போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
அஹ்மட்: நஜிப் வருத்தம் தெரிவித்தார், நானும் வருத்தம் தெரிவித்தேன்
இரண்டு- நாள் திரெங்கானு கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. தவறாக புரிந்துகொண்டதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருத்தம் தெரிவித்ததை அடுத்து முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட், அம்னோவிலிருந்து விலகுவதாகக் கொடுத்த கடிதத்தைத் திரும்பப் பெற்றுக்க்கொண்டார். “தவறு நேர்ந்துவிட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். என் செய்கைக்காக நானும் வருத்தம் …
போலீஸ் சீரமைப்புக்கு ‘மக்கள் நாடாளுமன்றம்’
போலீசில் சீரமைப்பைக் கொண்டுவரும் நோக்கில் மனித உரிமைக்காக போராடும் என்ஜிஓ-களான சுவாராமும் எம்னெஸ்டி இண்டர்நேசனலும் மே 31ஆம் நாள், பினாங்கு சட்டமன்றக் கட்டிடத்தில், ‘மக்கள் நாடாளுமன்ற’ நிகழ்வைக் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. அதை ஒட்டி போலீஸ் காவலில் நிகழ்ந்துள்ள இறப்புகள் பற்றிய கண்காட்சி ஒன்றும் நடத்தப்படும். அந்த வகை …
அம்னோ தலைவர்கள் நஜிப் சொல்படி நடக்க வேண்டும்
அம்னோ தலைவர்கள், பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவை எதிர்த்து சர்ச்சை செய்யலாகாது என்கிறார் கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் முஸ்தபா முகம்மட். அண்டை மாநில அரசியல் நெருக்கடி குறித்து கருத்துரைத்த முஸ்தபா, “தலைவர்கள் என்ற முறையில் நாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்”, என்றார். “விசுவாசம் …
புதிய எம்பி: அஹ்மட் சைட் அம்னோவுக்குத் திரும்புகிறார்
திரெங்கானுவில் இரண்டு நாள் கிளர்ச்சி செய்து பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட் இன்று திரும்பவும் அம்னோவில் சேர்ந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக மந்திரி புசாராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஹ்மட் ரசிப் அப்துல் ரஹ்மான், இன்று புத்ரா ஜெயாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்த …
நஜிப்: எம்எச்370-ஐத் தேடுவதில் சில தவறுகள் நடந்துவிட்டன
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எம்எச்370-ஐ தேடுவதில் சில தவறுகள் நிகழ்ந்து விட்டதை ஒப்புக்கொண்டு அச்சம்பவம் மற்ற நாடுகளுக்கு நல்ல பாடமாக அமையும் என்றார். காணாமல்போன விமானத்தைத் தேட மிகப் பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றாலும் சில தவறுகள் நிகழ்ந்து விட்டன. “எல்லாவற்றையும் சரியாக செய்யவில்லை. முதல் இரு …
கார் விபத்தில் அன்வாருக்கு எலும்புமுறிவு
கார் விபத்து ஒன்றில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமும் அவரின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் காயமடைந்தனர். நேற்றிரவு 10 மணி அளவில், டேசா ஸ்ரீ ஹர்தாமாஸ் அருகே நிகழ்ந்த அவ்விபத்தில், அன்வாருக்கு தோள்பட்டைக்கு அருகில் எலும்பு முறிந்தது. வான் அசிசாவுக்கு சொற்ப காயங்கள் ஏற்பட்டன.…
சட்ட ஆலோசகர்: திரெங்கானுவில் பிஎன் ஆட்சிதான்
மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவிலிருந்து விலகி தங்களைச் சுயேச்சைகளாக அறிவித்துக் கொண்டிருந்தாலும்கூட திரெங்கானுவில் பிஎன் அரசே தொடர்ந்து ஆட்சி செய்யும் என மாநிலச் சட்ட ஆலோசகர் அஸ்ஹார் அப்துல் ஹமீட் இன்று கூறினார். சட்டமன்றத்தில் பிஎன் உறுப்பினர் எண்ணிக்கை 17-இலிருந்து 14-ஆகக் குறைந்து எதிரணியினர் எண்ணிக்கை 15 ஆக …
திரெங்கானு சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல் நடத்துக
திரெங்கானுவில் முன்னாள் மந்திரி புசார் அஹமட் சைட் உள்பட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவிலிருந்து விலயதைத் தொடர்ந்து பிஎன் சிறுபான்மை அரசாகியுள்ளதால் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அரசமைப்புப்படி பிஎன் அங்கு தொடர்ந்து ஆட்சி செய்வது இயலாது என அப்துல் …
திரெங்கானுவில் பிஎன் சிறுபான்மை அரசானது
புக்கிட் பீசி பிரதிநிதி ரோஸ்லி டாவுட், அம்னோவிலிருந்து விலகிய மூன்றாவது மாநில சட்டமன்ற உறுப்பினராவார். அவரது விலகலைத் தொடர்ந்து திரெங்கானு மாநிலச் சட்டமன்றத்தில் பிஎன் சிறுபான்மை அரசாகியுள்ளது. முன்னாள் திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் சைட்டும் அஜில் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கசாலி தயிப்பும் அம்னோவிலிருந்து …
திராங்கானுவில் பின் பெரும்பான்மையை இழந்தது
திரங்கானு புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டாவுட் அம்னோவிலிருந்து விலகிய மூன்றாவது பிரதிநிதியாவார். அவரது விலகலுடன் திராங்கானு சட்டமன்றத்தில் பிஎன் சிறுபான்மை கட்சியாகி விட்டது. இன்று ரோஸ்லி பெர்னாமாவுக்கு அனுப்பிய பேக்ஸ் செய்தியில் தாம் கட்சிப் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக தெரிவித்துள்ளார். திரங்கானு மந்திரி புசார்…
இஸ்மா: வாயை அடக்கவே இனவாதிகள், தீவிரவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள்
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா), தன் “வாயைப் பூட்டிவைப்பதற்காகவே” தன்னை இனவாத அமைப்பு என்றும் தீவிரவாத அமைப்பு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் எனக் கூறியுள்ளது. இன்று, மலாய் முஸ்லிம்களுக்கு திறந்த மடல் எழுதிய இஸ்மா தலைவர் அப்துல்லா ஜேய்க் அப்துல் ரஹ்மான், நாட்டில் இஸ்லாத்துக்குக் குழிபறிக்க “யூதர்களும்” “யூத …
கோலாலும்பூரில் மீண்டும் திடீர் வெள்ளம்
இன்று பிற்பகல் சுமார் 2.30க்கு கன மழை பெய்ததைத் தொடர்ந்து கோலாலும்பூரில் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜாலான் பங்சார், ஜாலான் சான் சவ் லின், ஜாலான் செமாந்தான் உள்பட பல சாலைகளில் நீர் தேங்கி நின்றதாக கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற போக்குவரத்து தகவல் கட்டமைப்பு (ஐடிஸ்)…
திரெங்கானு எம்பி அஹ்மட் சைட் பதவி விலகினார்
திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் சைட் பதவி துறந்தார். ப்திய மந்திரி புசாராக செபராங் தகிர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரசிப் அப்துல் ரஹ்மான் இன்றிரவு இஷ்யா தொழுகைக்குப் பின்னர் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் செய்துகொள்ளப்பட்ட ஓர் உடன்பாட்டின்படி அஹ்மட் சைட் …
தாம் பாஸ் உறுப்பினர்தான் என அடம் பிடிக்கிறார் முகம்மட் நபி…
புக்கிட் குளுகோர் “நான் பாஸ் உறுப்பினர்தான். நான் அரசியலில் ஈடுபட்ட காலம் தொட்டே கட்சியின் உயர்த் தலைவர்கள் பலருக்கும் என்னைத் தெரியும்”. புக்கிட் குளுகோர் நாடாளூமன்ற இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் முகம்மட் நபி பக்ஸ் முகம்மட் நபி அப்துல் சத்தார் இவ்வாறு கூறினார். பாஸ் தலைவர்கள் அவரை …
‘பார்டி சாரி மாகான்’பிஎன்னுக்காக போட்டியிடுகிறதாம்: அஸ்மின் கூறுகிறார்
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் பிஎன் போட்டியிடவில்லை என்றாலும், தனக்குப் பதிலாக வேறொரு கட்சியை அது களமுறக்கி இருப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார். பார்டி சிந்தா மலேசியா(பிசிஏ)-வைத்தான் அவர் குறிப்பிட்டார். அதை “பார்டி சாரி மாகான் (Parti Cari Makan)” என்றும் கேலி செய்தார்.…
ஹுடுட் மசோதா மீட்டுக்கொள்ளப்படுவதை முஸ்லிம் என்ஜிஓ வரவேற்கிறது
முஸ்லிம் என்ஜிஓ-வான இக்ராம், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ஹுடுட் சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்வதில்லை என்ற பாஸின் முடிவை வரவேற்றுள்ளது. இஸ்லாமிய சட்டத்தைச் செயல்படுத்துவதற்குமுன் “அனவருக்கும் நியாயம் கிடைப்பதையும் நல்வாழ்வு அமைவதையும் உறுதிப்படுத்த வேண்டும்”, என இக்ராம் தலைவர் முகம்மட் பாரிட் ஷேக் ஓர் அறிக்கையில் கூறினார். கிளந்தானில் இஸ்லாமிய …
சிலாங்கூரில் பிகேஆர் தேர்தல் தாமதப்படுத்தப்படுவது அஸ்மினைத் தோற்கடிக்கும் முயற்சியா?
சிலாங்கூரில் கட்சித் தேர்தலின்போது நிகழ்ந்த ரகளையால் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று கூறிய பிகேஆர் நடப்புத் துணைத் தலவர் முகம்மட் அஸ்மின் அலி, அதிகாரப்பூர்வ விளக்கத்துக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார். அவர் அது பற்றி மேலும் விவரிக்கவில்லை. ஆனால், கட்சி வட்டாரங்கள் சில, அஸ்மின் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கும் …
புக்கிட் குளுகோரில் நால்வர் போட்டி
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் டிஏபி-இன் ராம்கர்பால் சிங் சுயேச்சைகளான ஹுவான் செங் குவான் , முகம்மட் நபி பக்ஸ், அபு பக்கார் சித்திக் முகம்மட் ஸான் ஆகிய நால்வர் போட்டியிடுவார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்றது எனத் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் …
புக்கிட் குளுகோர் இடைத்தேர்தல்: நால்வர் போட்டியிடுகின்றனர்
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளான இன்று பினாங்கு தேவான் ஸ்ரீ பினாங்கில் வேட்பாளர் நியமன நடவடிக்கை காலை மணி 9.00 க்கு தொடங்கியது. காலஞ்சென்ற கர்பால் சிங் இத்தொகுதியை மூன்று தவணைக்கு தம் வசம் வைத்திருந்தார். காலியான இத்தொகுதியில் போட்டியிட ஐவர் விருப்பம்…
உத்துசான் மலேசியா: தாய்மொழிப்பள்ளிகள் ஒழிக்கப்பட்டால் மட்டுமே … “இனம்” என்ற…
அரசாங்க பாரங்களில் "இனம்" என்ன என்பதைக் குறிப்பதற்கான பகுதி அகற்றப்படுவதை அம்னோவின் குரலான உத்துசான் மலேசியா ஆதரிக்க தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையை அது முன்வைத்துள்ளது: இந்நாட்டிலுள்ள தாய்மொழிப்பள்ளிகள் அழிக்கப்பட வேண்டும். அந்நாளிதழின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அதன் தலையங்கத்தை புனைப் பெயரில் எழுதும் அவாங்…
புக்கிட் குளுகோரில் பிஎன் போட்டியிடாது
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மசீச போட்டியிட தயாராக இல்லாத நிலையில், பாரிசான் எந்த ஒரு வேட்பாளரயும் களமிறக்காது என்று பின் தலைவர் நஜி ரசாக் கூறினார். ஆனால், பெர்னாமா செய்தியின்படி, சுயேட்சை வேட்பாளர்களை போட்டியில் இறக்குவது குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. "பங்காளித்துவ கட்சிகளிலிருந்து அல்ல.…
தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும்
-அணா பாக்கியநாதன், மே 11, 2014. கோல்பீல்ட்ஸ் தோட்டத்தில் சிலாங்கூர் அரசால் கட்டப்படும் மாணவர் தங்கும் விடுதி மற்றும் பள்ளிக்கு உடனடியாக டெண்டர் சமர்ப்பிக்க வேண்டிய பணிகளைச் செய்யச் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் பின் இப்ராஹிம் ஜே.கே .ஆர் என்னும் பொதுப்பணி துறைக்குக் கட்டளையிட்டார். சுமார் 500…
பாஸ் ஹுடுட் சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யாது
பாஸ், கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமல்படுத்த வகைசெய்யும் சட்ட முன்வரைவை ஜூன் மாத நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்போவதில்லை. ஹுடுட் பற்றி ஆராய புதிதாக கூட்டுத் தொழில்நுட்பக் குழு அமைக்கப்படவிருப்பதை அடுத்து இம்முடிவு செய்யப்பட்டுள்ளது. “தொழில்நுட்பக் குழு பரிந்துரைகள் செய்யவும் மேல்நடவடிக்கை எடுக்கவும் இடமளிக்க அவ்வாறு முடிவு செய்யப்பட்டது”,…


