எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி : அற்புதம் அம்மாளுடன்…

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி சென்னை எழும்பூரில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணி தொடங்கியுள்ளது. பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் திரைப்படத்துறையினர், நடிகர்கள், தமிழ்…

சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பலின் தலைவன் கொல்கத்தாவில் கைது

இந்தியாவில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலின் தலைவனாகக் கருதப்படும் டி ராஜ்குமார் ராவ் என்பவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வறியவர்களிடம் பணத்தாசை காட்டி சிறுநீரகம் பெறப்பட்டு, அவை பெரும் விலைக்கு விற்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, தில்லி அப்பல்லோ மருத்துவமனயின் ஐந்து ஊழியர்கள்…

இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் சிறைபிடித்து…

இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் சிறைபிடித்து சென்றுள்ளனர். நேற்று இராமேஸ்வரத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வர்கள் கடலுக்கு மீன்பிடிகக சென்றிருந்தனர். அவர்கள், நேற்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரத்தை சேர்ந்த சிங்கம் லியோன்…

சாலை விபத்தில் ஒருநாளைக்கு 400 பேர் பலி: மத்திய அமைச்சர்…

இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 400 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கவலை தெரிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு…

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக…

மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம்என முதன் முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது உலகநாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடந்த 2008 ஆம் ஆண்டு, கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இதொய்பா தீவிரவாதிகள் 10…

டெல்லிவாசிகளின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகள் குறைக்கும் காற்று மாசு: ஆய்வில்…

டெல்லியில் நிலவும் காற்று மாசு அந்த நகரத்தில் வசிப்பவர்காளின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகள் வரை குறைப்பதாக காற்று ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலகின் அதிக மாசு கொண்ட மிகப்பெரிய நகரமாக டெல்லி உள்ளது. நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக நச்சுத்தன்மையை கொண்ட காற்றை சுவாசிக்கும் மக்கள் டெல்லி…

ஆண்களும் இனி பாலியல் பலாத்கார புகார் அளிக்கலாம்: யு.ஜி.சி. அறிவிப்பு!

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண்களும் இனி புகார் அளிக்கலாம் என பல்கலைக் கழக மானியகுழு (யுஜிசி) வழிவகை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒருபெண்ணின் மீது பாலியல் ரீதியாக நிகழ்த்தப்படும் தாக்குதலைக் குறிக்க பாலியல் துன்புறுத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம். பொதுவாக இந்த வார்த்தை பெண்களோடு மட்டுமே தொடர்பு…

மீனவர்களை கடத்தும் இலங்கை கடற்படையினர்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 5ம் திகதியன்று இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே ஜெயலலிதா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.…

ஏழைகளின் பசியாற்ற கேரள பெண்ணின் புதுமையான யோசனை!

கேரளாவில் பெண்மணி ஒருவர் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக புதுமையான முயற்சியை கையாண்டுள்ளார். கொச்சியில் ஓட்டல் நடத்தி வரும் மினு பவுலின் என்ற பெண், தனது உணவக வாசலில் 420 லிட்டர் கொள்ளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டியை வைத்துள்ளார். அந்த குளிர்சாதனப் பெட்டியில், சாப்பிட வழியில்லாமல் இருக்கும் 50 மக்களுக்கு தினமும்…

கவுரவ கொலைகளை தடுக்க புது சட்டம் இயற்றப்படுமா?

இந்திய மக்கள் மன்றத்தின் தலைவராக இருப்பவர் வாராகி. இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் இந்த கட்சிகள் கவுரவக் கொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2003-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்த…

கறுப்பு பணத்தை மீட்க உதவுவோம்: மோடிக்கு சுவிஸ் அதிபர் உறுதி

சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் உட்பட ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிநேற்று முன்தினம் இரவு சுவிட்சர்லாந்து சென்றடைந்தார். அங்கு நேற்று காலை சுவிட்சர்லாந்து அதிபர் ஜோஹான் சினிடர் அம்மானை சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து…

பெற்ற மகனை நரபலி கொடுக்க முயன்ற தந்தை? பொலிசார் விசாரணை

தமிழ்நாட்டில் பெற்ற மகனை நரபலி கொடுக்க முயன்றதாக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரூர் அருகே கோவிலில் பெற்ற மகனை தந்தை ஒருவர் நரபலி கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் அவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில், குடும்பத்தில் மிகவும் கஷ்டமான சூழல்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா?

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் பெண் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவுள்ளதாக புதிதாக அமைந்துள்ள அரசு தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் ஆகம விதிகளின்படி சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு பெண் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்களும் நடந்து வருகின்றன.…

கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டி:…

உள்ளாட்சி மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின்னர் நிரூபர்களிடம்…

பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடை: முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்…

நெல்லை: நெல்லை அருகே பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. நெல்லை அருகே உள்ள களக்காட்டில் மொத்தம் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பள்ளி மற்றும் கோவில் அருகே…

4.5 லட்சம் வாக்காளருக்கு நன்றி, வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு: நாம்…

திருச்சி: வாக்களித்த நாலரை லட்சம் பேருக்கும் நாம் தமிழர் பொதுக்குழு கூட்டம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியிலுள்ள ரோசன் திருமண அரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவைதான்:…

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் பாஸ்போர்ட் முடக்கம் – இன்றும்…

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் ஏராளமான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள தீனதயாளன் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. தீனதயாளன் வீட்டில் 3 வது நாளாக இன்று நடைபெற்ற…

மதுராவில் பொலிசார், ஊர் மக்களிடையே பயங்கர மோதல்: பலி 24…

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பொலிசாருக்கும், ஊர் மக்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை பொலிஸ் உயர் அதிகாரி உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலத்தின் மதுரா நகரத்தில் உள்ள ஜவகர்பாக் என்ற இடத்தில் அரசுக்கு…

கன்னித்தன்மை சோதனை: மணமகளுக்கு நடந்த கொடூரம்

மகாராஷ்டிராவில் மணமகள் கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்ததாக கூறி சாதி பஞ்சாயத்து நடந்து முடிந்த திருமணத்தை முறித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாச்சிக்கில் அண்மையில் 20 வயது பெண் ஒருவர், 25 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காஞ்சர்பாத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சமூக வழக்கத்தின் படி…

பேரணிக்கு முதல்வர் கொடுத்த ‘கிரீன் சிக்னல்’! -அதிர வைக்குமா ஜூன்…

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு 25 ஆண்டுகால சிறை வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கி நடக்கும் கோரிக்கை பேரணி அரசியல் கலப்பு இல்லாமல் அதிர வைக்கிறது. விசாரித்துவிட்டுக் காலையில் அனுப்பி விடுகிறோம் என்று சொல்லித்தான், கடந்த…

சென்னையில் கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் சோழர் காலத்து சிலைகள்: தொல்லியல்…

சென்னை: ஆழ்வார்பேட்டையில் மூரே சேட் சாலையில் தொழிலதிபர் தீனதயாளனின் பங்களா வீட்டில் நேற்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.50 கோடி மதிப்பிலான 54 கற்சிலைகள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அவரது வீட்டில் இருந்த மான்சிங், குமார், ராஜாமணி ஆகிய…

பெண்களை கேலி செய்யும் குடிமகன்கள்: டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கலெக்டரிடம்…

பெண்களை கேலி செய்யும் குடிமகன்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு எஸ்.கே.சி. நகர் பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரபாகரிடம் ஒரு மனு…

டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டினர் ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் வசித்து வரும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து, ஆப்பிரிக்கா நாட்டினர் பலர் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கூடி ஆர்ப்பாட்டத்தல் ஈடுப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்தியாவின் தலைநகரிலும், ஏனைய இடங்களிலும், உள்ள ஆப்பிரிக்க நாட்டினர் குறிப்பாக மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில்…