துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
செம்பகா இடைத் தேர்தலில் பாஸ் வெற்றி
கிளந்தான் சட்டமன்ற செம்பகா தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஸ் கட்சியின் வேட்பாளர் அஹமட் பாதான் மாமுட் 10,000 க்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இதர நான்கு வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வைப்புத் தொகையான…
ஹுடுட் சட்டத்திற்கு மஇகா ஆதரவு இல்லை
மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாக இருக்கிறது என்று கூறப்படும் தனிப்பட்ட உறுப்பினரால் தாக்கல் செய்யப்படும் ஹூடுட் மசோதாவுக்கு மஇகா ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார். இந்த விவகாரத்தில் மசீச மற்றும் கெராக்கான் போன்ற பிஎன் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டை மஇகா பகிர்ந்து…
எரிக் பால்சன் மீண்டும் கைது செய்யப்பட்டார்
இன்று பின்னேரத்தில், சுதந்திற்கான வழக்குரைஞர்கள் (எல்எப்எல்) என்ற அமைப்பின் இணை நிறுவனரான எரிக் பால்சன் அவர் செய்திருந்த டிவிட் செய்திக்காக கைது செய்யப்பட்டார் என்று அவரது வழக்குரைஞர் மலேசியாகினியிடம் மாலை மணி 6.30 அளவில் கூறினார். தற்போது அவர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து…
ஹுடுட் சட்ட வரைவை பிஆர்எஸ் எதிர்க்கும்
பாஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள ஹுடுட் சட்டவரைவை பிஎன் ஆதரித்தாலும் அக்கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான பார்டி ரக்யாட் சரவாக்(பிஆர்எஸ்) ஆதரிக்காது. “அதை நாங்கள் எதிர்ப்போம். இதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு”, என பிஆர்எஸ் தலைவர் ஜேம்ஸ் மாசிங் கூறினார். “எங்களின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அச்சட்ட வரைவுக்கு ஆதரவு …
அமார்: ஹுடுட்டை முஸ்லிம்-அல்லாதார் எதிர்க்கவில்லை, எதிர்ப்பது டிஏபி மட்டும்தான்
கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமார் நிக் அப்துல்லா, நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதார் ஹுடுட்டை எதிர்க்கவில்லை என்றும் டிஏபி மட்டும்தான் எதிர்ப்புக்குரல் கொடுத்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார். அமார் நேற்று மலேசியாகினியிடம் பேசினார். “எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் முஸ்லிம்- அல்லாதவர்கள் அல்லர். டிஏபி …
வறுமைக் கோடு உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை
கூட்டரசு அரசாங்கம் வறுமைக் கோட்டைக் குறைந்தது மாதம் ரிம1,500 என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்திய சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, அதுதான் பொருளாதாரச் சூழலின் “நடப்பு நிலவரத்தை”ப் பிரதிபலிப்பதாக இருக்கும் என்றார். இப்போது ரிம900 என்றிருக்கும் வறுமைக்கோட்டுக் குறியீடு திருத்தப்பட்டால் வறுமைக்கோட்டுக் கீழே வாழும் …
அட்னான்: பாஸின் சட்டவரைவு ஓர் ‘அரசியல் ஹுடுட்’
கிளந்தான் அரசு ஷியாரியா சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவந்து மூன்று நாள்கள் ஆகின்றன என்றாலும், அதன்மீது ஆளும் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது தெரியாமலேயே இருக்கிறது. பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடம் கேட்டால் அக் கேள்விக்குப் பதிலளிப்பதைத் தட்டிக்கழிக்கிறார். அந்தச் சட்டவரைவை “அரசியல் ஹுடுட்” என்று மட்டும் …
காவலில் வைக்க நீதிமன்ற ஆணை கிடைக்கவில்லை; தியான் சுவா விடுவிக்கப்பட்டார்
போலீசார் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவை விசாரணைக்காக காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவைப் பெற முயன்று, முடியாது போனதால் வேறு வழியின்றி அவரை விடுவித்தனர். “அவரைக் காவலில் வைக்க போலீசார் செய்திருந்த மனுவை மெஜிஸ்திரேட் சாரா ஸரியாத்தி தள்ளுபடி செய்ததை அடுத்து தியான் சுவா விடுதலையானார்”, என…
என்னதான் முடிவெடுக்கப்பட்டது ஹுடுட் மீதான அமைச்சரவைக் கூட்டத்தில்?
கிளந்தானில் கொண்டுவரப்பட்ட ஹுடுட் சட்டத் திருத்தங்கள்மீது நேற்று அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்தது. அக்கூட்டத்தில் செய்யப்பட்ட முடிவு பற்றி அம்னோ அமைச்சர்கள் தெரிவித்த தகவல்கள் ஒரு விதமாகவும் மசீச அமைச்சர்கள் தெரிவித்த தகவல்கள் வேறு விதமாகவும் இருந்தன. அம்னோ அமைச்சர்கள், கிளந்தானில் அக்கட்சியின் பிரதிநிதிகள் ஹுடுட்டுக்கு அளித்த ஆதரவை ஏகமனதாக …
போலீசார் ஆயிஷாவையும் அவரை மிரட்டியவர்களையும் விசாரிப்பர்
கிளந்தான் அரசு ஹுடுட்டுக்கு முன்னுரிமை கொடுப்பதைக் கேலி செய்யும் காணொளியின் அறிவிப்பாளரான பிஎப்எம் நிலையத்தைச் சேர்ந்த ஆயிஷா தாஜுடினுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என போலீஸ் இன்று கூறியது. போலீசார் அறிவிப்பாளரையும் விசாரிப்பார்கள். “இரு தரப்பினரையும் போலீஸ் விசாரிக்கும். பிஎப்எம் அறிவிப்பாளரையும் விசாரிக்கும், அவருக்கு மிரட்டல் விடுத்தவர்களையும் விசாரிக்கும்.…
நிஸார்: பாஸ் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும்
பாஸ் கட்சியில் பொறுப்பிலிருக்கும் எந்த ஓர் உறுப்பினருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களை மாற்றும் மற்றும் புதிய தலைவர்களை நியமிக்கும் உரிமை உண்டு என்று முகமட் நிஸார் ஜமாலுடின் கூறுகிறார். கட்சி தலைவர்களிடையே காணப்படும் மோதல்கள் பற்றி கருத்துரைத்த பாஸ் மத்திய குழு உறுப்பினரான அவர் கட்சியின் தலைமைத்துவம்…
ஹூடுட் விவகாரத்தில் பிகேஆர் ஏகமனதான முடிவை எடுத்துள்ளது
பிகேஆர் ஹூடுட் மசோதா மீது ஏகமனதான முடிவை எடுத்துள்ளது. ஆனால், அது என்ன முடிவு என்பது பற்றி கூறுவதில் கட்சித் தலைவர்கள் மௌனமாக இருக்கின்றனர். "நாங்கள் இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறோம்", என்று பிகேஆர் உதவித் தலைவர் ஷம்சூல் இஸ்கந்தர் முகமட் அகின் செய்தியாளர்களிடம் கூறினார். அக்கூட்டத்தில் கட்சித்…
வழக்குரைஞர் மன்றம்:ஹூடுட் சட்டம் கிளந்தான் அரசமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக்…
நேற்று கிளந்தான் மாநில சட்டமன்றம் ஹூடுட் சட்டத்தை இயற்றிது. அச்செயல் அந்த மாநிலம் மலேசிய அரசமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது. மலேசிய அரசமைப்புச் சட்டம் சமயச் சார்பற்றது. அச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்களும் முஸ்லிம்…
ஹுடுட் சட்டவரைவை நஜிப் தடுப்பாரா?
நேற்று நாடாளுமன்றத்தில் பிஎன் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்தபோது அங்கு விவாதிக்கப்பட்ட முக்கியமான விவகாரங்களில் ஹுடுட் சட்டவரைவும் ஒன்று. ஹுடுட் கூட்டரசு அரசமைப்புக்கு எதிரானது என்பதில் தலைவர்கள் ஒருமித்த கருத்தைக் கண்டதாக தெரிகிறது. “இந்த ஒருமித்த கருத்தை நஜிப்பும் ஏற்றுக்கொண்டார்”, எனப் பங்காளிக்கட்சி ஒன்றின் …
அன்வார் பேரணிகளில் தொண்டர்கள் உண்டு தளபதிகள் எங்கே?
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்காக நடத்தப்படும் பேரணிகளிலும் மெழுகுதிரி ஏந்தி நடைபெறும் கூட்டங்களிலும் பக்கத்தான் ரக்யாட்டின் பெரும் புள்ளிகள் காணப்படாதது ஏன் என வினவுகிறார் முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின். அந்நிகழ்வுகளில் “கைக்கூலிகளும், கட்சியில் இதற்கென்றே உள்ள ஆள்களும், சுயசிந்தனையற்ற மாணவர்களும்தான்” கலந்துகொள்கிறார்கள் என்று சைனுடின் அவரது …
அம்னோ உள்சண்டைக்கு மக்கள் கொடுக்கும் விலை- கட்டண உயர்வு
அம்னோவில் உள்சண்டையாம். அதுதான் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்குக் காரணமாம். எது எப்படியோ இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான் என என்ஜிஓ-வான ஜெரிட் அங்கலாய்க்கிறது. “சில அம்னோ உறுப்பினர்கள், கட்டண உயர்வு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி இறக்க நடக்கும் ஓர் அரசியல் சதி என்றுகூட சொல்லியிருக்கிறார்கள். “இது …
ஹாடி நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவர…
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க பாஸ் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் அமலாக்கத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பதால் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே அந்த ஒப்புதலைப் பெற அது முழுமூச்சாகக் களம் இறங்கியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு அது எழுதிய கடிதமே இதற்குச் சான்று. நேற்று கிளந்தான் சட்டமன்றத்தில் 1993 …
அம்னோ: ஹூடுட் விவகாரத்தில் மசீச, கெராக்கான் தலையிடக்கூடாது
ஹூடுட் சட்டம் கிளந்தானில் அமல்படுத்தப்படும் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று டிஎபியிடம் கூறிய பின்னர், அம்னோ இப்போது அதன் பின் பங்காளிக் கட்சிகளிடமும் அவ்வாறே கூறியுள்ளது. அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவின் செய்திப்படி அம்னோ உச்ச மன்ற உறுப்பினரும் மற்றும் அமைச்சருமான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் பாரிசான்…
பிகேஆர் தியன் சுவா கைது செய்யப்பட்டார்
பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கித்தா லவான் அன்வார் ஆதரவு பேரணி சம்பந்தமாக மிக அண்மையில் கைது செய்யப்பட்டவராகிறார். இன்று காலையில் தமது வாக்குமூலத்தை அளிக்க டாங்வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குச் சென்ற தியான் சுவா அங்கு கைது செய்யப்பட்டார். இந்த கித்தா லவான் பேரணி…
குவான் எங்: பாக்கத்தானை அழிப்பதற்கு பாஸ் அம்னோவுக்கு உதவுகிறது
கிளந்தான் சட்டமன்றத்தில் ஹூடுட் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சில பாஸ் தலைவர்களை நம்பியது குறித்து டிஎபியின் தலைமைச் செயலாளர் தமது அச்ச உணர்ச்சியை வெளிப்படுத்தினார். எவர் பெயரையும் குறிப்பிடாமல், பாஸ் மாநில அரசு தாக்கல் செய்திருந்தது பழைய 1993 ஆம் ஆண்டு ஷரியா சட்டத்திற்கான திருத்தங்கள் அல்ல;…
எப்போதும் உறுதுணையாக இருப்போம்: பிரதமரிடம் பிஎன் தலைவர்கள் வலியுறுத்து
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி இறக்க மறைமுக முயற்சிகள் நடப்பதாக ஊகங்கள் பெருகிவரும் வேளையில் பிஎன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். “பங்காளிக் கட்சித் தலைவர்களான நாங்கள் நஜிப்பின் தலைமைத்துவத்துக்கு எங்களின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன் பிஎன்னை வழிநடத்துவதற்கும் நாட்டின் உருமாற்றத்துக்கும் …
ஐஜிபி பதவிவிலகக் கோரி குந்தியிருப்புப் போராட்டம்
பக்கத்தான் ரக்யாட் ஏற்பாடு செய்த ‘கித்தா லவான்’ பேரணிகளின் தொடர்பில் பேரணி ஏற்பாட்டாளர்கள் பலர் அண்மைல் கைது செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் பதவி விலகக் கோரும் இயக்கமொன்று இன்று தொடக்கப்பட்டது. இதையொட்டி ஒரு வார-காலத்துக்கு 24-மணி நேர குந்தியிருப்புப் போராட்டம் ஒன்று …
பாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்: பக்கத்தானுக்கு டிஏபி எம்பி வலியுறுத்து
கிளந்தான் சட்டமன்றத்தில் ஹுடுட் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டதன்வழி பக்கத்தான் கூட்டணியின் பொதுக் கொள்கைத் தளம் மீறப்பட்டிருக்கிறது என்றும் அதற்காக பாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஏபி எம்பி ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். “பக்கத்தான் ரக்யாட் மக்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெற விரைந்து செயல்பட வேண்டும். “அது பொதுக் …


