துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
பொடா சட்டத்தில் விசாரணையின்றித் தடுத்து வைக்கும் விதியைத் திருத்துவீர்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில்(பொடா) உள்ள விசாரணையின்றிக் காவலில் வைக்கும் விதியைத் திருத்த வேண்டும். அதற்குப் பதிலாக பயங்கரவாதி என்ற சந்தேகத்துக்குரியவர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு நீதிபதி ஒருவர் அவரை 14 நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வார். அதன் பிறகு அவர்மீது குற்றம் சாட்டப்பட …
ஹெலிகாப்டரில் இருந்த பெண் யார் என்ற மர்மம் வலுக்கிறது
சனிக்கிழமை, செமிஞியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த கிர்கிஸ்தான் பெண் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அறுவருமே கொல்லப்பட்டனர். ஆனால், மற்றவர்கள் யார், எவர் என்ற விவரம் தெளிவாக தெரியும்போது அய்டானா பைஸியவா பற்றி மட்டும் எதுவும் தெரியாமல் மர்மமாக இருக்கிறது.…
அடுத்து ரோஸ்மாமீது தாக்குதல் தொடுப்பாரா மகாதிர்?
24-மணி நேரம் அமைதியாக இருந்த அம்னோ-ஆதரவு இணையத் தளம் ஒன்று மீண்டும் டாக்டர் மகாதிர்மீது சரமாரியாக தாக்குதலைத் தொடங்கியுள்ளது. மகாதிர் அடுத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரைத் தாக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கிறாரா என்று அது கேள்வி எழுப்பியுள்ளது. மகாதிர், செயல்படும் முறையை அடிப்படையாக வைத்து…
நஜிப் மகாதிரை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதே பிஎன் எம்பிகளின்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எழுப்பும் விவகாரங்களை எதிர்க்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மளவில் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பிஎன் ஆதரவு மன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அம்மன்றத்தின் தலைவரும் ஜோகூர் பாரு எம்பியுமான ஷாரிர் சமட், பிஎன் எம்பிகள் நஜிப்பை ஆதரிக்கிறார்கள், தற்காத்துப் பேசுகிறார்கள் …
ரிம 116மில்லியனில் கட்டப்பட்ட ஆகாயப்படை கல்லூரியில் பல ஓட்டைகள்
அரசாங்கம் ரிம116 மில்லியன் செலவில் கட்டிய ஆகாயப் படை கல்லூரியின் (ஏஎப்சி) பயிற்சி மையத்தில் உள்ள குறைபாடுகளை 2014 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. “அங்குள்ள பல கட்டிடங்களும் கட்டமைப்புகளும் பாதுகாப்பு அம்சங்களின்றிக் கட்டப்பட்டுள்ளன. ஆயுதக் கிடங்கைச் சுற்றிப் பாதுகாப்புக்கு வேலி இல்லை. “சில கட்டிடங்களில் தொடர்புமுறைகள் இல்லை.…
மகாதிர்மீது வழக்கு தொடுக்கும் துணிச்சல் உண்டா? நஜிப்புக்கு ரபிஸி சவால்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவதூறு வழக்கு தொடுத்த சிலரில் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லியும் ஒருவர். இப்போது அந்த பாண்டான் எம்பி, தம்மீது வழக்கு தொடுத்த நஜிப்புக்கு அவரை அல்டன்துன்யா கொலையுடன் தொடர்புப் படுத்திப் பேசியுள்ள டாக்டர் மகாதிர்மீது வழக்கு தொடுக்கும் துணிச்சல் இருக்கிறதா என்று …
கைரி: மசீச ஹூடுட் மசோதாவை அமைச்சரவையில் எதிர்க்கவில்லை
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்களில் மசீசவோ இதர பிஎன் பங்காளிக் கட்சிகளோ ஹூடுட் சட்ட மசோதாவை எதிர்க்கவில்லை என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். ஆனால், ஹூடுட் மசோதா விவாதிக்கப்படவில்லை. "இது நடந்துள்ளது என்று கூறப்பட்டு, அது தாக்கல் செய்யப்பட்டது", என்று அவர் செய்தியாளர்களிடம் கோலாலங்காட்டில் இன்று…
தந்தையின் ஈமச்சடங்கில் அன்வார் கலந்து கொண்டார்
சிறையிலிடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் தந்தை இன்று காலை மணி 2.00 அளவில் காலமானார் என்று பிகேஆரின் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கூறினார். அன்வாரின் தந்தை இப்ராகிம் அப்துல் ரஹ்மான் அம்னோ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவரின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள…
கைரி: மகாதிரின் கேள்விகளுக்கு நஜிப் பதில் அளிக்க வேண்டும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தொடுத்துள்ள தாக்குதல் பற்றி அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினிடம் கருத்துக் கேட்கப்பட்டதற்கு அவர் இரு தரப்புக்கும் நல்ல பிள்ளைபோல் நடந்து கொண்டார். மக்களிடம் மகாதிருக்கு அளவற்ற செல்வாக்கு இருப்பதால் அவர் வலைப்பதிவில் எழுதியதைப் புறந்தள்ளிவிட …
சிருல்: அல்டன்துன்யா புலனாய்வு பற்றி ஐஜிபி பொய் சொல்கிறார்
மலேசியாவிலிருந்து தப்பியோடி ஆஸ்திரேலியாவில் மறைந்து வாழும் சிருல் அஸ்கார் உமர், தம்மைச் சந்திக்க அதிகாரிகளை அனுப்பி வைத்ததாக போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் சொல்வது பொய் என்கிறார். இன்று மலேசிய நேரம் அதிகாலை 2.30க்கு மலேசியாகினியிடம் பேசிய சிருல், நேற்று ஐஜிபி அறிக்கையைப் பார்த்ததிலிருந்து …
மலேசியாகினியை இழுத்துமூடச் சொல்லி ஆர்ப்பாட்டம்
இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசியாகினி அலுவலகத்துக்கு அருகில் சுமார் 20 பேர் திரண்டு அச்செய்தித்தளத்தை இழுத்து மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். காபோங்கான் மலாயு பெர்சத்து டெமி இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த அவர்கள், அந்த இணையத்தளம் செய்திகளைத் திரித்துக் கூறுவதாகவும் மலேசியர்களைப் பிளவுபடுத்துவதாகவும் இளைஞர்களைக் குழப்புவதாகவும் குற்றம் …
மகாதிர்: முகைதின் பிரதமராகலாம் ஆனால்……
துணைப் பிரதமர் முகைதின் யாசின் பிரதமராவதற்கு மிகவும் தகுதி படைத்தவர்தான் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். ஆனாலும் அவரை அப்பதவிக்குப் பரிந்துரைக்க மகாதிர் தயாராக இல்லை. தமக்குப் பின் பிரதமராக வந்த இருவரும் எதிர்பார்க்கப்பட்டதுபோல் இல்லை என்பதால் “நம்பிக்கை இழந்துவிட்டதாக”க் கூறினார் அவர். “மக்கள்மீது நம்பிக்கை…
சுஹாகாம்: தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது
தேச நிந்தனைச் சட்டம் 1948 தொடர்ந்து பயன்படுத்தப்படுவது "திகைக்க வைக்கிறது" என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) என்று தெரிவித்ததோடு புத்ரா ஜெயா அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்தரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இச்சட்டம் அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் மற்றும், ஏன், ஊடகப் பணியாளர்கள்…
மகாதிர்: சிருல் எனது பாதுகாப்பாளராக இருந்தபோது யாரையும் கொல்லவில்லையே!
மங்கோலிய பெண் அந்தான்துயாவை கொலை செய்ததற்காக மரணை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் தமது பாதுகாப்பாளராகவும் பணி புரிந்திருந்த தகவலை முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்று வெளிப்படுத்தினார். ஆனால், அந்த சிறப்பு நடவடிக்கை பிரிவின் முன்னாள் கமாண்டோ சிருல் தம்மிடம் பணி புரிந்த போது…
மகாதிருக்கு எதிராக ஜாசா எதிர்நடவடிக்கை எடுக்கும்
ஜாசா என்ற சிறப்பு விவகாரங்கள் இலாகா முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், அல்தான்துயா கொலை சம்பந்தமாக கேள்வி எழுப்பி இருப்பதற்கு எதிராக தாக்குதல் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. "நீதிமன்றம் முடிவெடுத்து விட்ட பின்னர் மகாதிர் ஏன் சிருல் (அஸ்கார் ஒமார்) பிரச்சனையை எழுப்ப வேண்டும்? "இந்த பிரச்சனையை மகாதிர்…
ஐஜிபி: மகாதிர் தேச நிந்தனைக் குற்றம் புரியவில்லை
அல்டான்துன்யா ஷாரீபு கொலை, 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) போன்ற விவகாரங்களை எழுப்பிப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சாடிவரும் டாக்டர் மகாதிர் முகம்மட் தேச நிந்தனைச் சட்டத்தை மீறவில்லை என்கிறார் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார். “இவ் விவகாரங்களை மகாதிர் மட்டும் பேசவில்லை. ஏற்கனவே பலர் …
சிருலின் தாயார் மகாதிரை சந்திக்க விரும்புகிறார்
பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார், போலீஸ் அதிரடிப் படை முன்னாள் உறுப்பினரான சிருல் அஷார் உமரின் தாயார் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். அல்டான்துன்யாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தம் மகனைப் பற்றி பியா சமட் முன்னாள் பிரதமரிடம் “ஏதோ சொல்ல” விரும்புகிறார் என …
பிணையில் வெளிவந்த ஸூனார் மீண்டும் கைது
கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 9 தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அரசியல் கேலிச்சித்திரக்காரர் ஸுனார் பிணைப்பணம் கட்டிவிட்டு வெளியில் வந்த 30-வது நிமிடம் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஸுனார்- அவரது இயற்பெயர் சுல்கிப்ளி அன்வார் அல்ஹாக்- டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் …
டெல்கோவுடன் அரசாங்கம் சமரசம் செய்துகொண்டதால் என்ஜிஓ-கள் ஆத்திரம்
முன்கூட்டி கட்டணம் செலுத்தி பெறும் சேவைக்கான கட்டணத்தை அதிகரித்த தொலைதொடர்ப்பு நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் அவை பேசும்நேரத்தைக் கூட்டுவதாக சொன்னதை ஏற்றுக்கொண்ட அரசாங்கத்தின்மீது சமூக அமைப்புகள் “வெறுப்படைந்துள்ளன”. “முன்கூட்டி பணம் செலுத்திப் பெறப்படும் சேவைக்கு 6% ஜிஎஸ்டி விதித்த டெல்கோ நிறுவனங்களுடன் அரசாங்கம் சமரசம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு…
மசீச இளைஞர்கள்: மகாதிரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எங்கே?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைசொல்வதில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எல்லைமீறிச் சென்று விட்டதாக மசீச இளைஞர் தலைவர் சோங் சின் வூன் கூறினார். நஜிப் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்காததால் அவருக்கு மக்களின் ஆதரவு குறைந்து விட்டதாக மகாதிர் கூறுவது பற்றிக் கருத்துரைத்த சோங்,…
விடை தேடுகிறார் மகாதிர்; உண்மை வெளிவரவேண்டிய நேரம் வந்து விட்டது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பல விவகாரங்களுக்கு விடை தேடுகிறார் என்கிறார் அம்னோ மூத்த உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா. குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான அவரை இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது உண்மை வெளிவர வேண்டும் என்றார். “உண்மையான பதில்களும் இவ்விவகாரங்களின் பின்னணியில் …
பாஸ்: “ஹலால் ஜிஎஸ்டி” என்பது தவறு
ஜிஎஸ்டி வரியை "ஹலால்" என்று கூறுவது தவறு என்று தேசிய ஃபாட்வா மன்றம் பிரதமர் நஜிப்புக்கு ஆலோசனை கூற வேண்டும் என்று பாஸ் அம்மன்றத்தை இன்று கேட்டுக்கொண்டது. புதன்கிழமை அமலாக்கம் கண்ட ஜிஎஸ்டி மலேசிய சூழ்நிலையில் "ஹலால் அல்ல" என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் துவான்…
டிஎம்ஐ கைதில் அரசியல் நோக்கம் கொண்ட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை
த மலேசியன் இன்சைடர் செய்தியாசிரியர்களைக் கைது செய்யுமாறு “அரசியல் நோக்கம்கொண்ட கட்டளை” எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார். அவர்களை விசாரணை செய்யும் பொறுப்பை போலீசிடமே விட்டுவிட்டதாக ஜாஹிட் குறிப்பிட்டார். “அவர்களைக் கைது செய்து காவலில் வைக்க வேண்டுமென்று அரசியல் நோக்கில் கட்டளை …


