இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: இந்தியா-இலங்கை ஒப்புதல்
தமிழக மீனவர் பிரச்னைக்கு புதிய மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக கூடுதல் செயலர் ரேணு பல் கூறியதாவது: மீனவர் பிரச்னை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்…
மதுவிலக்கு பொது மக்களின் கோரிக்கை: பாடகர் கோவன்
திருச்சி: அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது, மக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் தெரிவித்துள்ளார். பாடகர் கோவன் தமிழக அரசுக்கு எதிராக மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடி, சில மாதங்களுக்கு முன்பு புழல் சிறையில்…
தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு: இளைஞர்களிடையே வரவேற்பு
கோயில்களில் ஆடை கட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பெரும்பாலான இளைஞர்கள் கட்டுப்பாடு தேவை என தெரிவித்துள்ளனர். தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு தேவை என்பதை பெரும்பாலான இளைஞர்கள் கலாச்சாரம் கருதி வரவேற்றுள்ளனர். கோயில்களில் கட்டாயம் ஆடை கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும், அதனால் மனத்தூய்மையுடன் வழிபாடுகளில் பங்கெடுக்க முடியும் எனவும் இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான…
மதங்களுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்த புதிய கமிஷன்.. மோடி அரசு அதிரடி…
டெல்லி: இந்தியாவில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்புடனும், அச்சமின்றி வாழவும், மத ரீதியான மோதல்களுக்கு முடிவு காணவும் புதிய கமிஷன் ஒன்றை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்,…
இலங்கை பிரதமர் ரணிலுடன் சுஷ்மா சந்திப்பு! இருநாட்டு கூட்டு ஆணைய…
டெல்லி/கொழும்பு: இலங்கைக்கு 2 நாட்கள் பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். கொழும்பில் ந்டைபெற்ற 9-வது இலங்கை- இந்தியா கூட்டு ஆணைய கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்றார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில்…
குறைந்த விலையில் நாப்கின் தயாரித்த சாதனையாளர் முருகானந்தத்தை பாராட்டிய அகிலேஷ்…
கோவை: குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தத்தைப் பாராட்டி உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார். கோவையைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் கடந்த 1962-ல் பிறந்த அருணாச்சலம், தனது ஒரே கண்டுபிடிப்பினால் இன்று உலக அளவில் பிரபலம்.…
இந்தியாவில் பசுவை வழிபடும் இந்துக்களை தாக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம்
இந்தியாவில் பசுவை வழிபடும் இந்துக்களை தாக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் பல இந்தியர்களை அணுகி அவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 16 பேரை தேசிய புலனாய்வு…
காஷ்மீரில் பனிச்சரிவு:பத்து இந்திய வீரர்களைக் காணவில்லை
காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பத்து இந்திய வீரர்களைக் காணவில்லை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. காணாமால் போனோரைத் தேடும் பணிகள் தீவிரம் ராணுவமும் விமானப் படையின் தேடுதல் அணிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடிவருவதாக, ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல்…
காவிரியில் கழிவு நீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை…
பெங்களூரு: பெங்களூருவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காவிரியில் கலப்பது பற்றி கேட்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, திருவாரூர் உள்ளி்ட்ட மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் காவிரியில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு…
தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடரும்: கோவை கூட்டத்தில் மோடி…
கோவை: டீ விற்பனை செய்த ஏழை ஒருவர் நாட்டின் பிரதமராக முன்னேறியது சிலருக்கு பெரும் வயிற்றெரிச்சலை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி, கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கோவை கொடீசியா மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள்…
தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் எதிர்ப்பு மாவட்டங்கள்!
தமிழ்நாட்டில் ஜாதிய வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகள் என்கின்றன புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் இருக்கும் குருவித்துரை கிராமத்தில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாக் கொண்டாட்டங்களின்போது தலித்துகளுக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிமோதலை நேரில் சென்று விசாரித்த ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம், அந்த குறிப்பிட்ட கிராமத்தை…
10 லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோருவதற்கு இலங்கையில் 10 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் முயற்சியில் முருகனின் தாயார் வெற்றிவேல்…
முடிந்தால் கொள்ளையடி! முடியாவிட்டால் வாயைப் பொத்து!
கட்டம் கட்டப்படுவார் பழ. கருப்பையா என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். நீக்கம் பற்றிய அறிவிப்பு தாமதமாக வந்திருக்கிறது. அவருக்கு எல்லாமே தாமத மாகத்தான் வருகிறது! நீக்கம் பற்றிய அறிக்கையில் கட்சித் தலைமை சொல்லியிருக்கும் குற்றச் சாட்டுகளில் முதலாவது, கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டார் என்பது. அதிகார வர்க்கமும், கவுன்சிலர்களும்,…
தனிப்படை போலீசார் அதிரடி : தேசியக்கொடியை எரித்த இளைஞர் கைது
தேசியக்கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் பதுங்கியிருந்த மகேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தேசிய கொடியை அவமதித்து தீயிட்டு கொளுத்தும் படங்களை நாகபட்டிணம் இளைஞர் திலீபன் மகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சமூக…
கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலி: சுற்றுலாவின் போது பரிதாபம்
மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுலா சென்ற மாணவர்களில் 14 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு புனே ஆபேதா இனாம்தார் கல்லூரியை சேர்ந்த 143 மாணவ, மாணவிகள் மற்றும் 11 பேராசிரியர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவர்களில் சிலர்…
ஆந்திராவில் வன்முறை: ரயில், 2 காவல் நிலையங்கள், 25 வாகனங்களுக்கு…
ஹைதராபாத்: ஆந்திராவில் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய காபூ சமூகத்தினர் ரயில் ஒன்றுக்கு தீ வைத்தனர். இதில் 8 பெட்டிகள் எரிந்து நாசமாகின. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இட ஒதுக்கீடு கோரி காபூ சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர். அவர்கள் சாலை மறியல்…
எரிவது தேசிய கோடியல்ல தேசிய இனம்
எந்த ஒரு செயலாக்கும் எதிர் வினை என்ற ஒன்று நிச்சயம் உண்டு.(இந்த உலகில் கடைசி அணு துகள் உள்ளவரை) ஒருவர் மீது ஒடுக்குமுறை செலுத்தப்படும் எனில் - ஒடுக்கு முறையாகவும்,அன்பு செலுத்தப்படும் எனில் - அன்பாகவும் வெளிப்படும். காலத்திற்கும் சூழ்நிலைக்கு ஏற்ப அத்தகைய எதிர்வினை ஒடுக்குமுறைக்கான எதிர்வினையாக மாறும்…
இந்திய மீனவர்களை மீண்டும் தாக்கியது இலங்கை கடற்படை
எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த மாதம் 25ம் திகதி, ராமேஸ்வரம் உள்ளிட் 6 மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து,…
அணு ஆயுத போட்டியை தடுக்கவில்லை: இந்தியா–பாகிஸ்தான் மீது சர்வதேச கோர்ட்டில்…
திஹேக், ஜன.31– பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறியநாடு மார்ஷல் தீவுகள். அங்கு 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின் போது இந்த தீவுகளை அமெரிக்கா கைப்பற்றியது. பின்னர் 1986–ம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதற்கிடையே அடிமைப்பட்டு கிடந்த காலக்கட்டத்தில் சோவியத் ரஷியாவுடன் ஏற்பட்ட…
மாத்தி மாத்தி பேச மாட்டேன்.. நாந்தான் இந்திய தேசிய கொடிய…
தேசிய கொடியை அவமதித்து தீயிட்டு கொளுத்தும் படங்களை நாகபட்டிணம் இளைஞர் திலீபன் மகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த செய்தியும், அதுதொடர்பான படங்களும் வேகமாக பரவின. இதனை கண்டித்துள்ள தேசப்பற்றுள்ளவர்கள், தேசத் தலைவர்கள் மற்றும் தேசிய சின்னங்களை அவமதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர்களை இந்திய அரசாங்கம் வழக்கம்…
தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பை பெண்களுக்கு ஆன்லைன் மூலம் ஐஎஸ்…
மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பையைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சிலரை கைது செய்து விசாரணை…
ஐ.எஸ்.ஐ.எஸ். இல் இணைந்து தாக்குதலில் ஈடுபட தயாராக இருக்கும் 30,000…
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர 30 ஆயிரம் இந்தியர்கள் தயாராக இருப்பது தெரிய வந்ததுள்ளது...... அத்துடன்... ராக் மற்றும் சிரியாவில் வலுவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய பெரு முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசு இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை அளிக்கும் இந்தியர்களுக்கு ரூ.40…
உங்களால் பத்மஸ்ரீ விருதுக்கே பெருமை
உங்களால் பத்மஸ்ரீ விருதுக்கே பெருமை பெண்களின் அவசிய தேவைகளில் ஒன்று நாட்டின். அதன் விலையோ ஏழைகளுக்கு எட்டாகனி. இதை உணர்ந்த கோவையை சேர்ந்த அ.முருகானந்தம் என்ற மறத்தமிழன் தானே ஆராய்ச்சி செய்து வடிவமைத்த இயந்திரத்தில் குறைந்த விலையில் ( பீஸ் ஒரு ரூபாய்) பள்ளி- கல்லூரி மட்டும் ஏனைய…


