துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
புதிய பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டம் ஐஎஸ்ஏ போல் தடுப்புக் காவலில் வைக்க…
2015 பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டவரைவு(பொடா), ஒருவரை விசாரணையில்லாமல் காலவரையின்றிக் காவலில் வைக்க இடமளிக்கிறது. அதை எதிர்த்து நீதிமன்றத்தும் செல்லவும் இயலாது. சந்தேகப் பேர்வழிகள், தொடக்கக் கட்டமாக 59 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்படலாம். அதன் பின்னரே பயங்கரவாதத் தடுப்பு வாரியத்தில் முன்னிலை படுத்தப்படுவார்கள். அவ்வாரியம் கூடின பட்சம் ஈராண்டுவரை அவர்களைத் தடுத்து …
லீ குவான் நாடாளுமன்றத்தில் இறந்தார்: இதுதான் உலகத் தர ஆங்கிலாமா?
மலேசியாவின் ஆங்கில மொழி திறன் சிங்கப்பூரை விட உயர்ந்தது என்று இந்த நாட்டின் துணை கல்வி அமைச்சராக இருக்கும் பி. கமலநாதன் கூறிக்கொண்டார். அந்த துணை கல்வி அமைச்சரின் கூற்று எந்த அளவுக்கு உண்மையானது என்று எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கு இந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் சான்று வழங்கியுள்ளது. சிங்கப்பூருக்கு…
கட்சித் தலைமையகத்தில் அதிரடிச் சோதனை ஒரு ‘மட்டுமீறிய நடவடிக்கை’
நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் போலீஸ் நடத்திய அதிரடிச் சோதனையும் கட்சித் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி தொடர்ந்து தடுக்கப்பட்டு வைத்திருப்பதும் ‘மட்டுமீறிய நடவடிக்கை’ என பிகேஆர் இளைஞர் பிரிவு சாடியுள்ளது. “தடுப்புக் காவலில் உள்ள ரபிஸியை (அலுவலகத்துக்கு) அழைத்து வந்து கித்தா லவான் பேரணிகள்…
ரபிஸியின் சுற்றறிக்கைக்காக பிகேஆர் தலைமையகத்தில் போலீஸ் திடீர்சோதனை
இன்று பின்னேரத்தில் போலீசார் பிகேஆரின் தலைமையகத்தில் அதன் தலைமைச் செயலாலர் ரபிஸி ரம்லியின் அறைக் கதவை உடைத்து திடீர்சோதனை மேற்கொண்டனர். ரபிஸி கடந்த வெள்ளிக்கிழமை பிகேஆரின் உறுப்பினர்களை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கித்தா லவான் பேரணியில் கலந்து கொள்ளுமாறு வெலியிட்டிருந்த ஒரு சுற்றறிக்கைக்காக அவர் கைது செய்யப்பட்டார். ரபிஸியின்…
மாணவி இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ததை அமைச்சர் மறுக்கிறார்
. பதிமூன்று வயது பள்ளி மாணவியை இஸ்லாமிய சமயத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதை சரவாக் மாநில அமைச்சர் பாத்திமா அப்துல்லா இன்று மறுத்தார். சப்ரினா எங்கும்பாங் என்றழைக்கப்படும் அந்த முதல் படிவ இபான் மாணவி இஸ்லாத்திற்கு மாற விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அப்பெண் அதிகாரப்பூர்வமாக மாநில இஸ்லாமிய இலாகாவால்…
கைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்கள் தியான் சுவா, ரபிஸி ரம்லி ஆகியோர் கைது செய்யப்பட்டதன் விளைவாக மக்களுக்கு பிஎன் மீதுள்ள வெறுப்புத்தான் அதிகரிக்கும். பக்கத்தான் தலைவர்களையும் மற்ற சமூக ஆர்வலர்களையும் கைது செய்த போலீசாரின் கடும் நடவடிக்கையைக் கண்டித்த பாஸ் உதவித் தலைவர் …
பாஸ் உதவித் தலைவர்: ஹாடியின் ஹுடுட்டில் பிரம்படி மட்டுமே இருக்கும்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் தாக்கல் செய்யவுள்ள தனி உறுப்பினர் சட்டவரைவில் ஹுடுட் தண்டனைகள் பிரம்படிகள் என்ற அளவில்தான் இருக்கும் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம். ‘ஸினா’ (திருமணத்துக்கு முந்திய பாலுறவு), மது அருந்துதல், ‘கசாவ்’(ஒருவர் ஸினா குற்றம் செய்ததாகக் குற்றஞ்சாட்டுதல்) ஆகிய குற்றங்களுக்கு மட்டுமே…
பேச்சுரிமை இருக்கிறது: ரோஸ்மாவையே குறை சொல்ல முடிகிறது, இல்லையா?
நாட்டில் பேச்சுரிமை இல்லையென்று சொல்வது யார், இருக்கிறது என்று அடித்துச் சொல்கிறார் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான். “அரசாங்கத்தின் திறமைக்குறைவு பற்றிப் பேச வேண்டுமா, ஊழலை பற்றிப் பேச வேண்டுமா? இந்நாட்டில் எதைப் பற்றியும் பேசலாம். “ரோஸ்மாவைப் பற்றிக்கூட பேசுகிறார்கள். ரோஸ்மா அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லையே”,…
தடையை மீறி பேரணி நடக்கும்; கித்தா லவான் திட்டவட்டம்
கித்தா லவான் பேரணியைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் முயன்றாலும் பேரணி திட்டப்படி நடக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்கள் நலனைக் கவனிக்கத் தவறிவிட்டார் அதனால்தான் மக்கள் ஒன்றுகூடி பேரணி நடத்துவது அவசியமாகி விட்டது என கித்தா லவான் செயலகம் கூறிற்று. “மலேசியர்களாகிய நாம்தான் …
மாட் சாபு முகமூடி அணிந்திருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார்
பாஸ் கட்சியின் துனைத் தலைவர் முகமட் சாபு புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவினரால் நள்ளிரவில் செபராங் ஜெயா, பினாங்கில் கைது செய்யப்பட்டார். இன்று பின்னேரத்தில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் அன்வாரை விடுவிக்கக் கோரும் கித்தா லவான் நிகழ்ச்சியில் மாட் சாபு பங்கேற்பதைத் தவிர்க்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று…
ஹிசாம் ரயிஸ் பல நபர்களால் “கடத்தப்பட்டார்”
சமுதாய ஆர்வலர் ஹிசாம் ரயில் கித்தா லவான் குந்தியிருப்பு போராட்ட இடத்திற்கு அருகில் பல நபர்களால் "கடத்தப்பட்டார்". ஜாலான் துன் பேராக் வழியாக டாத்தாரான் மெர்தேக்காவை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கையில் இச்சம்பவம் நடந்தது. நடைபாதையிலிருந்து அவரை பிடித்து இழுத்து ஒரு வெள்ளி நிற காரினுல் திணிக்கப்பட்டார். அக்காருக்கு…
போலீசும் சமூக ஆர்வலர்களும் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள்
போலீஸ், நேற்றிரவு நடைபெற்ற உள்ளமர்வுப் போராட்டத்தில் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்துத்தான் சமூக ஆர்வலர்களைக் கைது செய்ததாகக் கூறுகிறது. அச்சம்பவத்தைக் கண்ட பின்னரே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அறுவரைப் போலீஸ் கைது செய்ததாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் சைனோல் சமா …
பிகேஆர்: கட்சி உறுப்பினர்கள் கித்தா லவான் பேரணியில் பெருமளவில் கலந்துகொள்ள…
பிகேஆர், சனிக்கிழமை கோலாலும்பூரில் நடைபெறும் கித்தா லவான் பேரணியில் கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொள்வதை ஊக்குவிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. என்ஜிஓ-களால் ஏற்பாடு செய்யப்படும் அப்பேரணியை வெற்றிபெறச் செய்ய பிகேஆர் முழுக் கடப்பாடு கொண்டிருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி இன்று ஓர் அறிக்கையில் …
மீரியில் மாணவி ஒருவரை ‘மதமாற்றம்’ செய்யும் முயற்சி
14-வயது தியாக்குருடினை மதமாற்றம் செய்ய முயன்று அம்மாணவன் பராகுவாட் அருந்திய வழக்கு இன்னும் தீர்க்கப்படாத நிலையில் சரவாக்கிலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 13-வயது இபான் பெண்ணான சப்ரினா அனாக் ங்கும்பாங்- கை ஓர் ஆசிரியரும் மற்றவர்களும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்றார்களாம். அது பற்றி அப்பெண் மார்ச் …
மன்னிப்பு வாரியம் அன்வார் குடும்பத்தின் மனுமீது முடிவு செய்து விட்டது
அன்வார் இப்ராகிமுக்கு மன்னிக்க வேண்டி அவரின் குடும்பத்தார் செய்து கொண்டிருந்த மனுமீது மன்னிப்பு வாரியம் முடிவெடுத்து விட்டது. ஆனால், முடிவு எதிரணித் தலைவருக்குச் சாதகமாக இருக்காது என்றே தோன்றுகிறது. அன்வாரின் வழக்குரைஞர் என்.சுரேந்திரனைக் கேட்டதற்கு முடிவு என்னவென்பதைத் தெரிவிக்க அவர் விரும்பவில்லை. கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் புதன்கிழமை அதை …
ஆட்சியாளர் மன்றம் ‘ஹுடுட்டை விவாதிக்கவே இல்லை’
ஆட்சியாளர் மன்றம் ஹூடுட் சட்டம் கிளந்தானில் அமலாக்கப்படுவது பற்றி விவாதிக்கவே இல்லை. ஆனால், அது நடந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. "ஆட்சியாளர் மன்றம் அதன் எந்த ஓர் கூட்டத்திலும் அந்த விவாகாரத்தை (ஹூடுட்) பற்றி விவாதிக்கவில்லை. "நமது அலுவலகம் ஹூடுட் விவகாரம் குறித்து மார்ச் 25 தேதியிடப்பட்ட…
ஹாடியின் மசோதா: அரசாங்கம் ஆதரிக்குமா?
கிளந்தான் மாநிலம் நிறைவேற்றியுள்ள ஹூடுட் சட்டம் சம்பந்தப்பட்ட தனி நபர் மசோதா ஒன்றை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மசோதாவுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்குமா, இல்லையா என்ற கேள்விக்கு அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது. பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடாப்பிடியான…
ரிம300 மில்லியனில் டிபிகேஎல் புதிய தலைமையகமா? எம்பி எதிர்ப்பு
கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்துக்கு ரிம300 மில்லியனில் புதிய தலைமையகக் கட்டிடம் கட்டுவதற்கு கூட்டரசுப் பிரதேச எம்பி ஒருவர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். “இது கிறுக்குத்தனம். எதற்காக ஊராட்சி மன்றத்தின் புதிய கட்டிடத்துக்கு இவ்வளவு செலவிட வேண்டும்? “இந்தப் பணத்தை வைத்து அதிகமான மலிவு-விலை அடுக்குமாடி வீடுகள் கட்டுவது நல்லதல்லவா”, என்று …
1எம்டிபி கடன்கள்மீதான கேள்விக்கு பிரதமரின் ஒரு-வரி பதில்
பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் உள்ளூர் வங்கிகளிடம் வாங்கியுள்ள கடன்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்க மறுத்து விட்டார். ரபிஸி ரம்லி (பிகேஆர்- பாண்டான்), 2015 வரைக்குமான 1எம்டிபி-இன் கடன்கள் பற்றியும் அதன் கடன் நிலவரம்மீது பேங்க் நெகராவின் …
சிஎம்: உயர வேண்டியது பெர்ரி சேவைத்தரம்; கட்டணமல்ல
பினாங்குப் பயணப் படகு(பெர்ரி)ச் சேவையை நடத்திவரும் நிறுவனத்தின் இழப்புகளை ஈடுசெய்ய கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்துக்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய்க்கு எழுதிய கடிதத்தில், பினாங்கு பெர்ரி சேவையை நடத்திவரும் பினாங்கு துறைமுக …
முஸ்லிம் என்ஜிஓ: எரிக் பால்சன் இஸ்லாத்துக்கு எதிரானர், அவரைத் தடுத்து…
சுதந்திரத்துக்காக போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பின் செயல்முறை இயக்குனர் எரிக் பால்சன் இஸ்லாத்துக்கு எதிரி என்று வருணித்த பெர்சத்துவான் இஸ்லாம் மலேசியா(பெம்பேஎனா) அரசாங்கம் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. பால்சன் இஸ்லாத்தை இழிவுபடுத்தி வந்திருப்பதாக பெம்பேனா தலைவர் இப்ராகிம் முகம்மட் ஹசான் அல்-ஹாபிஸ் கூறினார். “அவர் …
ஹாடியின் புதல்வர்: ஹுடுட் காட்டுமிராண்டித்தனம் என்றால், தூக்குத்தண்டனையை என்னவென்பது?
ஹுடுட் சட்டவரைவைக் கொண்டுவர முயலும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கைக் குறைகூறுவோரை அவரின் மகன் முகம்மட் காலில் சாடியுள்ளார். பாஸ் இளைஞர் துணைத் தலைவருமான அவர், உலக முழுவதும் பரவி நிற்கும் “இஸ்லாமோபோபியா”வின் ஒரு பகுதிதான் இந்த “ஹுடுட்போபியா” என்றாரவர். “ஹுடுட் காட்டுமிராண்டித்தனமானது மனித உரிமைகளை மீறுகிறது …
3 மாதங்களில் ஆறு மரணங்கள்; போலீஸ்தான் விளக்க வேண்டும்
2015-இல் மூன்றே மாதங்களில் ஆறு பேர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்து போனார்கள். அந்த வகையில் இறந்த ஆறாவது கைதி முகம்மட் ஜவாரி முகம்மட் யூனுஸ். அவரது இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடந்திருக்கும். தொடக்கநிலை விசாரணைகளின் முடிவுகளை போலீசார் வெளியிட வேண்டும் என சுவாராம் கேட்டுக்கொண்டிருக்கிறது. “போலீஸ் …


