கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
பாஸ்- பெர்சத்து ஒத்துழைப்பை பிகேஆர் வரவேற்கிறது
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வும் பாஸும் ஒத்துழைப்புக்காக செய்து கொண்டிருக்கும் ஏற்பாட்டை சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி வரவேற்றுள்ளார். பெர்சத்து, பாஸ் கட்சிகள் முதிர்ச்சியுடனும் தலைமைத்துவ பாங்குடனும் மலேசியர் அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார். பாஸ், பெர்சத்து கட்சிகளின் பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் எதிர்வரும் …
அமைச்சரின் முன்னாள் உதவியாளர்மீது ஊழல் குற்றச்சாட்டு
ஹிஷாமுடின் உசேன் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அவருக்குச் சிறப்பதிகாரியாக பணியாற்றியவர்மீது இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது. 2014 பிப்ரவரிவரை ஹிஷாமுடினிடம் பணியாற்றிய சைலான் ஜவுஹாரி, 2014 ஜனவரியில் ரிம80,000 கையூட்டு பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இரண்டு நிறுவனங்களுக்கு பள்ளிகளைத் …
சேவியர்: இந்தியச் சமுதாயத்தின் நன்மையைக்கருதி உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக்…
இந்தியர்களின் பிரச்சனையைக் காதுகொடுத்துக் கேட்டுத் தீர்க்கத் தாங்கள் தயார் என்று மஇகா சார்பில் அறிவித்திருக்கும் டத்தோ முனியாண்டி, உண்மையாக, நேர்மையாக இச்சமுதாயத்தின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வுகான வேண்டும் என்ற உளப்பூர்வமான எண்ணத்துடன் இந்தியச் சமுதாய விவகாரங்களை அணுக வேண்டும் என்று ஆலோசனை கூறினார் கெஅடிலான் கட்சியின் தேசிய…
தலைவர்கள் கலந்துகொள்ளாத பாஸ்-பெர்சத்து சந்திப்பு
இன்று கோலாலம்பூர், பங்சாரில் பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளும் ஒரு கூட்டத்தை நடத்தின. அக்கூட்டத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட்டும் அங்கு இல்லை. கிடைத்த தகவலின்படி, பெர்சத்துவை அதன் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் பிரதிநித்தார். அவரே கூட்டத்திற்கும்…
பயணத்தடை பட்டியலில் மலேசியா இல்லை, அமெரிக்கத் தூதரகம் விளக்கம்
அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்த நாடுகளில் மலேசியா ஒன்றல்ல எனக் கோலாலும்பூரில் அமெரிக்கத் தூதரகம் இன்று உறுதிப்படுத்தியது. “கடந்த வாரம் அதிபர் வெளியிட்ட பயணத்தடை ஆணையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா இல்லை. “மலேசியர்கள் விசா பெற்று அமெரிக்காவுக்குத் தொடர்ந்து பயணம் செய்து வரலாம்…
பாஸ்: ஊழல் இல்லை என்ற கூ நானின் கூற்று அனுவாரின்…
அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் துங்கு மன்சூர் தங்கள் கட்சியில் ஊழல் இல்லை என்று கூறிக்கொண்டிருந்ததை அனுவார் மூசா மீது நடக்கும் விசாரணை பொய்யாக்கியுள்ளது என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். “அக்காணொளியை(தெங்கு அட்னான் பேசுவதை)க் காண்போருக்குச் சிரிப்புத்தான் வரும். அதற்குக் …
வார்ட் கட்டண உயர்வால் ஏழை மக்களுக்குப் பாதிப்பில்லை
அரசாங்க மருத்துவமனைகளின் கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் உத்தரவாதம் அளித்துள்ளார். ஏனென்றால், மூன்றாம் வகுப்பு வார்ட் கட்டணம் ஒரு நாளைக்கு ரிம3-தான் அதில் மாற்றமில்லை என்றாரவர். முதல், இரண்டாம் வகுப்பு வார்ட் கட்டணங்கள் நீண்ட காலமாக மாற்றமின்றியே …
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோது பெட்ரோல் விலை உயர்ந்தது ஏன்?…
உலக அளவில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை ஜனவரியில் சற்றுக் குறைந்துள்ள வேளையில் அரசாங்கம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 20 சென் உயர்த்தியது ஏன் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என்கிறார்கள் எதிரணித் தலைவர்கள். மலேசியர்கள் சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கழித்து விட்டுத் திரும்பிய வேளையில் …
இன்றிரவிலிருந்து பெட்ரோல் விலை 20 சென் உயர்வு
இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோல் விலை 1 லீட்டருக்கு 20 சென் உயர்வு காண்கின்றது. இதனால் ரோன்95இன் விலை ஒரு லீட்டர் ரிம2.30 க்கும், ரோன்97இன் விலை ஒரு லீட்டருக்கு ரிம2.60 க்கும் விற்கப்படும். டீசல் விலை ஒரு லீட்டர் ரிம2.15 க்கு விற்கப்படும்.…
ஹராபான் ஏற்பாடு செய்துள்ள ‘முஸ்லிம் தடை’ கண்டனக் கூட்டத்தில் பாஸ்,…
வெள்ளிக்கிழமை, கோலாலும்பூரில், அமெரிக்கத் தூதரகக்கு வெளியில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்திருப்பதற்கு எதிராக பக்கத்தான் ஹராபான் ஏற்பாடு செய்துள்ள கண்டனக் கூட்டத்தில் பாஸ், அம்னோ இளைஞர் பிரிவுகள் கலந்துகொள்ள மாட்டா. “எதிரணி ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் நாங்கள் …
எம்பி: ஏஜியின் மேல்முறையீட்டை விசாரணை செய்ய அவசரம் காட்டப்படுவது ஏன்?
தேர்தல் ஆணையம் (இசி) சார்பில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் செய்துள்ள மேல்முறையீட்டை விசாரிப்பதற்கு முறையீட்டு நீதிமன்றம் அவசரம் காட்டுவது ஏன் என்று லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார் வினவுகிறார். வழக்கமாக, ஒரு மேல்முறையீடு பதிவு செய்யப்பட்டதும் அதை விசாரிப்பதற்கு இரண்டு மாதங்கள் கழித்து ஒரு தேதி …
ஃபாட்வா முடிவுகளில் டிஏபி-பிகேஆர் அரசின் தலையீடா? மறுக்கிறார் பினாங்கு முப்தி
பினாங்கு முப்தி வான் சலிம் முகம்மட் நூர், அம்மாநில ஃபாட்வா குழு செய்யும் முடிவுகளில் பிகேஆர் மாநில அரசு தலையிடுவதாக பாஸ் கூறிக்கொண்டிருப்பதை மறுக்கிறார். ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பினாங்கு பாஸ் ஆணையர் பவுசி யூசுப், ஃபாட்வா முடிவுகளைப் பேரரசரின் ஒப்புதலைப் பெறுவதற்காக சமர்ப்பிக்குமுன்னர் அவற்றை மாநில …
ரெபிட் திட்டத்திலிருந்து சவூதி அரேம்கோ விலகியது ஏன்? நஜிப் விளக்க…
சவூதி அராபிய எண்ணெய் நிறுவனம் (சவூதி அரேம்கோ), பெட்ரோனாசுடன் சேர்ந்து ஜோகூர், பெங்கேராங்கில் யுஎஸ்27 பில்லியன்(ரிம119.64 பில்லியன்) திட்டத்தில் ஈடுபட முன்வந்து பிறகு விலகிக்கொன்ண்டது ஏன் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “அத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளும் முடிவு திடீரென்று செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. “அப்படியானால், …
துங்குவின் 114 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாட ‘மலேசியாவைப்…
மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் 114 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாட பெப்ரவரி 8 இல் 'மலேசியாவைப் பாதுகாப்போம் வட்ட மேசை' விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்புகள் அனுப்பப்படும். நாட்டை அழிவிலிருந்து எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி விவாதிக்க அரசியல் மற்றும் சிவில்…
கியுபெக் நகர் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: அறுவர் பலி
நேற்று கெனடா, கியுபெக் நகர் பள்ளிவாசலில் மாலை நேரத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கிக்காரர்கள் சுட்டதில் அறுவர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. பள்ளிவாசல் இருந்த சுமார் 40 பேமீது மூன்று துப்பாக்கிக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார். “இங்கு ஏன் இது …
‘1எம்டிபி விவகாரத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே பிஎம்எப் ஊழல் குறித்து…
பூமிபுத்ரா மலேசியா நிதி நிறுவன(பிஎம்எப்) ஊழல் குறித்து மீண்டும் விவாதிக்கத் தொடங்கியிருப்பதும் அதனை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் தொடர்புப்படுத்த முனைவதும் 1எம்டிபி ஊழலிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிதான் என்று வழக்குரைஞர் ஹனிப் காத்ரி கூறுகிறார். மகாதிரின் வழக்குரைஞரான ஹனிப், “தாக்குதல்தான் தன்னைத் தற்காக்கும் சிறந்த வழி” …
படகு விபத்து: காணாமல்போன அறுவரைத் தேடும் பணி தொடர்கிறது
சாபாவில், சனிக்கிழமை புலாவ் மெங்காலும் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கடலில் மூழ்கிய உல்லாசப் படகில் இருந்த மேலும் அறுவரைத் தேடும் பணி தொடர்கிறது. கடல் போக்குவரத்து அமலாக்க வாரிய(எம்எம்இஏ) பேச்சாளர் ஒருவர், எம்எம்இஏ உள்பட, அரச மலேசிய கடல்படை, அரச மலேசிய விமானப் படை எனப் பல …
பங் மொக்தார்: பிரதமர், டிரம்புக்குக் கண்டனம் தெரிவிப்பது சரியல்ல
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த சர்ச்சைக்குரிய பயணத் தடைக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை கண்டனம் தெரிவிப்பது சரியல்ல என்கிறார் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ரடின். “தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பலர் டிரம்புக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். “ஆனால், நம் பிரதமர் கண்டனம் தெரிவிப்பது …
ஹாடி: முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்வது பாஸின் கடமை
மலேசிய அரசியலில் முஸ்லிம்களின் செல்வாக்கு இருப்பதை உறுதி செய்வதற்கு அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெரும் நோக்கத்தை பாஸ் கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். கட்சி அதன் நிலையை சிலாங்கூர் மற்றும் கிளந்தானில் மேலும் வலுப்படுத்த…
மலேசியா இனி, ஆசியான் மற்றும் ஆசிய நாடுகளுடனான வணிகத்தில் கவனம்…
ஜனவரி 23-இல், அமெரிக்கா பசிபிக் வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்திலிருந்து (டிபிபி) வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து மலேசியா ஆசியான் நாடுகளுடனும் ஆசிய நாடுகளுடனும் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். மலேசியா இனி ஆசியான் நாடுகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும் என்றும் அதனை அடுத்து வட ஆசிய நாடுகளான சீனா, தென் …
டிரம்பின் பயணத் தடையை நிறுத்திவைக்க நீதிபதி உத்தரவு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு விதித்திருந்த தடை அமலாக்கப்படுவதை அமெரிக்க நீதிபதி ஒருவர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. நியு யோர்க் நீதிமன்றத் தீர்ப்பின்படி ஏற்கனவே அந்நாட்டில் உள்ள மேற்படி நாடுகளின் குடிமக்களும் செல்லத்தக்க விசாக்களுடன் அந்நாட்டுக்குச் …
‘ஓப்ஸ் செலாமாட் 10’: முதல் ஏழு நாள்களில் கடுமையான விபத்துகளின்…
சீனப் புத்தாண்டை யொட்டி மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஓப்ஸ் செலமாட் 10 நடவடிக்கையில் முதல் ஏழு நாள்களில் விபத்துகளின் எண்ணிக்கை ஆறு விழுக்காடு உயர்ந்தது என்றாலும், உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் குறைந்திருந்தன. மொத்தம் 11,440 விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர் மகம்மட் …
28 சீனச் சுற்றுப்பயணிகளுடன் சென்ற கப்பலைக் காணவில்லை
நேற்று, கோத்தா பாலுவின் தஞ்சோங் ஆரு படகுத்துறையிலிருந்து பூலாவ் மங்காலும் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கட்டுமரக் கப்பலொன்று காணாமல் போனதாக நம்பப்படுகிறது. அதில் பயணம் செய்த 31 பேரில் 28 பேர் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள். காலை மணி 9க்கு அக்கப்பல் படகுத்துறையை விட்டுப் புறப்பட்டதாக மலேசிய கடல்சார்ந்த …


