‘ஜுஹடி போன்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை ஹாடி தெரிவிக்க…

பாஸ்  உயர்தலைவர்களில்  எத்தனை  பேர்  மத்திய  செயற்குழு  உறுப்பினர்  முகம்மட் ஜுஹடி மர்சுகிபோல் “இனவாத, ஜனநாயக-எதிர்ப்புக்  கருத்துக்களை”க்  கொண்டவர்கள்  என்பதை  பாஸ்  கட்சியின்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  தெரியப்படுத்த  வேண்டும்  என்று  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  கேட்டுக்  கொண்டிருக்கிறார். குறுந்தகவல் பரிமாற்ற கைபேசி செயலியான…

எம்பி நெருக்கடியால் உடையும் அபாயத்தில் பக்காத்தான்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  நெருக்கடியின்  காரணமாக  பக்காத்தான்  ரக்யாட்  உடையும்  சாத்தியம்  இருப்பதாக பாலேக்  பூலாவ்  நாடாளுமன்ற  உறுப்பினர்  டாக்டர்  ஹில்மி  யஹ்யா   கூறியுள்ளார். பாஸ் கட்சியில்  பலர்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்கு  ஆதரவு  தெரிவித்திருப்பதையும்  சிலர்  எதிர்ப்பு  தெரிவிப்பதையும்  அவர்  சுட்டிக்காட்டினார். பாஸ் …

‘சர்வாதிகாரி’ அன்வார் அரசியல் ஓய்வுபெறுவதே நல்லது

முகநூலில்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்மீது வசை  பாடியுள்ளார்  பாஸ் கட்சி  ஆய்வு  மையத்தின்  நடவடிக்கை  இயக்குனர்  முகம்மட்  ஜுஹடி  மர்ஸுகி. பக்காத்தான்  ரக்யாட்டை  அவர்  நடத்தும்  விதத்தை  வைத்து  அன்வாரை  ஒரு “சர்வாதிகாரி”  என  முத்திரை  குத்திய ஜூஹடி, அன்வார்  ஓய்வுபெற  வேண்டும்  என்பதே  தம்  ஹரி …

உக்ரேனில் போர் ஒய்வை ஏற்படுத்த மலேசிய முயற்சி

உக்ரேனில்,   போர்  ஓய்வை  ஏற்படுத்தும்  முயற்சியில்  மலேசியா  ஈடுபட்டுள்ளது. அதற்காக  உக்ரேன்  அரசாங்கத்துடனும்  கிளர்ச்சித் தரப்பான  டொனெட்ஸ்க்  குடியரசுடனும்  அது  பேச்சுக்கள்  நடத்துகிறது. விமானம்  விழுந்து  நொறுங்கிக்  கிடக்கும்  பகுதியைத்தான்  போர்  ஓய்வுப் பகுதியாக  அறிவிக்க  முயற்சிகள்  நடக்கின்றன.  என  மலேசியாவின்  சிறப்பு  விசாரணைக்  குழுவுக்குத்  தலைமையேற்றிருக்கும்  கைருல் …

விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் சண்டை: ஆய்வுவேலைகள் நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, கிழக்கு  உக்ரேனில்  மலேசிய  விமானம் சுட்டு  வீழ்த்தப்பட்ட  பகுதியில்  கடும்  சண்டை  மூண்டதால்  அங்கு  ஆய்வுப்பணிகள்  நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியைச்  சுற்றிலும்  ஐந்து  இடங்களில்  உக்ரேன்  படையினருக்கும்  ரஷ்ய- ஆதரவு  கிளர்ச்சிப்  படையினருக்குமிடையில்  நிகழ்ந்த  மோதல்களில்  குறைந்தது  13பேர்  கொல்லப்பட்டனர். அப்பகுதிக்குச்  சென்று  வருவதற்கு  வசதிசெய்துத்தர கிளர்ச்சிப்படையினர் …

அம்னோவுடன் இணைந்து சிலாங்கூரை முஸ்லிம்-அல்லாதவர்களிடமிருந்து கைப்பற்ற பாஸ் சூழ்ச்சி!

  வாட்ஸ்அப் வழியாக பாஸ் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பக்கத்தானிலிருந்து பாஸ் விலகிக் கொள்வது பற்றிய சாத்தியக்கூறுகளை விவாதித்தது கவனக்குறைவின் காரணமாக அம்பலத்திற்கு வந்துள்ளது. பக்கத்தான் சிதறப்போவது என்பதில் உண்மை இருக்கிறது என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய தகவல். அம்னோவுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தவர் மத்தியக்குழு…

வெடிப்புகள் காணப்பட்டாலும் பாக்கத்தான் தாக்குப்பிடிக்கும், அன்வார் நம்புகிறார்

  சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பக்கத்தான் ரக்யாட் கூட்டணிக்குள்ளேயே நடந்து வரும் மோதல்கள் குறித்து இதுவரையில் மௌனமாக இருந்து வந்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் உடன்பாட்டை வளர்க்கும் அதன் கடந்த கால செயல்பாட்டின் அடிப்படையில் பாக்கத்தான் நிலைத்திருக்கும் என்றார். பாஸ் கட்சி தலைவர் அப்துல்…

குவான் எங்: பக்கத்தான் சிதறிப் போகக்கூடும்

  பக்கத்தான் கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் பாஸ் கட்சி கூட்டணியின் ஒன்றுபட்ட கொள்கை நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வது பற்றி அவரது கருத்தை இன்று வெளியிட்டார். ஹரிராயா கொண்டாட்டங்கள் முடிவுற்ற பின்னர், மலேசியாவில் இரு கட்சி அமைவுமுறை…

நிக் அசிஸ்: சிலாங்கூர் எம்பியை மாற்றவதற்கான காரணம் ஏதும் இல்லை

  பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் தோக் குரு நிக் அசிஸ் நிக் மாட் அவரது கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு தெரிவித்திருந்த ஆதரவுக்கு மிகுந்த கவனமுடன் தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். ரமதான் மற்றும் நோன்பு ஆகிய ஆன்மீக…

நெகாரா-கு பதிவு செய்யப்படமாட்டாது, ஹமிடி

  இனவாத எதிர்ப்பு அரச சார்பற்ற நெகாரா-கு என்ற புதிய அமைப்பை தமது அமைச்சு அதன் தற்போதைய பெயரில் பதிவு செய்யாது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று அறிவித்தார். அம்பிகா மற்றும் சாமாட் சாயிட் ஆகியோரால் வழிநடத்தப்படும் இந்த இயக்கம் பதிவு செய்யப்படுவதற்கு சங்கப்…

இஸ்லாம் குறித்த பினாங்கு தகராற்றில் முன்னாள் தலைமை நீதிபதியை ஆதரிக்கிறார்…

  பினாங்கில் இஸ்லாம் மருட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் சாற்றியிருந்த குற்றச்சாட்டுக்கு பினங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் பதிலளித்த முறை அவருடைய தகுதிக்கு ஏற்றதல்ல என்று பெர்காசா கூறுகிறது. அப்துல் ஹமிட் பெயர் கூறப்படாத ஒரு முன்னாள் முப்தி…

சிறார் மத மாற்றம்: இந்திரா காந்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்பு…

  சிவில் உயர்நீதிமன்றம் மற்றும் ஷரியா நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் சம்பந்தப்பட்ட இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சா பராமரிப்பு சர்ச்சையில், ஷரியா நீதிமன்றத்தை தடுத்து நிறுத்தும் உத்தரவை பெறுவதற்கு ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 25) இந்திரா காந்திக்கு அனுமதி வழங்கியது. "ஷரியா நீதிமன்ற உத்தரவு…

பிகேஆரின் முயற்சிகளுக்கு வேட்டு வைத்தது பாஸ்

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், தம்  ஆதரவு  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும்  சிலாங்கூரின்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமுக்குத்தான்  என்று  அறிவித்துள்ளார். இதன்  மூலம்  காலிட்டைப்  பதவியிலிருந்து  தூக்கும்  பிகேஆரின்  முயற்சிகளுக்கு  வேட்டு  வைத்திருக்கிறார்  எனலாம். காலிட்,  மக்கள்  அவர்மீது  வைத்த  நம்பிக்கைக்குத்  துரோகம்  இழைக்கவில்லை  என்று  ஹாடி  கூறியதாக …

நா காக்க: முன்னாள் சிஜே-க்கு அம்பிகா அறிவுறுத்தல்

முன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட் முகம்மட்  கருத்துச்  சொல்வதில்  கவனமாக  இருக்க  வேண்டும்  என்று   அம்பிகா  ஸ்ரீநிவாசன்  அறிவுறுத்தியுள்ளார். நீதிபதிகள்  பணி ஒய்வு  பெற்று  விட்டாலும்கூட  எண்ணிப்  பேசுதல்  வேண்டும்,  ஏனென்றால்  அவர்களின்  கருத்து  நீதித்துறையைப்  பாதிக்கும்  என்று  இப்போது  என்ஜிஓ-வான  நெகாராகூ-வுடன்  தம்மை  இணைத்துக்  கொண்டிருக்கும் …

‘கட்சித் தேர்தலில் பிகேஆரின் சாதனையோ சாதனை’: அம்னோ எம்பி கிண்டல்

கட்சித்  தேர்தலை நடத்தி  முடிக்க  மிக  நீண்ட  காலம்  எடுத்துக்கொண்ட  அரசியல்  கட்சி  எதுவென்றால்  அது  பிகேஆர்தான்  என  அம்னோ  எம்பி  நோ  ஓமார்  கூறினார். நான்கு  மாதங்களாகியும்  அதன்  தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக்காட்டி  அவர்  கேலி  செய்தார். 133 மில்லியன்  வாக்காளர்களைக்  கொண்ட  இந்தோனேசியாகூட  அதன்  தேர்தலைக் …

டிஏபி, எம்பி மாற்றத்துக்குப் பச்சை விளக்குக் காண்பித்தது

பிகேஆர்  யாரை மந்திரி  புசாராக  முன்மொழிந்தாலும்  அவரை  டிஏபி  ஆதரிக்கும். நடப்பு  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமிடம்  பொறுமை இழந்ததன்  விளைவாக  அது இம்முடிவுக்கு  வந்துள்ளது. “மந்திரி  புசாரிடம்  இப்போதெல்லாம்  பேச  முடிவதில்லை”, என  சிலாங்கூர்  டிஏபி-இன்  மூத்த  அதிகாரி  ஒருவர்  மலேசியாகினியிடம்  அலுத்துக் கொண்டார். யாருடைய  கருத்தையும் …

ஏர் அல்கேரி விமானத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை

ஏர் அல்கேரி நிறுவனம்,  பெர்கினா பாசோ-விலிருந்து  அல்ஜீரியா  சென்று  கொண்டிருந்த  அதன் விமானத்துடன் திடீரென்று தொடர்புகொள்ள  முடியாமல்  போனதாகக்  கூறப்படுகிறது. “வாகாடூகூ-விலிருந்து  அல்ஜியர்ஸ்  சென்று  கொண்டிருந்த  ஏர்  அல்கேரி  விமானத்துடன், புறப்பட்ட  50  நிமிடங்களுக்குப்   தொடர்பு  அறுந்துபோனது”, என விமான  நிறுவனம்  கூறியதாக  ஏஎப்பியை  மேற்கோள்காட்டி  தேசிய  செய்தி …

பெர்காசா: காலிட் செல்லாக் காசாகி விட்டார் அன்வாருக்கு

அப்துல்  காலிட்  இப்ராகிம் கட்சிக்குப் பயன்பட மாட்டார்  என்று  பிகேஆர்  நினைக்கிறது. அதனால்தான்  அவரை  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  தூக்க  முடிவு  செய்துள்ளது  என  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார். “காலிட்  பதவி விலகவோ விட்டுக்கொடுக்கவோ விரும்பவில்லை. அன்வார்தான், அவரால்  இனி  பயனில்லை  என  நினைத்து  அவரை …

மகாதிர்: யூதர்கள் நாஜிகளை விட மோசமானவர்கள்

யூதர்கள்  முன்னர் பட்ட  துன்பங்களிலிருந்து  பாடம்  கற்றுக்கொள்ளவில்லை  என்பதைத்தான் காசா-வில்  பெருகி  ஓடும்  இரத்த  ஆறு  உணர்த்துகிறது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “ஜெர்மனியில்  நாஜிகளின் துன்புறுத்தலுக்கு  ஆளானபோது  யூதர்கள்  உலகின்  பரிவையும்  ஆதரவையும்  வேண்டி  நின்றார்கள். அப்படியெல்லாம்  துன்பப்பட்டிருந்தாலும்  துன்பத்தின்  வலியை அவர்கள்  புரிந்துகொண்டிருக்கவில்லை.…

ஏவுகணை வைத்திருப்பதாகக் கூறவில்லை என்கிறார்கள் கிளர்ச்சிக்காரர்கள்

கிளர்ச்சிப்படையினர் ரஷ்யாவிடமிருந்து BUK ஏவுகணைகளைப்  பெற்றிருப்பதை  ஒப்புகொண்டதாக  வெளிவந்துள்ள  செய்தியை  உக்ரேன்  பிரிவினைவாத  படைகளின்  தலைவர்  அலெக்சாண்டர் கொடாகோவ்ஸ்கி  மறுக்கிறார்  என  த  கார்டியன்  அறிவித்துள்ளது. ராய்ட்டர்  நேர்காணல்  ஒன்றில்,  அவர்  அவ்வாறு  கூறியதாக  சொல்லப்படுகிறது.  கொடாகோவ்ஸ்கி-க்கு நெருக்கமானவர்களும்  அச்செய்தியை  மறுத்துள்ளனர். எம்எச்-17 விழுந்து  நொறுங்கியதிலிருந்து  உக்ரேன் அரசாங்கமும் …

பாஸ் இளைஞர்கள் காலிட் சிலாங்கூர் எம்பி-ஆக தொடர்வதை விரும்புகிறார்கள்

காலிட்  இப்ராகிமே  சிலாங்கூர்  மந்திரி புசாராக  தொடர  வேண்டுமென்று  கூறும்  பாஸ்  இளைஞர்  பகுதி, அவரை  மாற்றுவதற்காகக்  கூறப்படும்  காரணம் “சரியானதல்ல”  என்கிறது. பாஸ்  சிலாங்கூரைப்  போலவே  அதன்  இளைஞர்  பகுதியும்  காலிட்  தொடர்ந்து  சிலாங்கூர்  மந்திரி  புசாராக  இருப்பதையே  விரும்புகிறது  என  அதன்  தலைவர்  ஷியார்ஹான் ஹுமாய்சி …

மந்திரி புசார் தேர்வில் தலையிடும் அதிகாரம் சுல்தானுக்கு கிடையாது, அசிஸ்…

  மந்திரி புசார் யார் என்பதை மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடைய கட்சி முடிவு செய்துவிட்ட பின்னர் அதில் தலையிடும் அதிகாரம் சிலாங்கூர் சுல்தானுக்கு கிடையாது என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். சரவாக்கில் அப்துல் தாயிப் மாமுட் இடத்தில் அடினான் சாதெம் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட…

விரைவு பேருந்தில் தீ; 41 பேர் தப்பினர்

இன்று  நண்பகலில் கோலாலும்பூரிலிருந்து  கிளந்தானில்  கோத்தா பாரு  நோக்கிச்  சென்று  கொண்டிருந்த  விரைவு  பேருந்தில்  தீ  பிடித்துக் கொண்டது. ஆனால். அதில் பயணித்த  39  பயணிகளும்  இரண்டு  ஓட்டுனர்களும்  காயமின்றித்  தப்பினர். கோலா லிப்பிஸ்  அருகில்  அவ்விபத்து  நிகழ்ந்ததாக  லிப்பிஸ்  மாவட்ட  போலீஸ்  தலைவர்  சுப்பிரெண்டெண்ட்  அப்துல்  ரசாக் …