கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
சிலாங்கூர் அரசில் இருப்பதா வேண்டாமா? பாஸ் அதன் ஆண்டுக் கூட்டத்தில்…
சிலாங்கூர் மாநில அரசில் பாஸின் நிலை குறித்து அதன் பொதுப் பேரவை முடிவு செய்யும் என அதன் தகவல் பிரிவுத் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். பொதுப் பேரவைக் கூட்டம் அடுத்த ஆண்டு ஏபரலில் நடக்கிறது. அதில் பிகேஆருடன் ஒத்துழைப்பது குறித்து விவாதிப்பதுடன் மாநில அரசில் தொடர்ந்து இருப்பதா …
கொலையாளிகளை ஏற்றிச் சென்ற டாக்சி ஓட்டுனர் பிடிபட்டார்
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு பெண்களை ஏற்றிச்சென்ற டெக்சி ஓட்டுனரை போலீஸ் பிடித்துள்ளதாக ஓரியெண்டல் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் ஓரியெண்டல் டெய்லி, அப்பெண்கள் இருவரும் …
போலீஸ் காவல் இறப்பு: இரண்டாவது சவப் பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி
கடந்த வாரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்த எஸ்.பாலமுருகன் உடல்மீது இரண்டாம் முறையாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பாலமுருகனின் இளவல் எஸ். பால்ராஜ் கேட்டுக்கொண்டதைப் போல் இரண்டாவது சவப் பரிசோதனையை கோலாலும்பூர் மருத்துவமனையில்(எச்கேஎல்) செய்வதற்கு நீதிபதி அஸ்மான் உசேன் அனுமதி …
ஜோகூர், சிலாங்கூர் டிஏபி-இலிருந்து தலைவர்கள் வெளியேற்றமா?
ஜோகூர் டிஏபி-இலிருந்தும் சிலாங்கூர் டிஏபி- இலிருந்தும் கட்சித் தலைவர்கள் வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து அவற்றின் தலைவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை. நேற்று, முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அசிஸ் துங்கு இப்ராகிம் 48மணி நேரத்தில் ஜோகூரிலும் சிலாங்கூரிலும் இரண்டு மூத்த டிஏபி தலைவர்கள் …
கிம் ஜோங்-நாமை வட கொரிய ஆள்கள் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமை வட கொரிய ஆள்கள்தாம் விஷம் வைத்து கொன்றிருக்க வேண்டும் என தென் கொரிய உளவுத் துறை கூறியது. இத்தகவல் எப்படித் தெரிய வந்தது என்பதை அது தெரிவிக்கவில்லை. ஆனால் ஜோங் உன்னின் மாற்றாந் தாய் மகனான …
மகாதிர்: பாஸ் தலைவர்களின் கால்களை முத்தமிட மாட்டேன்
பெர்சத்துவுடன் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள பாஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாதகால அவகாசம் உறுதியானது என்று அக்கட்சியின் தலைவர் மகாதிர் முகமட் கூறுகிறார். இந்த விவகாரத்தை தீர்க்க நாங்கள் முயற்சிகள் எடுத்தோம். மிகவும் பொறுமையாக இருந்தோம். பாஸ் கட்சியைப் பற்றி நாங்கள் எதுவும் தவறாகக் கூறவில்லை. நாங்கள்…
மாபுஸ்: ஹாடியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் பாஸுக்கும் பிகேஆருக்குமிடையில் இனி ஒத்துழைப்பு…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், டிஏபி மற்றும் பார்டி அமனாவுடன் தொடர்பு வைத்துள்ள கட்சிகளுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று அறிவித்திருப்பதால் இனி பிகேஆருடன் ஒத்துழைப்பு இருக்காது என்று பொகோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் கூறினார். அந்த வகையில், பிகேஆர் தலைமையில் செயல்படும் சிலாங்கூர் அரசிலிருந்து வெளியேறுவது குறித்து …
விருது பெறுவோர் பின்னணியை ஆராய எம்ஏசிசி தயார்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), வருங்காலத்தில் நாட்டில் தகுதியானவர்களுக்கே விருது வழங்கப்படுவதை உறுதி செய்ய விருது பெறுவோரின் பின்னணியை ஆராய தயாராகவுள்ளது. இப்போது, கேட்டுக்கொள்ளப்படும் வேளைகளில் மட்டுமே அவர்களின் பின்னணி ஆராயப்படுகிறது என தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட் கூறினார். “சம்பந்தப்பட்ட தரப்புகள் கேட்டுக்கொண்டால் எல்லாருடைய பின்னணிகளையும் ஆராய்வோம்”, …
சிலாங்கூர் செயலகத்தில் சவப்பெட்டிகளுடன் ஜமால் ஆர்ப்பாட்டம்
ஏதாவது வித்தைகளைக் கையாண்டு பொதுமக்களிடையே விளம்பரம் தேடிக் கொள்வதில் கில்லாடியான சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் இன்று ஒரு டஜன் காலி பிணப்பெட்டிகளுடன் சிலாங்கூர் செயலகத்துக்குமுன் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி பதற்றத்தை உண்டு பண்ணினார். சிலாங்கூர் மூத்த குடிமக்களின் ஈமச் சடங்குகளுக்கு உதவும் நிதியான "Skim…
கிட் சியாங்: நால்வர் வெளியேற்றத்தால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை
டிஏபியிலிருந்து நான்கு பிரதிநிதிகள் விலகிக் கொண்டிருப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை என்கிறார் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங். மலாக்காவில் டிஏபியின் ஒரே எம்பியாக இருந்த சிம் தோங் ஹின்(கோத்தா மலாக்கா)வும் சட்டமன்ற உறுப்பினர்களான லிம் ஜக் வொங்(பாச்சாங்), சின் சூங் சியோங்(கெசிடாங்), கோ லியோங் சான்…
பணிநீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்களில் ‘காணாமல்போகும்’ பயிற்சி மருத்துவர்களும் அடக்கம்
பணிநீக்கம் செய்யப்படும் அரசுப் பணியாளர்களில் மருத்துவத் துறை சம்பந்தப்பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகமாகும் என்கிறார் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா. அவர்களில் நூறு நாள்களுக்குமேல் வேலைக்கு வராமல் காணாமல்போகும் பயிற்சி மருத்துவர்களும் அடங்குவர். “இந்தப் பயிற்சி மருத்துவர்கள் சில வேளைகளில் 400 நாள்களுக்குக்கூட காணாமல் போய் விடுகிறார்கள்”, என்றாரவர்.…
நான்கு டிஎபி பிரதிநிதிகள் கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கிட் சியாங்கும்…
தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு டிஎபி பிரதிநிதிகள் கட்சியிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் நாளை மலாக்காவுக்குச் செல்கின்றனர். நாளை முழுவதும் கிட் சியாங் மக்களைச் சந்திக்கிறார். அதன் பின்னர் இரவில் கட்சி உறுப்பினர்களுடன்…
ஹரப்பான் வெற்றி பெற்றால் பொதுச் சேவைத்துறை சீர்படுத்தப்படும்
அடுத்தப் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் பொதுச் சேவைத்துறையைச் சீர்திருத்தம் செய்வது அதன் முக்கிய திட்டமாக இருக்கும் என்று அதன் தலைமைச் செயலளாரர் சைபுடின் அப்துல்லா கூறுகிறார். "நாங்கள் புத்ராஜெயாவை வென்றால், நாங்கள் செய்யும் முதல் வேலை பொதுச் சேவைத்துறையை சீர்திருத்துவதற்கான ஓர் அதிகாரப்பூர்வமான அறிக்கையைத்…
குவான் எங்: நால்வர் வெளியேற்றம் பிஎன்னுக்கு ஒரு ‘அன்பளிப்பு’
கட்சிப் பிரதிநிதிகள் நால்வர் கட்சியிலிருந்து விலகியதைச் சாடிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அவர்கள் விலகியது “பிஎன்னுக்குக் கிடைத்த ஓர் அன்பளிப்பு” என்றார். வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு ஒரு பிடி அவல் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது. அவர்களின் விலகல் “எதிர்பாராத ஒன்று” என்றவர் சொன்னார். அவர்களில் ஒருவர், …
அரசாங்க ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பீர்: கருவூல முன்னாள் தலைமைச் செயலாளர்…
ஒரு நெருக்கடி நிலை உருவாவதற்குமுன் அரசாங்கம் “பெருத்துக் கிடக்கும்” அதன் ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பது நல்லது என்று முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் முகம்மட் ஷெரிப் முகம்மட் காசிம் அறிவுறுத்தினார். “ஆள்குறைப்பது அரசாங்கத்துக்கு மிகுந்த செலவை உண்டு பண்ணும் என்றாலும் அச்செலவை ஏற்க முடியும் என்கிற நிலை இருப்பதால் …
சிறைக் கைதி கழிப்பறையில் விழுந்ததால் காயமடைந்தார்: போலீஸ் விளக்கம்
சிறைக் கைதி சந்திரன் முனியாண்டியின் காயங்களுக்கு போலீஸ் காரணமல்ல அவர் வழுக்கி விழுந்ததுதான் காரணம் என தென் செபறாங் பிறை போலீஸ் தலைவர் ஷாபி அப்துல் சமட் தெரிவித்தார். அந்த 42-வயது கைதி கழிப்பறையில் விழுந்ததில் தலையில் காயம் பட்டது என்றும் அவருக்குத் தோல் நோய் இருந்ததால் சிறையில் உள்ள …
மலேசியாவில் தீவிரவாதம் இல்லை– நஜிப்
நாடு அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் திகழ்வதை உறுதிப்படுத்த மலேசியர்கள் மிதவாதத்தையே எப்போதும் கடைப்பிடித்து வர வேண்டும் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். அப்போதுதான் அரசாங்கத்தால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களையும் வகுக்க முடியும். மிதவாதம் இருந்தால் மட்டுமே நாட்டின் பல்லினங்கள் தடைகளும் சச்சரவும் இன்றி ஒன்றுபட்டிருக்கவும் …
சாலே: கிட் சியாங், குவான் எங்மீது டிஏபி அடிநிலைத் தலைவர்கள்…
மலாக்காவில் டிஏபி பிரதிநிதிகள் நால்வர் கட்சியிலிருந்து விலகியது அக்கட்சியின் அடிநிலைத் தலைவர்களுக்கு டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் கூடிக்குலாவுவது பிடிக்கவில்லை என்பதைக் காட்டுவதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். கிட் சியாங்மீதும் தலைமைச் செயலாளர் லிம் கிட் சியாங்மீதும் …
பெல்டா ரிம4.3 பில்லியனை இழக்கவில்லை என்று ஷரீர் இப்போது கூறுகிறார்
முன்பு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போல் பெல்டா ரிம4.3 பில்லியனை இழக்கவில்லை என்று பெல்டா தலைவர் ஷரீர் அப்துல் சமாட் இன்று விளக்கம் அளித்தார். ஜோகூர்பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஷரீர் அந்த ரிம4.3 பில்லியன் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதற்கான பட்டியல் தம்மிடம் இருப்பதாக கூறினார். பல செய்தித்தளங்கள் எஃப்ஜிவிஎச்…
மலாக்கா பிரதிநிதிகளின் ராஜினாமாவை டிஎபி வரவேற்கிறது
மலாக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பிரதிநிதிகள் டிஎபி கட்சியிலிருந்து விலகிக்கொண்டதை அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் டான் கோக் வை வரவேற்றார். அந்நால்வர் கூறிக்கொண்டத்தைப் போல் கட்சி அதன் உண்மையான நோக்கங்களிலிருந்து மாறவில்லை. மாறாக, அந்த நால்வரும்தான் மாறிவிட்டார்கள் என்றாரவர். "அவர்கள் கட்சிக்குள்ளிருக்கும் புற்றுநோய். தங்களுடைய விருப்பத்தற்கிணங்க அவர்கள் கட்சியை…
மலாக்கா டிஏபி சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கட்சி விலகல்
மலாக்காவில் டிஏபி சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக ஓரியெண்டல் டெய்லி ஆன்லைன் இன்று அறிவித்தது. கோட்டா மலாக்கா எம்பி சிம் தோங் ஹிம், டுயோங் சட்டமன்ற உறுப்பினர் கோ லியோங் சான், பாச்சாங் சட்டமன்ற உறுப்பினர் லிம் ஜாக் வொங், கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் சின் …
ஒரு மாதம் கெடு கொடுத்து கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வேலை…
பக்கத்தான் ஹராபான் கூட்டணியில் சேர்வது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அழுத்தம் கொடுப்பதை நிறுத்தும்படி பாஸ் கூறியுள்ளது. அவ்விவகாரத்தில் ஒரு மாதத்துக்குள் முடிவு செய்ய வேண்டுமென பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) அவைத் தலைவர் பாஸுக்கு கெடு விதித்திருப்பது முறையல்ல …
எப்ஜிவி-இன் ரிம4.3 பில்லியன் எங்கே? ஷாரிர் கேள்வி
புதிதாக நியமிக்கப்பட்ட பெல்டா தலைவர் ஷாரிர் அப்துல் சமட் பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் முதல் பொதுப்பங்கு வெளியீடு(ஐபிஓ) செய்தபோது கிடைத்த ரிம4.3 பில்லியன் எப்படிச் செலவிடப்பட்டது என்பது மர்மமாக உள்ளது என்றார். “பெல்டா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது அதற்கு ரிம6 பில்லியன் கிடைத்தது........அதிலிருந்து ரிமா1.7 பில்லியன் பெல்டா குடியேற்றக்காரர்களுக்காகச் …


