துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
மகாதிர்: அல்டான்துன்யாவைக் கொலை செய்யச் சொன்னது யார்?
அல்டான்துன்யாவைக் கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பது மக்களுக்கு விளங்காத மர்மமாக உள்ளது என்கிறார் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட். போலீஸ் அதிரடிப் படையின் முன்னாள் வீரரான சிருல் அஸ்ஹாரின் கூற்றை விசாரிக்க வேண்டும். அப்போதுதான் கோரமான அக்கொலைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது தெரியவரும் என்பதை அவர் …
மகாதிர்: யாரும் நஜிப்பை நம்பவில்லை; பிஎன் தோல்வி உறுதி
பிரதமர் நஜிப் பதவி இறங்கினாலொழிய அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவும் பிஎன்னும் தோல்வியுறும் என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். பிரதமர் பதவியேற்று ஆறு ஆண்டுகள் ஆகும் வேளையில் இதுவரை இல்லாத அளவுக்கு நஜிப்மீது மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர். நஜிப் இதுவரை அவர்மீது சுமத்தப்பட்ட பல்வேறு …
ஜிஎஸ்டி “ஹலால்” என்கிறார் நஜிப்
பிரதமர் நஜிப் இன்று பொருள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) தற்காத்து பேசியதோடு அந்த வரியை "ஹலால்" என்று பிரகடனம் செய்தார். அந்த வரி இன்று முதல் அமலாக்கம் காண்கிறது. இன்று உலக ஹலால் உச்சநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் நஜிப், "தேசிய ஃபாட்வா மன்றம் ஜிஎஸ்டி…
தொழிலாளர் தினத்தில் ஜிஎஸ்டி-க்கு எதிராக கித்தா லவான் பேரணி
கித்தா லவான், தொழிலாளர் தினமான மே முதல் நாளில் பொருள், சேவை வரிக்கு எதிரான பேரணி ஒன்றை ஏற்பாடு செய்கிறது. இது, அவ்வமைப்பு, பிப்ரவரி 10-இல் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டதிலிருந்து நடத்தும் மூன்றாவது பேரணியாகும். “அரசியல்வாதிகள், கல்விமான்கள், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் என 120-க்கு …
‘அன்வாரின் தொகுதி காலியாக உள்ளது’
அன்வார் இப்ராகிம் இனியும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி எம்பி அல்லர் என்பதை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா உறுதிப்படுத்தினார். மார்ச் 16-இலேயே மன்னிப்பு வாரியம் அன்வாரின் மனுவை நிராகரித்திருக்கிறது என்றும் ஆனால் அதன் முடிவு இன்றுதான் தமக்குத் தெரிய வந்தது என்றும் பண்டிகார் கூறினார். ஆக, பெர்மாத்தாங் …
எம்பிகள்: ரசாக் விடுவிக்கப்பட்டதற்குச் சரியான விளக்கம் தேவை
அல்டான்துன்யா ஷாரீபு கொலைக்கு உடந்தையாக இருந்த அப்துல் ரசாக் பகிண்டா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யாததற்கு புத்ரா ஜெயா கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என எதிரணி எம்பிகள் இருவர் கூறினர். “அமைச்சரின் பதில் வழக்கத்துக்கு மாறானதாகவும், முரண்பாடு மிக்கதாகவும், அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கிறது. அதற்குக் கூடுதல் விளக்கம் தேவை. “முதலில்…
ஊடக பதிப்பாளரும் செய்தியாசிரியரும் விடுதலை
தி எட்ஜ் செய்திதாளின் பதிப்பாளர் ஹோ கேய் தாட்டும் மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) தலைமை செயல் அதிகாரி ஜகபர் சாதிக்கும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர்களின் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். த மலேசியன் இன்சைடர் செய்தித்தளத்தில் வெளியான ஒரு செய்திக்காக தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, கைதான 24-மணி …
ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் ‘திரும்பவும்’ சுங்கத் துறை சென்றார்கள்
ஒரு வாரத்துக்குமுன் பொருள், சேவை வரிமீது 106 கேள்விகளுடன் கூட்டரசுப் பிரதேச சுங்கத் துறையை முற்றுகையிட்டபோது கைதான ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்களில் சுமார் பன்னிரண்டு பேர் இன்று திரும்பவும் அங்கு சென்றார்கள். ஆனால், ஒரு மாற்றம். இப்போது அவர்கள் ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்புத் தெரிவிக்க அங்கு செல்லவில்லை. தங்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்ததற்கு …
அன்வாரின் முயற்சியால் பால் கிடைக்கிறது, கொசுத் தொல்லை குறைந்தது
இரண்டு மாதங்களாக சுங்கை பூலோ சிறையில் இருந்துவரும் அன்வார் இப்ராகிம் அச்சிறைச்சாலையில் சில ‘சீரமைப்புகளை’க் கொண்டு வந்திருக்கிறார். இப்போது அங்கு சிறையில் இருப்பவர்களுக்கு வாரத்துக்கு மூன்று தடவை பால் கொடுக்கப்படுகிறது. இதற்குமுன் கைதிகளின் உணவுப் பட்டியலில் பால் இடம்பெற்றிருக்கவில்லை. கொசுக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சிறையில் கொசுத் தொல்லை இருப்பதைக் …
நஸ்ரி: ஹூடுட் மசோதாவை அமைச்சரவை விவாதிக்கவில்லை
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஹூடுட் மசோதா விவாதிக்கப்படவில்லை என்று சுற்றுலா மற்றும் பண்பாடு அமைச்சர் நாஸ்ரி அப்துல் அசிஸ் இன்று கூறினார். இந்த விவகாரத்தில் பிரதமர் நஜிப்பின் மழுப்பல் போக்கு குறித்து குடையப்பட்ட போது: "அதை அவரிடம் (நஜிப்) கேளுங்கள்" என்று நஸ்ரி பதில்…
ஹுடுட்டால் பக்கத்தான் உடைந்து போகும் என எதிர்பார்க்கிறார் அமைச்சர்
அம்னோ மூத்த அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் ஹுடுட்டால் பக்கத்தான் ரக்யாட் உடைந்து போவதைக் காண ஆவலாக உள்ளார். “ஹுடுட் விவகாரத்தால் பக்கத்தான் உடையும் என்றால் அப்படியே நடக்கட்டும்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஹுடுட் பற்றி விவாதிக்கப்படவில்லை என்பதையும் நஸ்ரி …
அஸ்மின்: பாஸுடனான உறவை முறித்துக்கொள்வது பிகேஆரின் நிலைப்பாடு அல்ல
பாஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள சாபா பிகேஆர் எடுத்துள்ள முடிவு பிகேஆரின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு அல்ல என்று பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். அக்கட்சியின் சாபா தலைவர் லாஜிம் உகின் மற்றும் சாபா டிஎபி தலைவர் ஜிம்மி வோங் ஆகியோர் பாஸ் கட்சியுடனான உறவை…
காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவு இல்லை: டிஎம்ஐ மூவர் விடுவிக்கப்படுவர்
த மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) செய்தித்தளத்தின் செய்தியாசிரியர்களை விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறும் போலீசின் முயற்சி பலிக்கவில்லை. டிஎம்ஐ நிர்வாக ஆசிரியர் லயோனல் மொராய்ஸ், மூத்த செய்தியாளர்கள் சுல்கிப்ளி சுலோங், அமின் ஷா இஸ்கண்டர் ஆகிய மூவரும் இன்றிரவு ஏழு மணிக்குள் விடுவிக்கப்படுவர் என்று வழக்குரைஞர் …
கிட் சியாங்: 14வது பொதுத் தேர்தலில் பாஸ் துடைத்தொழிக்கப்படலாம்
பாஸ், ஹுடுட் சட்டத்தில் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக அடுத்த பொதுத் தேர்தலில் துடைத்தொழிக்கப்படலாம் என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கிறார். வடக்கத்தி மாநிலங்கள் சிலவற்றில் வேண்டுமானால் அது பேர் போட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், அதன் கோட்டையாக திகழும் கிளந்தானில்கூட அக்கட்சி ஆட்சியை இழக்க நேரலாம் …
போலீஸ் வலைவீச்சு தொடர்கிறது: டிஎம்ஐ உயர் நிர்வாகிகளும் கைது
தி எட்ஜ் செய்திதாளின் பதிப்பாளர் ஹோ கேய் தாட்டும் மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) தலைமை செயல் அதிகாரி ஜகபர் சாதிக்கும் இன்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்றபோது கைது செய்யப்பட்டனர். ஆட்சியாளர் மாநாடு பற்றித் தப்பான செய்தியை வெளியிட்டதற்காக டிஎம்ஐ-இன் மூத்த செய்தியாசிரியர்கள் மூவர்- லயோனல் …
செய்தியாசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு மலேசியாகினி கண்டனம்
தப்பான செய்தியைப் போட்டதற்காக த மலேசியன் இன்சைடர் செய்தியாசிரியர்களும் பதிப்பாளரும் கைது செய்யப்பட்டிருப்பதை மலேசியாகினி கடுமையாகக் கண்டித்துள்ளது. இது ஊடகச் சுதந்திரம்மீது மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான அதிரடித் தாக்குதல் என்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்த உருமாற்ற வாக்குறுதிகள் எல்லாம் காற்றோடு கரைந்து போய்விட்டன என்றும் அது கூறிற்று.…
செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு சிஐஜே கண்டனம்
பத்திரிகைச் சுதந்திரத்துக்காக போராடும் அமைப்பான சுதந்திர இதழியல் மையம் (சிஐஜே), த மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) மீது போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையை வெட்கக்கேடானது என்று வருணித்ததுடன் கைது செய்யப்பட்ட செய்தியாசிரியர்கள் மூவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆட்சியாளர் மாநாடு பற்றித் தப்பான செய்தியை …
த மலேசியன் இன்சைடர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்
கிளந்தான் மாநில ஹுடுட் சட்ட மசோதா ஆட்சியாளர்கள் மன்றம் நிராகரித்து விட்டது பற்றிய செய்தி அறிக்கைக்காக த மலேசியன் இன்சைடர் நிருவாக ஆசிரியர் லையோனல் மொராஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஆசிரியர்களான அமின் ஷா இஸ்கந்தர் மற்றும் ஸுல்கிப்பிலி சுபாங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அம்மூவரும்…
சாபா பிகேஆரும் டிஏபியும் பாஸுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டன
பக்கத்தான் ரக்யாட் கூட்டணி கட்டங்கட்டமாக உடைந்து வருவதுபோல் தெரிகிறது. இப்போது சாபாவில் பிகேஆரும் டிஏபி-யுடன் சேர்ந்து கொண்டு பாஸுடனான உறவுகளை முறித்துக் கொண்டிருக்கிறது. சரவாக்கில் மாநில பக்கத்தான் ரக்யாட் கூட்டணியிலிருந்து டிஏபி விலகிக் கொண்ட ஒரு வாரத்தில் இது நிகழ்ந்துள்ளது. சாபா பிகேஆர், டிஏபி தலைவர்கள் இன்று பிற்பகல் …
டிஎம்ஐ அலுவலகத்தில் ஓர் அதிரடிச் சோதனை
சுமார் ஒரு டஜன் போலீசாரும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய (எம்சிஎம்சி) அதிகாரிகளும் த மலேசியன் இன்சைடர்(டிஎம்ஐ) அலுவலகத்தில் இன்று மாலை அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தினார்கள். டிஎம்ஐ நிர்வாக இயக்குனர் லையோனல் மொராய்ஸ், சுல்கிப்ளி சூலோங் ஆகியோர் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஹுடுட் …
ஐஜிபி-யைக் கண்டிக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது
போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) காலிட் அபு பக்காரைக் கண்டிப்பதற்காக பக்கத்தான் ரக்யாட் கொண்டு வந்த தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தள்ளுபடி செய்தார். ஐஜிபி அவரின் அதிகாரத்துக்கு ஏற்பவே செயல்பட்டு வந்திருக்கிறார் என்பதால் அத்தீர்மானத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை என மக்களவைத் தலைவர் பதில் அளித்திருப்பதாக …
ஹாடி: பக்கத்தானின் எதிர்காலம் பற்றி நான் அறியேன்
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கிடம் செய்தியாளர்கள் பக்கத்தான் ரக்யாட்டின் எதிர்காலம் பற்றி வினவினர். “எதிர்காலம்? எனக்குத் தெரியாது”, என்றவர் ஹாடி சுருக்கமாக பதிலளித்தார். ஹுடுட் சட்டவரைவைக் கொண்டுவருவதில் பாஸ் கட்சி முனைப்பாக இருப்பதால் பக்கத்தான் ரக்யாட் கூட்டணியில் டிஏபி மற்றும் பிகேஆருடனான அதன் …
சமூக ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்க சுங்கத் துறை தயார்
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றி நேரடி விளக்கம் பெற ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர் விரும்பினால் அவர்களுக்கு இலவசமாகவே விளக்கமளிக்க சுங்கத் துறை முன்வந்துள்ளது. சுங்கத் துறை, ஜிஎஸ்டி-எதிர்ப்பு சமூக ஆர்வலர்கள், கடந்த வாரம் கூட்டரசு சுங்கத் துறையை முற்றுகையிட்டபோது கொண்டுவந்த 106 கேள்விகளுக்கும் அதன் இணையத்தளத்தில் பதிலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “அவர்களுக்கு …


