துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
தேர்தல் தொகுதிப் பிரிப்பில் மகாதிர் செய்த தகிடுதத்தம்: இஸ்மாயில் சப்ரி…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தேர்தல் தொகுதிப் பிரிப்பில் செய்த குழப்படிகளால் அம்னோவால் கூடுதல் இடங்களை வெற்றி பெற முடியாமல் போனதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி குற்றம் சாட்டியுள்ளார். 1999ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மகாதிர் மலாய்- பெரும்பான்மை தொகுதிகள் பலவற்றைப் பல-…
பணத்தைக் காண்பிக்க முடியுமா? நஜிப் ஆதரவாளர்களை வினவுகிறார் மகாதிர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தாக்குதல்கள் நிற்பதாகத் தெரியவில்லை. இப்போது அவர் நஜிப் ஆதரவாளர்களை நோக்கிக் கணைகளைப் பாய்ச்சியுள்ளார். மகாதிர் தம் வலைப்பதிவில், நஜிப் ஆதரவாளர்களை நோக்கி அம்னோ தலைவரின் உருவாக்கமான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) ரிம42 பில்லியன் கடன் …
பெர்மாத்தாங் பாவில் பக்கத்தான் ஒரு குழுவாக செயல்படும்
பினாங்கு டிஏபி, பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் பிகேஆருடனும் பாஸுடனும் இணைந்து ஒரு குழுவாக செயல்படும். டிஏபி-இன் இம்முடிவு பினாங்கு டிஏபி சோசலிச இளைஞர் பிரிவின் (டேப்ஸி) முடிவுக்கு நேர்மாறாக உள்ளது. டேப்ஸி தேர்தலின்போது பிகேஆர் இளைஞர் பிரிவுடன் சேர்ந்து வேலை செய்வது என்றும் பாஸுடன் இணைந்து செயல்படுவதில்லை …
கிளந்தான் மாநிலத்திற்கு ஷரியா சட்டம் வேண்டுமென்றால், மலேசிய அரசமைப்புச் சட்டம்…
பாஸ் கட்சி ஆட்சி செய்யும் கிளந்தான் மாநிலத்திற்கு ஷரியா கிரிமினல் சட்டம் இருந்தே ஆகவேண்டும் என்றால், பெடரல் அரசமைப்புச் சட்டம் பற்றி மறுபேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று சாபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த 33 அரசு சார்பற்ற அமைப்புகள் கீழ்க்கண்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளன: நாங்கள் -…
தேச நிந்தனைச் சட்டத்திருத்தத்துக்குக் ‘கட்டளை இட்டுக்கொண்டிருப்பவர்கள்’ அம்னோ தளபதிகள்
அஸ்மின் அலி (பிகேஆர்- கோம்பாக்) தேச நிந்தனைச் சட்டத் திருத்தத்துக்குத் திட்டமிட்டவர்களும் நாடாளுமன்றத்தில் அதை விரைந்து நிறைவேற்றத் துடிப்பவர்களும் அம்னோ தளபதிகள்தான் எனக் குற்றம் சாட்டியுள்ளார். “சட்டத்திருத்தம் அவசரம் அவசரமாகக் கொண்டு வரப்படுவது ஏன்? சட்டத்தைத் திருத்த வேண்டும் என அம்னோ கட்டளை இட்டதா? “60 அம்னோ தொகுதித் …
நீதிமன்றத்துக்காகக் காத்திருக்க முடியாது: தேச நிந்தனைச் சட்டம் மீதான விவாதம்…
1948 தேச நிந்தனைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் சட்டவரைவைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் டியோ கொண்டுவந்த தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா புறந்தள்ளினார். தேச நிந்தனைச் சட்டம் அரசமைப்புக்கு இணக்கமானதா என்று ஆராயும் வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நிலையில் இருப்பதாக…
ஜாஹிட்: மலேசியாவில் புவாமீது குற்றப்பதிவு ஏதுமில்லை
சூதாட்ட மன்னன் பால் புவா வெய் செங், 2004-இல் மீரியில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் போலீஸ் பதிவேடுகளி அவர்மீது குற்றம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. “போலீஸ் பதிவேடுகளில் புவா இதற்குமுன் குற்றம் செய்தார் என்று பதிவு செய்யப்படவில்லை”. கோபிந்த் சிங் தியோவின் கேள்விக்கு உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் …
சிருலைச் சென்று காண பணமில்லையா? உதவ முன்வந்தார் மாபுஸ்
பொக்கோக் செனா எம்பி மாபுஸ் ஒமார், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய போலீஸ் அதிரடிப் படை வீரர் சிருல் அஸ்ஹார் உமரைச் சந்திப்பதற்கு ஒரு போலீஸ் குழுவை அனுப்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தயாராக இருக்கிறார். “அதிகாரிகளை அனுப்பி வைக்க போலீசிடம் பணமில்லை என்றால் ஒரு புரவலரைப் பிடித்து போலீசும் போலீஸ் …
சிருலின் தாயார் மகாதிரை சந்தித்தார்
பாஸ் பொக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போலீஸ் கோனாண்டோ சிருல் அஸார் ஒமாரின் தாயார் பியா சாமாட்டை இன்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை சந்திக்க அழைத்துச் சென்றார்.…
‘நீதிமன்றத்தை அவமதிப்பது பரவாயில்லையா’-நன்சியைக் கடிந்துகொண்டார் அம்பிகா
1948 தேச நிந்தனைச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவருவது “அவமதிப்பதாக இருக்கலாம் ஆனால் சட்டவிரோதமானதல்ல” என்று கூறிய நடப்பில் சட்ட அமைச்சர் நன்சி ஷுக்ரியை வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கடிந்து கொண்டார். கூட்டரசு நீதிமன்றம் அச்சட்டம் அரசமைப்புக்கு ஏற்புடையதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது என்றும் அச்சட்டம் …
இசி: ஜாசா அதிகாரிகளை நியமித்தது தவறில்லை
சிறப்பு விவகாரத் துறை அதிகாரிகளை வாக்காளர் பதிவாளர்களாக நியமனம் செய்தது தவறு அல்ல என்கிறது தேர்தல் ஆணையம். அதே வேளை என்ஜிஓ உறுப்பினர்கள் உதவிப் பதிவாளர்களாக(ஏஆர்ஓ) செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுவதையும் இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் மறுத்தார். “ஜாசா ஒரு அரசாங்கத் துறை. நாங்கள் …
மகாதிருக்கு எதிராக நாடு முழுக்க போலீஸ் புகார்
சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்), டாக்டர் மகாதிர் முகம்மட்மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி நாடு முழுக்க போலீசில் புகார் செய்து வருகிறது. அல்டன்துன்யா ஷரீபு கொலை தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றி முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து …
முகைதினும் உதவித் தலைவர்களும் மகாதிருடன் பேசி நெருக்கடிக்குத் தீர்வு காண…
டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றிக் கடுமையாகக் குறைகூறி வருவதால் அம்னோவும் அதன் அடிநிலைத் தலைவர்களும் கலக்கமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி, இந்நெருக்கடிக்குத் துணைப் பிரதமரும் உதவித் தலைவர்களும் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.…
முகைதின்: பொடாவும் ஐஎஸ்ஏ-யும் ஒன்றல்ல
நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பது அவசியம். அதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்(பொடா) என்கிறார் முகைதின் யாசின். இப்புதிய சட்டம் அதைப் பயன்படுத்தும் அதிகாரத்தைப் பயங்கரவாதத் தடுப்பு வாரியத்துக்குக் கொடுக்கிறது. அதன் உறுப்பினர்கள் பேரரசால் நியமிக்கப்படுகிறார்கள். இச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்படுவோர் அவர்களின் உறவினர்களைச் சந்திக்கலாம். உறவினர்கள் வழியாக வழக்குரைஞர்களின் …
மே 7-இல் பெர்மாத்தாங் பாவ் தேர்தல்
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் மே 7-இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்களிப்பு ஒரு வியாழக்கிழமை நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் ஏப்ரல் 25. அத்தொகுதி காலியானதாக மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கடந்த வாரம் அறிவித்தார். அத்தொகுதி …
‘பொடாவை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் 2.0 எனலாம்’
அண்மையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா), உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் 2.0 என அழைக்கப்படுகிறது. விசாரணையின்றித் தடுத்து வைப்பதற்கு அது இடமளிப்பதுதான் காரணமாகும். இந்த விதிதான் அதை இப்போது இரத்தாகிப்போன ஐஎஸ்ஏ--யுடன் தொடர்புப் படுத்திப் பேச வைக்கிறது. இச்சட்டத்தின்கீழ் ஒருவரை ஈராண்டுகள்வரை விசாரணையின்றித் தடுத்து வைக்கலாம். தடுப்புக் …
பொடா சட்டம் தொடர்பில் சுஹாகாம் கண்டனம்
2015 பயங்கரவாதத் தடுப்புச் சட்ட(பொடா)த்தின்கீழ் விசாரணையின்றித் தடுத்து வைப்பதை மீண்டும் கொண்டு வந்திருக்கும் அரசாங்கத்தை மனித உரிமைகள் ஆணையம்(சுஹாகாம்) கடிந்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான புத்ரா ஜெயாவின் போராட்டத்தை சுஹாகாம் ஆதரிக்கிறது ஆனால், அதன் பொருட்டு மனித உரிமைகள் பலி கொடுக்கப்படுவதை அது ஏற்கவில்லை. “பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்க்க …
போலீஸ் காவல் மரணங்கள்: இதுவரை 4 போலீசார்மீது மட்டுமே நடவடிக்கை
போலீஸ் காவலில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பில் இதுவரை நான்கு போலீசார் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாமஸ் சூ(டிஏபி- ஈப்போ தீமோர்)வுக்கு எழுத்து வடிவில் அளித்த பதிலில் உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி இதைத் தெரிவித்தார். போலீஸ் காவல் மரணங்கள் தொடர்பில் இப்போது வழக்கு விசாரணையை …
வாக்காளர் பதிவில் முறைகேடுகள்: பெர்சே குற்றச்சாட்டு
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே தேர்தல் ஆணையத்தின்(இசி) வாக்காளர் பதிவில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இசி வாக்காளர் பதிவுக்கு சிறப்பு விவகாரத் துறை(ஜாசா) அதிகாரிகளைப் பயன்படுத்துவதை அது சுட்டிக்காட்டுகிறது. 2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் என்ஜிஓ-களையும் அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் உதவிப் பதிவதிகாரிகளாக(ஏஆர்ஓ)ச் செயல்படுவதை இசி நிறுத்திக் கொண்டது.…
அறிவால் ஆபத்து: பிரதமர் எச்சரிக்கை
மலேசிய பட்டதாரிகள் “வில்லன்களாகி” நாட்டை அழிக்காதிருக்க அவர்களுக்கு அறநெறிகள் புகட்டப்பட வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “அவர்கள் அறிவாளிகளாக இருந்து அறநெறியற்றவர்களாக இருந்தால், அவர்களின் அறிவைக் கொண்டு நாட்டையே அழித்து விடலாம். “அதற்கோர் எடுத்துக்காட்டு, நன்கு படித்தவர்கள் படித்ததை வைத்து குண்டுகள் உருவாக்குவது. இது …
ஹாடியின் ஹுடுட் சட்டவரைவுக்கு எஸ்ஐஎஸ் எதிர்ப்பு
இஸ்லாத்தில் சகோதரிகள் அமைப்பு (எஸ்ஐஎஸ்), மாராங் எம்பியும் பாஸ் தலைவருமான அப்துல் ஹாடி ஆவாங், ஷியாரியா சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மக்களவையில் தனி உறுப்பினர் சட்டவரைவைக் கொண்டு வருவது ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளது. அவர் கிளந்தானில் ஹுடுட்டை அமல்படுத்துவதற்காக கூட்டரசு அரசமைப்பைப் புறக்கணிக்கிறார், அவமதிக்கிறார் என்று அது கூறிற்று. “சட்டவரைவு …
அமைச்சர்: விசாரணை இல்லை என்பதற்காக நீதி இல்லை என்றாகிவிடாது
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா) விசாரணையின்றி தடுத்து வைக்க வகை செய்கிறது என்பதால் அது ஓர் அநீதியான சட்டமாகி விடாது என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. மக்களவையில் பொடா சட்டவரைவு மீதான விவாதத்தை முடித்து வைத்துப் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். விசாரணையில்லை என்றாலும் நீதி …
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பின்னே ஒளிந்துள்ள பயங்கரம்
விசாரணையின்றிக் காலவரையில்லாமல் தடுத்து வைப்பதற்கு வகை செய்திருப்பதால் அரசாங்கத்தின் அரசியல் நோக்கம் கொண்ட அதிகார அத்துமீறல்கள் இனி அதிகரிக்கலாம் என்று மனித உரிமை கண்காணிப்பு (எச்ஆர்டபள்யு) அமைப்பு எச்சரிக்கிறது. அதிகாரிகளுக்கு தடுத்துவைக்கும் அதிகாரத்தைக் கொடுக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா) நிறைவேற்றப்பட்டிருப்பது, மலேசியாவில் மனித உரிமைகளுக்கு ஏற்பட்ட “மிகப் …


