மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலவியபோதிலும், இந்த மாதம் மலேசியாவின் சுற்றுலாத் துறை 2.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூல் பதிவிட்டுள்ள அவர், மார்ச் 1 முதல் 26…
‘ஒலா போலா’படத்தைப் பார்த்தபின்னர் ஊழலையும் இனவாதத்தையும் எண்ணிக் கவலையுறுகிறார் நசிர்
‘ஒலா போலா’ படம் மலேசியர் பலருக்கும் மலேசியாவின் வசந்த காலமாக திகழ்ந்த ‘அந்த நாள்களை’ நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. மகிழ்ச்சி நிரம்பிய அந்த நாள் நினைவுகளில் தோய்ந்து கிடப்போரில் சிஐஎம்பி குழுமத் தலைவர் நசிர் ரசாக்கும் ஒருவர். ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் இன்னொரு பக்கம் ஊழலும் இனவாதமும் …
மகாதிரை விசாரிப்பதில் வேகம் காட்டும் போலீஸ், ஜோ லவ் விசயத்தில்…
தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் 1எம்டிபி ஊழல் பற்றியும் அதில் தொழிலதிபர் ஜோ லவ்வுக்குள்ள தொடர்பு பற்றியும் ஆகக் கடைசித் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் தாம் 2014 டிசம்பரில் செய்த புகார் என்னவாயிற்று என பத்து கவான் அம்னோ …
பிகேஆர்: கைரி பேச்சுரிமைக்கும் கல்விக்கழக சுதந்திரத்துக்கும் குரல் கொடுக்க வேண்டும்
மேலும் அதிகமான இளைஞர்கள் அரசியலில் பங்கேற்க வர வேண்டும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் விடுத்துள்ள வேண்டுகோளை பிகேஆர் இளைஞர் பகுதி வரவேற்றுள்ளது. அதன் தேசிய துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின், மலேசிய இளைஞர் ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஆண்டில் வெளியிட்ட மலேசிய …
மகாதிருக்கு எதிராக ‘நிறைய’ போலீஸ் புகார்கள்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வலைப் பதிவுகள் தொடர்பாக போலீசுக்கு நிறைய புகார்கள் வந்திருப்பதாக தேசிய போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.. புகார்கள்மீது போலீஸ் விரைவில் விசாரணைகளைத் தொடங்கும்,. “புகார்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்குவதுதான் வழக்கம்”, என காலிட் இன்று பினாங்கில் தெரிவித்தார். எப்போது …
சிவில் திருமணங்களில் ஷியாரியா நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஷியாரியா நீதிமன்றத்துக்கும் சிவில் நீதிமன்றத்துக்குமிடையில் சர்ச்சைகள் ஏற்படாதிருக்க 1988-இல் அரசமைப்பில் இணைக்கப்பட்ட சட்டவிதி 121(1ஏ)-க்கு நல்லதொரு விளக்கமாக அமைந்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகம்மட் ரவுஸ் ஷரிப், தம் 33-பக்கத் தீர்ப்பில், இஸ்வான் தன் வழக்கை ஷியாரியா நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றதால்தான் சர்ச்சை உருவானதாகக் …
டாக்டர் எம்: என்னைக் கைது செய்ய விரும்புகிறார்கள்
தம்மைக் கைது செய்து சிறையில் அடைக்க விரும்புகிறார்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார்.. “புதிய தகவல் தலைவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே நான் இப்படியெல்லாம் செய்வதாகக் கூறியுள்ளார். என்னைக் கைது செய்ய விரும்புகிறார்கள் என்பதற்கு இது தெள்ளத் தெளிவான எச்சரிக்கை”, என மகாதிர் …
ரிம2.6 பில்லியன் ‘பெரிய தொகை அல்ல’ என்று சொன்னது பற்றிக்…
ஒரு பொதுத் தேர்தல் செலவுக்கு ரிம2.6 பில்லியன் என்பது “பெரிய தொகை அல்ல” என்று கூறி இருந்த புதிதாக அம்னோ தகவல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அனுவார் மூசாவிடம் அது பற்றி மேலும் விளக்கம் கேட்டதற்கு அவர் கருத்துரைக்க மறுத்தார். இன்று யுனிவர்சிடி கோலாலும்பூர் வளாகத்தில் அவரைச் சுழ்ந்து கொண்ட …
ஐஜிபி: பாபாகோமோ-வுக்கு எதிராக போலீஸ் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்
சர்ச்சைக்குரிய வலைப்பதிவரான வான் அஸ்ரி வான் டெரிஸ், வெளிநாட்டவர் ஒருவரை அடிப்பதைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். பாபாகோமா என்ற பட்டப் பெயரில் பிரபலமாக …
சிக்கனமாக செலவு செய்யாவிட்டால் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும்
நிதி அமைச்சர் II ஹுஸ்னி ஹனாட்ஸ்லா, அமைச்சுகள் கொடுக்கப்பட்ட நிதியை விவேகமான முறையில் செலவிட வேண்டும் இல்லையென்றால் அவற்றுக்கான ஒதுக்கீடுகள் சீரமைக்கப்பட்ட 2016 பட்ஜெட்டில் குறைக்கப்படும் என எச்சரித்தார். அமைச்சுகள் எவ்வளவு சிக்கனப்படுத்துகின்றன என்பதை வைத்துத்தான் இனி, அவற்றின் முக்கிய அடைவுநிலை குறியீடு கணக்கிடப்படும் என்றாரவர். “முன்பு ஒரு …
கட்டுமானத் தொழிலாளர் சம்பளம் உயர்ந்தால் வீட்டு விலை உயரும்- கைரி…
கட்டுமானத் துறைக்கு உள்நாட்டவரை ஈர்ப்பதற்காக அத்துறை சமபந்தப்பட்ட வேலைகளுக்குச் சம்பளத்தை உயர்த்தினால் வீடுகளின் விலையும் உயரும் என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். “அழுக்குப் பிடித்த வேலைகளை”ச் செய்யத் தயாரா என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஜிட் ஹமிடி விடுத்த சாவாலை உள்நாட்டவர் ஏற்க வேண்டுமானால் …
ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தைக் குற்றமாக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்
இந்துவான எஸ். தீபாவுக்கும் இஸ்லாத்திற்கு மதம் மாறிய அவரது முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லா @ வீரனுக்கும் இடையிலான குழந்தை பராமரிப்பு சம்பந்தப்பட்ட வழக்கில் பெடரல் நீதிமன்றம் வழங்கிய ஏகமனதான தீர்ப்பில் தவறான மத மாற்றம் பற்றிய பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படாதது அல்லது பேசப்படாதது வருத்தத்திற்குரியது…
மற்ற தேச நிந்தனைக் குற்றச்சாட்டையும் கைவிடுவீர்: அரசாங்கத்துக்கு வலியுறுத்து
அரசாங்கம், மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஸ்மி ஷாரோமுக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டைக் கைவிட்டதைப்போல் மற்றவர்களுக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. “மற்றவர்கள்மீதான குற்றச்சாட்டுகளும் மறு ஆய்வு செய்யப்பட்டு கைவிடப்பட வேண்டும். “தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்றும் …
‘ஜோ லவ்-வை விசாரணைக்கு அழைக்கும் துணிச்சல் இல்லாத பிஏசி தலைவர்…
பொதுக் கணக்குக்குழு(பிஏசி)த் தலைவர் ஹசான் அரிபின், ஆடம்பர பிரியரான தொழில் அதிபர் லவ் தேக் ஜோ-வை நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு அழைக்க வேண்டும். இல்லை என்றால் பதவி விலகுவதே நல்லது. “1எம்டிபி பற்றிய விசாரணைக்கு வருமாறு அவரை அழைக்கும் துணிச்சல் இல்லை என்றால் ஹசான் பிஏசி தலைவர் பதவியிலிருந்து …
கூ நான்: ‘மலத்தைக் கிளறும்’ நாற்றக் கும்பல் அம்னோவுக்குள் இருந்துகொண்டே…
அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் Gabungan Ketua Cawangan Malaysia (ஜிகேசிஎம்)-வை “மலத்தைக் கிளறும் நாற்றக் கும்பல் என்று வருணித்துள்ளார். அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்க்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் அவர்களின் திட்டம் வெற்றிபெறும் என்று அவர் நினைக்கவில்லை. “இவர்கள் மலத்தைக் கிளறிக் …
நஜிப்மீதான புலன் விசாரணையை மீண்டும் தொடங்குவீர்: மன்னருக்கு 30,000பேரின் மகஜர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது மீண்டும் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னரையும் ஆட்சியாளர் மன்றத்தையும் கேட்டுக்கொள்ளும் இணையத்தள மகஜர் ஒன்றில் இதுவரை 30,000 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இது இன்று '1 Juta Desak Buka Kembali Siasatan Terhadap Najib Razak' (…
AmBank நிறுவனர் கொலையில் டெக்சி ஓட்டுனர் விடுதலை
AmBank நிறுவனர் உசேன் நஜாடி-இன் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபரை தன் டெக்சியில் ஏற்றிச் சென்றதாகக் குற்றஞ்சாப்பட்டிருந்த டெக்சி ஓட்டுனரை முறையீட்டு நீதிமன்றம் இன்று விடுவித்தது. தன்மீதான குற்றஞ்சாட்டுக்கும் தீர்ப்புக்கும் எதிராக சியு சியாங் சீ செய்திருந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தன்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்ற சியுவின்…
ஜெயேந்திரன்: எம்எச்370 விமானி மீட்கப்பட்டார் என்பது பொய்யான செய்தி
காணாமல்போன எம்எச்370-இன் விமானி மீட்கப்பட்டு தைவான் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறாராம். இப்படி ஒரு செய்தி வெளிநாட்டு இணைய செய்தித் தளமான ‘வோர்ல்ட் நியுஸ் டெய்லி’-இல் சுகாதார அமைச்சின் துணை தலைமை இயக்குனர் டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரையின் படத்துடன் வெளியாகி இருந்தது. ஜெயேந்திரனின் படத்தைப் போட்டிருந்தவர்கள் அவரை …
சட்டப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, மலாயாப் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீதான நிந்தனை வழக்கை மீட்டுக்கொண்டுள்ளார். “நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்ததில் கூட்டரசு அரசமைப்பு எனக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்டு அஸ்மிக்கு எதிரான வழக்கை நிறுத்திகொள்ள முடிவு செய்தேன்”,என அபாண்டி ஓர் அறிக்கையில் கூறினார்.…
பிரதமரைக் குற்றவாளியாக்க விரும்பிய ஐவரை சிருல் அம்பலப்படுத்தினார்
முன்னாள் போலீஸ் அதிரடிப் படைவீரர் சிருல் அஸ்ஹார் உமர், மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் தொடர்புண்டு என்று கூறுவதற்குக் கையூட்டு கொடுக்கவும் நெருக்குதல் கொடுக்கவும் முனைந்தவர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கிறாராம். அவர்களைப் பற்றி சிருல் ஒரு காணொளியில் தெரிவித்தார் என்றும் காணொளி தன்வசம் …
‘உச்சமன்றத் தீர்ப்பு ஒரு அபாயகரமான முன்மாதிரி’
இஸ்வான் அப்துல்லாவுக்கு அவரின் மகனைப் பராமரிக்கும் உரிமையைக் கொடுக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு அபாயகரமான முன்மாதிரியாகும். தந்தையுடன் தங்கி இருந்தான் என்பதற்காக எட்டு-வயது சிறுவனை இஸ்வானின் பொறுப்பிலேயே விடுவது தப்பான முடிவாகும் என கூலாய் எம்பி தியோ நை சிங் கூறினார். இஸ்வானும் அவரின் முன்னாள் மனைவி எஸ்.தீபாவும் …
முக்ரிஸ்: 1எம்டிபி, ரிம2.6 பில்லியன் பற்றி நான் கருத்துத் தெரிவித்தது…
1எம்டிபி, ரிம2.6பில்லியன் ‘நன்கொடை’ பற்றிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேரடியாக தம்மைக் கண்டித்ததாக கெடாவின் முன்னாள் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார். “நான் (1எம்டிபி, ரிம2.6பில்லியன் பற்றிப்) பேசியதால் பிரதமர் அதிருப்தி அடைந்திருந்தார், ஆத்திரப்பட்டார்...”, எனக் காணொளி ஒன்றில் முக்ரிஸ் கூறினார்.…
கெடாவில் முக்ரிசுக்கு மேலும் ஒரு தோல்வி: மாநில அம்னோ தலைவர்…
கெடா மந்திரி புசார் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா இப்போது மாநில அம்னோ தலைவருமாவார். முக்ரிஸ் மகாதிருக்குப் பதில் பாஷாவை மாநிலத் தலைவராக நியமனம் செய்ய அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பணித்திருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் கூறினார். “கெடா அம்னோவில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை …
Psy நிகழ்ச்சிக்கு பிஎன் 1எம்டிபி பணத்தைக் கொடுத்ததா? பிஏசி ஆராய…
2013 பினாங்கில் சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பில் கொரியன் சூப்பர்ஸ்டார் Psy நிகழ்ச்சி நடத்துவதற்கு பிஎன் 1எம்டிபி பணத்தைப் பயன்படுத்தியதா? இதைப் பொதுக் கணக்குக்குழு(பிஏசி) கண்டறிய வேண்டும். இக்கேள்விக்கு இந்நாள்வரை பதில் கிடைக்கவில்லை என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். “பிஏசி இன்று அல்லது …


