பினாங்கில் மலாய்க்காரர்கள் மட்டுமல்ல, எல்லா இனங்களும் ஒதுக்கப்படுகிறார்கள் என்று இப்போது…

  பினாங்கு மாநில அரசு ஒதுக்கி வைத்திருப்பது மலாய்க்காரர்கள் மட்டுமல்ல என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார். ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது மலாய்க்காரர்கள் மட்டுமல்ல. பினாங்கில் அனைத்து இனங்களும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று தாம் கூறியதாக தெரிவித்த கு நான், "நான் அனைவரும்…

எப்ஏஎம் தலைவர் பதவிக்குப் போட்டியிட பட்டத்திளவரசருக்கு சுல்தான் அனுமதி

ஜோகூர்  ஆட்சியாளர்  சுல்தான்   இப்ராகிம்   சுல்தான்  இஸ்கண்டர்,  மலேசிய   கால்பந்து   சங்கத்   தலைவர்   பதவிக்கு   தம்   புதல்வரும்   பட்டத்திளவரசருமான   துங்கு  இஸ்மாயில்   சுல்தான்   இப்ராகிம்  போட்டியிட   இசைவு   கொடுத்தார். முன்னதாக   ஏழு   மாநிலங்களின்  கால்பந்து   சங்கக்   குழுக்கள்  சுல்தானைச்   சந்தித்து    அனுமதி    அளிக்குமாறு   வேண்டிக்கொண்டனர். அவர்களின்   வேண்டுகோளை   ஏற்ற  …

ராம்கோபால்: பினாங்கில் மலாய்க்காரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா? அட்னான் போலீசிடம் விளக்க வேண்டியிருக்கும்

கூட்டரசுப்   பிரதேச    அமைச்சர்     தெங்கு    அட்னான்    தெங்கு   மன்சூர்     பினாங்கில்  மலாய்க்காரர்கள்  புறக்கணிக்கப்படுவதாககக்  கூறியது   குறித்து   போலீசிடம்   விளக்கமளிக்க    வேண்டியிருக்கும்  என   டிஏபி   எம்பி   கூறினார். அதன்  தொடர்பில்   போலீசில்   புகார்   செய்த  பின்னர்   புக்கிட்   குளுகோர்   எம்பி   ராம்கர்பால்   சிங்   செய்தியாளர்களிடம்    பேசினார். “அவர் (தெங்கு   அட்னான்)…

பாஸ் ஹரபானை உடைக்கப் பார்க்கிறது: அமனா குற்றச்சாட்டு

பாஸ்  கட்சி   பக்கத்தான்   ஹராபானை  உடைக்க   முயல்வதாக    பார்டி  அமனா   நெகாரா (அமனா)  குற்றம்   சாட்டியுள்ளது. எதிரணிக்  கூட்டணி  உடைந்தால்   அம்னோவுக்கும்   பிஎன்னுக்கும்தான்   கொண்டாட்டம்    என்கிறார்    அமனா   தொடர்புப்   பிரிவு   இயக்குனர்   காலிட்  சமட். “பாஸ்   அதன்   ஆட்டத்தைத்   தொடங்கி  விட்டது.......பக்கத்தான்   ஹரபானை   உடைப்பதுதான்   அதன்  நோக்கம்.........எதிரணி   பிளவுபடுவதுதான்  …

அரச சிலாங்கூர் கிளப் செய்தியாளர் கூட்டத்துக்கான பதிவை இரத்துச் செய்தது…

முன்னாள்   சட்ட   அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்,   செய்தியாளர்   கூட்டத்துக்காக   செய்திருந்த   பதிவை    அரச   சிலாங்கூர்   கிளப்   இரத்துச்   செய்ததாம்.  அக்கூட்டத்தில்    ஜைட்      டிஏபியில்   சேரும்   அவரது  முடிவை    அறிவிப்பார்    என்று   எதிர்பார்க்கப்பட்டது. அரசியல்   அழுத்தம்  காரணமாகத்தான்   செய்தியாளர்   கூட்டம்  இரத்துச்   செய்யப்பட்டிருக்க   வேண்டும்   என்று   ஜைட்    மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.…

விலைகளை உயர்த்தாதீர்: ஜாலான் அலோர் வியாபாரிகளுக்கு தெங்கு அட்னான் கோரிக்கை

ஜாலான்   அலோர்  வணிகர்களும்    அங்காடி   வியாபாரிகளும்   அங்கு  சுற்றுப்பயணிகள்   அதிகம்   வருவதைப்  பயன்படுத்திக்  கொண்டு   பொருள்  விலைகளை   உயர்த்தக்  கூடாது. அப்படிச்   செய்தால்   பெட்டாலிங்   ஸ்திரிட்   நிலைதான்    அதற்கும்  நேரும்   என்று கூட்டரசுப்   பிரதேச   அமைச்சர்   தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்   கூறினார்.  பெட்டாலிங்   ஸ்திரிட்டுக்குச்    சுற்றுப்பயணிகளின்   வருகை  …

பாஸ்: பிகேஆரும் பெர்சத்துவும் பக்கத்தானை விட்டு வெளியேறினால் எதிரணி மேலும்…

எதிரணி   மேலும்   வலுவுடன்   விளங்க    முடியும்.  அதற்கு   பிகேஆரும்   பார்டி   பிரிபூமி   பெர்சத்து (பெர்சத்து)வும்   பக்கத்தானை   விட்டு    விலகி    மூன்றாவது   அணியில்   சேர   வேண்டும்   என்கிறது   பாஸ். அது  14வது   பொதுத்   தேர்தலில்   எதிரணி   பிஎன்னைத்   தோற்கடிக்கக்  கூடுதல்  வாய்ப்பாக  அமையும்   என  பாஸ்   உதவித்   தலைவர்   முகம்மட்  …

போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கினார் ஸ்டார் வேட்பாளர்

தஞ்சோங்    டத்துவில்   களமிறங்கும்       சரவாக்  சீரமைப்புக்   கட்சி  (ஸ்டார்)    வேட்பாளர்,   அங்கு   தோல்வியுறப்போவது   தெரியும்  ஆனாலும்   போட்டியிடுவது   அவசியம்    என்றார். போட்டியின்றி   அத்தொகுதியை   பிஎன்னுக்கு    விட்டுக்கொடுக்க   விரும்பவில்லை    என்று   ஜானி  போப்   கூறினார்.  போட்டி  இருந்தால்தான்  பிஎன்  மேலும்   பல  வாக்குறுதிகளை   வழங்கும்    அத்தொகுதியை    மேம்படுத்தும்   என்றாரவர். தம் …

எம்ஏசிசி: அரசாங்க ஊழியர் சொத்துப் பிரகடனத்தை ஆராய அனுமதிப்பீர்

மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி)   ஊழல்   எதிர்ப்பதற்கு    உதவியாக   அரசாங்க   ஊழியர்களின்  சொத்துப்   பிரகடனத்தைப்   பார்வையிட   தங்களை   அனுமதிக்க    வேண்டும்   என  விரும்புகிறது. இக்கோரிக்கையைச்   சொத்துப்   பிரகடனங்களைத்  திரட்டி   வைத்துள்ள   பொதுச்   சேவைத்  துறையிடம்       தெரிவித்திருப்பதாக    எம்ஏசிசி   துணைத்   தலைவர்  (நடவடிக்கைகள்)   அஸாம்  பாகி    கூறினார். “அத்தரவுத்தளம்   செல்லும்  …

ஹமிடி, நாடற்ற இந்தியர்கள் விவகாரமும் ஒரு பிரச்சனைதான் என்பது உமக்குத்…

  இரு நாட்களுக்கு முன்பு கூச்சிங்கில் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி சரவாக்கில் சீன சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள குடியுரிமை விவகாரத்தைத் தீர்ப்பதற்கு ஒரு சிறப்பு பணிப் படை அமைக்கப்படும் என்று கூறினார். அந்தப் பணிப் படை தேசிய பதிவு இலாகவின் கீழ் செயல்படும் என்று அவர் மேலும்…

“மலாய்க்காரர்களுக்கு உதவ” கிளந்தானையும் திரங்கானுவையும் கூட்டரசு பிரதேசமாக்குங்கள், கு நானுக்கு…

  கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களை கூட்டரசு பிரதேசங்களாக்கும்படி ஆலோசனை கூறுமாறு கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. மலாய்க்காரர்களுக்கு உதவ பினாங்கை கூட்டரசு பிரதேசமாக்க வேண்டும் என்று அமைச்சர் தெங்கு அட்னான் தெரிவித்திருந்ததாக கூறப்படும் கருத்துக்கு மாறாக சிகாம்புட் நாடாளுமன்ற…

இலஞ்சத்திற்கு எதிராக முன்னாள் எம்எசிசி தலைவர் விடுத்திருக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு…

  இலஞ்ச ஊழலுக்கு எதிராக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து எழ வேண்டும் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அபு காசிம் முகம்மட்டின் வலியுறுத்தலை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு பிரதமர் நஜிப்புக்கு சவால் விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் "மலேசியாவைப் பாதுகாப்போம் வட்ட…

அமெரிக்க அதிபருக்கு மலேசியா எடுபிடிப் பையனா?, சாடுகிறார் எம்பி

  ஏழு இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குச் செல்ல அதிபர் டிரம்ப் பயணத் தடை விதித்திருப்பது பற்றி நஜிப்பின் அரசாங்கம் மௌனம் சாதிப்பதால் அது அமெரிக்காவின் "எடுபிடிப் பையன்" என்று கூறப்பட்டிருக்கிறது. "டிரம்புக்கு மலேசியா ஒரு எடுபிடிப் பையன் மட்டுமே, உலக அளவில் இஸ்லாமிய சமூகத்தின் நலன்கள் பற்றிய…

தைப்பூச திருவிழாவன்று அமைதியும் நல்லிணக்கமும் ஓங்கச் செய்வீர், குலசேகரன்

  தைப்பூசத் தினத்தன்று தண்ணீர் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஈப்போ பாரட் குழு செய்து முடித்துள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக தைப்பூச விழாவிற்கு ஈப்போ கல்லுமலைக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் தண்ணீர் மற்றும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. ஈப்போ பாரட்டின் தண்ணீர் பந்தல் காலை மணி…

“மலேசியாவைப் பாதுகாப்போம்” சந்திப்புக்கு நஜிப் அழைக்கப்பட்டிருப்பது புதிய துவக்கத்திற்கான வாய்ப்பு,…

  அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் "மலேசியாவைப் பாதுகாப்போம்" வட்ட மேசை மாநாட்டிற்கு நஜிப் ரசாக் அழைக்கப்பட்டிருப்பது பிரதமருக்கு ஒரு புதிய துவக்கத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் என்று லிம் கிட் சியாங் கூறுகிறார். ஊழல் மிகுந்த நாடு என்று உலகளவில் மலேசியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை அகற்றுவதற்கு ஒரு புதிய…

தூக்கிலிடப்படவிருக்கும் மகனைக் காப்பாற்றக் கோரி கண்ணீர் விடும் தாய்

  மலேசியரான கே. தட்சணமூர்த்தி சிங்கப்பூருக்கு போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டணை விதித்து தீர்ப்பள்ளித்துள்ளது. தமது ஒரே மகனை தூக்கிலிருந்து காப்பாற்றும்படி தாயார் எ. லெட்சுமி மலேசிய அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார். "நான் எனது மகனுக்காக மட்டும் கேட்கவில்லை. அங்கே மரண தண்டணையை…

எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும் முறையைத் தெரிவிப்பீர்: அரசாங்கத்திடம் மசீச வலியுறுத்து

அரசாங்கம்    எரிபொருள்   விலை    எந்த   அடிப்படையில்   நிர்ணயிக்கப்படுகிறது    என்பதை  விளக்கிட    வேண்டும்    அப்போதுதான்     எதிரணியினர்   பொதுமக்களுக்குத்   தப்பான    தகவல்கள்  கொடுப்பதைத்   தடுக்க   முடியும்  என்கிறது    மசீச. எரிபொருள்   விலை  உயர்வு   விவகாரத்தில்   அரசாங்கம்   வெளிப்படையான   முறையில்    நடந்து   கொண்டால்     எதிரணியினர்  “உண்மைகளைத்   திரித்துக்  கூற  வாய்ப்பு   கிடைக்காமல்   போகும்”  …

சரவாக் சீனர்களின் குடியுரிமை பிரச்னைகளுக்குத் தீர்வு காண பணிக் குழு

சரவாக்கில்  உள்ள   மலேசிய    சீனர்கள்   குடியுரிமை   பெறுவதற்கு    உதவ   சிறப்புப்  பணிக்  குழு   ஒன்று   அமைக்கப்படும்   எனத்   துணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி    இன்று   கூறினார். அப்பணிக்குழு   சரவாக்     தேசியப்    பதிவுத்துறையின்கீழ்   செயல்படும்   என்றாரவர். “குடியுரிமை   இல்லாப்  பிரச்னைமீது   எனக்கு  மிகுந்த   அக்கறை   உண்டு. அப்பிரச்னைக்கு   முற்றுப்புள்ளி  …

முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் டிஏபியில் சேர்வாராம்

முன்னாள்   சட்ட    அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்      தீவிர   அரசியலுக்குத்   திரும்பிவர   ஆயத்தமாகிக்  கொண்டிருப்பதுபோல்   தெரிகிறது. இதை   அவர்   சொல்லவில்லை    அவருக்கு   அணுக்கமான   வட்டாரங்கள்    தெரிவித்தன, ஜைட்   அடுத்த   செவ்வாய்க்கிழமை    பெட்டாலிங்   ஜெயாவில்  நடைபெறும்   ஒரு   நிகழ்வில்    அதன்   தொடர்பில்   ஓர்    அறிவிப்பைச்   செய்வார்   என   எதிர்பார்க்கப்படுகிறது.  அந்நிகழ்வில்    முன்னாள்  …

சூதாட்டம் நடத்துவோரை ஒன்றும் செய்ய இயலாது: தடுத்து வைக்கப்பட்ட ஜமால்…

சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்,  விசாரணைக்காக    ஐந்து   நாள்   தடுத்து  வைக்கப்பட்டார். கடந்த   ஆண்டு   டிசம்பர்  29-இல் ,  அம்பாங்    தாமான்   கோசாஸில்    சூதாட்ட   மையங்கள்  செயல்படுவதாகக்  கூறி     அதிரடியாக    அம்மையங்களுக்குள்   நுழைந்து    சோதனைகளை   நடத்தியதற்காக    நேற்று    அவர்   கைது   செய்யப்பட்டார். மெஜிஸ்ட்ரேட்   முகம்மட் …

பெப்ரவரி 8 இல், தைப்பூச ரத ஊர்வலங்களுக்காக பல சாலைகள்…

  தைப்பூச திருவிழாவில் வெள்ளி மற்றும் தங்க ரத ஊர்வலங்கள் நடத்துவதற்கு ஏதுவாக பெப்ரவரி 8 இல் பினாங்கில் பல சாலைகள் மூடப்பட்டு பின்னர் படிப்படியாக திறக்கப்படும். இரு ரத ஊர்வலங்கள் புறப்பட்டு திரும்பி வரும் நேரங்களையும் அவை பயன்படுத்தும் சாலைகளின் பெயர்களையும் பட்டியலிட்ட திமோர் லாவுட் மாவட்ட…

கெராக்கான் இளைஞர்கள்: பினாங்கைக் கூட்டரசு பிரதேசமாக்கலாம் என்பது ஆட்சியாளரை அவமதிப்பதாகாது

கூட்டரசுப்  பிரதேச   அமைச்சர்    தெங்கு   அட்னான்  தெங்கு   மன்சூர்    பினாங்கைக்  கூட்டரசுப்   பிரதேசமாக்கலாம்   என்று   பரிந்துரைத்தது     அம்மாநில   ஆளுனரை   அவமதிப்பதாகாது    என  கெராக்கான்  இளைஞர்   துணைத்   தலைவர்   எண்டி   யோங்   கூறினார். தெங்கு   அட்னான்   அப்படிச்   சொன்னது    ஆளுனரை   அவமதிப்பதாகும்    என     டிஏபி    செகாம்புட்    எம்பி   லிம்   லிப்  …

நாடாளுமன்றத்தில் கலவரம் செய்த துணை அமைச்சரின் மகன் நீதிமன்றத்தில் குற்றம்…

துணை    அமைச்சர்   தாஜுடின்   அப்துல்    ரஹ்மானின்  மகன்,   பிர்டுஸ்   தாஜுடின்    கடந்த  நவம்பர்   மாதம்   நாடாளுமன்றத்தில்   கலவரம்   செய்ததற்காக    நாளை  நீதிமன்றத்தில்   நிறுத்தப்படுவார். அவருடன்  மேலும்   எழுவரும்   குற்றம்   சாட்டப்படுவார்கள்   என   கோலாலும்பூர்   போலீஸ்    தலைவர்   அமர்   சிங்    கூறினார். மூன்று  பெண்கள்   உள்பட,     அந்த   எண்மரும்   33 …