பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் பரிசுத்தமானவர்கள்

13ஆவது பொதுத் தேர்தலுக்கான பாரிசான் நேசனலின் அனைத்து வேட்பாளர்களும் ஊழல்கள் மற்றும் இதர குற்றங்கள் எதிலும் ஈடுபடாதவர்கள் என்று காணப்பட்டுள்ளது என்று பாரிசான் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார். நாடாளுமன்றத்திற்கான 222 மற்றும் சட்டமன்றங்களுக்கான 505 இருக்கைகளுக்கான வேட்பாளர்கள் அனைவரும் "பரிசுத்தமானவர்கள்" என்பதை…

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம், உடனே விண்ணப்பிக்கவும்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். டிசம்பர் 29, 2012. கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மானியம் பரிந்துரை செயற்குழுவினர் எடுத்த முடிவின்படி அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் எழுத்து பூர்வமாக தங்களின் மானியக் கோரிக்கைகளை எதிர்வரும் ஜனவரி 14…

‘அல்லாஹ்’ சர்ச்சை: கர்பால் லிம்-மிற்கு ஆதரவு அளிக்கிறார்

கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கேட்டுக் கொண்டிருப்பதை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துப் பேசியிருக்கிறார். தலைமுறை தலைமுறையாக அந்த சொல் பயன்படுத்தபட்டு வரும் சபா, சரவாக் கிறிஸ்துவர்களை கருத்தில்…

சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா ‘சட்ட விரோதமானது, செல்லாது’

முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு தேசிய பாத்வா மன்றம் தடை விதித்துள்ளது அரசமைப்புக்கு முரணானது என சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் மலேசிய குருத்துவார் மன்றம் கூறியுள்ளது. கடந்த புதன் கிழமை பினாங்கு முப்தி ஹசான் அகமட் இரண்டாவது முறையாக கூறியுள்ளதாகக் கூறப்படும் அந்தத் தடை இரண்டு…

பிகேஆர்: தீபக் நில விற்பனை பேரம் ‘அப்பட்டமான லஞ்சம்’

வணிகரான தீபக் ஜெய்கிஷனுக்கும் சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா அப்துல்லாவுக்கும் இடையிலான சர்ச்சையுடன் தொடர்புடைய ஒரு நிலத்தை தற்காப்பு அமைச்சின்  Lembaga Tabung Angkatan Tentera’s (LTAT) கொள்முதல் செய்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளப் போவதாக பிகேஆர் இன்று அறிவித்துள்ளது. தீபக்கின்…

2012-இன் செய்தி நாயகர்….

கடந்த பத்தாண்டுகளாக ஆண்டின் இறுதிப்பகுதியில் அவ்வவ்வாண்டின்  செய்திநாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை மலேசியாகினி வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘யாருடைய செயல்கள் தலைப்புச் செய்திகளாகின்றனவோ, யார் மலேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுவதுடன் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துகிறாரோ’ அவரே செய்திநாயகர். மலேசியாகினி அப்படிப்பட்ட பதின்மரைப் பெயர் குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை செய்திநாயகராக தேர்ந்தெடுக்கும் பொறுப்பை…

மே 13 பற்றிய உண்மையை அறிய நமது ஆவணங்களை ரகசிய…

மே 13 சம்பவம் மீதான அம்னோ பதிப்பை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட-அதிகம் பேசப்படும்-தாண்டா புத்ரா திரைப்படத்தை பினாஸ் என்ற தேசிய திரைப்படக் கழகம் வெளியிடவிருக்கும் வேளையில் தி எட்ஜ் என்ற சஞ்சிகை மே 13 குறித்த தனது கட்டுரையை மீட்டுக் கொள்ள வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர்  கோரிக்கை…

இலங்கை தமிழ் இனப் படுகொலை உள்நாட்டு விவகாரமல்ல, அன்வார் இப்ராகிம்

இலட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டது, தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டது அந்நாட்டின் உள்விவகாரமல்ல. அது மனித உரிமைகள் மீறலாகும் என்று பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் கூறினார். "சிறிலங்காவில் நடந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இக்கொடூரச் செயல்கள் உள்நாட்டு விவகாரமல்ல. அவை…

தீபக்: என் நிறுவனத்தை விற்குமாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்

வணிகரான தீபக் ஜெய்கிஷன், தமது முன்னாள் நிறுவனமான அஸ்தாசாங்கே -ஐ  ( Astacanggih ) 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு தற்காப்பு அமைச்சு நிறுவனம் ஒன்றுக்கு விற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவ்வாறு விற்குமாறு தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார். அவான் மெகா சென் பெர்ஹாட்-உடன் செய்து கொண்ட நிலப்…

குழு: தாயிப்-பை விசாரிப்பதற்குத் தடையாக உள்ள சட்ட பலவீனங்களை மறு…

ஊழலை முறியடிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஆற்றலை வலுப்படுத்தும் பொருட்டு 2009ம் ஆண்டுக்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தில் காணப்படும் பலவீனங்களைச் சரி செய்ய வேண்டும் என ஊழல் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுத் தலைவர் முகமட் ராட்சி ஷேக் அகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.…

பெல்டா தலைவர் விலக வேண்டும் எனக் கோரும் பேரணியில் ஆயிரம்…

பெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தில் அரசியல் தலையீடு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அதன் தலைவர் ஈசா சமாட் பதவி துறக்க வேண்டும் என்றும் கோரி கோலாலம்பூரில் நடத்தப்பட்ட ஆரஞ்சு நிற உடைகளை அணிந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெல்டா குடியேற்றக்காரர்களுடைய பிள்ளைகளும் பங்கு…

திரெங்கானுவில் வெள்ளம் வந்தது கூடவே பாம்புகளும் வந்தன

திரெங்கானுவில் வெள்ளத்தின் காரணமாக வீடுகளில் அழையா விருந்தாளிகளாக வந்து சேர்ந்த பாம்புகளைப் பிடிப்பதில் சிவில் தற்காப்புத் துறை (ஜேபிஏஎம்) மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் மட்டும் அது 41 பாம்புகளைப் பிடித்து உரிய அதிகாரிகளிடம் ஓப்படைத்திருப்பதாக மாநில ஜேபிஏஎம் அதிகாரி லெப்ட். நோர் அஸ்மாவி கூறினார். “அந்த…

‘நாங்கள் பெர்மிட் கேட்டால் டயர்களை கொடுக்கிறார்கள்’

பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெற்றால் டெக்சி பெர்மிட்டுகள் நிறுவனங்களுக்கு அல்லாமல் டெக்சி ஓட்டுநர்களே நேரடியாக வழங்கக்கப்படும். பேர்மிட்டுகள் மட்டுமல்லாமல் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீமூடா டெக்சி ஓட்டுநர் சங்கத் தலைவர் எஸ்.மனோகரன் கேட்டுக்கொண்டார். மருத்துவ அட்டைகள் இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற முடியும்…

‘பிஎன் நடவடிக்கையை அங்கீகரிக்கும் இசி தலைவர் பதவி துறக்க வேண்டும்’

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒராங் அஸ்லி வாக்காளர்களுக்கு பிஎன் -னுக்கு வாக்களிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படும் பேராக் தாப்பாவில் நடைபெற்ற 'மாதிரி வாக்களிப்பு' மீது இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் பதவி துறக்க வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை வழிகாட்டுதலுடன்…

ஷாங்காயில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் மீது புகார்

வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் அந்தந்த நாட்டிலுள்ள மலேசிய தூதரகங்களில் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அடிக்கடி கேட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மலேசியர்கள் அங்குள்ள தலைமைத் தூதரக பொறுப்பாளர் அலுவலகம் சென்று வாக்காளர்களாக பதிந்துகொள்ள முயன்றபோது அங்கு பதிவுசெய்ய…

பகாங் மாநில முதல்வரின் வாக்குறுதிகள் நிறைவேறுமா?

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 28, 2012. சொந்த வீடுகள் பெற்றிராத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என பகாங் மாநில முதல்வர் அட்னான் யாக்கோப் அறிக்கை விட்டுள்ளார். (The Star, 23/12/2012 - Page 14) நல்லது வரவேற்கிறோம். ஆனால்,…

உங்கள் அறிக்கைகளுக்கு மிக்க நன்றி ஆயர் அவர்களே

"ஆயர் அவர்களே, தேர்தலுக்கு முன்னதாக கிறிஸ்துவ வாக்குகளைப் பெறுவதற்கு முன்னைய இரண்டு பிரதமர்களும் பேசிய, இப்போது நஜிப்பும் பேசுகின்ற 'வழக்கமான சொற்களை' அம்பலப்படுத்திய உங்களை நான் பாராட்டுகின்றேன்." பிரதமருடைய கிறிஸ்துமஸ் தின கருத்துக்கள் மீது ஆயர் பால் தான் வருத்தம் ஸ்டார்ர்: ஆயர் பால் தான், தாம் தமது…

‘118 மாடி மெகா கோபுரம் வேண்டாம் எனச் சொல்வோம்’ என்னும்…

வாரிசான் மெர்தேக்கா கோபுரத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு கோலாலம்பூரில் இயங்கும் 21 அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. அந்த முழு பகுதியையும் தேசியப் பாரம்பரிய பகுதியாகப் பிரகடனம் செய்யுமாறும் அவை கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளன. அந்தத் தகவலை நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் சங்கத்…

அமைச்சருடைய உதவியாளர் வீட்டின் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது

பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லானுடைய உதவியாளர் அப்துல் ஹலிம் துவா ரஹ்மாட் வீட்டின் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது. மலாக்காவுக்கு பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றிருந்த அவர், செவ்வாய்க் கிழமை வீடு திரும்பிய போது தமது வீட்டில் சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டதைக்…

சிலாங்கூர் மந்திரி புசார் தண்ணீர் பிரச்னையை குறைத்து மதிப்பிடுவதாக குறை…

சிலாங்கூர் 2015ம் ஆண்டு தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கும் எனக் கூறப்பட்ட போதிலும் அந்த மாநிலத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தாம் 100 ஆண்டுகள் கூடக் காத்திருக்கத் தயாராக இருப்பதாக மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையை பயனீட்டாளர் சங்கத் தலைவர் ஒருவர் சாடியுள்ளார். காலித் அறிக்கை…

‘அல்லாஹ்’ விவகாரம் மீது பக்காத்தான் தலைவர்கள் கூட்டத்துக்கு அன்வார் ஏற்பாடு…

முஸ்லிம் அல்லாதவர்கள் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது வெவ்வேறான கருத்துக்கள் தொடர்ச்சியாக எழுவதைத் தொடர்ந்து பக்காத்தான் ராக்யாட் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் அவசரமாக நடத்தப்படவிருக்கிறது. அந்தத் தகவலை வெளியிட்ட  பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், அந்தப் பிரச்னை ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்ட போதிலும் அந்தச் சந்திப்பு…

உங்கள் கருத்து : நஜிப் அவர்களே, பேசுவது சுலபம்; நடவடிக்கையே…

"இனிமேல் செயல்படுவது கிறிஸ்துவத் தலைவர்களைப் பொறுத்தது. வத்திகனுக்கும் உலகிற்கும் தெரியப்படுத்துங்கள். சட்டம் ஏதும் மீறப்பட்டிருந்தால் வழக்குப் போடுங்கள்." பிரதமருக்கு ஒரு கிறிஸ்துமஸ் கார்டு அடையாளம் இல்லாதவன்$&@?: முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்தவுடன் ஜயிஸ் என்ற இஸ்லாமிய விவகாரத் துறையும் ஜாக்கிம் என்ற மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்…

காணாமல்போன விமானங்கள் பற்றித் தற்காப்பமைச்சிடம் கேளுங்கள், ஜாமுக்கு அன்வார் பதில்

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்பு தகவல் அமைச்சராக இருந்துள்ள ஜைனுடின் மைடினுக்கு அரச மலேசிய விமானப் படை (டியுடிஎம்)க்கு விமானங்கள் வாங்குவதில் சம்பந்தப்பட்ட அமைச்சு எதுவென்று நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும் என்று கூறி அதன் தொடர்பில் முறைகேடுகள் நிகழ்ந்திருந்தால் அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்தவரிடம்தான் கேட்க…