரிக்கை   அர்த்தமற்றது  என  டிஏபி  மூத்த   தலைவர்   லிம்  கிட்  சியாங்   கூறினார். “சுல்கிப்ளி  ‘இருங்கள்  உங்களைப்  பார்த்துக்கொள்கிறேன்’   என்று   எச்சரித்தபோது   எம்ஓ1-க்கும்  …

பெர்சே வழக்கு தொடுத்ததை அடுத்து விசாரணைக்கு இணங்கியது இசி

பெர்சே  சார்பில்  தேர்தல்   ஆணைய(இசி)த்துக்கு   எதிராக   வழக்கு   தொடுத்திருந்த  ஸோ   ரந்தவா,   வழக்கை   மீட்டுக்  கொண்டிருக்கிறார்.  இசி,  செகாம்புட்டில்   தேர்தல்    தொகுதி  எல்லைத்  திருத்தத்துக்குத்    தெரிவிக்கப்பட்ட     ஆட்சேபனைகள்   குறித்து    விசாரணை   நடத்த   ஒப்புக்கொண்டதை   அடுத்து   அவர்   அவ்வாறு    செய்தார். தொடக்கத்தில்,   100  பேர்   ஆட்சேபனை    செய்திருந்தும்கூட    இசி   விசாரணை  …

பிஎம்எப் மற்றும் 1எம்டிபி அவதூறுகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன?, மகாதிர் விவரித்தார்

  முன்னாள் பிரதமர் மகாதிர் அவர் ஆட்சியிலிருந்த போது நடந்த பிஎம்எப் (BMF)அவதூறு மற்றும் தற்போதைய 1எம்டிபி (1MDB) குழப்பமான சிக்கல்கள் ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை விவரித்தார். பிஎம்எப் விவகாரத்தில் அதிகாரத்திலிருந்த அரசாங்கம் நேரடியாக எந்தத் தவறான செயல்களிலும் சம்பந்தப்பட்டிருந்தாக குற்றச்சாட்டுகள் இல்லை என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு…

நடந்தது பற்றி வருந்தி, டிஎபியைக் கைவிட்டால், மகாதிரை பாஸ் அரவணைத்துக்கொள்ளும்

  பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் டாக்டர் மகாதிரை ஏற்றுக்கொள்ள பாஸ் கட்சி தயார். ஆனால், கடந்த காலத்தில் அவர் பாஸ் கட்சிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வருத்தப்பட வேண்டும், தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். மேலும், டிஎபியுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். பாஸ் கட்சியின் ஆய்வு…

பினாங்கில் திடீர் தேர்தல் நடத்த எதிர்ப்பு, ஆனால் சாபாவில் நடத்த…

  சபாவில் திடீர் தேர்தல் நடத்தலாம் என்பதை பாரிசான் நேசனல் ஆதரிக்கிறது என்று த ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தி குறித்து பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வியப்பு தெரிவித்துள்ளார். வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட அச்செய்தி பிரதமரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் ரசாக் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக்…

மரபணுச் சோதணைக்குப் பின்னரும் குழந்தைகள் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்குச் செல்லத்…

  தம்முடைய குழந்தைகள் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பள்ளியில் படிப்பதைத் தொடர்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் ஒரு தகப்பனார் சீற்றமடைந்துள்ளார். இப்பிரச்சனை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலைதூக்கியது என்று எம். வெங்கடேஸ்வரன், 44, கூறினார். அவருடைய குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லாததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை பள்ளிக்கூடத்தில் படிப்பதிலிருந்து நிறுத்தி விட்டார்.…

பிஎம்எப் பணம் மகாதிரின் கணக்கிற்கு போகவில்லை, கிட் சியாங்

  பிஎம்எப் (Bumiputra Malaysia Finance Ltd)ஊழல் விவகாரத்தில் மகாதிரின் நிருவாகத்திற்கு தொடர்பு இருந்ததாக தற்போது அமெரிக்க உளவுத்துறை (சிஐஎ) வெளியிட்டிருக்கும் தகவலைவிட மிகக் கடுமையான விவகாரம் 1எம்டிபி சர்ச்சையாகும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். இன்று பினாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…

கல்வியைத் தொடர இந்திய மாணவர்களுக்கு தடை!

பினாங்கு மாக் மண்டெனில் வசிக்கும்  வெங்கடேஸ்வரனின்  மூன்று பிள்ளைகள் முறையே   சூர்யா 12, அகிலாண்டேஸ்வரி 11, துரநாயகி 9   ஆகியோர் பள்ளிக்குச் செல்ல கல்வி அமைச்சு பிடிவாதமாய்  அனுமதி  வழங்க மறுத்து வருகிறது. கல்வி அமைச்சின் பொது செயலாளர் டத்தோ  ஸ்ரீ டாக்டர் கயிர் முஹமட் யூசோப் இவர்களுக்கு உத்திரவாதம் அளித்தும்…

இசி-க்கு எதிராக நீதிமுறை மேலாய்வுக்கு வாக்காளர்கள் செய்திருந்த மனு நீதிமன்றத்தில்…

கோலாலும்பூர்    உயர்    நீதிமன்றம்,    தேர்தல்   ஆணையத்துக்கு   எதிராக   நீதிமுறை   மேலாய்வுக்குக்   கோரிக்கை   விடுத்து    ஹுலு   சிலாங்கூர்   வாக்காளர்கள்   மூவர்  செய்து     கொண்டிருந்த   மனுவைத்    தள்ளுபடி    செய்தது. அம்மனு  காலம்   தாழ்த்தி   தாக்கல்    செய்யப்பட்டதாக   அரசுத்தரப்பு    மூத்த   வழக்குரைஞர்கள்     அமர்ஜித்    சிங்கும்    அசிசான்   முகம்மட்   அர்ஷாட்டும்   முன்வைத்த    வாதத்தை   ஏற்றுக்கொண்ட   …

மன்றம் மணிமன்றம் – மாபெரும் வீழ்ச்சியின் சின்னம்! – ம.…

தொலைக்காட்சியில் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 60ஆம் ஆண்டு மணிவிழாவைப் பார்த்தது முதலே கடுமையான மன அழுத்தம் ஏற்படத் தொடங்கியது. அப்படி ஒரு இயக்கம் இருந்ததாக நினைவு ஒன்று  கருப்பு வெள்ளையில் வந்துபோனது. கோ.சாரங்கபாணி  மூலம் தமிழ் முரசு நாளிதழில் மாணவர் மணிமன்றம் தொடங்கி, பலரையும் எழுத வைத்து, வாரம் ஒரு…

சட்டம் 355: அசிஸ் பக்ராவியின் கருத்துக்கு மசீச மறுப்பு

மசீச,  1965,   ஷியாரியா  நீதிமன்ற (குற்றவியல்   நீதி)ச்  சட்டத்தில்   திருத்தம்   செய்யப்படுவதைத்தான்     எதிர்க்கிறதே    தவிர   நடப்பில்   உள்ள    சட்டத்தை   அல்ல. எனவே,   அத்திருத்தங்களை   மசீச    தலைவர்    லியோங்   தியோங்   லாய்    எதிர்ப்பது    ஏன்   என்று    போக்குவரத்துத்   துணை    அமைச்சர்    அசிஸ்   கப்ராவி   கேள்வி   கேட்பது   முறையல்ல    என்று      மசீச  …

இபிஎப் லண்டனில் இரண்டு சொத்துகளை விற்கிறது

ஊழியர்  சேமநிதி (இபிஎப்)  லண்டனில்   அதன்   கட்டிடங்கள்   இரண்டை  விற்பதற்கு     ஏற்பாடு    செய்து   வருகிறது.  அந்த   விற்பனையின்வழி    100மில்லியன்  பவுன்  (ரிம550 மில்லியன்)  ஆதாயம்  கிடைக்கலாம்   என   ஸ்டார்பிஸ்   அறிவித்துள்ளது. யுகே     சொத்துகளை  விற்றுப்  பணமாக்கும்  வியூகத்தின்   ஒரு   பகுதியாக   அவ்வாறு    செய்யப்படுவதாக   த  ஸ்டாரின்   வணிகப்   பகுதி  …

படுக்கைகள், ஐஸ் கிரீமுடன் எம்பி அலுவலகம் வந்த ஜமால்

சிலாங்கூரில்   தீயொழுக்கத்துக்கு    எதிரான   இயக்கத்தை   முடுக்கி   விட்டிருக்கும்   சுங்கை   புசார்     அம்னோ     தலைவர்   ஜமால்    முகம்மட்    யூனுஸ்,  தம்  இயக்கத்துக்கு  மேலும்   வலுச்சேர்க்க  ஒரு   டசன்   கட்டில்களுடன்   ஷா   ஆலம்   செயலகக்  கட்டிடத்துக்கு    வந்தார். கட்டில்களின்மேல்  மெத்தைகள்.  மெத்தைகளில்    விரிக்கப்பட்டிருந்த   விரிப்புகளில்   "DAP - Dapat Aiskrim Percuma"…

புதிய சட்டப்படி சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு ரிம1 மில்லியன் அபராதம் விதிக்க…

ஜனவரி  முதல்   நாள்      தேசிய   நிலச்  (திருத்தம்)   சட்டம்   2016  அமலுக்கு    வந்திருப்பதை     அடுத்து    சட்டவிரோதமாக     நிலத்தை      மேம்படுத்துவோர்    உள்பட,    சுற்றுச்சூழலுக்குக்   கேடு    செய்யும்   தரப்பினருக்குக்   கூடினபட்சம்   ரிம1 மில்லியன்வரை  அபராதம்   விதிக்க   முடியும். நடப்புச்   சட்டங்கள்   குற்றவாளிகளைத்   தடுக்க   உதவவில்லை   என்பதை     அறிந்து   இந்தச்  சட்டத்   திருத்தம்   …

அரசமைப்புச் சட்டத்தை மாற்றி மலேசியாவை இஸ்லாமிய நாடாக்க பிரதமருக்கு சவால்…

  மலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடாக்க விரும்பினால் மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு திருத்தங்களைக் கொண்டுவருமாறு முன்னாள் சட்ட அமைச்சரான ஸைட் இப்ராகிம் அரசாங்கத்திற்கும் பாஸ் கட்சிக்கும் இன்று சவால் விட்டார். இதுதான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால் அதைத் துணிச்சலாக கூற வேண்டும். மாறாக, ஷரியா நீதிமன்றம் (கிரிமினல் நீதி…

லியோ: மசீச பிஎன்னைவிட்டு வெளியேறாது

மசீச  டிஏபி   விரிக்கும்  வலையில்   விழப்  போவதில்லை,  பிஎன்னைவிட்டு    வெளியேறப்   போவதில்லை  என   அதன்   தலைவர்    லியோ   தியோங்   லாய்   கூறுகிறார். “நாங்கள்  மக்கள்    எங்கள்மீது   வைத்துள்ள   நம்பிக்கையின்   அடிப்படையில்   அரசாங்கத்தில்  உறுப்பு   வகிக்கிறோம்.  எதற்காக    நாங்கள்    விலக   வேண்டும்    என்கிறீர்கள். “நாங்கள்   டிஏபியின்   வலையில்    வீழ்ந்து   விட   …

வோங்: பிளாஸ்டிக்-அல்லாத பைகளைக் கொடுப்பது நோக்கத்தைத் தோற்கடிப்பதாகும்

சிலாங்கூர்   அரசு    சில்லறை   வியாபாரிகளை    பிளாஸ்டிக்- அல்லாத   பைகளை   வழங்கும்படி   கட்டாயப்படுத்தாது.    ஏனென்றால்,  அப்படிச்   செய்வது   அதன்  கொள்கையின்   உண்மையான நோக்கத்தை தோற்கடிப்பதாக   அமையும். நெகிழிப்  பைகளுக்கு   வியாபாரிகள்   பயனீட்டாளர்களிடம்   20   சென்   வாங்குவதுகூட   அரசுக்குச்  செல்லாது.  ஏனென்றால்   அதன்  மூலமாக   நிதி  திரட்டுவது    அரசின்   நோக்கமல்ல    என்று  …