பிரதமர் அன்வார் இப்ராஹிம், காலனித்துவ காலத்தைச் சேர்ந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மக்களின் சுதந்திரத்தையும் பங்கேற்பையும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் எஞ்சிய பகுதிகளை மலேசியா கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், எந்தெந்தச் சட்டங்களை அவர் குறிப்பிடுகிறார் என்பதையோ அல்லது அரசாங்கம் எந்தச் சட்டங்களை…
ஸ்ரீராம்: அன்வாருக்கு ஆதரவாக இருக்க டாக்டர் ஓஸ்மானுக்கு காரணம் ஏதும்…
பெடரல் உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் அன்வார் மேல்முறையீட்டு விசாரணை நாளை பிற்பகல் மணி 3.00 மீண்டும் தொடங்கும். அன்வார் தற்காப்புக் குழுவின் தலைவர் ஸ்ரீராம் அவரது வாதத்தை தொடர்வார். சைபுல்லை முதலில் சோதணை செய்த புஸ்ராவி மருத்துவமனையின் டாக்டர் ஓஸ்மான் தம்மைத் தற்காத்துக் கொள்ள இங்கு இல்லாததால்…
பாஸின் அலட்சியம் டிஏபிக்கு ஏமாற்றமளிக்கிறது
பக்கத்தான் ரக்யாட் கூட்டங்களில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கலந்துகொள்ளாதிருப்பதும் அதை அற்ப விவகாரம் எனக் கூறும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலியின் அலட்சியப்போக்கும் ஏமாற்றமளிப்பதாக டிஏபி கூறுகிறது. பக்கத்தானின் தொடர்ச்சிக்கும் தொடர்ந்து இருப்பதற்கும் அவசியமான விவகாரங்களை அற்பமானவை என்று கூறித் தட்டிக்கழிப்பது எரிச்சலூட்டுகிறது என …
அரசாங்கம் பெட்ரோல் விலையைக் குறைக்கக் காரணம் ஏதுமில்லை
உலகளவில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதையொட்டி மலேசியாவில் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டியதில்லை என்று கூறும் அரசாங்கம், ரோன் 95 பெட்ரோலுக்கு இன்னமும் உதவித் தொகை கொடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. எதிரணித் எம்பிகள் பலரது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், ஒவ்வொரு லிட்டர் எண்ணெய்க்கும் …
உதவித்தொகை அகற்றப்படுவதை 72விழுக்காட்டினர் ஆதரிக்கவில்லை
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று எரிபொருளுக்கும் மின்சாரத்துக்கும் கொடுக்கப்படும் உதவித் தொகை அகற்றப்படுவதை விரும்பவில்லை எனக் காண்பிக்கிறது. மலேசிய தண்ணீர், எரிபொருள் ஆராய்ச்சி சங்கம்(ஏவர்), தேசிய நடத்திய ஆய்வில், ஆய்வில் கலந்துகொண்டோரில் 27 விழுக்காட்டினர் மட்டுமே எரிபொருள், மின்சார உதவித் தொகைகளைக் குறைக்கவும் சீரமைக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு …
நஸ்ரி: கனிமநீர் போத்தலுக்காக தேச நிந்தனை வழக்கு போட முடியாது
கனிமநீர் போத்தலில் இந்து தெய்வ உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தைத் தேசிய நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கம் சொல்லியிருப்பது அறிவுடைமையாகாது. இவ்வாறு குறிப்பிட்ட சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அசீஸ்,“நிறுவனத்தின் நிர்வாகியைத் தூக்கில் போட வேண்டும் என்கிறீர்களா? எனக்குப் புரியவில்லை”, எனச் சிரித்தார். “நிதானமாக …
சில மாணவர்களுக்காக பில்லியன் ரிங்கிட் திட்டமா?
மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. பில்லியன் ரிங்கிட் செலவிடப்படுள்ளது. ஆனால், 1BestariNet-டை மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்களே பயன்படுத்துகிறார்கள் என்கிறார் டிஏபி-இன் சைருல் கீர் ஜொகாரி. “இதனால். இதற்கும் பிபிஎஸ்எம்ஐ- திட்டத்துக்கு ஏற்பட்ட நிலைதானா என்ற கேள்வி எழுகிறது. அத்திட்டத்தில் கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு உதவும் ஐடி வன்பொருள்கள்…
நஜிப்: நம்மைப் பார்த்து பொறாமைப்படுகிறார் டச்சுப் பிரதமர்
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட், மலேசியப் பொருளாதார மேம்பாடு கண்டு பொறாமை கொள்கிறாராம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். “நேற்று, நெதர்லாந்து பிரதமரைச் சந்தித்தபோது நம்முடைய பொருளாதார முன்னேற்றம் அவருடைய நாட்டினுடையதைவிட சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டார். “அவர் சொன்னதை அப்படியே எடுத்துச் சொல்கிறேன் -உங்கள் …
முருகன் படம் ஒட்டப்பட்ட கனிமநீர் போத்தல்கள் அகற்றப்படும்
பத்துமலை கோயிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் கனிமநீர் போத்தலில் ஹலால் சின்னத்திற்கு பக்கத்தில் இந்து தெய்வம் முருகன் படம் பதிக்கப்பட்டிருக்கும் கனிமநீர் போத்தல்கள் நிலையடுக்கிலிருந்து அகற்றப்படும் என்று அந்நீர் தயாரிப்பு நிறுவனம் சுவான் சின் செண்ட். பெர்ஹாட் கூறுகிறது. மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் (பிபிஐஎம்) போட்ட கூப்பாட்டை தொடர்ந்து…
சிலாங்கூர் எம்பி கபடதாரிகளின் அப்பன், நோ கூறுகிறார்
சர்ச்சைக்குரிய கின்ராரா-டமன்சாரா விரைவுசாலை திட்டம் தொடர அனுமதி கொடுத்துள்ள சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி “கபடதாரிகளுக்கெல்லாம் அப்பன்” என்று மாநில அம்னோ வருணித்துள்ளது. அஸ்மின் மக்களுக்குச் சேவையாற்றப்போவதாகக் கொடுத்த வாக்குறுதியை மறந்து சுய ரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளார் என சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமார் கூறினார்.…
நகர்புற ஏழைகள் பகுதி-நேர வேலை செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்
நகர்புற ஏழைகள், நகரங்களில் வேலை செய்து ரிம3,000 அல்லது குறைவாக வருமானம் பெறுவோர், வியாபாரம், பகுதி-நேர வேலை போன்றவை செய்து குடும்ப வருமானத்தைப் பெருக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது நகர்புறங்களில் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்தை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என மலேசிய முஸ்லிம் …
பாக்’ லா: பைபிளை எரிக்காதீர்
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி, பைபிளை எரிக்கும் வேலையெல்லாம் கூடாது என்பதை வலியுறுத்தினார். பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி இஸ்லாத்தின் புனிதத்தைக் காக்கத்தான் பைபிளை எரிக்க வேண்டும் என்றார் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுப்பதில்லை என அரசாங்கம் முடிவு செய்திருப்பது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு …
எண்ணெய் விலை மேலும் குறைந்தால் உதவித் தொகைக்கு அவசியமிருக்காது
எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு யுஎஸ்$73 என்ற நிலைக்குக் குறைந்தால் அதன் பின்னரும் அரசாங்கம், நிதிச் சுமைக்கு உதவித் தொகைகள்தான் காரணம் எனச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எண்ணெய் விலை அந்த நிலைக்குக் குறைந்தால் அரசாங்கம் உதவித் தொகை என்ற பெயரில் எதுவும் வழங்க வேண்டிய அவசியமிருக்காது என …
மக்கள் எழுச்சி என்று மிரட்டுவது தேச நிந்தனைக் குற்றமாகும்
குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் தெரு ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என பிகேஆர் கூறியிருப்பது பொது ஒழுங்குக்கு விடுக்கப்பட்ட மருட்டல் என மக்கள் முற்போக்குக் கட்சி (பிபிபி) கருதுகிறது. பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா அவ்வாறு கூறியது “ஒரு மிரட்டல்” என்பதுடன் அரசாங்கத்துக்கு எதிராக …
பிஎஸ்எம் பக்கத்தானில் சேராது
பல ஆண்டுகள் காத்திருப்புக்கும் பல கருத்து வேறுபாடுகளுக்கும் பின்னர், பக்கத்தான் ரக்யாட்டில் சேரும் எண்ணத்தை பிஎஸ்எம் கைவிட்டது. ஆனாலும், ஆளும் பாரிசான் நேசனல் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியில் பக்கத்தானுடன் சேர்ந்து பணியாற்ற அது விருப்பம் கொண்டிருக்கிறது. “14வது பொதுத் தேர்தலில் ;பிஎன்னைக் கவிழ்க்க பக்கத்தானுடன் தேர்தல்கூட்டு வைத்துக்கொள்ள பிஎஸ்எம் …
அரசாங்கம் என்எப்சி குத்தகையை இரத்துச் செய்யும்
அரசாங்கம், நேசனல் பீட்லோட் கார்ப்பரேசனு(என்எப்சி)க்குக் கொடுக்கப்பட்ட குத்தகையை இரத்துச் செய்து கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதற்காக அந்நிறுவனத்தின்மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கும். நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்து வடிவிலான பதிலில். என்எப்சி அரசாங்கம் அதற்குக் கொடுத்த ரிம250 மில்லியன் கடனுக்கு 2014-இல் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைச் …
போலீஸ்: பிபிஎஸ் உறுப்பினர்கள் சீருடைகளை ஒப்படைக்க வேண்டும்
சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டுள்ள தன்னார்வக் காவல் படை(பிபிஎஸ்)யின் உறுப்பினர்கள் அவர்களின் சீருடைகளையும் மற்ற பொருள்களையும் சங்கப் பதிவதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. உள்துறை அமைச்சு சங்கங்கள் சட்டத்தின் பகுதி 5-இன்கீழ் பிபிஎஸ் சட்டவிரோதமானது என அறிவித்திருப்பதால் “அதை மதித்து நடப்பது நல்லது” என மாநில போலீஸ் தலைவர் …
அரசியல்வாதிகளின் பேச்சுகளை அரசாங்கம் ஒற்றுக்கேட்பதில்லை
பொதுமக்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொலைபேசி பேச்சுகளை அரசாங்கம் ஒற்றுக்கேட்பதில்லை எனப் பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜுலியன் டான் கொக் பிங்(டிஏபி-ஸ்டேம்பின்)-கின் கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக இவ்வாறு பதில் அளித்தார்.
ஓ, முருகா!
கனிமநீர் போத்தலில் ஒட்டப்பட்டிருக்கும் ஹலால் சின்னத்திற்கு அடுத்து ஒட்டப்பட்டுள்ள ஓர் இந்து தெய்வத்தின் படம் "வழிபாட்டு கூறுகளை" கொண்டிருக்கலாம் என்று மலேசிய பயனீட்டாளர்கள் சங்கம் (பிபிஐஎம்) கூறுகிறது. அம்மாதிரியான போத்தல்களை தயாரிப்பதற்கு அவற்றை தயாரித்த சுவான் சின் செண்ட். பெர்ஹாட்டிற்கு "தீய நோக்கம்" இருக்கலாம் என்று பிபிஐஎம்மின்…
நஸ்ரி: விவேகானந்தா ஆசிரமம் பாதுகாக்கப்பட வேண்டும்
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் 110 ஆண்டுகால விவேகனந்தா ஆசிரமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சுற்றுப்பயணம் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அந்த ஆசிரமத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேசுகையில் கூறினார். ஆசிரமம் அமைந்துள்ள அந்நிலம் மேம்படுத்தப்படுவதை நிறுத்துவதற்காக…
அன்வார்: ஷாபி திரும்பவும் கல்லூரி சென்று சட்டம் பயில வேண்டும்
அரசுத் தரப்பு வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் வாதங்களைக் கேட்டு ஆத்திரமடைந்த அன்வார் இப்ராகிம், ஷாபி திரும்பவும் கல்லூரி சென்று சட்டம் படிக்க வேண்டும் என்று கடுப்பாகக் கூறினார். அந்த அனுபவம் வாய்ந்த வழக்குரைஞர், எதிர்த் தரப்பு முன்வைத்த வாதங்களுக்குப் பதிலளிக்காமல் அரசியல் சொற்பொழிவாற்றினார் என்றாரவர். ஷாபி நீதிமன்ற …
பிபிஎஸ் சொத்துகள் முடக்கப்படும்
பினாங்கு மாநில அரசால் உருவாக்கப்பட்ட தன்னார்வக் காவல் படை(பிபிஎஸ்)-யின் வங்கிக் கணக்கும் சொத்துகளும் முடக்கப்படும். அது ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து இவ்வாறு செய்யப்படுகிறது. உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டப்படி பிபிஎஸ் சட்டத்துக்குப் புறம்பான அமைப்பு என நேற்று …
மைக்கி: அட்னான் ஆசிரமத்தைக் காக்க வேண்டும்
கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், பிரிக்பீல்ட்சில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுவாமி விவேகாநந்தா ஆசிரம் அமைந்துள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள மறு-மேம்பாட்டுத் திட்டத்தில் தலையிட வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கக் கூட்டமைப்பு (மைக்கி) தலைவர் கே.கே. ஈஸ்வரன், தெங்கு அட்னான் மேம்பாட்டுப் …
பிகேஆர்: அன்வார் சிறைக்கு அனுப்பப்பட்டால் மக்கள் பொங்கி எழுவர்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஆர்ப்பாட்டங்கள் நடப்பது உறுதி என்று அதன் உதவித் தலைவர் தியான் சுவா எச்சரிக்கிறார். நீதி மாளிகைக்கு வெளியில் 500 பேருக்கு மேற்பட்ட ஆதரவாளர்களிடையே பேசிய தியான் சுவா, கோலாலும்பூரில் வார இறுதியில் ஆதரவாளர்கள் ஒன்றுதிரட்டப்படுவர் …


