ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
இராயர்மீது இன்று குற்றம் சாட்டப்படாது
டிஏபி ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர்மீதான தேச நிந்தனை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராயர்மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படாது என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் தமக்குத் தகவல் தெரிவித்ததாக ராயரின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ கூறினார். “ஏன் என்று தெரியவில்லை. டிபிபி-இடமிருந்து மேற்கொண்டு தகவலுக்காகக்…
‘என் கணவர்மீது குற்றம்சாட்டுவது மலாய் இனத்தின்மீது குற்றம்சாட்டப்படுவதற்கு ஒப்பாகும்’
நோர் சலேஹா முகம்மட் சாலே, தம் கணவரான ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) தலைவர் அப்துல்லா ஸேய்க் அப்துல் ரஹ்மான்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டிய அதிகாரிகளைக் குறை கூறினார். அவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது மலாய்க்காரர்களையே இழிவுபடுத்தும் செயலாகும் என்றவர் குறிப்பிட்டார். அவர், இன்று காஜாங் செசன்ஸ் நீதிமன்றத்தில் …
இஸ்மா தலைவர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட டிஏபி-தான் காரணம்
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா), டிஏபி திட்டங்களைத் தொடர்ந்து சாடிவருவதுதான் அதன் தலைவர் அப்துல்லா ஸேய்க் அப்துல் ரஹ்மான் தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமாகும் என நம்புகிறது. மேலும் பலர், பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நிதிமன்றத்தில் நிறுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக அவ்வமைப்பின் உதவித் தலைவர் முகம்மட்…
மக்களவைத் தலைவர்: மலேசியா சமயச் சார்பற்ற நாடல்ல
இஸ்லாம் நாட்டின் அதிகாரப்பூர்வ சமயம் என்பதால் மலேசியா சமயச் சார்பற்ற நாடல்ல என்கிறார் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா. பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோமை உரிமைகள், சலுகைகள் குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டதை நிராகரித்தபோது அவர் இவ்வாறு கூறினார். “ஒரு சமயச் சார்பற்ற …
பைபிள் விவகாரம் நீதிமன்றம் செல்கிறது
மலேசிய பைபிள் கழகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 321 பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பதா அழித்துவிடுவதா என்பதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷா கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில இஸ்லாமிய துறை(ஜயிஸ்)க்கு அவர் உத்தரவிட்டார். “நீதிமன்றம் இறுதி முடிவு செய்வதற்கு ஏதுவாக,…
சுரேந்திரன், மறுபடியும் இடைநீக்கம்
பிகேஆர் உதவித் தலைவரும் பாடாங் செறாய் எம்பி-யுமான என். சுரேந்திரன் நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாதகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டார். சுரேந்திரனை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது துணை அமைச்சர் ஒருவருடன் சர்ச்சையிட்ட பிகேஆர் துணைத் தலைவரும் கோம்பாக் எம்பி-யுமான அஸ்மின் அலியும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் …
கேஜே: ஒருதலைபட்ச மதமாற்றம் செல்லாது-அன்றும் இன்றும் இதுதான் கொள்கை
2009-இல் அமைச்சரவையில் செய்யப்பட்ட ஒருதலைப்பட்ச மதமாற்றம் செல்லாது என்ற முடிவே இன்னமும் அமலில் உள்ளது என கைரி ஜமாலுடின் கூறுகிறார். “பராமரிப்பு விவகாரங்கள் தொடர்பில் இதுவே அன்றும் இன்றும் அமைச்சரவையின் நிலைப்பாடாகும். “திருமணம் செய்துகொண்டபோது பெற்றோர்களின் சமயம் எதுவோ அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்”, என இளைஞர், விளையாட்டுத்துறை …
மலேசியாகிக்கு எதிராக நஜிப் தொடுத்துள்ள வழக்கில் நீதிபதி கோமதி மாற்றப்பட்டுள்ளார்
பிரதமர் நஜிப் மலேசியாகினிக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கை வேறொரு நீதிபதி கேட்கவிருக்கிறார். நஜிப்பின் வழக்குரைஞர் நிறுவனத்திடமிருந்து மலேசியாகினிக்கு எதிரான வழக்கு சம்பந்தமான நோட்டீஸ் ஜூன் 3 ஆம் தேதி மலேசியாகினியிடம் சார்வு செய்யப்பட்டபோது அதில் இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் கோமதி சுப்பையா முன் வழக்கு பரிசீலனைக்கு…
இஸ்மா தலைவர்மீதும் நாளை தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
நாளை, காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) தலைவர் அப்துல்லா ஸேய்க் அப்துல் ரஹ்மான்மீது தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்படும். சீன மலேசியர்களை “அத்துமீறி நுழைந்தவர்கள்” என்று குறிப்பிட்டதற்காக அவர்மீது இக்குற்றம் சாட்டப்படுகிறது. போலீஸ் பிடியாணை கிடைத்ததாகவும் நாளை நீதிமன்றத்துக்கு நேரில் செல்லப்போவதாகவும் அப்துல்லா கூறினார்.
‘செலாகா’ என்றுரைத்த இராயர்மீது தேசநிந்தனைக் குற்றச் சாட்டு
நாளை, டிஏபி ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர்மீது “அம்னோ செலாகா” என்றுரைத்ததற்காக தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை ஜாலான் பட்டானியில் உள்ள வடகிழக்கு போலீஸ் நிலையத்தில் சரணடையுமாறு போலீசார் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். “இன்றிரவுக்குள் பிணை கிடைக்க வேண்டும். இல்லையேல், இங்குதான் தூங்க வேண்டும்”,…
கூலிம் விமான நிலையம்: பிஎன்னின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?
கூலிமில் அனைத்துலக விமான நிலையம் கட்டும் கெடா அரசின் உத்தேசம் குறித்து பினாங்கு பிஎன்னின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள விரும்புகிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். மாநில அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் பினாங்கு அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார். “ஆனால், மறுபுறம் மாநில …
எம்பிகள்: ஜமில் கீரை உரிமைகள் குழுவுக்கு அனுப்ப வேண்டும்
அண்மைய நாள்களில் முரண்பாடாக பேசிவரும் பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோமை நாடாளுமன்ற உரிமைகள், சலுகைகள் குழுவுக்கு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என எதிரணி எம்பிகள் இருவர் பரிந்துரைத்துள்ளனர். ஒஸ்கார் லிங் (டிஏபி- சிபு), மலேசியா சமயச் சார்பற்ற நாடு என்று ஜமில் கீர் கூறியதற்காக அவரை உரிமைகள் …
என்எஸ்இ-க்கு ரிம15 மில்லியன் மானியம் கொடுத்ததை மோஸ்டி ஒப்பியது
அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு (மோஸ்டி) என்எஸ்இ ரிஸோர்சஸ் சென். பெர்ஹாட்டின் துணை நிறுவனங்களுக்கு ரிம15 மில்லியன் மானியம் கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறது. மோஸ்டி, என்எஸ்இ-க்குப் பிரதமரின் கடிதத்தை அடிப்படையாக வைத்து ரிம100 மில்லியன் மான்யம் தனியே வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாரம் ரபிஸி ரம்லி (பிகேஆர் -பாண்டான்)-க்கு …
குடியேறிகளின் படகு பந்திங்குக்கு அப்பால் மூழ்கியது; 11 பேரைக் காணவில்லை
நள்ளிரவுக்குப் பின்னர் பந்திங்குக்கு அப்பால், சுங்கை ஆயர் ஹித்தாமிலிருந்து இரண்டு மைல் தொலைவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களில் சுமார் 11 பேரைக் காணவில்லை. படகு கவிழ்ந்த செய்தி கிடைத்த அரை மணி நேரத்தில் பந்திங் தீயணைப்பு, மீட்பு அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தைச் சென்றடைந்தனர். 97…
சிலாங்கூரில் பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பதில் மேலும் தாமதம்
பைபிள் விவகாரத்தில் சிலாங்கூரில் மாநில இஸ்லாமிய அதிகாரிகளும் மாநில அரசும் இன்னும் உடன்பாட்டுக்கு வர இயலவில்லை. இதனால் பைபிள்களை மலேசிய பைபிள் கழகத்திடம்(பிஎஸ்எம்) திருப்பிக் கொடுப்பது தாமதம் அடைந்துள்ளது. ஜனவரில், சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, பிஎஸ்எம்-இல் நடத்திய அதிரடிச் சோதனையின்போது 300 பைபிள்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றைத் திருப்பிக் …
மைனர்களை ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யலாம்
உரிய வயது வராத சிறுவர்களை அவர்களின் பெற்றோரில் ஒருவர் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்வதைக் கூட்டரசு அரசமைப்பு அனுமதிக்கிறது. அதை மாற்றும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. இன்று, எம்.குலசேகரனுக்கு(டிஏபி- ஈப்போ பாராட்) வழங்கிய எழுத்து வடிவிலான பதிலில் பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் இவ்வாறு கூறினார். அப்படி மதம்…
பண விரயங்களுக்கு அமைச்சர்களையே பொறுப்பாக்க வேண்டும்
தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டும் பண விரயங்களுக்கு அந்தந்த அமைச்சுக்களுக்குத் தலைமைதாங்கும் அமைச்சர்களையே பொறுப்பாக்க வேண்டும் என ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் வலியுறுத்தியுள்ளது. அப்படிச் செய்யாதவரை கணக்கறிக்கையை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை என்று அதன் தலைவர் அக்பர் சத்தார் கூறினார். “தங்களின் நேர்மையையும் தங்களுக்குக் கீழே பணிபுரிவோரின் நேர்மையையும் …
கணக்கறிக்கை விளக்கக் கூட்டத்திலிருந்து எம்பிகள் வெளியேற்றப்பட்டனர்
பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் ஏற்பாடு செய்திருந்த தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை விளக்கக் கூட்டத்துக்குச் சென்ற பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் இருவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அது ஊடகவியலாளர்களும் அரசாங்க ஊழியர்களும் மட்டுமே கலந்துகொள்ளும் கூட்டமாம். பிகேஆரின் பாயான் பாரு எம்பி சிம் ட்ஸே ட்ஸின், பாஸின் கோலா திரெங்கானு …
கிட் சியாங் பற்றிய ‘தீய’ வதந்தியைக் கண்டிக்கிறது கெராக்கான்
டிஏபி மூத்த தலைவரும் கேளாங் பாத்தா எம்பியுமான லிம் கிட் சியாங் காலமானார் என முகநூலில் செய்திகளை உலவ விடுவது “பொறுப்பற்ற செயல்” என பினாங்கு கெராக்கான் கண்டித்துள்ளது. அச்செயல்களைப் “பண்பற்ற, தீயச் செயல்கள்” எனக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஓ தொங் கியோங் வருணித்தார். “சமுதாயத்தில் விஷத்தைப் …
ஐஆர்பி முதலீட்டு மசோதா அக்டோபருக்குத் தள்ளிவைப்பு
அரசாங்கம், மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரிய(ஐஆர்பி) சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் மீதான விவாதத்தை அக்டோபருக்குத் தள்ளிவைத்தது. அத்திருத்தங்கள் குறித்து பிகேஆர் தலைவர்கள் கவலைகொண்டு வாரம் முழுக்க தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தத்தின் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் ஐஆர்பி முதலீட்டு வாரியம் ஒன்றை அமைக்கும் நோக்கத்தில் அத்திருத்தத்தைத் தாக்கல் …
இண்ட்ராப்: அமைச்சர் வரலாற்றைத் திரும்பப் படிக்க வேண்டும்
பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம், மலேசியா சமயச்சார்பற்ற நாடல்ல என்று அறித்தது ஒரு பொறுப்பற்ற செயல் என மலேசிய இண்ட்ராப் இயக்கம் சாடியுள்ளது. அமைச்சரின் அறிவிப்பு, ஏற்கனவே முஸ்லிம்- அல்லாதாரின் வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து குளறுபடி செய்யும் முஸ்லிம் என்ஜிஓ-களை ஊக்கப்படுத்துவதுபோல் உள்ளது என இண்ட்ராப் தலைவர் …
‘இஸ்லாமிய நாடா, சமயச் சார்பற்ற நாடா? தலைமை நீதிபதிதான் முடிவு…
மலேசியா இஸ்லாமிய நாடா அல்லது சமயச் சார்பற்ற நாடா எனத் தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியாதான் ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்று கல்வியாளரும் அரசமைப்பு வல்லுனருமான அப்துல் அசீஸ் பாரி கூறுகிறார். கூட்டரசு அரசமைப்பின் பகுதி 130-ஐப் பயன்படுத்தி அரசாங்கம், இவ்விவகாரத்துக்குக் விளக்கம்பெற வேண்டும் என பூச்சோங் …
சிஎம் தொகுதியில் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம்
கம்போங் பாகான் ஆஜாமில், மேம்பாட்டாளரால் குடியிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள சுமார் 70 பேர், அதற்கெதிராக இன்று கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர். அந்த இடத்தைக் காலிசெய்யும்படி கடந்த ஆண்டு நவம்பரில் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது. பாகான் ஆஜாம் கம்போங் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் நாடாளுமன்றத் …


